20/08/2020


தமிழ் மொழி தோன்றி 45000 ஆண்டுகளாகிறது.

உலகெங்கும் 13 கோடி மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.

உங்கள் சமஸ்கிருதம் வெறும் 24000 பேர் தான் பேசுகிறார்கள். அதுவும்
அதன் எழுத்துரு பிராமி என்னும் தமிழியில் இருந்தே திருடப்பட்டது.

தமிழர்களின் வழிபாட்டு முறையும் கூட சைவத்தமிழ் வழிப்பாடு தான்.

திருந்துங்கடா டேய்...

அந்தமானின் வந்தேறிகள்...


அந்தமான்-நிக்கோபர் மக்கள் தொகையில் இனவாரியாகப் பார்த்தோமேயானால்,

வங்காளியர் 32%
தமிழர் 26%
மலையாளிகள் 11%
ஹிந்தியர் 11%
தெலுங்கர் 6%
உருது 2%
தொல்குடிகள் 12%

1954ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அந்தமான்-நிகோபர் தீவுகளின் பெரிய அந்தமான் தீவில் தமிழர்களே அதிகம் வசித்து வந்தனர்.

அதன்படி அத்தீவு தமிழகத்துடன் இணைத்திருக்கவேண்டும்.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

1952லிருந்தே வங்காளியர் உட்பட பல்வேறு இந்துக்களை அந்தமான் நிகோபரில் குடியேற்றும் திட்டமானது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 1953லேயே நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதாவது அத்தீவுகளை ஹிந்தியாவிடமே வைத்திருக்க திட்டமிட்ட குடியேற்றம் நடைபெற்றது.

ஐந்தாண்டுத் திட்டம் போல மூன்று கட்டமாக நடைபெற்ற இந்த குடியேற்றத்தின்படி 15ஆண்டுகளில் ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து ஏக்கர் நிலம், போக்குவரத்திற்கு ரூ210,
உணவுக்கு ரூ70,
வீடுகட்ட ரூ800,
மாடு வாங்க ரூ700,
பண்டங்கள் வாங்க ரூ180,
விதைகள் வாங்க ரூ100
என வாரிவழங்கியது ஹிந்திய அரசு.

(அதற்கு முன்பே தமிழர் வாழ்ந்து வந்த நிலம் தமிழர்களுக்கு பட்டா போட்டு இன்று வரை தரப்படவில்லை).

1970ல் 300ஆயிரம்(30லக்சம்) பேரைப் பலிகொண்ட வங்கதேச விடுதலைப் போரின்போது வெளியேறிய வங்காளியரையும் இங்கேயே ஹிந்திய அரசு குடியமர்த்தியது.

இதற்கெல்லாம் காரணம் ஹிந்திய அரசில் இடம்பெற்றிருந்த வங்காளியரின் இனப்பற்றே ஆகும்.

ஏதிலி என்ற பெயரில் பலரும் குடியேறினர் இன்றும் கூட அவர்கள் வங்கதேசத்திற்கான விசா வைத்துள்ளனர்.

அவர்களின் நண்பர், உறவினர், வீடு, சொத்து, தொழில் என அனைத்தும் வங்கதேசத்திலேயே நடத்திவருகின்றனர்.

இவை மட்டுமல்ல அதுவரை சென்னையிலிருந்து சென்றுவந்த கப்பல் போக்குவரத்து கல்கத்தா வழி செல்வதாக மாற்றப்பட்டது.

அந்தமான்-நிகோபர் உயர்வழக்காடு (நீதி)மன்றத்தின் மேல்முறையீடு கல்கத்தாவின் உச்ச வழக்காடு மன்றமாக ஆக்கப்பட்டது.

பள்ளிகளில் இந்தி, வங்காளி மொழிகள் புகுத்தப்பட்டு பல்கலைக் கழகங்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டன.

வங்க மக்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மேற்குவங்க மாநில அரசு செய்துவருகிறது.

தமிழருக்குப் பிறகு குடிவந்த வங்காளியர் இப்போது சகலமானதும் பெற்று நிரந்தரக் குடிமக்களாக முதல்நிலைக் குடிகளாக ஆகிவிட்டனர்.

