21/11/2018

அற்புத மூலிகை சோற்றுக் கற்றாழை...


சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும். எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை. இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.

சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது. கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

பொல்லாமே கங்க பம்பு ழுச்சூலை குஷ்டரச
மல்லார்மத் தம்பகந்த ரங் குன்ம-மெல்லாம்விட்
டேகு மரிக்கு மெரிச்சற் கிரிச்சமு
மாகு மரிக்கு மருண்டு.

நறுங் கற்றாழைக்கு வாத மேகம் , கப கோபம் , கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி ( குஷ்டம் , பால்வினை நோய்கள் ) , மூலம் , உன்மத்தம் , பகந்தரம் , வயிற்று நோய் , தினவுள்ள பித்த கிரிச்சரம் ( அரிப்பும் , பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு ) ஆகிய வியாதிகள் மருண்டு ஓடும் என்று பொருள்.

மேலும் மது மேகத்தால் ( சர்க்கரை வியாதியில் ) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.

இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு , அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும்.அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும்.

மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை...

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே...


கனடாவில் நடந்த உண்மைச் சம்பவம்...


இழிச்சவாய் தமிழா?

கனடாவில் இயங்கும் ஒரு தகவல் தொழில்நூட்பம் சார் நிறுவனம். அதில் 300 வரையான னோர் வேலை பார்க்கின்றார்கள். அதில் இந்தியர்களே அதிகம். இவர்களில் தமிழர் 60 பேர் வரையில்.

கேரளாவில் வெள்ள அனர்தம் நடைபெற்ற போது. அங்கு வேலை செய்த தமிழர்கள் துடித்துப் போய் வெள்ள நிவாரணத்துக்கு பணம் சேர்த்தார்கள். அந்த தமிழர்களை துடியாய் துடிக்கச் செய்ததுக்குப் பின்னால் நாசுக்கான செயற்பாட்டில் இறங்கியது சில மலையாளிகள்.ஆளுக்கு 100 டொலர்கள் போட்டு 30,000 கனடிய டொலர்  சேர்த்துக் கொடுத்தார்கள். 15 இலச்சம் இந்திய ரூபாய் (1500, 000).

அதே நிறுவனத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு...

 அதே துடியாய் துடித்த தமிழர்கள் தங்கள் தாய் மண்ணாம் தமிழ்நாட்டில் 'காயா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே பாணியில் பணம் சேர்க்க முனைந்திருக்கின்றார்கள். அங்கு வேலை பார்க்கும் அந்த அனைத்து இந்தியர்களும் இந்திய அரசாங்கம் அதைப் பார்த்துக் கொள்ளும் நாங்கள் ஏன் இப்பிரச்சினைக்கு உதவவேண்டும் என கொடுக்க முற்பட்டவர்களையும் தடுத்து விட்டனர்.

பாரத மாதாஜி காகி கோ.... பைத்திய காரா..

தமிழா.....? உனை என்னவென்று அழைப்பது....?

இதற்குதான் தலைவர் பிரபாகரன் அன்றே சொன்னார்.....

'பரிதாபமான இனமாக தமிழர்களை யாரும் பார்ப்பதை நான் விரும்பவில்லை'

சிந்திப்பாய் தமிழா...

சினிமா கிரிக்கெட் தொலைக்காட்சி இதன் மூலம் தான் நம் இனம் அடிமையாகப்படுகிறது...


டெல்டா மாவட்டத்திற்கு செல்லும் போது, மனிதனாக செல்லுங்கள்..


கட்சி தொண்டர்களாக, ரசிகர்களாக, ஒருபோதும் செல்லாதீர்கள்..

அப்படி செல்வீர்கள் என்றால், நீங்கள் உங்களை நிலைநிறுத்தி கொள்வதற்காக தான் செல்கிறீர்கள் என்று அர்த்தம்..

