16/11/2018

கப்பலும் வங்கிகளும்...


ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் சென்று வணிகம் செய்யும் குழுக்கள்.... அந்த நாட்டில் தங்களது பொருள்களை விற்றுவிட்டு அதன் மூலம் கிடைக்கும் தங்கத்தை அந்த நாட்டில் உள்ள தனது இரத்தவழி சொந்தங்களின் வட்டிகடையில் கொடுத்துவிட்டு... அதற்கான ஒப்புகை சீட்டை பெற்றுகொண்டு.....

3 மாதம் கடல்பயணம் மேற்கொண்டு வந்து இந்த நாட்டில் அதே இரத்தவழி சொந்தகளின் வேறு ஒரு வட்டிகடையில் கொடுத்துவிட்டு அதற்கான தங்கத்தை பெற்றுகொண்டார்கள்......

இதில் கிடைக்கும் நன்மைகள்

1) கடற்கொள்ளையர்கள் கையில் இருந்து தங்கத்தை காப்பாற்ற முடிகிறது....

2) 3 மாதங்கள் கடலில் பயணிக்கும் போது வீணாக அந்த தங்கம் பதுக்கிய படி உள்ளது.... அதே தங்கம் வட்டி கடைகாரரிடம் இருந்தால்.... அதற்கு நிகரான ஒப்புகைசீட்டை கொடுத்து வட்டிக்கு விட முடியும்......

இதில் நான் சொல்லும் ஒப்புகை சீட்டு வேறு எதுவும் இல்லை....

அது தான் பணம்....

இப்போதும் தங்கத்திற்கு நிகராக தான் பணம் அச்சிடப்படுகிறது.... அதுவும் ஒரு நாட்டுக்கே பணத்தை அச்சிட்டு கொடுப்பது ஒரு வங்கி என்ற வட்டிகடை தான்.. அன்று அதில் அந்த வட்டிகடை காரன் கையெழுத்து போடுவான்.... இன்று Reserve bank என்ற வட்டிகடை போடுகிறது....

வங்கிகளில் Float Income என ஒன்றை கேள்விப்பட்டு இருப்பீர்கள்...அதில் தான் ஒவ்வொரு வங்கியும் இயங்கி கொண்டு இருக்கிறது.....

அந்த Float income என்பதற்கான சரியான அர்த்தம்...மிதந்து கொண்டு இருக்கும் போது கிடைக்கும் வருமானம்.. அதாவது நீங்கள் வங்கியில் போடும் பணத்தை மீண்டும் நீங்கள் எடுக்கும் வரை அதை வட்டிக்குவிட்டு சம்பாதிப்பது.....

அந்த மிதந்து கொண்டு இருக்கும் போது வரும் வருமானம் இந்த வார்த்தை நியாபகம் வருகிறதா?

ஆதி காலம் தொட்டு இவைகளை இயக்கிவருவது ஒரே கூட்டம் தான்....ஒவ்வொரு நாடுகளிலும் அவர்களின் இரத்தவழி சொந்தங்கள் இருக்கிறார்கள்.... இந்திய வங்கிகளை தோற்றுவித்தவர்களை கொஞ்சம் தேடிப்பாருங்கள் அனைவரும் ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்களே....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.