வங்காளியர் குடிவரும் முன்பே அங்கே வாழ்ந்துவரும் தமிழர் இன்றும் பிழைக்கச் சென்றவர்களாக,  சிறு வணிகர்களாக, வேளாண்மைக் கூலிகளாக, சேரி மக்களாக வங்காளியரை அண்டிப்பிழைக்கும்  இரண்டாம் தர மக்களாகவே வாழ்ந்துவருகின்றனர்.

தமிழக வந்தேறி அரசுகள் அந்தமான் தமிழரை ஏறெடுத்துப் பார்க்காததுடன் அவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டன.

1970ல் வங்க ஏதிலிகள் குடிவந்த போது அப்போது பெரும் பாண்மையாக இருந்த தமிழர்கள் சின்ன எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்கவில்லை.

1980களின் தொடக்கத்தில் சிறிமாவோ-சாஸ்திரி உடன்பாடு மற்றும் சிறிமாவோ-இந்திரா உடன்பாடு ஆகியவற்றின்படி இலங்கை அரசு 500ஆயிரம்(5லக்சம்) மலையகத்தமிழரை வெளியேற்றியபோது ம.கோ.ரா (எம்ஜிஆர்) தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று இந்திராவைச் சந்தித்து அவர்களை அந்தமானில் உள்ள ரப்பர், தேயிலைத் தோட்டங்களில் குடிவைக்க கோரிக்கை விடுத்தது..

உடனே வங்காளியர் கொதித்தெழுந்தனர்.

அந்தமானின் வங்காளிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வங்காளிய மக்களை அரசின் இந்த முடிவைத் தடுக்க தந்தி அனுப்பும் போராட்டத்தை செய்யவைத்தனர்.

தமிழக அனைத்துக் கட்சி தூதுக்குழு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததை
வங்காளியர் அனுப்பிய காகிதத்துண்டுகள் தோற்கடித்தன.

இதுதான் சாக்கு என்று ஹிந்திய அரசு அந்தமானில் இடம் இல்லை என்று வடிகட்டிய பொய்யைச் சொல்லி மறுத்துவிட்டது.

இறுதியாக மலையகத் தமிழர் நீலகிரி மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

அந்தமான்-நிகோபரில் தமிழர்:

'தேனக்க வார்பொழில் மாநக்கவாரம்' என்று இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் இடம்பெறும் 'நக்கவாரம்'தான் தற்போதைய நிகோபர்.

சோழர்களின் எழுச்சி உச்சத்திலிருந்த போது (கிபி.1020கள்) அந்தமான்-நிகோபர் தீவுகள் உட்பட இன்றைய மலேசியா வரை சோழராட்சி பரவியிருந்தது.

நிகோபரில் இருக்கும் இராசேந்திர சோழனின் வெற்றித்தூண் 'கங்காநதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

கி.பி.1066ல் இராசேந்திர சோழன் இந்தத் தீவுகளுக்கு வருகை தந்துள்ளார்.

முனைவர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் வெளிக் கொண்டு வந்த உண்மை,
அந்தமானில் 'நான்கௌரி' தீவில் இராசராச சோழனின் வெற்றித்தூணும் கல்வெட்டும் உள்ளன.

தஞ்சைக் கல்வெட்டுக்களிலும் இத்தீவுகள் நக்கவாரம், நாகதீபம், கார்த்தீபம் என்று குறிக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அந்தமான் நிகோபர் தீவுகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

பழக்கங்கள், மொழி, வேர்ச்சொல், தோற்றம் என அந்தமானின் பழங்குடிகளிடம் தமிழ் அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன.

1895ல்  ஒரு தமிழ்க் கிறித்தவப் பாதிரியார் 'வேதப்பன் சாலமன்' என்பவர் தொண்டுகள் பல செய்தார்.

ஆதிகுடிகளுடன் தமிழருக்கு நெருக்கம் ஏற்பட முக்கிய காரணம் இவர்.

அதன்பிறகு அந்தமானில் தமிழர் குடியேற்றம் அதிகரித்தது
(திணிக்கப்பட்ட குடியேற்றம் அல்ல)

1944ல் ஜப்பான் இத்தீவுகளைக் கைப்பற்றியயோது சுபாஸ் சந்திரபோசிடம் கையளிக்கப்பட்டு 'கேணல்.லோகநாதன்' என்ற தமிழரை அவர் ஆளுநராக நியமித்தார்.

இன்றும் தமிழகத்தின் ஆதரவில்லாமலேயே அந்தமான் தமிழர் தாக்குப்பிடித்து வருகின்றனர்.

