14/07/2018

வென்னீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை...


எண்ணெயில் பொரித்த பலகாரங்கள் இனிப்பு வகைகளை சாப்பிடும்போது வாயுத்தொல்லை வயிற்று உப்புசம் வயிற்றுக்கோளாறு என்று செரிமான பிரச்னைகளால் அவதிப்பட்டிருப்போம். வயிறு சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் வென்னீரில் இருக்கிறது தீர்வு.

எண்ணெயில் பொரித்த உணவுப் பண்டங்கள் பட்சணங்கள் பூரி போன்ற உணவுகளை உண்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கு சூடாக ஒரு டம்ளர் வென்னீரை மெதுவாக அருந்தினால் நெஞ்சு எரிச்சல் மட்டுப்படும். அஸிடிட்டி குறையும்.

சுண்டல் வகைகளில் அதிக அளவு புரோட்டீன் இருப்பதால் தினமும் ஒரு சுண்டலை உண்பதற்கு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். கூடவே ஒர தம்ளர் வென்னீர் குடித்துவிட்டால் வாயுப்பிரச்னை வராமல் தடுக்கலாம். வயிறு உப்புசம் வயிற்று வலிக்கு வென்னீரில் சுக்குப்பொடி போட்டுக் காய்ச்சி குடித்தால் வயிறு நிதான நிலைக்கு வரும்.

சூட்டு வயிற்றுவலிக்கு வென்னீரில் நன்றாக வறுத்த ஜீரகத்தைப் பொடியாக்கி போட்டுக் காய்ச்சிக் கஷாயமாகக் குடித்தால் வலி குறையும். பார்ட்டிகளில் பொறித்த உணவு வகைகளுடன் குலோப்ஜாமூன் ஐஸ்கிரீம் தவிர்க்கமுடிவதில்லை.

எப்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் உடனே வென்னீர் குடித்துவிட்டால் தொண்டை பாதுகாக்கப்படும். வெயிலில் வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்தவுடன் ஐஸ் வாட்டர் குடிப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பான வென்னீரை குடித்தால் தாகம் குறையும்.

அதிகமான கொழுப்பு உடலில் படிவதை வென்னீர் தடுக்கும். எந்தவித சாப்பாட்டிற்குப் பிறகும் ஒரு தம்ளர் வென்னீர் குடிப்பது உணவில் உள்ள அதிக கொலஸ்ட்ராலை சமன்படுத்தி சதை போடுவதைத் தடுக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான வென்னீரில் தேன் மற்றும் எலுமிச்சம்பழம் பிழிந்து குடித்துவந்தால் அழகான உடல் கிடைக்கும்.

ஃபங்கஸ் போன்ற தோல் வியாதிகளுக்கு வென்னீரில் உப்பு போட்டுக் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் நன்றாகக் கழுவிய பிறகு பயத்தம் மாவு தேய்த்துக்குளித்து வந்தால் ஃபங்கஸ் பரவாமல் தடுக்கமுடியும்.

உடல்வலியா?  வென்னீரில் சுக்குப்பொடி பனங்கற்கண்டை போட்டுக்காய்ச்சி குடித்தால் பித்தம் குறைந்து வலி போயே போச்சு. கால் பாதங்களில் வலி சுழற்சி மற்றும் வெடிப்புக்கு வென்னீரில் கல் உப்பு போட்டு பத்து நிமிடம் கால்களை வைத்து எடுத்தால் சுழற்சி போய் பாதங்கள் புத்துணர்வு பெறும். பித்தவெடிப்பு பிரச்னைக்கு வென்னீரில் உப்பு கலந்து பாதங்களை சிறிது நேரம் வைத்த பின் கடுகு எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து போகும்.

தொண்டை வலி கரகரப்புக்கு வென்னீருடன் கல் உப்பு அல்லது தேன் சேர்த்து தொண்டையில் படுமாறு கொப்பளித்தால் இன்பெஃக்ஷன் குறைந்து கரகரப்பு மாறும். வலி குறையும். வென்னீருடன் மிளகு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து குடித்தால் தொண்டை வலி குறையும்.

சரியான தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இரவு படுக்கப் போகும் போது ஒரு தம்ளர் வென்னீர் அருந்திவிட்டு தூங்கப் போனால் நல்ல உறக்கம் வரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.