ஏனெனில் மனித மனம் அனுதாபமும், உதவியும் தேவைப்படுகிற இடத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளவே விரும்பும்..

( தாங்க முடியல சிலரின் பதிவுகள், என் கட்சி அந்த உதவிகளை செய்தது, என் மதத்தை சார்ந்தவர்கள் அந்த உதவியை செய்தார்கள் என்று.. இதுல அவங்க தன்னை மக்கள் கிட்டே அடையாளப்படுத்தி கொள்ள டீ-சர்ட் வேற, எதற்குடா இந்த பொழப்பு )...

சாப்பாடு பார்சலில் தன் நடிகனின் போட்டோவை வைத்த அந்த ரசிகர்களுக்கும், உங்களுக்கும் என்னட வித்தியாசம்..

உதவி செய்கிற இடத்தில் மனிதனாக போங்கடா..

உடனே நீ என்ன புடுங்குன என்று என்னிடம் கேட்காதீர்கள்..

புடுங்கிட்டு தான் இருக்கோம்..

நீ புடுங்குவது மக்களிடம் உன்னை நிலை நிறுத்திக்கொள்ள, நான் புடுங்குவது என்னால் சிலர் தங்களின் வாழ்வை நிலைநிறுத்தி கொள்வதற்காக..

இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது...

பேராவூரணி தென்னை விவசாயிகளே...


தென்னை மரம் கீழே விழுந்து விட்டது என்று வருந்தும் விவசாயிகள் கவனத்திற்கு...

எனது அனுபவத்தில் இயற்கை சீற்றங்கள் மற்றும் சிவப்பு கூன் வண்டு தாக்கிய மரங்கள் இவைகளை திரும்பவும் தூக்கி நட்டு குழியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 5 கிராம்/ லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கரைத்து ஊற்றி. பின்னர் நமது soil pro Actor coconut mix இட்டு திரும்பவும் உயிர் பெற வைத்து இருக்கிறோம்.

தென்னையில் ஒவ்வொரு மட்டை கணுவும் வேர் வளர கூடிய இடமாகும். எனவே விழுந்த மரங்களை திரும்பவும் நான் பரிந்துரைத்தவாறு நடுங்கள். நட்டு நான்கு திசைகளிலும் கம்பு நங்கூரமிட்டு கட்டினால் 6 மாதங்களுக்குள் வேர் வளர்ச்சி பெறும்.

சாறு வடிதல் நோயால் அழுகிய பகுதிக்கு மேல் துணி சுற்றி IBA ஹார்மோன் 500 பிபிஎம் தெளித்து புது வேர்களை உண்டாக்கி பின்பு அழுகிய பகுதிகளை வேட்டி வேர் வந்த பகுதியை தரையில் நடவும் கூட முடியும்.

கட்டிடங்களுக்கு வேண்டி 40 தென்னை மற்றும் பாக்கு மரங்களை இடம் மாற்றி வெற்றிகரமாக வளர்த்துள்ளேன்.

தற்போது முழுவதும் வளர்ந்த தென்னை மரங்களை பறித்து அதை ஏற்றுமதி செய்து வளைகுடா நாடுகளில் நடவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் தகவலுக்கு...

ப. பாலசுப்பிரமணியன்
தலைமை அறிவியலர்
சக்தி அக்ரி கிளினிக்
மேட்டுப்பாளையம்
+919442253021.

டெல்டா வை காப்போம்...


பதினேழாம் நூற்றாண்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்...


ஓர் வரலாற்று நிகழ்வு...

கி பி பதினேழாம் நூற்றாண்டில் தென் பாண்டி நாடு என்று சொல்லக்கூடிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் நடந்த சம்பவம் தான் நீங்கள் படிக்க இருக்கும் நிகழ்வு.

மேலே குறிப்பிட்ட இடத்தில் பிறந்தது ஒரு குழந்தை.

