03/01/2022

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்...

 


லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்.

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்...

முகநூல் காதலர்களே உஷார்...

 


https://perfectnewspost.com/girl-invites-facebook-lover/

இனிய இரவு வணக்கம்...

மண் வாசனை கண்டு பிடித்ததும் தமிழனே...

 


1960ல் ஆஸ்த்திரேலியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மண்வாசனைக்கான (Earthy Smell) காரணத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய சேக்கிழார் (Botany science)...

நன்கு மழை பெய்வதற்கு முன் நம்மால் மண்வாசனையை நன்றாக உணர முடியும். அந்த வாசனை மண்ணில் வந்துக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது தவறு.

மரங்களில் பூக்கும் பூக்கள் வெளியிடும் நறுமன எண்ணையின் கலவைதான் அந்த வாசனை. இதை என்ன அழகாக சேக்கிழார் உவமையுடன் கூறுகிரார்.

நனைமருவும் சினை பொதுளி

நறுவிரைசூழ் செறிதளிரில்

நினகரமண் டலம் வருடும்

செழுந்தருவின் குலம்பெருகிக்

கனம் மருவி அசைந்தலையக்

களிவண்டு புடைசூழப்

புனல் மழையோ மது மழையோ

பொழிவு ஒழியா பூஞ்சோலை.

பெரிய புராணம்; திருநாளைப் போவார் நாயணார் புராணம்: 1048.

பொருள்: மலரும் அரும்புகளின் நறுமனம் சூரிய மண்டலத்தை வருட, செழுமையான மரங்கள் வானுயர்ந்து மேகங்களை தழுவ, தேன் உண்ணும் வண்டுகள் யாவும் ரீங்காரமிட பெய்யும் மழை தேன் மழையோ, மது மழையோ என்று சுவைத்திட பூஞ்சோலைகள் எங்கும் பூத்துக் குலுங்குகிறது.

அறிவியல்: சில மரங்கள் அதிகம் இருக்கும் இடத்தில்தான் மழை வளம் அதிகம் இருக்கும். அது எத்தகைய மரங்கள்? எனில் அதிக நறுமனத்தை தரும் பூக்களுடைய மரங்கள் இருக்கும் இடம். அதாவது புங்கை, சந்தனம், ஆலம், போன்றவை. இவ்வகையான மரங்கள் ஒரு வகையான நருமன எண்ணெயை (petrichor) வெளிவிடும். அந்த எண்ணெய் மழை பெய்யும் முன் வரும் நீர்த்தன்மையுள்ள காற்றில் கலந்து மண் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையானது காற்றில் பயனிப்பதால் நெடு தூரத்திற்க்கு பயணிக்க வல்லது.

ஆதலால் மழை வளத்தை பெறுகும் இவ்வகையான மரங்களை வீதிகள் தோறும் வளர்ப்போம். மழை வளத்தை பெறுவோம்....

பாஜக அடிமை திருட்டு திமுக...

சென்னை உயர்நீதிமன்றம் கலாட்டா..

திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...

 


திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை.

அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்.

அவர் எழுதிய நூல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இல்லை,

திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம் என்பதே.

திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...

அதிமுக எடப்பாடி கலாட்டா...

ஆசிரியர் Vs மாணவன்...

 


ஆசிரியர் : உன் பெயர் என்னப்பா?

மாணவன் : பசுவுக்கு உடம்பு சரியில்ல சார்..

ஆசிரியர் : என்னப்பா புரியல? 

மாணவன் : என் பெயர் கௌ சிக் சார்..

ஆசிரியர் : நீங்க ஒண்ணும் தமிழ்-ல பேசி என்னை கொல்ல வேண்டாம், ஆங்கிலத்தில சொல்லு..

மாணவன் : சரி சார்..

ஆசிரியர் : உங்க அப்பா பேரு என்ன?

மாணவன் : எங்க அப்பா பேரு கிங் கோ  மில்க்  சார்..

ஆசிரியர் : ஏன்டா மறுபடியும் என்ன கொழப்பற? தமிழ்-லயே சொல்லித் தொல..

மாணவன் : எங்க அப்பா பேரு ராஜ கோ பால் சார்..

ஆசிரியர் : ஆள விடுடா சாமி! 

இனிமே உன்கிட்ட சத்தியமா எதுவுமே கேட்க மாட்டேண்டா...?

யார்கிட்ட 😁

இது தான் உண்மை...

நம்ப முடியாத உண்மைகள்...

கம்யூனிசம் என்றால் என்ன.?

 


இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்..

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்

அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது.   இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.

அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.

இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.

லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.

இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பது இல்லை, 'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்,தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...

திருட்டு திமுக குடும்ப அரசியல் கலாட்டா...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...


மக்களே.. அந்த 100 நாளில் தீர்வு பொட்டியக் காணோம்... யாராவது பாத்தீங்களா?

மனிதன் உடலில் மைக்ரோ சிப்...