23/09/2020

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டம் 2020...

 


பெரு முதலாளிகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் இந்திய வேளாண் சந்தைக்குள் வரவழைக்கும் தந்திர சட்டம்.

அரசின் கண்காணிப்பு அமைப்புகள் குறுக்கீடுமோ என்ற அச்சமின்றி தனியாா் முதலீட்டாளா்கள் வேளாண் சந்தைக்குள் அனுமதிக்கும் சட்டம்.

உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்வதிலும் இருப்பு வைப்பதிலும் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. உணவுப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் உணவுப் பொருள்களைப் பதுக்கல் செய்து லாபம் சம்பாதிக்கும் இந்நாட்டு மற்றும் பன்னாட்டு பெருவணிகர்களுக்கு அனுமதிக்கும் சட்டம்..

`பருப்பு, எண்ணெய், உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருள்கள் இனி அரசின் அத்தியாவசியப் பொருள்கள் இல்லை' என்று நழுவும் சட்டம்

உணவுப் பொருள்கள் மும்பை, டெல்லி போன்ற பொருளாதாரத்தில் மேம்பட்ட நகரங்களுக்கு  அனைத்தும் செல்லும். பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புறங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தும் சட்டம்.

உழவர்களை முன்னேற்றுவதற்கான சட்டங்கள் என்று சொல்லி, அவர்களை ஒட்டுமொத்தமாக வேளாண்மைத் துறையிலிருந்து வெளியேற்றும் சட்டம். 

மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் நியாய விலைக் கடைகளிலிருந்து படிப்படியாக நிறுத்தும் சட்டம்.

மாநிலங்களுக்கு இடையேயான தடைகளை நீக்குவதாக கூறி மாநில அரசின் உரிமையை அறுத்து எறியும் சட்டம்

இது விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தம். இடைத் தரகா்களும், பெரிய வியாபாரிகளும் மட்டுமே இதில் பயனடைவாா்கள். காா்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளைச் சுரண்ட பெரிய அளவில் வழி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது

விவசாய வர்த்தகம் முழுவதும் டிஜிட்டல் ஆக்கப்படும்

கொரோனா கொடூரங்களையும் தாண்டிய இனி வரும் காலங்களில் படிப்படியாக பெரும் அழிவை ஏற்படுத்தும் சட்டம்.

ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே சுடுகாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.