உன் நினைவின் வாசம்...


இன்னொரு முறை

குடிக்கும் போது

எனக்கொரு பாட்டில்

விஷத்தை வாங்கித் தாருங்கள்...


உனக்கென்னடி சகியே

சொல்லிவிட்டு போய்விட்டாய்...


இதோ

துளித் துளியாய் பருகும்

பக்காடியில்...


"உன் நினைவின் வாசம்"


🚶🚶🚶

என் இரவைக் கூறு போட...

 


எப்படியாவது தூங்கிவிட வேண்டும்

உன்னை நினைக்காமல் இன்றிரவு


ஆமாம்...

சபதம் எடுத்துக் கொண்டேன்...


பண்பலை பாடல்கள் தாலாட்டிக் கொண்டிருந்தது..

இமைகள் இறுகத் துவங்கிய வேளை

உயிருக்குள் ஒலிக்கத் துவங்கியது..


உனைப் பாடச் சொல்லிக் கேட்ட...


"ஊருசனம் தூங்கிருச்சு

ஊதக் காத்தும் அடிச்சிருச்சி"


இசைஞானி மெல்லிசை மன்னரோடு

இப்போது...


கூட்டனி சேர்ந்திருந்தது 

உன் நினைவுகளும்

என் இரவைக் கூறு போட....


🚶🚶🚶

என் ஆயுள் ரேகை...

 


கைரேகை பார்த்தேன் 

நேற்று

ஆயுள் தீர்க்கமாம்

ஜோதிடர் சொல்கிறார்...


ஆமாம்

தீர்க்கமாக தான் உள்ளது...


என்னில் உயிரோடு 

எனை கொல்லும்

உன் நினைவெனும் 

ஆயுள்ரேகை...


🚶🚶🚶

ஏன் இந்த முரண்பாடு?

 


பதிவேற்றம் செய்த ஓன்றைதானே

பதிவிறக்கமும் செய்ய முடியும்?


பின்னர் ஏன் இந்த முரண்பாடு?


குழப்பமாக உள்ளது எனக்கு

இங்கே பாருங்கள்..


என் இதயதளத்தில்

பதிவேற்றம் செய்ததென்னவோ

அவளின் நினைவுகளை தான்...


ஆனால் இப்போதோ

கண்ணீர் துளிகளை

பதிவிறக்கம் செய்கிறேன்...

வாழ்க்கை...

 


என் ஒட்டு மொத்த

வலிகளுக்கும்

நீயே ஆறுதல் 

என்று எண்ணினேன்... 


ஆனால்...

யாரும் தராத 

வலிகளை

நீ தந்து விட்டாய்...


இனி எடுக்கப் போகும்

எல்லா ஜென்மமும்

நீயே வேண்டும்

என்று நினைத்தேன்...


தற்போது...

இந்த ஜென்ம

வாழ்க்கையே

எந்த நொடி முடியும்

என்று 

எதிர்ப் பார்த்து

காத்துக் கிடக்கிறேன்...


ஒவ்வொரு நொடியும்...


🚶🚶🚶

அவள் எனக்கெழுதிய உயில்...

 


நான் பேராசை 

கொள்ளாதவனென்று

உனக்கும் தெரியும் தானடி...


தெரிந்தும் ஏன்..?


எனக்கே முழுவதும்

எழுதி வைத்து விட்டு 

சென்றாய்..


உன்

நினைவெனும் சொத்துக்களை உயிலாக...

பாகப் பிரிவினை...

 


யார் தான் 

பிரித்தார்கள்...


இந்த 

பாகப்பிரிவினையை...


இத்தனை 

ஓரவஞ்சனையோடு...


அந்த கடவுள் பிரித்தானா?

இல்லை

அவள் தான் பிரித்தாளா?


ஆம்..


அவள் அன்பின்

ஒரு துளியைக் கூட

எனக்கு எழுதி வைக்கவில்லையே...


🚶🚶🚶

என் கண்ணீர்ப் பயணம்...

 


அன்று - நான்

கடல்மடித் தேடும் காட்டாறாய்...


நேற்று - அவள்

தாகம் தீர்க்க வந்தவள்

தடுப்பனை கட்டிச் சென்றாள்...


இன்று - நான்

பாதை தொலைத்தவனாய்

பயணம் முடிந்தவனாய்...


இனி கடல்மடித் தேடி

என் கண்ணீர் துளிகளின் பயணம்...

திமுக எனும் தமிழர் விரோதி...

 


இசை வேளாளர் எனும் தெலுங்கர்கள் ரெண்டு சட்டமன்ற உறுப்பினர்களாம் ...

அவங்க ரெண்டு பேருமே அமைச்சர்களாம் என்னடா பித்தலாட்டம்....

ஒலிம்பிக் போட்டி மட்டுமா நடக்கிறது...

 


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ​​ஒரே ஒரு  வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமாராக 70,000 ஆணுறைகள் பாவித்துத் தீர்க்கப்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் போகப் போக விளையாட்டு வீரர்களுக்கான ஆணுறைகளின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

உதாரணமாக, 2012 இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கின் போது, ​​சுமார் 100,000 க்கும் மேற்பட்ட ஆணுறைகள் தேவைப்பட்டன. 

தற்போது 2024 ல் பாரிஸ் நகரில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில்  இதுவரை ஒலிம்பிக் வீரர்கள் தங்கும்  கிராமங்களில்  300,000 ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன...

எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கான் பாருங்கள் 😇


ஏர்போர்ட் முதல் மின்சாரம் வரை எல்லாத்தையும் அதானி, அம்பானிக்கு வித்துட்டாங்க...