அதன் சிறு வயதில்  இலக்கிய ஆர்வமும் அறிவாற்றலையும் உணர்ந்த அந்த சிறுவனின் தந்தை, கடிகைமுத்து புலவர் என்று சொல்லக்கூடிய ஒரு தமிழ் புலவரிடம் பாடம் கற்க தமது பிள்ளையை அழைத்து சென்று படிக்கவிடுகிறார்.

கடிகைமுத்து புலவரும் அந்த சிறுவன் 16 வயது இளைஞன் ஆகும் வரை தமிழ் இலக்கியம் தமிழ் வரலாறு போன்றவைகளை படித்து மிகவும் திறமையானவ மாணவன் என்ற பெயரையும் வாங்குகிறார்.

இந்நிலையில் வட நாட்டில் இருந்து வந்த இன்னொரு புலவர் வாலை வாருதி என்ற பெயருடைய அறிஞர்.

இவர் வட மொழி பண்டிதர் என்று அழைக்கப்பட்டாலும் தமிழை கற்று தமிழ் அறிஞர்கள் மத்தியில் புலமை போட்டி பெற்று வென்று வந்தார்.

அதாவது அரசன் மந்திரிகள் பொது மக்கள் மத்தியில் இரண்டு புலவர்களுக்கும் போட்டி நடக்கும் கருத்துப்போர் என அக்காலத்தில் கூறுவார்கள்.

அப்படிப்பட்ட கருத்துப் போட்டியில் மிகவும் திறமையானவரான வாலை வாருதி என்ற புலவர் தமது ஊருக்கு வந்து தமது அரசன் முன் சொல்லுகிறார்..

இந்நாட்டில் எம்முடன் கருத்து வாதம் புரிய கடிகைமுத்து புலவரோ அல்லது அவரது மாணவர்களோ தயாரா என்று சவால் விட்டார்.

இதை கேள்வியுற்ற கடிகைமுத்து புலவர்.

அதை எதிர்கொள்ள தயார் என அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என கூறுகிறார்.

அவ்வளவுதான் கூட்டம் கூடியது தண்டோரா முழங்கியது.

அரசவையில் மாமன்னன் தலைமையிலான கருத்து யுத்தம் தயாரானது..

ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் வட மாநில பண்டிதரான வாலை வாருதி,  மந்திர தந்திரங்கள் செய்வினைகளை கற்றவர் என்றும் இந்த கலையில் பெரிதும் அனுபவம் உள்ளவர் என்றும்..

அதனால் தாம் போட்டி போடும் எதிர் புலவனை  மந்திரத்தால் துவம்சம் செய்து விடுவார் என்று ஏற்கனேவே கேள்வியுற்ற கடிகைமுத்து புலவர் போட்டிக்கு செல்ல சிறிது தயக்கம் காட்டுகிறார்.

இதே கவலையில் இருந்ததால் உடல் நலிவும் ஏற்படுகிறது.

இந்நிலையில் போட்டி ஏற்படும் நாள் வந்தது எழுந்து நிற்கவே முடியாத கடிகைமுத்து புலவரின் நிலையை உணர்ந்த  அவரது மாணவர் (மேலே பார்த்தோம் அல்லவா அவர் தான்).

எம் ஆசிரியர் உடல் நலம் சரியில்லை ஆகவே இந்த வட நாட்டு பண்டிதரை எதிர்க எம் ஆசிரியர் எம்மை போட்டியில் கலந்து கொள்ள கட்டளையிட்டுள்ளார்.

அரசன் அனுமதித்தால் இந்த வாலை வாருதி புலவருடன் நான் கருத்துயுத்தம் நடத்த தயார் என்று சபையினர் முன்பு கூறினார் கூச்சலும் குழப்பமும் மேலோங்க..

ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி உடனே ஆனையிட்டார்  (இவர் தான் எட்டையபுர மன்னர்)..