(நன்றி: 'தமிழன் இழந்த மண்' பழ.நெடுமாறன்)

தமிழ் நாட்டாண்மையின் பொறுப்பு:

அந்தமான்-நிகோபர் தீவுகளானது தமிழர் ,கலிங்கர், ஆங்கிலேயர், சப்பானியர், பர்மியர், வங்காளியர், ஹிந்தியர் என பல்வேறு வல்லாதிக்கங்களின் கீழ் பந்தாடப்பட்டு வருகிறது.

தமிழர்கள் அந்தமான்-நிகோபரை தமக்காகக் கேட்கவில்லை.
(நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள்.. பழந்தமிழர் அங்கே ஆடையின்றி வாழும் மக்களைக் குறிக்கும் வகையில்தான் பெயரே வைத்துள்ளனர்) அங்கே குடியிருப்போருக்கான உரிமைகளைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள்.

தமிழர்கள் அங்கே வங்காளியரைப்போல ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை.
பிழைத்துதான் வருகின்றனர்.

அந்தமான்-நிகோபர் தீவுகள் 293 உள்ளன, இங்கே மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் சந்தித்து வருவதெல்லாம் அழிவைத்தான்.

வல்லரசுகளால் இவர்கள் முற்றாக அழியும் எண்ணிக்கைக்கு வந்துவிட்டனர்.

ஹாங்காங் தீவு ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது அங்கே இயங்கிவரும் தொழிற்சாலைகள் இங்கே மாற்றப்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன.

ஹிந்திய படை இங்கே பழங்குடிகளை கேடாக நடத்துகின்றனர்.

வடக்கே கோகோ தீவு பர்மாவால் சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு ஹிந்தியாவைக் கண்கானிக்க சீனா தளம் அமைத்துக் கொண்டுள்ளது.

ஆதிகுடிகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. சுற்றுலா என்ற பெயரில், மதப்பரப்புரை என்ற பெயரில், படைத் தளங்கள் என்ற பெயரில், கள்ளத் துறைமுகங்கள் என்ற பெயரில், மொழித்திணிப்பு என்ற பெயரில் நாள்தோறும் அவர்கள் சீரழிந்து வருகிறார்கள்.

தனித்த நாடமை (தேசிய)இனமான 50பேர் வாழும் ஒரு சின்னஞ்சிறு தீவு தனிநாடு கோருமேயானால் அதை ஆதரிப்பதுதான் தமிழ்நாட்டாண்மை.

தமிழ்மக்கள் தாய்நிலத்தை மீட்டு தமிழ் குடியரசு உருவாகுமேயானால் உலகின் மூத்த இனம் என்றவகையில் உலக இனங்களுக்கு அதன் தாய்நிலத்தில் விடுதலை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

தமிழீழம் - தமிழகம் - அந்தமான்- நிக்கோபர்... ஆகியவை தமிழர்களுக்கான நாடு என்பதை மறந்து விட வேண்டாம்...

பாஜக எச்.ராஜா சர்மா கலாட்டா...


உ.பி.யில் பாஜக வின் கொடுங்கொள் ஆட்சி...


இந்தியாவில் ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிப்பு: கோபமடைந்த 16 வயது சிறுமி பாஜக மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை...

தமிழக அரசுப் பணிகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க சட்டத்திருத்தம் தேவை - பாமக மருத்துவர் அன்புமணி ராமதாஸ்...



இந்தியாவில் கலவரங்களை நடத்த முகநூல் நிறுவனம் சதி.. அமெரிக்க பத்திரிகை பரபரப்பு செய்தி...


இந்தியாவில் கலவரங்களை நடத்தும் நோக்கில், வெறுப்பு செய்திகளை பரப்புவதற்கு முகநூல் நிர்வாகிகள் திட்டமிட்டு சதி செய்வதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

முகநூலில் பதிவேற்றப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகள் தொடர்பாக விதிமுறையை முகநூல் நிறுவனம் வகுத்தது. அதன் படி முகநூலில் வெளியிடப்படும் வெறுப்பு கருத்துகளை தடை செய்யவேண்டும். ஆனால், இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கு பொறுப்பு வகிக்கும் அன்கி தாஸ் எனும் பெண்மணி, "'இந்தியாவில் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளை பரப்ப உதவுவதாக'' அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோர் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) பத்திரிகை கூறியுள்ளது.

