12/08/2017

தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையினர்?


ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.

அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.

காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.

கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.
             
இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர், தமிழர்கள் பெரும்பான்மையர்..

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும்,  சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்..

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.

தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்..

இப்போது புரிகிறதா திமுக ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை  என்று ஓலமிடுவதின் காரணம்....

தமிழனுக்குத் தனிநாடு தான் தீர்வு...

                   
தனிநாடு கேட்டுப் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்..

தனிநாடு கேட்டுப் போராடும் தமிழர்களுக்குத் தனிஈழம் அமைத்துக் கொடுக்க வேண்டும்..

நேர்மையாக சிந்தித்தால் இவை இரண்டும்தான் தீர்வுகள்.

மற்ற அனைத்தும் பித்தலாட்டத்தின் பல்வேறு வடிவங்கள்..

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழக்கமாக இரண்டு குழி வெட்டுவார்கள்.

ஒன்றை தில்லி வெட்டும்..
மற்றொன்றை திராவிடம் வெட்டும்..

தில்லி வெட்டிய குழியில் தமிழ்நாட்டுத் தமிழன் விழாமல் தப்பித்தால் திருட்டுத் திராவிடம் வெட்டிய குழி இவனை விழுங்கக் காத்திருக்கும்..

தமிழனுக்குத் தனிநாடு தான் தீர்வு..

அதற்காகத் தான் எங்கள் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா சாதனை...


எந்த கிளர்ச்சியும் இல்லை எந்த போராட்டமும் இல்லை.. அமைதியாக பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது...

அட பாவிங்களா.... இதத்தானடா நாங்கள் காலங்காலமாக உபயோகிச்சோம்...


100% nature ன்னு எங்களுக்கு தெரியாதா மூதேவி...

இத உபயோகிச்ச எங்களை Colgate, Close up ன்னுவாங்க வச்சிட்டு, நீங்க வேப்பங்குச்சிய உபயோகம் பண்றீங்களா....

எங்கள் ஊருக்கு வாங்க....  ஒரு லாரி குச்சி பரிசா  கொடுத்து அனுப்புறேன்....

திராவிடம் என்பது வேற்றினத்தார் தமிழர்களை ஏமாற்றி குடும்பத்தோடு கொள்ளையடிக்கும் திருட்டு நிறுவனம்...


சூடு சொரணை கொஞ்சமாவது, உடம்பின் ஏதாவது ஒரு ஓரத்தில் ஓட்டிட்டு இருந்தால், வீரமணி மகனை எந்த தகுதியில் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் பதவிக்கு நியமித்தார்கள் என்று ஒரு வார்த்தையாவது கொளத்தூர் மணியும், கு.ராமகிருஸ்னனும் கேட்டிருக்கனும்...

என்னது மானமா? அதுவும் திராவிட கம்பெனிக்கா?  என்று சிரித்துவிட்டு நகர்ந்தான் வழிப்போக்கன்...

யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் தமிழன் வீழ்ச்சியடைவது தன்னை போலவே பிற இனத்தையும் நினைப்பதாகும்..


தமிழினத்தை சிதைக்கும் திராவிட அரசியலை புரிந்து கொள்ள வேண்டுமானால், திராவிட பிதாமகன் ராமசாமியை புரிந்து கொள்ள வேண்டும்..

ராமசாமி நெடிய அரசியல் வரலாற்றில், எப்படி மாற்றிமாற்றி பேசினாலும், அதன் அடிப்படை நோக்கங்கள்..

1) பிராமணர்கள் தெலுங்கு சாதிகள் மீது செலுத்தும் ஆதிக்கத்தை உடைப்பது..

2) தெலுங்கு ஆண்டைகளின் நலன்கள் காக்கும் அரசியலை கொண்டு வருவது..

3) தமிழ்நாடு பிரிட்டிசு இந்தியாவிலிருந்து விடுதலை பெற்றால், வந்தேறி திராவிட சாதிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்படும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு விடுதலையை மடைமாற்றுவது.

4) ஆந்திர கர்னாடக மலையாள வடுகர்களின் நலனையும் , தமிழ்நாட்டில் ஊடுருவியுள்ள திராவிட சாதிகளின் நலன் காக்கும் திராவிட நாட்டை கோருவது..

5) திராவிடநாடு அமையாத நிலையில், திராவிட சாதிகளின் நலன் காக்கும் வகையில் பிராமணீய இந்தியாவில் தமிழ்நாட்டை கரைத்துவிடுவது.