கடிகைமுத்து புலவர் செய்தால் அதில் அர்த்தம் இருக்கும் இந்த சிறுவனை வாலைவாருதி புலவரிடம் போட்டி இட ஆனையிடுகிறேன் என்றார்.

ஆம் கடிகைமுத்துவின் மானவரான இவருக்கு அப்போது வயது 16 இல் இருந்து 17 க்குள்.

சபை அமைதியானது போட்டி ஆரம்பம் ஆனது..

வாலைவாருதி அகத்தையோடு அவையோரை கேளிப்பார்வை  பார்த்து விட்டு, மளமளவென ஆரம்பித்தார் தன் பாடலை..

வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய் என முடித்தார்.

அதாவது தமது குருவான கடிகைமுத்துவை தாழ்த்தி பாடி இறுதியில் நான் யார் தெரியுமா சின்னப்பயளே என்று கேளிக்கையாக பாடினார்.

இதை கேட்டு கொண்டு இருந்த அந்த
16 வயது வாலிபர் ரத்தம் கொதிப்பேற கண்கள் சிவக்க ஆரம்பிக்கிறார்.

ஆரம்பிக்கும் முன்..

(நீங்க வாசிக்க போகும் கருத்து கவிதைக்கு அர்த்தம் இரண்டு முறை மீண்டும் மீண்டும் படியுங்கள் உங்களுக்கே புரியும்.

மிகவும் பண்டைய தமிழ் வார்த்தை அல்லவே இது.

கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் அர்த்தம் விளங்கும்).

( எழுத்தின் அழகை உணர கொஞ்சம் கோபமாக படியுங்கள் காரணம் அவ்வளவு பெரும் சபையில் கோபம் கொப்பளிக்க வீர வசனம் போன்று பேசப்பட்டது இந்த கவிதை ஆகவே கொஞ்சம் கோபமாக படியுங்கள் ).

எழுத்தானியே பேசு
ஏ எழுத்தானியே பேசு

சமரதுரக துங்க மனருஞ் சபா சென்று சரிசமா சன மீதிலே

அமரவொரு நரகொம்பு தின முஞ்சு மாசொல்லும்.

அமுதகவி ராஜ னானே

திமிலபகை வரைவென்ற பருதி யெனும் யெமதெட்ட

தீரனணி வாயில் வித் வான்
உமறு குழ றீடிலண்ட முகடும்ப டீரென்றும்

உள்ளச்சம் வையும்
பிள்ளாய் யாமே.
புலவா உள்ளச்சம்
வையும் பிள்ளாய் யாமே.

என்று கோபம் கொப்பளிக்க பாடி முடித்தார் அவையோர்கள் அனைவரும் ஆச்சரியம் பொங்க அமைதியாய் இருந்தனர்..

வாலைவாருதி எழுந்தார் மன்னிப்பு கேட்டார்.

கடிகைமுத்து புலவரை இகழ்ந்து பேசியதற்கும் மன்னிப்பு கேட்டார், சபையோர் ஆரவாரத்துடன் அந்த சிறுவனை பாராட்டினர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி என்ற குறுநில அரசன் அந்த சிறுவனை பாராட்டி பரிசுகளை கொடுத்து கவுரவித்தார்..

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
தமது ஆசானான கடிகைமுத்து புலவரிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

பின்னாளில் ஸ்ரீ வெங்கடேஸ்வர பூபதி அரசவையில் அரசவை புலவராகவும் ஆக்கினார் அச்சிறுவனை.

யார் தெரியுமா இந்த சிறுவன் ?

சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர்...

நீதிமன்றமாவது மயிறாவது என்று பாஜக எச். ராஜா சர்மா சொன்னது சரி தானே...


கஜா புயலின் பாதிப்பால் தமிழ்நாடு வேதனையில் இருக்கும் இந்த வேளையில் தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சத்தமின்றி அதிமுகவினர் மூவரை அதிமுக அரசு விடுதலை செய்துள்ளது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது...

