04/12/2018

நீட் தேர்வின் பாதிப்பு... RTI தகவலில் அம்பலம்...



அரசு நீட் கோச்சிங் செண்டர் நடத்தியும், 4 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர.

1 அரசுப்பள்ளி மாணவர் மட்டுமே தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

வெளிமாநிலங்களில் படித்த மாணவர்கள் தமிழக இருப்பிட சான்றிதழ் தந்து 261 பேர் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் .

இந்த இடங்கள் அனைத்தும் இதுவரை மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்தது.

1834 மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் தேர்வு முடித்து ஒரு ஆண்டு கோச்சிங் செண்டர்களில் படித்து இந்த ஆண்டு மீண்டும் நீட் எழுதி மருத்துவ இடங்களை பிடித்துள்ளனர்.
 
மொத்த இடங்களில் பாதிக்கும் மேல் கடந்த ஆண்டு மாணவர்கள் பிடித்துள்ளனர்.

இதுவரை தமிழக CBSE பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே தமிழக மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துவந்தனர். தற்போது 894 மாணவர்கள் CBSE பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இலட்சக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களில் 4 பேருக்கு மருத்துவக்கல்வி.


சில ஆயிரம் CBSE மாணவர்களில் ஆயிரம் பேருக்கு மருத்துவக்கல்வி.

 சமூக சமநிலை புதைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி இனி கோச்சிங் சென்டர்களை நோக்கி சென்றுவிடும்...

அன்புடன்
வே.ஈசுவரன் மதிமுக

இதனை வெளியிட்ட The Hindu , Times of India நாளிதழ்களுக்கு நன்றி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.