உலகத்திலேயே இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை...
கடவுள் - எல்லாம் கடந்தும், உள்ளே இருப்பவர்.
எவ்வளவு பெரிய தத்துவத்தை இச்சொல் அடக்கியிருக்கிறது.
தமிழில் "ழ" என்ற அருமையான எழுத்து இருக்கிறது.
"ழ " வரும் சொல் எல்லாமே இனிமை. பழம், யாழ், குழல், குழந்தை, மழலை, வாழை...
இப்படி பல..
அடுத்து, மாதா-பிதா-குரு-தெய்வம் என்று சொல்வார்கள். அதனை பாருங்கள்.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்.
தமிழின் முதல் உயிரெழுத்து "அ". அந்த எழுத்திலேயே ஆரம்பமாகியுள்ளன முதல் தெய்வங்கள் அம்மா, அப்பா.
இவர்களுக்கு அடுத்து குரு. அதாவது "அ" விற்க்கு அடுத்த எழுத்து "ஆ". ஆசிரியர் - தமிழின் இரண்டாம் எழுத்தில் ஆரம்பம்.
இவர்களுக்குப்பின் தெய்வம். அ,ஆ விற்கு பிறகு மூன்றாவது உயிரெழுத்து "இ" - இறைவன்.
அடுத்து, நமக்கு இன்றியமையாத தேவைகள் மூன்று. உணவு, உடை, உறையுள்.
இங்கும் முதல் தேவை உணவு. தமிழின் முதல் எழுத்து - "அ" - அன்னம்.
அடுத்து மானம் காக்க உடை. தமிழின் இரண்டாம் எழுத்து - "ஆ" - ஆடை.
மூன்றாவதாக வசிக்க உறையுள். தமிழின் மூன்றாம் எழுத்து - "இ" - இருப்பிடம்.
இப்படி பலபல பெரிய செய்திகளை தனக்குள் அடக்கிய மொழி தெய்வீகத் தமிழ்.
ஆகவே "தேன்மதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்வோம்".
ஒரு உபரிச்செய்தி...
தமிழில் ஒன்று முதல் 899 வரை உள்ள அனைத்து சொற்களுமே "உ" கரத்தில் தான் முடியும்.
உதாரணம்...
ஒன்று - கடைசி எழுத்து "று" - ற் + உ.
இரண்டு - கடைசி எழுத்து - "டு" - ட் + உ
எண்ணூற்றி தொன்னுற்று ஒன்பது - கடைசி எழுத்து - "து" - த் +உ...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.