16/02/2019

நாடாளுமன்றம் தேர்தல் கூட்டணி....



அதிமுக - 24
பாஜக.   - 8
பாமக.    - 4
தேமுதிக - 4

என்று செய்தி வருகிறது...

ஒன்றுமே இல்லாத பாஜக விற்கு 8 தொகுதி...

தமிழகத்தில் பாமக முன்பை விட பல மடங்கு வளர்ந்துள்ளது... இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது...

இந்த சமயத்தில் மீண்டும் தமிழகமே எதிர்க்கும் பாஜக - அதிமுக கூட்டணியில் இனைந்து அனைவரின் நம்பிக்கையை இழக்க வேண்டுமா.?

அதுவும் 4 தொகுதிக்கு...

ஒன்றுமே இல்லாத நோட்டாவிற்கு போட்டியான பாஜக விற்கு 8 தொகுதி...

மக்கள் பிரச்சனைக்கு தலையீடாத தேமுதிக விற்கு 4 தொகுதி...

ஆனால் தமிழகத்தில் இளைஞர்களின் நம்பக்கையான அன்புமணி இராமதாஸ் அவர்களின் மூலம் பாமக மிக பலமாக வளர்ந்துள்ளது...

பாமக இருக்கும் கூட்டணியே வெல்லும் என்று உறுதியாகிவிட்ட நிலையில்... 4 தொகுதிக்கு தமிழகம் எதிர்க்கும் கட்சிகளிடம் கூட்டணி வைத்து நம்பிக்கையை இழக்க வேண்டுமா.?

பாமக கூட்டணிக்கு வந்து வெல்ல வேண்டும்.. அதே சமயம் பாமக வளர கூடாது என்பதற்காகவே... வளர்ச்சியை தடுப்பதற்காகவே இந்த 4 தொகுதி கொடுக்கிறது அதிமுக...

பாமக தனித்தோ அல்லது பாமக தலைமையில் கூட்டணியை உருவாக்கியோ தேர்தலை சந்தித்தால் நல்லது... அதுவே வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக விற்கு பலம்...

இல்லை என்றால் சட்டமன்றத் தேர்தல் மிகச் சிக்கலாக மாறி விடும் என்பது என் கணிப்பு...

பொறுத்திருந்து பார்ப்போம்... பாமக தலைமை என்ன முடிவு செய்யப் போகிறது என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.