6) தமிழ் பிச்சைக்கார மொழி, தமிழன் வரலாறு அற்றவன்,  என ஓயாது பேசி, தமிழர்கள் உளவியலை சிதைப்பது.

7) தமிழர்கள் மத்தியிலுள்ள சாதி, மத பிரிவுகளை ஒழிப்பதாக சொல்லி, சாதி மதத்தை சொறிந்துவிட்டு, சாதி, மத ஒற்றுமையே ஏற்படாத வண்ணம் தமிழன் தமக்குள் அடித்துக்கொள்ளும் அரசியலை கிளப்பிவிடுவது..

அதன்மூலம் தமிழனின் தலைவன், நாட்டாமை ஒரு திராவிட சாதிக்காரனே எனும் மனப்பான்மையை உருவாக்குவது.

ராமசாமியிசத்தை புரிந்தால் தமிழினம் வாழும்.. புரியாமல் இருந்தால் வீழும்...

பற்பசையில் விஷம்...


பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும் போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது.

ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது.

பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது.

இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்...

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு சாதனை...


ஆக்சிஜன் பற்றாக்குறையால் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி, பாஜக உபி முதல்வர் யோகியின் தொகுதியான கோரக்புர் மருத்துவமனையில் பரிதாபம்...


ஆக்ஸ்ஜின் சப்ளேயர்களுக்கு கொடுக்க வேண்டிய 67 லட்சம் ரூபாய் பாக்கி தொகை செலுத்தப்படாததால்  BRD Medical College மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளே நிறுத்தப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்...

திமுக ஸ்டாலினும் நமக்கு நாமே நாடகமும்...


இதை வீட்டுக்குள்ளயே வச்சு குடுத்துருக்கலாமேடா?

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது...


சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மிதமான வானிலை நிலவியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. குமரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாகர்கோவில், வடசேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.

தென்மாவட்ட கடலில் சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

மரண கலாய்...


நம்புங்கோ மக்களே.... பழனிச்சாமி நீட்ட பத்திதான் பேசப்போறான்.....


டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள், டெல்லி சென்றுள்ள முதல்வர் பழனிச்சாமியை சந்திக்க தமிழ்நாடு இல்லம் முன்பாக காத்திருப்பு. அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்...


அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது...


தஞ்சையில் தினகரனை சந்தித்த 11 எம்எல்ஏக்கள், அடுத்தது என்ன அரசியலில் பரபரப்பு...


தினகரன் ஆதரவு  19 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதித்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் தங்களது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அவ்வாறு ராஜினாமா செய்யும் பட்சத்தில் எடப்பாடி கவிழும் நிலை உருவாகும்...

பெரம்லூர் அருகே இன்று காலை பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து 22 மாணவ மாணவிகள் காயம்...


பெரம்புலூர் அருகே திருவாளந்துறை பகுதியில் இயங்கி வரும் ஆன்ட்ருஸ் பள்ளிக்கு சொந்தமான வேன் பள்ளியை நோக்கி செல்லும் வழியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்...

உலகப் பந்தில் சோழப் பேரரசு...


சோழர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கடலையும் சேர்த்தால் சோழப் பேரரசு இவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்.

உலகில் தோன்றிய எந்த ஒரு பேரரசுக்கும் சளைத்ததன்று...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


இது தான் இன்றைய மக்களின் நிலை...


2022 க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம் - பாஜக மோடி...


வேண்டாம்டா... தாத்தா சொல்றேன் கேளுங்கடா... குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கோங்கடா....

காவிரி வழக்கில் தமிழ்நாடு வாதம் மிகவும் பலவீனம் முதலமைச்சர் தலையிடுவாரா?


காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை...