தமிழினப் படுகொலை குற்றவாளி ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரான அன்கி தாஸ், சர்வதேச நிறுவனமான முகநூலின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கு இயக்குநராக இருந்துக்கொண்டு இந்தியாவில் கலவரம் நடத்த திட்டமிடுவது மிகப்பெரிய தேசதுரோக செயல் ஆகும். இந்த குற்றத்தை விசாரித்து, குற்றவாளிகளை தண்டிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்...

திராவிடர்கள் யார்..?


திரி - வடுகர்களே திராவிடர்கள் அதாவது தெலுங்கர்கள்...

திராவிடர்கள் என்போர்களே...  தெலுங்கர்கள்....

 தமிழர்கள் அல்ல......

கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக, ஐயா வீரப்பனுக்கு கொடுக்கப்பட்ட ரூ 40 கோடியை ஆட்டையப் போட்டவன் யாரு?



ஜூலை 30, 2000 அன்று இரவு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார்..

ஜூலை 31 அன்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியை ராஜ்குமாரின் மனைவி பார்வத்தம்மாளுடன் சென்னையில் சந்தித்து அவசர பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆகஸ்ட் 3, 16, 27 மற்றும் செப்டம்பர் 20 ஆகிய நான்கு நாட்களில் நக்கீரன் கோபால், ஐயா வீரப்பனை சந்திக்க தூதுவராக சென்றார்.

ஆகஸ்ட் 25 ம் தேதி, பிணைப்பணம் கொடுப்பதற்கான நிதியாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு அரசு தலா ரூ 5 கோடி கொடுத்து, ரூ 10 கோடி நிதியை உருவாக்கினார்கள்..

அக்டோபர் 10ம் தேதி, ஐயா நெடுமாறனும், நக்கீரன் கோபாலும் தூதுவராக சென்றார்கள்..

நவம்பர் 11ம் தேதி, ஐயா நெடுமாறன் மட்டும் தூதுவராக சென்றார்..

நவம்பர் 13ம் தேதி, நடிகர் ராஜ்குமாரை அடுத்த நாள் விடுதலை செய்வதாக அண்ணன் கொளத்தூர் மணிக்கு, ஐயா வீரப்பன் செய்தி அனுப்பினார்..

நவம்பர் 15ம் தேதி, நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்..

சிறப்பு அதிரடிப்படையின் அராஜகங்கள் குறித்த கருத்தரங்கம் நவம்பர் 26 அன்று "கொளத்தூர்" ல் நடத்தப்படும் என்று ஐயா வீரப்பனுக்கு உறுதி அளிக்கப்பட்டது..

நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக ரூ 20 கோடி, கர்நாடக அரசுத் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாக கர்நாடக மாநில காவல்துறை தலைமை இயக்குனர் சி. தினகர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா-வின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா மூலமாக இரண்டுமுறை தலா ரூ 5 கோடி என்று, மொத்தம் ரூ 10 கோடி, ஐயா வீரப்பன் சொன்ன நபரிடம் கொடுக்கப்பட்டது.

கர்நாடக மாநில காவல்துறை துணை இயக்குனர் டி. ஜெயபிரகாஷ் ரூ 5 கோடியை, ஐயா வீரப்பன் சொன்ன நபரிடம் கொடுத்தார்..

நடிகர் ராஜ்குமார் மனைவி பார்வத்தம்மாள், ரூ 1 கோடியை, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடமும்,
ரூ 2 கோடியை, ஐயா வீரப்பன் சொன்ன பானு என்ற நபரிடமும் கொடுத்தார்.

திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் ரூ 2 கோடியை, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்தார்கள்.

கர்நாடக காவல்துறை,  மயக்க மருந்து மருத்துவ சோதனையில் (Narcotics Test)  ஐயா வீரப்பனின் உதவியாளர் கனகராஜ் என்பவரை உட்படுத்தியதில், மொத்தம் ரூ 40 கோடி கொடுக்கப்பட்டதாக கண்டு பிடிக்கப்பட்டது..

தமிழ்நாடு அரசின் சிறப்பு வழக்கறிஞர் சங்கரநாராயணன், நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க ரூ 40 கோடி கொடுக்கப்பட்டதாக, ஜூலை 18, 2002 அன்று ஈரோடு சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்..

