21/12/2021

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு டம்மி காசோலை கொடுத்து சிக்ஸர் அடித்த திமுக விடியல் ஸ்டாலின்...


தாய்மொழி கல்வியே கண்டு புடிப்புகளை உருவாக்கும...

 


தமிழினத்திலே பிறந்து தமிழ் மழலையில் நினைந்து, தாயைவிட அதிக நேரம் தமிழ்மொழியுடன் பகிர்ந்து வளர்ந்த நாம் ஏன் நம்மை அடிமை படுத்திய ஆங்கில மொழியின் மீது மோகம் கொண்டுள்ளோம்?

என்று ஒரு குழந்தை தனது தாய் மொழியை விடுத்தது வேறு ஒரு மொழியில் கல்வி கற்க தொடங்குகிறதோ, அன்றே அதன் சுயசிந்தனை திறன் மழுங்கடிக்கப்படுகிறது. அவன் தெரிந்ததை செய்து கொண்டு ஒரு சிறந்த அடிமையாக வாழ்வானே தவிற, ஒரு போதும் சிறந்த தலைவனாக மாட்டான்.

இதுவரை அடிமைகளாக இருந்தது போதும், இனியாவது தமிழர்களாய் நிமிர்வோம்.

தாய்மொழியில் கற்ப்போம்,

இழந்ததை மீட்ப்போம்,

இருப்பதை காப்போம்.

நாளைய விடியல் நம்மோடு,

நிச்சியம் உண்டு போராடு.

தமிழில் படித்தோர்க்கு வேலையளிக்க வேண்டும்...

சாமானிய மக்கள் விரோதி பாஜக மோடி கலாட்டா...

சீன தூதர் - Qi zhenhong...

தேங்காய் பற்றிய அதிசய உண்மைகள்...

 


தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது .

மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

இது சிவனின் மூல சக்தியாக உள்ளது இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும்.

கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறை சக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது. இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது.

ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும்.

முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது.

ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்று கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும்.

வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஸ்மி கடாட்சம் பெருகும்.

மாந்திரீகத்தில் சண்ட காளிவேர் , நரபூதாளம் , சூலநாசவேர் , இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் , இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்மந்தப்பட்டவர் நிலை அதோ கதிதான் .

இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமிவரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும் . இது சித்தர்கள் முறையாகும்.

முள்ளம் பன்றி முள் , எட்டிமர வேர் இரண்டையும் வீட்டில் வைத்துவிட்டால் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும்.

இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும் , மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம்.

அம்மாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் , அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும்.

குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி ( சாறு ) கொடுத்தால் உடல் பலமாகும் ஞாபக சக்தி கூடும்.

வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும்.

வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகினி ஹஸ்த்தம் , திருவோணம் , நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும்.

(அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவர்).

சும்மா இல்லீங்க நம் முன்னோர் தேங்காய் உடைக்கும் சாஸ்திரம் வைத்தது...

வெற்றி...

 


சாத்தியமில்லை என்று ஒரு இடத்தில் முடங்கிப்போவதை விட,

அதற்கான முயற்சிகளை எடுப்போம்..

தோற்றாலும் அதற்கான காரணத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வோம்..

நாம் ஒன்றும் உடனடி தீர்வுக்கு இங்கு வரவில்லை,

அப்படி நினைப்பவர்கள் தான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த முட்டாள்களாக இருப்பார்கள்..

போடா அய்யோக்கிய பயலே 😁

திமுக கைகூலி போராளிகளை காணவில்லை...

உங்களுக்கு தெரியுமா..?

2022 இல் மீண்டும் சுனாமி...

அட்டாங்க யோகப் பயிற்சிகள்...

 


அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர்.

இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன.

இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சிகளால் பெற்றனர்.

அத்தகைய சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது..

அட்டாங்க யோகப் பயிற்சிகள்...

1. அணிமா

2. மஹிமா

3. லஹிமா

4. கரிமா

5. பிராத்தி

6. பிரகாமியம்

7. ஈசத்துவம்

8. வசித்துவம்

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின் அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா, திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா, சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி, பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே...

1. அணிமா: பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது. பிருங்கி முனிவ ர் முத்தேவர்களைமட்டும் வலம் வருவதற்கா க சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

2. மஹிமா: சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருட்ண பரமா த்மா அர்ஜூனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

3. லஹிமா: கனமான பொருளை இலேசான பொருளா க ஆக்குவது. திருநாவுக் கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்ட போது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

4. கரிமா: இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரி டம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடை சியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரிசெய்த சித்தி கரிமா.

5. பிராத்தி: எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற் புராணத்தில் எல்லாம்வல்ல சித்தரான படலம் என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்த தாக வரும் சித்தி பிராத்தி.

6. பிரகாமியம்: வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன் றுதல். அவ்வையார் இளவயதி லேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக் கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்..

7. ஈசத்துவம்: ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞான சம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பி யமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

8. வசித்துவம்: ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல். திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்...

அதிமுக ராஜேந்திர பாலாஜி தலை மறைவு...

அதிமுக சி.வி. சண்முகம் கலாட்டா...