உன் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறேன்....
ஒரு முறை தான் உன்னை
நினைக்க வைத்தாய்...
உயிர் வரை உன் நினைவே
ஒலிக்கிறது என்னில்...
கண்ணீரில் தான்
உலகின் காதலோ...
உள்ளத்தின் காயத்தை
எப்படி யாரிடம் சொல்வேன்...
என் தாய் மொழியும்
மௌனம் ஆனது...
என் காதல் மட்டும்
இன்னும் குறையவில்லை...
காதலின் வலியில் தான்
பல கவிதைகள்
உலகில் பிறக்கிறது...
உன்னை பற்றி
சிந்திக்கும் போதெல்லாம்...
பிறக்கிறது
பல கவிதைகள்...
அடி மனதில் அமர்ந்திருக்கும்
உன் நினைவுகளை...
நித்தம்
நித்தம்
சுமக்கிறேன்...
உன்னை காணாத என் கண்களோ
செல்லரித்து போகுதடி...
உன்னுள் ஒளிந்துகொள்ள
வேண்டும் நான்...
இல்லையெல்...
கல்லறையில் புதைய வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.