20/06/2017

டைம்ஸ் நவ் மூன் டிவி ஸ்டிங் வீடியோ பேரம் தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு...


இது தொடர்பாக ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்...

டைம்ஸ் நவ் , மூன் டிவி ஸ்டிங் வீடியோ , சட்டப்பேரவை செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


இது தொடர்பான வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது...

அப்பொழுது நீதிபதிகள் இந்த வழக்கு விசாரனைக்கு உகந்ததா இல்லையா என்பதை தெரிவிக்குமாறு சிபிஐ மற்றும் வருவாய் குற்ற புலனாய்வுதுறை, தமிழக சட்டப் பேரவை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்...

தமிழின் பெருமைகள்...


தமிழுடன்  பிறந்த பல மொழிகள்  இன்று இல்லை.

எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை.

ஏசு பேசிய  அரமிக்  இன்று இல்லை.

புத்தர் பேசிய பாளி மொழியும் இன்று இல்லை.

ஆனால் தமிழ்  மொழி  எத்தனை சோதனை  வந்தாலும்  அதனை  வென்று தன்னிகரில்லா இடத்தை பெற்று நிலைத்து உள்ளது...

தமிழா போராடு...


தமிழினத் தலைவர் மேதகு வே . பிரபாகரன்...


சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்...

நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.


அதிமுக செங்கோட்டையன் குசும்பன்.. பெருசா ஆட்டை போட முடிவு பண்ணிட்டான்...


சாமளாபுரத்தில் போலிஸ் அதிகாரி ஏ.எஸ்.பி, அந்த பெண்ணை அடிக்கவே இல்லை , சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கமணி பதில்...


இது குறித்து எதிர்கட்சி தலைவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்...

பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி...


கோவையில் உள்ள மருத்துவமனையில் பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார், உடல் புத்துணர்வு பெறுவதற்கு அவர் சிகிச்சை எடுப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது...

தமிழா விழித்தெழு...


இலுமினாட்டியும் இந்திய அடிமைகளும்...


இலுமினாட்டி - இளவரசி எலிசபெத்தின் சாத்தான் வழிபாடு...


71 வயதான ராம்நாத் கோவிந்த் பாஜக வின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...


பாஜக மோடி ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களில் ஏராளமான திட்டங்களை அதிரடியாக அறிமுகம் செய்தார்...


இந்த திட்டங்களின் செயல்பாடுகள் என்ன என்பதை கொஞ்சம் பொறுமையாக மத்திய அரசின் இணையதளத்தில் சென்று ஆராய்ந்தால் அவை எல்லாம் கடந்த காங்கிரஸ் அரசாங்கம் செயல்படுத்திய திட்டங்களே என்பது துள்ளியமாகத் தெரிகிறது.

பல இணையதளங்களில் இந்தத் திட்டங்கள் தொடர்பாக நிகழ்ந்த பழைய செயல்பாடுகள் குறித்த விபரங்கள், கோப்புகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது.

பழைய திட்டங்களை கடுமையாக விமர்சித்தவர்கள் அதைக் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் அப்படியே பெயர் மாற்றி செயல்படுத்துவதும், அதை எல்லாம் சாதனை என்று சொந்த செலவில் போஸ்டர் ஒட்டுவதும் அநாகரீகத்தின் உச்சம்.

திட்டங்களின் விபரங்கள் கீழே...

1/ Jan Dhan Yojana is Basic Savings Bank Deposit Account (BSBDA) with max publicity
http://indianexpress.com/article/opinion/columns/across-the-aisle-jan-dhan-stands-tall-on-upas-shoulders/

2/ Beti Bacho, Beti Padhao is another re-naming of an old program. This piece is from PIB of GoI -Jan 2014
http://www.pib.nic.in/newsite/feacontent.aspx?relid=102712

3/ Renamed UPA's Total Sanitation Campaign as Swachh Bharat Abhiyan with lot of fanfare
http://rural.nic.in/sites/TSC.asp

4/ Sardar Patel Urban Housing Mission: Rajiv Awas Yojana was re-christened as Sardar Patel Urban Housing Mission
https://www.telegraphindia.com/1141230/jsp/nation/story_5854.jsp


5/ Indira Awaas Yojana became Pradhan Mantri Awaas Yojana
http://economictimes.indiatimes.com/news/economy/policy/modi-government-to-rename-new-look-indira-awaas-yojana-to-pradhan-mantri-awaas-yojana/articleshow/50359917.cms