கர்நாடக நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க கொடுக்கப்பட்ட பணத்தை ஐயா வீரப்பனின் மனைவி வாங்கவில்லை என்று, அக்டோபர் 29, 2012 அன்று ஈரோடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மணியா இந்தப் பணத்தை  ஆட்டையப் போட்டவன் யாரு?

மூனுசுழி ண , ரெண்டுசுழி ன என்ன வித்தியாசம்?


படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்.

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம் - தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

தமிழ் எழுத்துகளில்..

ரெண்டுசுழி ன என்பதும் தவறு.
மூனுசுழி ண என்பதும் தவறு.

ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேர்ந்தே வருவதைப் பாருங்களேன், இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்.

(வர்க்க எழுத்து-ன்னா, சேர்ந்து வரும் எழுத்து, அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் எழுத்துப் பிழையும் குறையும்.

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா, அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும். ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா, அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும். ஏன்னா அது றன்னகரம்.

என்று புரிந்து கொள்ளலாம்...

நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் நடைபெற்ற டெண்டர் ஊழலில் திமுக வின் ஆர்.எஸ். பாரதி உட்பட 10 பேரை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...


இனி எந்த கூட்டுறவு சங்க தேர்தலிலும் இவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது...

பாஜக கலாட்டா...


கார்ப்பரேட் கைகூலி பாஜக - அதிமுக வின் அடிமை கல்வி முறைக்கு இன்று மட்டும் இரண்டு உயிரை காவு கொடுத்திருக்கிறோம் ☹️


சமூக அறிவற்ற அடிமை ஆடுகளாய் பன்னாட்டு தனி முதலாளிகளுக்கு விலைபோக தூண்டும் இந்த கேடுகெட்ட கல்வி முறைக்கும் வணிக நோக்கத்திற்கும் இன்னமும் எத்தனை உயிரை தான் பலி கொடுக்கப் போகிறோம்..?


இந்த அடிமை கல்வியை கற்ற அடிமைகளிடமே நியாமும் நீதியையும் கேட்பது ஏமாளித்தனத்தின் உச்சம்...

இன்றைய தினமணியில் ஐயா பழ நெடுமாறன் அவர்களின் கட்டுரை வந்திருக்கிறது... தமிழர்களே படியுங்கள்....


உத்திரமேரூர்...



ஆயிரம் ஆயிரம் வரலாறு கொட்டிக்கிடக்கின்றது, " ராஜ ராஜ சோழனுக்கு " முந்தைய " பராந்தக சோழன் " கல்வெட்டுகள் எல்லாம் காணப்பெறுகின்றது, ஆனால் இன்றைக்கு எல்லாமே அழிவின் விளிம்பில்..

இந்த படத்தில் இருப்பது தான் " ரகசிய அறை " - போர் மூளும் போது, சிலைகள், மற்ற விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், பதுங்குவதற்க்கும் இது போன்ற அறைகளை உருவாக்கி உள்ளனர். " பொன்னியின் செல்வன் " புத்தகத்தில் "நிலவறை" குறித்த செய்திகள் கூட உள்ளது ,சுமார் ஆறு அடி உயரமும், பனிரெண்டு அடி நிகளமும் கொண்ட இந்த அறை, அழகாக உள்ளே கல்லில் கட்டப்படிருக்கிறது.

மேலே இருந்து பார்த்தால் நிச்சயம் இதுபோன்ற ஒரு அறை இருப்பது தெரியாது, அந்த மேல் கல்லை நீக்கினால் மட்டுமே இவ்வளவு பெரிய அறை இருப்பது தெரிய வரும், அவ்வளவு அழகாக,நேர்த்தியாக திட்டமிட்டு கட்டி இருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு இது கேட்பாறற்று கிடக்கின்றது, இந்த கோயிலை சுற்றி ஏகப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றது, தன்னுடைய இனத்தின் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய தமிழர்கள், இதை மதிக்க தவறிவிட்டதால், இன்றைக்கு "குடி" மக்கள் சுற்றி இருக்கும் வரலாற்றை மறந்து குடிப்பதற்கு மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர்...

தமிழ்நாட்டில் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணமே இந்த திருட்டு திராவிட பாஜக காரனுங்க தான்..


பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கேரளாவில் தனிச் சேனல்...