தமிழின் அர்த்தம் எத்தனை பேருக்குத் தெரியும்....?


நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...?

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.

அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார ஐம்பூதத்திற்குள் பதி நிலையக்கரமாகும்.

இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்குவதால் அனந்தாகார பேதங்காட்டும் உயிர்ச்சித்த கலையக்கரமாம்.

பதி சித்தாத்ம கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும்.

 த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை...

த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.

ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.

ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம். நம் அண்டத்தைக் குறிக்கும்.

எல்லா மொழிகளுக்கும் பிதுர் (தந்தை) மொழியென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்...

கடலூர் மக்களுக்கு எச்சரிக்கை...


தெலுங்கர் கேட்ட ஆந்திரா...


1948 இல் தெலுங்கு கட்சிகள் அனைத்தும் கூடி ஒரு குழுவை நியமித்தது.

அதன் வேலை அமையவுள்ள தெலுங்கு மாநிலத்தில் எந்த பகுதிகளையெல்லாம் சேர்க்க வேண்டும் என்று வரையறுப்பது.

அவ்வாறு அவர்கள் வரையறுத்து மொழிவாரி மாநிலங்கள் அமைப்புக்கான கமிஷனிடம் சமர்ப்பித்த வரைபடம் (இடப்பக்கம்) இங்கே தரப்பட்டுள்ளது.

The Andhra Province (memorandum submitted to the linguistic provinces commission) by Dr.Lanka sundram M.A Ph.D.

(அடைந்தது வண்ணப்படமாக வலப்பக்கம் தரப்பட்டுள்ளது).

இதில் சென்னையும் சேர்க்கப்பட்டிருந்தது.

நல்லவேளை ம.பொ.சி இருந்தார்...

செட்டிச்சி பாப்பாத்தி...


பாப்பாத்தி என்ற பட்டம் பறையர் பெண்களைத் தான் குறிக்கும் என்று நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார்...

அவருக்கு நட்புரீதியான என் பதில்..

தமிழர் மண்ணான பெங்களூரில் சொக்கப் பெருமாள் ஆலயம் தொம்லூர் (Domlur) என்ற இடத்தில் உள்ளது..

தமிழ் கல்வெட்டுகள் பல உள்ள இக்கோவிலில் 1270ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று உள்ளது..

இக்கோவிலைக் கட்டிய தலைக்காடு பகுதியைச் சேர்ந்த 'திரிபுராந்தகன் செட்டியார்' மற்றும் அவரது மனைவி 'செட்டிச்சி பார்ப்பார்த்தி' ஜலப்பள்ளி மற்றும் விண்ணமங்கலம் குளம்  பகுதிகளை கொடையாக அளித்தது பற்றியும் கூறுகிறது..

(சான்று: epigraphica carnatica vol 9,
insc of banglore, no 10&13 )

பார்ப்பனர், பார்ப்பார், பார்ப்பாத்தி, பார்ப்பனத்தி போன்றவை சோழர்கள் காலத்தில்கூட ஒரு சாதியைக் குறிக்கவில்லை.

சங்ககால இலக்கியங்களில் இத்தகைய பெயர்கள் தொழிலைக் குறிக்கவே பயன்பட்டன..

சோழர் காலம் வரை அதுவே நடைமுறை..

அதாவது யார் வேண்டுமானாலும் பார்ப்பனர் ஆகலாம்..

தெலுங்கு நாயக்கர் ஆட்சியிலேயே பிராமணீயமும் சாதியமும் நடைமுறைப் படுத்தப்பட்டது...

எதற்கு டென்ஷன்...


ஓரு மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் உடலில் பயணிக்கிறது.

ஒருவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான்.

750 தசைகளை அசைக்கிறான்.

70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான்.

இந்தச் செயல்களால் மனிதன் களைத்துப் போவதில்லை..

ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன..

இதில் நம் முயற்சி என்று எதுவும் இல்லை.

