08/05/2024

சாளுக்கியர் யார்.?

 


சாளுக்கியர் என்போர் "வேள் குலத்தவர்" ஆவர். அதாவது, சங்க தமிழ் இலக்கியம் கூறும் தொன்மையான "வேளிர் குலத்தவர்" ஆவர். வேளிர் என்போர் பண்டைய துவாரகையை அரசாட்சி செய்த க்ஷத்திரிய வம்சத்தவர் ஆவர்.

இந்த தொன்மையான சாளுக்கியர் குலத்தில் தோன்றி, சோழர்களின் குலதெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருமுடிசூடிய இரண்டாம் குலோத்துங்கச் சோழன் அவர்களை கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் அவர்கள் "இருக்கு வேதம் கூறும் முதற்குலம்" (இருக்குமுதல் ஆரண முதற்குலம்) என்று குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் கூறியுள்ளார்.

அதாவது, தில்லையில் திருமுடிசூடும் பிச்சாவரம் சோழர்களின் முன்னோரான இரண்டாம் குலோத்துங்கச் சோழன் தோன்றிய சாளுக்கிய குலம் என்பது தொன்மையான "ரிக்வேதம் கூறும் முதன்மையான குலம்" என்று புலவர் ஒட்டக்கூத்தர் கூறியுள்ளார்.

இத்தகைய தொன்மையான சாளுக்கியர் குலத்தில் தோன்றிய சோழப் பெருவேந்தன் மூன்றாம் ராஜராஜ சோழனை, அவருடைய மாமன் (மூன்றாம் ராஜராஜ சோழனின் அக்கா வீட்டுக்காரர்) ஆளப்பிறந்த பள்ளி வம்சத்து காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் அவர்கள் "வன்னிய மணாளன்" (வன்னிய மாப்பிள்ளை) என்று செஞ்சி அண்ணமங்கலம் சோழர் கால கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, யாககுண்டத்தில் தோன்றிய தொன்மையான வேளிர் வம்சத்து சாளுக்கியர் என்போர் "வன்னிய வம்சத்தவர்" (பள்ளிகள்) என்று அடிப்படை அரச வம்ச சான்றுகளால் (Repeat) அடிப்படை அரச வம்ச சான்றுகளால் தெரியவருகிறது.

இதெல்லாம் சும்மா சொல்கின்றனர் என்று சிலர் நிச்சயமாக நினைக்கலாம். ஏனென்றால், திணைக்குடியினர் உள்ளிட்ட பலர் தங்களை சாளுக்கிய/சோழ வம்சம் என்று கூறிவருவதால் யார் சொல்வது உண்மை என்று பலருக்கு தெரியாமல் போகிறது.

இந்த துயரிய நிலையினை போக்க "அடிப்படை அரச வம்ச சான்றுகள்" பயன்படுகின்றன என்பதாகும்.

சோழப் பெருவேந்தன் இரண்டாம் ராஜாதிராஜ சோழனை, பல்லவராயன்பேட்டை சோழர் கால கல்வெட்டு ஒன்று "உடையார் விக்கிரம சோழனின் பேரன்" (கொள்ளு பேரன்) என்று கூறுகிறது. இந்த சான்றானது "அடிப்படை அரச வம்ச சான்றாகும்".

சாளுக்கிய வம்சத்து விக்கிரம சோழனின் கொள்ளு பேரன் இரண்டாம் ராஜாதிராஜ சோழனை, காஞ்சி ஆர்ப்பாக்கம் சோழர் கால கல்வெட்டு ஒன்று, வன்னிய குலத்தைச் சேர்ந்த சோழர் படை தலைமைத் தளபதி எதிரிலிச் சோழ சம்புவராயரின் வம்சத்தவர் என்று மிகத் தெளிவாக கூறுகிறது. இந்த சான்றானது "அடிப்படை அரச வம்ச சான்றாகும்".

"அடிப்படை அரச வம்ச சான்றுகள்" மட்டுமே தென்னிந்திய அரச வம்ச வரலாற்றை தீர்மானிக்கும் சான்றுகள் ஆகும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.