நாட்டிலேயே முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலை தொடங்கியுள்ளது கேரள அரசு.

‘சபா டிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேனல் தொடக்க விழா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொலி மூலம் பங்கேற்று தொடங்கி வைத்தார். மேலும், சட்டமன்றத்துக்கான அதிகாரபூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘’இது நம் மாநிலத்திற்கு மதிப்புமிக்க தருணம். மாநிலங்களவை, மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தனியாக சேனல் இருக்கிறது. ஆனால் ஒரு மாநில சட்டமன்றம் சொந்தமாக சேனலைத் தொடங்குவது இதுவே முதல் முறை. ஜனநாயகத்தின் ஆட்சி நீடிக்கும் ஒரு இடத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை மக்களுக்கு வழங்குவது முக்கியம். இது சட்டமன்றத்தின் செயல்பாட்டை இன்னும் வெளிப்படையானதாக மாற்ற உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சபா டிவியில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தங்கள் தொகுதி குறித்து பேசவும், சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் சபா தொலைக்காட்சி மாநில சட்டமன்றத்தின் வெளிச்சத்தை சூரிய உதயங்கள் போல மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரப்பும் என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். சபா டிவியின் சின்னத்தையும் அதன் தீம் இசையையும் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட பின்னர் அவர் பேசினார்.

இந்த முயற்சியின் மூலம் மக்களுக்கு சபை நடவடிக்கைகள் குறித்து சரியான தகவல்களை வழங்க முடியும், என்றார்.
“நாட்டின் அரசியல் வரலாற்றில் மாநில சட்டமன்றத்திற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. இது மக்கள் நலனுக்காக நிறைய நல்ல விஷயங்களைத் தொடங்கியுள்ளது, அவை பின்னர் பிற மாநிலங்களால் பின்பற்றப்பட்டன. கேரள நில சீர்திருத்த சட்டம், தொழிலாளர் நலக் கொள்கைகள், கல்வி சீர்திருத்தங்கள் ஆகியவை மாநில சட்டமன்றத்தின் முக்கிய பங்களிப்புகள். இது மற்ற மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என்றார்...

2ரூவாய்க்கு அவ்வளவு தான் போட்டோ ஷாப் பண்ண முடியும் அவதார்பட ரேஞ்சுக்கு முடியுமா...


இவனுங்களே தீய கட்சினு நேரடியா ஒத்துக்கிட்டாங்க...


மாலியில் ராணுவ புரட்சி... அதிபர் இப்ராஹிம் கைது...



மாலி அதிபர் இப்ராகிம் பவுபக்கர்
மாலியில் அரசு நிர்வாகத்தை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதிபரை கைது செய்ததையடுத்து, அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பமாகோ: மாலி நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. ராணுவ கிளர்ச்சியாளர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வருகின்றன. அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோரை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து தலைநகர் பமாகோ அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு கொண்டு சென்றனர். அரசு நிர்வாகத்தையும் கைப்பற்றினர். இதனால் மாலியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், மாலி அதிபர் இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தெடார்பாக அவர் தொலைக்காட்சியில் பேசும்போது, தனது தலைமையிலான ஆட்சியையும், பாராளுமன்றத்தையும் கலைப்பதாக அறிவித்தார்.  மேலும், நான் அதிகாரத்தில் நீடிப்பதற்காக எந்த ரத்தமும் சிந்தக்கூடாது என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பள பிரச்சினை மற்றும் ஜிகாதிகளுடன் தொடர்ச்சியான மோதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ராணுவ வீரர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது...

சென்னையில் மதுகடை திறப்பு... மகிழ்ச்சியில் பாஜக கிஷோர்...


பாஜக நிர்மலா சீத்தாராமன் கலாட்டா...


மூன்றாவது மொழியாக இந்தியை எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? கோவை மாநகாட்சி பள்ளி கேள்வியால் சர்ச்சை...



கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என அடைப்புகுறியில் வைத்து கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியை தொடங்கி உள்ளது. இதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது,.

1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்வியால் இந்தி மொழி அரசு பள்ளிகளில் கற்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், அதில் இந்தி கட்டாயமல்ல என்றும் ஏதேனும் ஒரு இந்திய மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மாணவர் சேர்க்கை விண்ணப்பம்
கோவை மாநகராட்சி அரசு பள்ளியில் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என்று கேள்வி உள்ளது. அந்த மாணவர் சேர்க்கை படிவத்தில் "மாணவரின் தாய் மொழி ஒரு கேள்வியாக கேட்கப்படுகிறது.

