17/07/2020

ராமருக்கும் இந்தியாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது...



ராமர் கதை நேபாளத்தின் கதை என்று அறிவித்தாலும் அறிவித்தார் நேபாள பிரதமர் ஒலி... உண்மை ராமரை நேபாளத்தார் என்று அடித்து சொல்லுகிறது...

பாவம் இதை வைத்து பிழைத்தவர்கள் , தீர்ப்புசொன்னவர்கள், அரியணை ஏறியவர்கள் தவிக்கிறார்கள்...

விவரங்கள் இதோ...

வால்மீகி கூறும் உண்மையும் கூட...  மதவெறி அரசியலுக்காய் உ.பி அயோத்தி பிரச்சனை கிளப்பப்பட்டது.

தாய் வீட்டில் முதல் பிரசவம் என்பது வாழையடி வாழையான உண்மை...

ராமரின் தாய் நேப்பாளத்தை சேர்ந்தவர். அந்த வகையில் அங்கு தான் பிறந்திருக்க வேண்டும்..

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது.

சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.

ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல.

வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால் தான் இராமாயணம் கூறுவது மெய்யாகும்.

இந்த அயோத்தி தான் அந்த அயோத்தி  என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.

அதுபோல் சரயூ நதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது.

ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை.

மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது.

இதிலிருந்து தெரிய வருவது என்ன?

இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பது தான்.

மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது.

ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.

நம் சாண்டில்யன் கதைளில்கூட இடங்கள் உண்மையானவை கதாபாத்திரங்கள் கற்பனையாக காணலாம்...

இந்தமாதிரியான ஆராய்சிக்குள் நான் செல்ல விரும்பவில்லை...

ஆனால் வால்மீகி குறிப்பிட்டுள்ள ஊர்கள் நதிகள் அதன் அமைவிடம் குறித்து அலசுவது கட்டாயமானது...

திருவள்ளுவருக்கு காவி உடுத்தி, பூணூல் போட, வண்ணமடிக்க முயன்ற போது ராமனையே தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான், கொள்ளையிட்டான் இன்னொருவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.