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வில் நடைபெற்று வரும் காவிரி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடும் வழக்கறிஞர்களின் வாதங்களும் குறுக்கீடுகளும் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் ஏன் புதிய அணைகள் கட்டித் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவில்லை என்றும், கடலுக்குத் தண்ணீர் வீணாகப் போகிறது என்றும் கர்நாடகம் முன்வைக்கும் குற்றச்சாட்டை அப்படியே – வினாவாகத் தமிழ்நாடு வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள். அதற்கு மீண்டும் மீண்டும் விடையளித்த தமிழ்நாடு தரப்பு மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, “தமிழ்நாடு சமவெளிப் பரப்பாக உள்ளது. எனவே அணைகட்ட முடியவில்லை” என்று கூறுகிறார். இருக்கின்ற அணைகளுக்கேத் தண்ணீர் இல்லை; புதிய அணைக்குத் தண்ணீர் ஏது என்று நம் வழக்கறிஞர்கள் பதில் கூறியிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காவிரியிலிருந்து மிகை நீர் கடலுக்குப் போகும் நிலைமை பெரும்பாலும் இல்லை. தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய பங்கு நீரைக் கர்நாடகம் சட்டவிரோதமாகத் தேக்கிக் கொள்வதால், மேட்டூர் அணை நிரம்பி மிகை நீர் வெளியேறுவதில்லை.

கடந்த 2005ஆம் ஆண்டும், அதன் பின் 2013ஆம் ஆண்டிலும் தான் மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவாக வெறும் 20 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கடலுக்குப் போனது. 2013க்குப் பின் மேட்டூர் அணை நிரம்பவே இல்லை. கடந்த ஆண்டு மேட்டூரில் மிகவும் தண்ணீர் அளவு குறைந்துவிட்டதால் சாகுபடி செய்த நெற்பயிருக்குத் தண்ணீர் விட முடியாமல் பாதியிலேயே மேட்டூர் அணை மூடப்பட்டது. இப்பொழுது மிகமோசமாக 40 அடிதான் மேட்டூரில் தண்ணீர் உள்ளது. மொத்தக் கொள்ளளவு 120 அடி!
பருவமழையும் கர்நாடகம், கேரளம் போல் தமிழ்நாட்டில் அதிகமாகப் பெய்வதில்லை. தமிழ்நாடு மழை மறைவு மண்டலம். எனவே தண்ணீரே இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் புதிய அணைகளுக்கான தேவை எழவில்லை என்ற மறுப்பை உச்ச நீதிமன்றத்தில் கூறுவதற்கு மாறாக சமவெளியாக இருப்பதால் தமிழ்நாட்டில் அணை கட்ட முடியவில்லை என்பது சரியான மறுமொழி அல்ல.

தமிழ்நாட்டில் இப்பொழுது மொத்தம் 84 அணைகள் உள்ளன. தேவைப்பட்டால் புதிய அணைகள் கட்டலாம். ஆனால், இந்த அணைகளுக்கே இப்போது தண்ணீரில்லை என்பதுதான் உண்மை நிலை! மேட்டூர் அணை மழை நீரால் மட்டும் நிரம்புவதில்லை.

காவிரித் தீர்ப்பாயம் அளித்த இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்குரிய நீர் ஒதுக்காமல் மிகவும் குறைவாக 192 ஆ.மி.க. (டி.எம்.சி.) கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளது. இது இயற்கை நீதிக்குப் புறம்பானது; 250 ஆ.மி.க. (டி.எம்.சி.)க்கு மேல் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது தமிழ்நாடு அரசு. அந்தக் கோரிக்கையை இதுவரை தமிழ்நாடு வழக்கறிஞர்கள் எழுப்பாதது ஏன்?

தமிழ்நாடு அரசுத் தரப்பின் பலவீனமான வாதங்களைக் கண்டு கொண்ட கர்நாடகம், கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுக்கிறது. ஒருநாள் 132 ஆ.மி.க. (டி.எம்.சி.) தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என்கிறார்கள்; மறுநாள் 102 ஆ.மி.க.தான் தமிழ்நாட்டிற்குத் தர ஆணை இட வேண்டும் என்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லுமோ, கர்நாடகம் பேசும் வல்லடி வழக்கே நிலைத்து விடுமோ என்ற அச்சம் தமிழ்நாட்டில் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பொதுப்பணித்துறை செயலாளரும் இதையெல்லாம் கண்டு கொண்டு கவலைப்பட்டு, சரி செய்ய தலையிட்டதாகத் தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற வழக்கில் விவாதங்கள் நிறைவடையும் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு அரசின் கவனமற்ற, தலையீடற்ற போக்கை ஏற்கெனவே சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்.

கடைசிக் கட்டத்திலாவது தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி வழக்கில் கவனம் செலுத்தி வல்லுநர் குழுவை அழைத்துக் கொண்டு தில்லி செல்வாரா? நம் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை வலுப்படுத்துவாரா என்ற கேள்வி இப்போது தமிழ் மக்களிடம் இருக்கிறது...