நாமாக முயற்சி எடுத்துச் செய்யும் சில்லறை வேலைகளால்தான் நாம் களைத்துப் போகிறோம். ஏன்?

இயற்கை, தான் செய்யும் வேலைகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நாம் துரும்பை நகர்த்தினால் கூட கணக்கு வைத்துக் கொள்கிறோம்.

இயற்கை, தன் செயல்களைச் சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவே கருதுகிறான்.

இயல்பாக, மனிதன் மகிழ்ச்சியாக செய்யும் எந்தச் செயலும் அவனுக்கு களைப்பையும், டென்ஷனையும் தருவதில்லை. ஆனால் அப்படிச் செய்யும் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இயற்கை தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவதில்லை. தேவையுள்ளதை மட்டுமே செய்வதால் அனைத்தையும் அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்கிறது.

ஆனால் மனிதன் செய்கின்ற பல செயல்கள் பயன் தராதவையாகவும், தேவையில்லாதவையாகவும் இருக்கின்றன.

அதனால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய அவனுக்கு நேரம் போதுமானதாக இல்லை.

இயற்கையின் வழி முறைகளைப் பின்பற்றினால், நோ டென்ஷன்...

கஜா புயலால் தமிழகம் இழந்தவை...


46 பேர் சாவு.

படுகாயம் எண்ணிக்கை தெரியவில்லை.

இரண்டு லட்சம் பெரிய மரங்கள், இரு லட்சம் சிறிய மரங்கள் அழிந்தன.

ஆடுகள், மாடுகள் சாவு இனிதான் கணக்கெடுப்பு.

கோடியக்கரை சரணாலயம் காலி.

குடிநீர், மின்வசதி துண்டிப்பு.

விவசாயம், வீடு என வாழ்வாதாரம் இழப்பு.

டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் முழுதும் பாதிப்பு.

ஆனால் புயல் வெளியேறுவதற்கு முன்பே ஸ்டாலின் அரசு சிறப்பாக பணி ஆற்றுகிறது என பாராட்டுகிறார்.

அமைச்சர்கள் கஜாவை கூஜா ஆக்கி விட்டோம் என்கிறார்கள்.

இன்றிரவுக்குள் மின் வசதி 100 சதம் வந்து விடும் என்கிறார்கள்.

வானிலை மையமோ 90 கி.மீ, 100 கி.மீ புயல்தான் என்கிறது.

இந்திய அரசிடமிருந்து பேரிடர் அறிவிப்பு, நிவாரணத்தை வாங்க இயலாமையை மறைத்து, பேரழிவை மூடி மறைக்கிறார்களா...

தமிழா சிந்தித்து எழு...


175000 தொப்புள் கொடி உறவுகளை பறி கொடுத்து, நதிநீர் உரிமைகளை இழந்து, ஆற்று மணலை, தாது மணலை கொள்ளை கொடுத்து, மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை, உடைமைகளை, உயிர்களை பறி கொடுத்து, தமிழ்நாட்டின் அரசியல் அங்கீகாரங்களை மாற்று மொழியினத்தவர்களுக்கு பறி கொடுத்து, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பிற மொழி மக்களிடம் பறிகொடுத்து, அவமானத்தின் இழிவான சாட்சியங்களாக இருக்கும் நிலை கன்னடருக்கோ, தெலுங்கருக்கோ, மலையாளிக்கோ நிகழ்ந்திருக்கிறதா?

இல்லை.. காரணம் அங்கெல்லாம் மண்ணின் மைந்தர்களே ஆளுகிறார்கள்...

ஆனால் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்...

ஆரியன் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?


ஆரியன் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா..

ஆரியன் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே..

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க..

இழிவு நிலையை பேசும் போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க..

அடுத்து, தமிழன் என்றாலே ஆரியனும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க..

தமிழ் என்றாலே சாதி என்று சொல்லுறீங்க..

அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?

