04/12/2018

மந்திரம்...


மந்திரம் என்பதற்கு.. நினைப்பவரைக் காப்பது என்பது பொருள்.

நினைப்பவரைக் காப்பது இறைவனது திருவருளேயன்றி வேறொன்று அன்று.

ஆதலால் உண்மையில் மந்திரமாய் இருப்பது திருவருளே.

ஆயினும் அது சொற்களையும் சொற்றொடர்களையும் தனக்கு இடமாகக் கொண்டு அவற்றின் வாயிலாகவே புத்தி, முத்தி -  ஆகிய பயன்களைத் தருகின்ற காரணத்தால்..

அச்சொற்களும் சொற்றொடர்களும் உபசார முறையில் மந்திரங்கள் எனப்படுகின்றன.

மந்திரங்களுள் தலையாயது திருவைந்தெழுத்து ஆகும்.

அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும்.

வடமொழியில்  அது பஞ்சாக்கரம் எனப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.