03/04/2018

மாநிலங்களில் பொது அமைதி சீர்குழைவா? பாஜக ராஜ்நாத்சிங் மிரட்டலுக்கு.. பி.ஆர். பாண்டியன் கண்டனம்.. அவசர அறிக்கை. நாள் : 02.04.2018 மன்னார்குடி...


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதை ஏற்க மறுத்து இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மோடிக்கு எதிராக தொடரும் நிலையை ஏற்படுத்தியது யார்?

கர்நாடகாவில் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் மோடி நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் எனவே அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நாட்டின் பிரதமரே நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்காதே, நிறைவேற்று என்று அமைதி வழியில் போராடினால் பொது அமைதிக்கு சீர்குழைவு என்று மிரட்டுவது வன்மையாக கண்டிக்கதக்கது.

இப்போராட்டத்தால்  அதிகார பசிக்கு துடிக்கும் மோடியை பார்த்து உலகமே  வெட்கி தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களில் அரசியல் லாபத்திற்காக அண்டை மாநிலங்களின் ஒற்றுமையை சீர்குழைப்பதும், நீராதார பிரச்சினை களை தீர்க்க முயற்சிக்காமல் குழப்பம் விளைவித்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதே மத்திய அரசு தான்.

எனவே அமைதி வழி போராட்டங்களுக்கு மதிப்பளிப்பளித்து உடன் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து அமைதி ஏற்படுத்துவதற்கு பதிலாக மத்திய காவல் படை தயாராக இருக்க வேண்டுமென மிரட்டுவது ஏற்கதக்கது அல்ல.

எனவே உங்களின் சட்டவிரோத மிரட்டலை மோடிக்கெதிராக திருப்புங்கள் என விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறேன்.

மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.