இந்தி படிக்க விருப்பமா
அதற்கு அடுத்தபடியாக முதல் மொழியின் கீழ் மாணவர் எடுத்துக் கொள்ள விரும்பும் உத்தேச மொழிகள் என்ற கேள்வி உள்ளது. மூன்றாவது மொழி (இந்தி) எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா அல்லது கைதொழில் ஒன்றை அதிகப்படியாக கற்றுக்கொள்ள விரும்புகிறார்களா? என்று உள்ளது.

இரு மொழிக்கொள்கை
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்றும் மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் திட்டவட்டமாக அறிவித்தார். அப்படிப்பட்ட சூழலில் இந்த விண்ணப்ப படிவத்தில் உள்ள கேள்வியால் மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவை ஆணையர் மறுப்பு
3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை என்றும் அந்த விண்ணப்ப படிவம் நான் பதவியேற்ற பின் வெளியிடப்படவில்லை. என்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு பள்ளியில் மட்டுமே அப்படி ஒரு விண்ணப்பம் வந்ததாகவும், அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , போலியான விண்ணப்பம் என்றும் கூறினார்...

பாஜக வுக்கு ஆதரவாக முகநூல் செயல்பட்டது அம்பலம்...


தமிழர்கள் மட்டும் இளிச்சவாயனுங்களா?


இழந்ததை மீட்பானா தமிழன்..?



மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்திற்கு உரிமையான பல பகுதிகள் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இந்த வகையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்த 80,000 சதுர கி.மீ பகுதி நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இது ஏறக்குறைய இலங்கையின் நிலப்பரப்பிற்கு சமமாகும்.

இந்த பகுதிகள் தமிழகத்திடமே இருந்திருக்குமானால், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நதி நீர் பிரச்சினைகளே எழுந்திருக்காது.

எனவே, தமிழகத்திற்கு ஏதிராக சதி செய்து பறிக்கப்பட்ட நிலப்பரப்புகளை மறு ஆய்வு செய்து தமிழகத்தோடு இணைக்க நாம் போராட வேண்டும்...

-அன்வர் பாலசிங்கம்,
கேரள தமிழர் கூட்டமைப்பு.

தமிழர் விரோத எடப்பாடி... தமிழகத்தில் இந்தி திணிப்பு 😡


எய்ம்ஸ் எங்கடா..? 🙄


வானவியலில் தமிழரின் பெருமை...


பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே?

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1(க)-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார்.

இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார்.

இந்த அறிவியல்! கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனா் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.

சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்” வெளிப்படுகிறது...

உளறல் என்பது திமுகவின் தனிச்சொத்து என்பது இதன்மூலம் மேலும் உறுதியாகியுள்ளது...



யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல,  திமுக தெலுங்கர் ஸ்டாலின் க்கு பொன்னாடை போர்த்திய பத்தாவது நிமிடத்திலேயே அண்ணன் எடப்பாடியாரை முதல்வர் ஆக்குவோம் என்று சூளுரைத்து மொக்கை வாங்கினார் முன்னாள் எம்பி லட்சுமணன்...

சாமானிய மக்கள் இதிலிருந்து தப்பித்து கொண்டால் நல்லது...



யார் வெற்றி பெறுவர் யார் தோல்வி அடைவது என்று பெரு முதலாளிகள் தான் முடிவு செய்வார்கள்...

சாதியை உருவாக்கியது கன்னடன் எனும் திராவிடனே...


தமிழனை வீழ்த்தியது திராவிடன் எனும் வடுகர்களே...

மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?

இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது.

அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?

காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்...

தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது.

அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?

வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை.

மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.

இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல..

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..

மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்..

Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.

குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு..

என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.

சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்து கொண்டது இல்லை.

இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்...

பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...

இனியும் தாமதிக்காமல் உண்மையை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...


தங்களின் தனிமனித சுதந்திரத்தை மீட்டெடுக்க மக்கள் தொடர் போராட்டம்.. பல நாட்கள் தொடர் போராட்டத்தில் அரசை மண்டியிட வைத்த செர்பிய மக்கள்...