08/07/2024

ஆம்ஸ்ட்ராங் கொலையும் மர்மமும்...


 இது ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலைக்கான பல்வேறு காரணங்களை ஆராய்வதால் சற்று நீளமாகத்தான் இருக்கும். இது மிக நுண்ணிய அரசியல்  காரணிகளை ஆராய வேண்டிய சூழலை கொண்டது.

"ஆருத்ரா" என்ற மோசடி நிறுவனம் மூலம் 5000 கோடிக்கு மேலாக ஏழை எளிய மக்களின் பணத்தை திருடிய கும்பலுக்கு கூலிப்  படையாக அமர்த்தப்பட்டவன் ஆர்காடு சுரேஷ் எனும் கூலிப்படை தலைவன். 

இந்த ஆருத்ரா நிறுவனத்தின் 5000 கோடி திருட்டு வழக்கில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த "ஆர் கே சுரேஷ்" எனும் நபர் அதன் இயக்குனர் மூன்று பேரில் ஒருவர். இவர் ஒரு வருட காலமாக மலேசியாவிற்கு தப்பி ஓடி நீதிமன்றத்தின் பிடியானையால் ஆஜராகி அதன் பின் சுதந்திரமாக தமிழகத்தில் சுற்றி வருகிறார். 

இந்த ஆருத்ராவில் பணம் இழந்த ஆயிரக்கணக்கான மக்களில் பல ஏழை எளிய மக்கள் ஆம்ஸ்ட்ராங் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் அதோடு இவரை நம்பி வந்த வேறு பல மக்களுக்கும் ஆருத்ரா நிறுவனத்திலிருந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்திருக்கிறார் தனது பலத்தால். 

இப்படி தங்களை யாரும்  நெருங்கி விடக்கூடாது என்று ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் அனுப்பிய/அமர்த்திய கூலிப்படையின் தலைவன் ஆற்காடு சுரேஷ் ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்யப்படுகிறான்.

அந்த ஆற்காடு சுரேஷின் தம்பி மூலம்தான் இப்பொழுது ஆம்ஸ்ட்ராங் அவர்களை கொலை செய்து இருக்கிறார்கள். இதே போல சென்னை லா காலேஜ் பிரச்சனையின் பின்பு அந்த மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களை கொலை செய்வதற்கு முக்குலத்தோரில் இருந்து பலமுறை கூலிப்படை மூலமாக கொலை முயற்சிகள் நடந்திருக்கின்றன இதற்கு முன்னால்.

Law காலேஜ் விஷயத்தில் முக்குலத்தோரின் பகை, அதோடு ஆருத்ரா நிறுவன மோசடியில் அதன் இயக்குனர்களில் ஒருவரான முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்த ஆர் கே சுரேஷ் போன்றவர்களை எதிர்த்து  அவர்கள் திருடிய பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்று கொடுத்தது போன்ற இந்த எல்லா புள்ளிகளையும்  இணைத்துப் பார்த்தால் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலைக்கான மூல காரணிகள் எங்கெங்கெல்லாம் வேர் விட்டு இருக்கும் என்பது தெளிவாக விளங்கும்.

இதே பாணி கூலிப்படை கொலைகளை தென் மாவட்டங்களில் சர்வ சாதாரணமாக நிகழ்த்தி வருகிறவர்கள் குறிப்பிட்ட சமூகத்தவர்களாகவே இருக்கிறார்கள். இவைகள் எல்லாம் யதேச்சைகளாக நடப்பவைகள் அல்ல.

இவை அனைத்தும் நிற்க!. இவ்வளவு பெரிய தலைவரை கொலை செய்ய வேண்டும் எனில் அது உளவுத்துறைக்கும் அரசுக்கும் தெரியாமல் எக்காலத்திலும் நடந்தது இல்லை என்பதுதான் உண்மை. ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில் வந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் போட்டியிட்டு தெலுங்கர் ஸ்டாலினை தோற்கடிக்கும் மிகப்பெரிய அரசியலை செய்து மிக சொற்ப வாக்குகளின் ஸ்டாலின் வெற்றியை பெறவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள். அந்த பயத்தை ஸ்டாலின் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. அதோடு திராவிட கருத்துகளை மிக வலுவாக எதிர்த்து நின்றவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்.

ஆக உளவுத்துறை ரிப்போர்ட்டில் ஆம்ஸ்ட்ராங்  கொலை செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அரசு வேண்டுமென்றே கண்டும் காணாமல் விட்டுவிடுவது என்பது அரசு  (அதிகாரத்தில் இருப்பவர்கள்) இந்த கொலை நடந்தேறுவதற்கு "டிக் அடித்து விட்டது" என்று அர்த்தம் என்கிறார்கள் மூத்த சமூக களப்போராளிகள். 

அரசு இந்த விஷயத்தை டிக் செய்து விட்டது என்ற செய்தியினை தங்களின் சாதிய பின்புலம் கொண்ட உளவுத்துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மூலமாக அறிந்து கொள்ளும் இந்த சமூக விரோத கும்பல்கள் அதன்பின் தைரியமாக கூலிப்படையை களத்தில் இறக்கி விடுகிறார்கள்.

இந்த எல்லா நிகழ்வுகளையும் நீங்கள் ஒருங்கிணைத்து பார்ப்பீர்களேயானால் உங்களுக்கு தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலைக்கு பின்னால் எத்தனை  இயந்திரங்கள் எவ்வாறெல்லாம் வேலை செய்திருக்கும் எந்தெந்த எந்திரங்களின் செயல்பாடுகள் எந்தெந்த எந்திரங்களுக்கு உதவி புரிந்திருக்கும் என்கிற அரசியல் தெளிவாகப் புரியும்.

இவ்வளவு பெரிய அரசியல் கணக்குகள் இதற்கு பின்னால் இருக்கையில் வெறும் கூலிப்படையினரை மட்டுமே மையமாக வைத்து நடத்தப்படுகின்ற இந்த பட்டிமன்றங்களும் சிரிப்பு புலன் விசாரணைகளும் தமிழின இளைஞர்களுக்கு எந்த உண்மையை கண்டுபிடித்துக் கொடுத்துவிடும்..??

இந்த நவீன அரசியலில், சூதாட்டத்தில் தேர்ந்த தர்மன் சூழ்ச்சியில் தேர்ந்த சகுனியிடம் தோற்பதை போல தமிழர்கள் எதிரிகளாலும் அவர்களின் கைக்கூலிகளாலும் சர்வ சாதாரணமாக தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய வரலாறு மட்டுமல்ல மூவேந்தர்களுக்கு பின்னான கடந்த 400 ஆண்டுகளாக வரலாறும்..!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.