03/02/2019

அஜித்துக்கு விருப்பம் இருந்தால் கவுரவ பதவியில் பணியாற்றலாம் - அண்ணா பல்கலைக்கழகம் கடிதம்...


ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டத்தில் 10 மாதங்களாக பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது.

பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏரோ மாடலிங் செய்து வந்த நடிகர் அஜித்குமார், எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்‌ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் ஆளில்லா விமானத்திற்கான பணியில் இணைந்து பணியாற்றினார். கடந்த 10 மாதங்களாக தக்‌ஷா குழுவின் ஆலோசகராகவும், ஆளில்லா விமானத்தை ரிமோட் மூலம் இயக்கும் விமானியாகவும் அஜித்குமார் பணியாற்றினார்.

ஆளில்லா ஏர் டாக்சி என்ற கருவுடன் தயாரிக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானம் அவசர காலங்களில் ஒருவரை சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. இது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆளில்லா விமானங்கள் தொடர்பான போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் இந்த ஆளில்லா ஏர் டாக்சி காட்சிபடுத்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பங்கேற்று கடந்த 10 மாதங்களாக பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவித்தும் அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் வரும் காலங்களில் விருப்பம் இருந்தால் கவுரவ பதவியில் தாங்கள் ஆலோசகராகவும் பணியாற்ற வேண்டும் என்றும் அஜித்திடம் அண்ணா பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.