6/ June 2015, PM launched AMRUT. Amrut is nothing but JNNURM renamed
http://timesofindia.indiatimes.com/india/JNNURM-2-0-to-be-named-after-Vajpayee/articleshow/46102222.cms

7/ RGGVY renamed as Deen Dayal Upadhya gram jyoti yojana for Piyush Goyal to boast tall fake claims
http://planningcommission.nic.in/reports/peoreport/peo/peo_rggvy3107.pdf

8/ Accelerated Irrigation Benefits Program started on 2007 has been renamed as Pradhan Mantri Krishi Sinchai Yojana.
http://wrmin.nic.in/forms/list.aspx?lid=399

9/ Neem coated Urea started 13 years ago. Modi Govt increased the production ceiling fm 35% to 100% and that's it.
http://www.nationalfertilizers.com/index.php?option=com_content&view=article&id=139%3Aneem-coated-urea&catid=49%3Aproductitem&Itemid=158&lang=en

10/ National Project on Management of Soil Health and Fertility (started on 2008) became Soil Health Card under Modi
http://agricoop.nic.in/sites/default/files/inm111108.pdf

11/ PKVY is not new. Its an extension of NMSA,MIDH, RKVY,NPOF,NPOP,NHM,HMNEH,MMA,NPMSHF & APEDA @RURALINDIA will explain the nomenclatures.

12/ Modi shamelessly appropriated IGMSY to announce financial benefits to pregnant women
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=101782

13/ The Atal Pension Yojana is rebranding of Swavlamban pension scheme started in 2010
http://www.tribuneindia.com/news/nation/atal-pension-yojana-to-replace-swavalamban-yojana-from-june-1/50088.html

14/ Aam Aadmi Bima Yojana started in 2007 became Modi's Pradhan Mantri Suraksha Bima Yojana
http://financialservices.gov.in/insurance-divisions/Government-Sponsored-Socially-Oriented-Insurance-Schemes/Aam-Aadmi-Bima-Yojana


15/ Jan Aushadhi scheme (launched on 2008) re-named as Pradhan Mantri Jan Aushadhi Yojana.
http://www.thehindu.com/news/national/centre-to-rebrand-jan-aushadhi-scheme/article7024950.ece

16/ CCIS launched in 1985 became NAIS in 1999.Modi changed the premium contribution pattern and re-named it as PMFBY
http://m.jagranjosh.com/articles/pradhan-mantri-fasal-bima-yojana-analysis-1453464451-1

17/ National Manufacturing Policy of 2011 became Modi's Make in India
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=76843

18/ Digital India is the new name Modi given to National e-Governance Plan of UPA
http://arc.gov.in/11threp/arc_11threport_ch7.pdf

19/ for Skill India he Killed the name of UPA's National Skill Development Program
https://thewire.in/50914/the-ndas-ministry-of-un-skilling-india/

20/ Mission Indradhanush is the new name of Universal Immunisation Programme (UIP) and nothing new in it
http://www.itsu.org.in/about-UIP-in-india

21/ Do u remember the old NRLM? That became Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana under Modi Govt
http://www.rural.nic.in/sites/downloads/programmes-schemes/SGSY_SpecialProjectsGuidelines.pdf

22/ Have u heard of DBTL? It is PAHAL now
http://petroleum.nic.in/dbt/whatisdbtl.html

பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...


ஈரோடு கோபிச்செட்டிபாளையம் பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி...


பாஜக தமிழிசை கலாட்டா...


தலித்துகள் வீடுகளில் சென்று சாப்பிடுவது சமத்துவம் ஆகாது...

சங்கராச்சாரியாருடன் ஒன்றாக அமர்ந்து தலித்கள் சாப்பிடுவது தான் ஓரளவுக்கு  சமத்துவம். யக்கோ...

தமிழா விழித்துக்கொள்...


பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்துங்கள்...


அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரென்று கேட்டால் உடனேயே கொலம்பசு(ஸ்) என்று பெயரைச் பேரைச் சொல்லிடுவீர்களே..

அதுவே, மிளகாயை அறிமுகப்படுத்தினது யார்? என்று கேட்டால் பெரிதாக யோசியாதீர்கள். அதுவும் கொலம்பசு தான்..

செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பசு என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி..

குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு. 7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டு விட்டாலும், கி.மு 3,400-ம் ஆண்டில்தான் அதை விவசாயப் பயிராக பயிரிட்டார்களாம்.

