21/06/2020
நம் ஒவ்வொருவரின் கேள்வியும் இது தானே...
அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும் போது கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பிரதமர் திரு மோடி பதில் அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்...
1. சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஏப்ரல் மாதத்தில் ஊடுருவிய போது அதை இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?
2. இந்நிய எல்லையிலும் இந்திய நிலப்பரப்பிலும் சீனா கட்டுமானப் பணிகளைச் செய்ததையும் உளவுத் துறை கண்டுபிடிக்கவில்லையே, ஏன்?
3. இந்திய விண்வெளிக்கலங்கள் பூமியை நாள்தோறும் சுற்றி வானிலிருந்து படங்களைத் தொடர்ந்து அனுப்புகின்றனவே, அந்தப் படங்கள் சீன ஊடுருவலைக் காட்டவில்லையா?
4.மே மாதம் 5ஆம் தேதி சீன ஊடுருவலை இந்திய ராணுவம் எப்படிக் கண்டுபிடித்தது?
5. மே மாதம் 5ஆம் தேதியே பிரதமருக்கு ஊடுருவல் பற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் நண்பர் சீன அதிபர் திரு ஜீ யைத் தொடர்பு கொண்டீர்களா?
6. சீன ஊடுருவல் பற்றி இந்திய மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றவில்லையா? அல்லது தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தீர்களா?
7. ஏழு வாரங்கள் தாங்கள் (பிரதமர்) மௌனம் காத்தீர்கள், ஏன்? ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற மௌனம் நியாயமா?
8. இருபது ஜவான்கள் மரணம், 85 பேர் காயம், 10 பேர் சிறைபிடிப்பு, இதற்குப் பிறகு தான் தங்கள் மௌனம் கலைந்தது, இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?
9. “கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்” என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
10. ஊஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்பொழுது உணர்கிறீர்களா?
பாஜக மோடிக்கு செருப்படி...
எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபடமாட்டார்கள், வெறும் கட்டையில் மட்டுமே தாக்கிக் கொள்வார்கள் என்றால் OK, அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு அவர்களுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை நிறுத்தி வையுங்கள், இது போன்ற சண்டைக்கு அவர்கள்தான் பொருத்தமானவர்கள்...
பஞ்சாப்_காங்கிரஸ் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறியது...
நம்ம ஊர்களில்,,
50 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பிறக்க அறுவைச் சிகிச்சை கிடையாது...
வாழ்வதற்கு பணம் என்ற ஒரு பொருள் தேவைப்பட்டதில்லை...
நீரையும், நிலத்தையும், மரங்களையும், மலைகளையும், பிற உயிரினங்களையும் கடவுளாக கருதினர்...
பெரும்பாலானோர் சிறு தானியங்களை மட்டுமே சாப்பிட்டோம்...
அனைவரும் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும், பொறுமையுடனும் இருந்தனர்...
சிறு வியாதிகளுக்கு அனைவருக்கும் கை மருத்துவம் தெரிந்திருந்தது...
வரப்போகும் நோய்க்காக மருத்துவமனைக்கு என்று தனியாக யாரும் சேமித்து வைத்ததில்லை...
கூத்தாடிகளை கடவுளாகவும் கொண்டாடியது இல்லை...
பொழுதுபோக்கு என்ற ஒன்று இல்லாமல் அனைவரும் உழைத்தனர்...
இன்னும் பல இருக்கிறது, காசு , டெக்னாலஜி இவை மட்டுமே மனிதனை மனிதனாக வாழ வைக்காது.. தற்போதுள்ள பலர் வாழ்க்கையில் இந்தநேரம் வரை ஒரேயொரு மரத்தை கூட நட்டு 10 அடி உயரம் கூட வளர்த்தில்லை...
இவை அனைத்திற்கும் அடிப்படை தேவையை தாண்டி வணிகம் வளர்ந்தது தான்.. அதனால் தான் வணிகத்தை (கார்ப்பரேட் வணிகத்தை) எதிர்க்கிறோம்...
தன் முதலாளி அம்பானி நலனுக்காக பாடுபட்ட பாஜக மோடி...
இதனை மையமாக கொண்டே இங்கே மக்களுக்கு கடன் உதவி அளித்ததாகவும் நேரடியாக கொரோனா பேரிடர் நிதிகள் வழங்கப்பட்டதாகவும் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது...
மேலும் பிரதமர் நிதி தனியார் நிதியில் சேர்த்து ஊழல் செய்தனர்..
இந்திய முழுவதும் பொருளாதரத்தில் வீழ்ந்து இருக்கும் நிலையில் இவர்களின் பொருளாதாரம் எவ்வாறு சீர் செய்யப்பட்டது?
கேடுகெட்ட அரசியல்வாதிகளின் கூடாரம் பாஜக...
மீண்டும் அரியணையில் அமர வேண்டி அர்ப்ப ஆசைக்காக இந்திய இராணுவ வீரர்களை புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தினார்கள்.
இப்போது பொருளாதார வீழ்ச்சி, கொரோனா ஒழிப்பில் தோல்வி,
தன் முதலாலிகளுக்கான வியாபாரம் பெருக்கம்,
பண முதலைகளின் கடன் தள்ளுபடி,
20 இலட்சம் கோடி ஊழல்,
பெட்ரோல் விலை ஏற்றம்..
இன்னும் இது போன்ற கொள்ளைகளை மறைக்க இப்போது சீன இந்திய எல்லை சண்டை நாடகம்.
இன்னும் எத்தனை நாடகங்களும் எத்தனை இராணுவ வீரர்களும் பலி ஆடுகளாக மாற போகிறார்களோ...
சித்த மருத்துவமும் கொரோனாவும்...
ஏற்கனவே பரிசோதனை முறையில் 160 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து அய்ந்தே நாட்களில் அத்தனை பேரையும் குணமாக்கி வீட்டுக்கு அனுப்பி வெற்றி கண்டுள்ளது சித்த மருத்துவ சிகிச்சை...
தனியாருக்குச் சொந்தமான SRM மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் 85- நோயாளிகள், சாலி கிராமத்தில் சென்னை மாநகராட்சியின் கொரோனா மையத்தில் 75- நோயாளிகள் மட்டுமல்லாமல் சென்னை மத்தியச் சிறையிலே 23 நோயாளிகளை குணப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
இந்த சித்த மருந்து சிகிச்சைக்கான செலவும் மிக மிக சொற்பம்தான் என்கிறார் இதன் இயக்குநர் டாக்டர்.ஆர்.மீனாகுமாரி.
"நோயாளிகளை எங்களிடம் ஒப்படையுங்கள் மூன்றே நாட்களில் முழுவதுமாக குணப்படுத்துகிறோம்"- என்று அனுமதி கேட்டு நிற்கின்றது தேசிய சித்த மருத்துவக் கழகம்.
சென்னையிலேயே மூன்று மாத காலமாக பல நூறு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்... ஆயிரங்களில் நோயாளிகள் பெருகியுள்ளனர்...
ஒரு மூன்று வாரங்கள் நம் சித்த மருத்துவர்களிடம் கொரோனா வார்டுகளை ஒப்படைக்கலாமே...
இந்த பேரழிவு காலத்திலாவது கார்ப்பொரேட்டுகள், மருந்து மாஃபியாக்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி, மக்கள் நலனை முன்னிறுத்த வேண்டும் தமிழக அரசு...
செய்வீர்களா....
Subscribe to:
Posts (Atom)