சாதிய தலைவர் அல்லது ஆரிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே...

சாதியை உருவாக்கியது கன்னடன் எனும் திராவிடனே...


தமிழனை வீழ்த்தியது திராவிடன் எனும் வடுகர்களே...

மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?

இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது.

அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?

காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்...

தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது.

அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?

வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை.

மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.

இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல..

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..

மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்..

Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.

குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு..

என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.

சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்து கொண்டது இல்லை.

இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்...

பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...

இன்றும் இந்த வந்தேறிகளின் ஆட்சித் தான் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது...

அரசு பஸ்களில் நிவாரண பொருட்களுக்கு லக்கேஜ்?


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் லக்கேஜ் கட்டணம் செலுத்தினால் மட்டுமே நிவாரண பொருட்களை ஏற்றுவதாக தகவல்...

தயவு செய்து இது போன்ற பொய் செய்திகளை பரப்பாதீர்...


சிமெண்ட் தரையை தவிர ஒன்றுமே இல்லை...


மொத்த வீடும் கஜா புயலின் காற்றுக்கு இரையாகி போனது...

இறைவா இவர்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்...

கீவ் ஜடால் சிற்பங்கள்...


அன்புக்கு வெற்றி மட்டுமே...


இயற்கையால் மட்டுமே இந்த பூமியில் அன்பை நிலைநிறுத்த முடியும்.

அன்பு பரவுகிறது மேலும் வளர்கிறது.

அன்பின் முன் எதிரியும் மன்டியிடுவான்
வீரனும் மன்டியிடுவான்.

மனிதனுக்கு அன்பும் சிரிப்பும்தான் மிக சிறந்த நண்பன்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஆசை தான் எங்களுக்கும்...


கூரை வீட்டில் இருந்தாலும் மாளிகை வீட்டில் வாழ்கிறேன்.

இன்றைய தினம் கூலி நாளை  உணவுக்கு.

உரங்க வீடு இல்லை இருந்தாலும் சாலைகள் இருபக்கம் சொர்க்கம்.

ஆயிரம் நோய்கள் பட்டாலும் மனது மட்டும் கம்பீரமாக மகிழ்ச்சியில் நோயை கடந்து செல்கிறேன்.

உடுத்த உடை என்றாலும் கிழிந்த துணியே எனக்கு மிகவும் பிடித்த உடை.

ஆயிரம் போக்குவரத்து வரத்து இருந்தும் செருப்பு அணியா எனது இரண்டு கால்களே எனது பறவை.

சொர்க்கம் கூட தள்ளிபோகும்  எங்கள் வீட்டில் இருக்கும் பழைய சோரும் வெங்காயமும்.

நேற்றைய கவலையும் இல்லை.. நாளையை ஆசையும் இல்லை..

நாங்களே சொர்க்கத்தில் வாழ்கிறோம்.

நான் கடந்து பார்த்து வளர்ந்து வந்த சில வரிகள் மட்டுமே..

இன்னும் பல வரிகள் உள்ளது...

அஜந்தாவின் 30 குகைகள்...


இருக்கும் சொர்க்கத்தை விட்டு இல்லாத நரகத்தை தேடுவதுதான் எல்லா ஆசைகளும்...


மனிதனின் மனது ஆசை மட்டுமே கொள்கிறது.. ஆனால் வாழ விடுவதில்லை..

இருக்கும் வாழ்க்கையை மகிழ்ந்து வாழுங்கள்.. கருனையால் அன்பால்,

இந்த உலகில் எல்லா மனிதர்களுக்கும்  உன்மையான  அன்பும், கருனையும், இருந்தால் எந்த  தீமைகளும் நடக்காது.
எதிரிகளும் இருக்க மாட்டார்கள்,வீரனும் இருக்க மாட்டார்கள்..

மனிதனின் மனது மாறாத வரை இங்கே ஏதும் மாறாது...