01/11/2018

பாஜக மோடியின் சிபிஐ இயக்குநரின் மனைவி நிதி மோசடி செய்தது அம்பலம்...


சிபிஐ இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் மோதலால் புதிதாக தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வரராவ் சங் பரிவார் கும்பலைச் சேர்ந்தவர். ரஃபேல் ஊழல் தொடர்பான ஆதாரங்களை மூடி மறைப்பதற்காக பாஜக திட்டமிட்டு இவரை தற்காலிக இயக்குநராக நியமித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நாகேஸ்வர ராவின் மனைவி நிதி மோசடி செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

சிபிஐ தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர ராவின் மனைவி சந்தியா, இல்லாத நிறுவனம் ஒன்றில் ரூ. 1 கோடியே 14 லட்சம் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தியது போல போலியான கணக்கைக் காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டிலும் நாகேஸ்வர ராவின் தலையீடு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரைத்தான் சிபிஐ-யின் தற்காலிக இயக்குநராக நியமித்திருக்கிறது ஊழல்கள் நிறைந்த பாஜக அரசு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.