இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள். இலங்கையின் சுதேசிகள் தமிழர்கள். விசயன் வழி வந்தவர்கள் அந்நியர். பரதேசிகள். இத்தகையோர் இலங்கைக்குத் தாம் மாத்திரமே உரிமையுடையோம் என்றும், தமிழர்களுக்கு எவ்வித உரிமை இல்லை என்றும், சிங்களப் பொது மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழர்கள், சிங்களவர்கள் பகைவர்கள் என இள உள்ளங்களில்லாம் அழுத்தமாக உறையும்படி பிரசாரம் செய்கின்றனர். துட்டகைமுனுவின் தாயாகிய விகாரமகாதேவியும் இதனையே செய்தாள். இதனால்தான் துட்டகைமுனு தமிழருக் கெதிராகக் கிளர்ந்து எழுந்தான்.
தமிழர் படையுடன் நேர் நின்று யுத்தம் புரிய முடியாத துட்டகைமுனு கபட நாடகமாடி மனுநீதி தவறாது செவ்வனே ஆட்சி புரிந்த தமிழரசனாகிய எல்லாளனைக் கொன்றான். இளைஞனாகிய துட்டகைமுனு கிழவனாக இருந்த எல்லாளனைத் தனிப் போருக்கு அழைத்துப் போர்புரியும் வேளை எல்லாளனது பட்டத்து யானை போரில் கால் தடுக்கி விழ ஈட்டியால் குத்திக் கொன்றான். இத்தகைய வாரலாற்று உண்மையை இன்றைய எம் நிலைகளோடு ஒப்பிட்டு நோக்கிச் செயற்பட வேண்டியது தமிழராகிய நம் கடனாகும்.
பரதன் என்னும் தமிழ் அரசன்
குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிகண்டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எல்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான்.
இதனால் அவனது குடிமக்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்பட்லாயிற்று.
இப்பரத கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அந்நிய நாட்டினர் பலவாறு அழைத்தனர் அவை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர்; கந்தருவர், வானரர் என்பனவாகும். இராமாயணத்தில் தமிழர்களை வானரர் (குரங்குகள்) என்றும் இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர்.
அனுமான் சுக்கிரீவன் வாலி போன்ற பலம் பொருந்திய திறமைமிக்க போராளிகளை குரங்குகளின் அரசர்கள் என்றும் இலங்கையை ஆண்ட ஒப்புயர்வற்ற சிறந்த அரசனாகிய இராவணன் தமிழன் என்ற காரணத்தால் அவனையும் அவனது இனத்தினரையும், நரமாமிசம் புசிக்கின்ற இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர்.
உண்மை அவ்வாறு அன்று. இராமன் இலக்குமணன் போன்ற தமிழர்கள் பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் சித்துக்களில் வல்லவர்களாவும் விளங்கினர் என்பதே உண்மை.
உண்மையில் இவர்கள் அவர்கள் குறிப்பிடுவது போன்று குரங்குகளோ, இராட்சதர்களோ அல்லர். சிறப்புற்று விளங்கிய தமிழர்களோயாவர். இவ்வாறு அநிநியர்களால் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட போதிலும் எல்லோரும் சமத்துவம் உடைய தமிழர்களோயாவர்.
அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஒருவருடைய பிறப்பினைக் கொண்டு அவரின் உயர்வு தாழ்வுகளைக் கணிக்காது அவரவரின் சிறப்பினைக் கொண்டே, செயற்பாடுகளைக் கொண்டே கணித்தனர்;.
'இட்டார் பெரியோர்,
இடாதார் இழிகுலத்தோர்"
என்னும் ஒளவை வாசகஙகளும் இவ்வகையில் எழுந்தனவே. செயற்கரினவற்றைச் செய்பவர்கள் பெரியோர் என்னும் செயற்கரயன செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் வள்ளுவன் வாய்மொழியும் இதனையே தெளிவுபடுத்துகின்றது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.