1,493-ம் ஆண்டில் கொலம்பசு மற்றும் அவருடைய நண்பர் டீகோ அல்வார்சு(ஸ்) சான்சா ஆகியோர் பிறநாடுகளுக்கு கடல் வழி கண்டு பிடிக்கும் ஆர்வத் தோடு கடலில் பயணப்பட்டனர்.

அப்போது அவர்கள் கண்டுபிடித்த பல்வேறு விசயங்களில் மிளகாய் என்பதும் ஒன்று. அதை மேற்கிந்திய தீவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரப்பி விட்டுள்ளனர்.

போர்ச்சுகல் மாலுமிகள் மூலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மேற்கு கடற் கரையிலிருக்கும் கோவா பகுதியை வந்தடைந்த மிளகாய், இந்தியர்கள் மனதை மெள்ள ஆக்கிரமித்து விட்டது.

இன்று உலக நாடுகளில் 1,600 வகை மிளகாய் பயிரிடப் படுகின்றது.

இந்தியாவில் இருப்பது சுமார் 380 வகை.

மிளகாய் விவசாயத்தில் முதலிடம் பிடித்திருப்பது நாமே தான்.

காரத்தன்மைக்கு அதன் விதைகளில் உள்ள கேப்சய்சின் ( Capsaicin ) என்னும் திரவமே காரணம். இந்தத் திரவத்தை எடுத்து வலி நிவாரணியாகவும் புற்று நோய்க்கான மருந்துகளின் மூலப்பெருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ப்ரோ வைட்டமின் ஏ ஆகியவையும் இருக்கின்றன.

மிளகாய், செவ்விந்தியர்களிடமிருந்து உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்தலாம் என்பதை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை தமிழ் பெண்களையேச் சேரும்...

இவர்களை தான் நாம், நமது பிரச்சினைகளை தீர்க்க தேர்ந்து எடுத்துள்ளோம்...


14 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக வறண்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்...


திராவிடலு பகுதி - 5...


ஆம், வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இந்து-இசுலாமிய பிரித்தாளும் கொள்கை வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் நன்றாகவே வேலை செய்தது.

இன்றும் அது மக்களின் மனதில் நன்கு வேறூன்றியுள்ளது.

இதை நீதியரசர் மார்க்கன்டேய கட்ச்சு கூட சமீபத்தில் இடித்துரைத்துள்ளார்.

ஆனால் தெற்கில் அது எடுபடவில்லை.
ஆங்கிலேயர் இதற்கு என்ன செய்யலாம் என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தனர்.

மிண்டோ-மார்லி மற்றும் மாண்டேகு-செம்சுபோர்டு சீர்திருத்தத்திற்குப் பிறகு அரசுவேலை பெறும் இந்தியர்களை உற்றுநோக்கத் தொடங்கினர்.

மற்ற எந்தப்பகுதியிலும் இல்லாத அளவு பிராமணர் அதுவும் தமிழ்ப்பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமுள்ளதையும், அதை வேற்றுமொழியினர் பொறாமையுடன் பார்ப்பதையும், மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் அப்பதவிகளை அபகரிக்கத்துடிப்பதையும் அவதானித்தனர்.

போதாதா?  தயாரானது திட்டம் ஒருபக்கம் ஆரியர் வரலாறையும், அவர்கள் திராவிடர் (Dravid) என்று அழைத்தாக தமிழர் வரலாறையும் தேவைக்கு தகுந்தபடி திருத்தி ஆராய்ச்சியாளர்கள் மூலம் வெளியிட்டு 'திராவிடர்' என்கிற சொற்பதத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

இதை அவர்கள் 1800களிலிருந்தே செய்து வந்திருந்தனர் (அங்கேதான் நிற்கிறான் வெள்ளைக்காரன்).

ஆனால் பிராமண ஆதிக்கம் தலைதூக்கிய பின் திராவிடப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி அவர்கள் சூழ்ச்சி வேலைசெய்ய ஆரம்பித்தது.

எப்படி தெற்கைத் தவிர மற்ற இடங்களில் இப்பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தவே 'இந்து' என்கிற எப்போதும் இல்லாத வார்த்தையை உருவாக்கினார்களோ அது போலத்தான்.

ஆம்; 'இந்து' என்கிற வார்த்தை எந்த வேதத்திலும் கிடையாது.இந்து என்கிற வார்த்தையே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

கேட்டால் இசுலாமிய நாடுகளில் இந்தியத் துணைக்கண்டத்தை அல்-ஹிந்த் (எண்களின் நாடு) என்று அழைக்கின்றனர் என்பர் அல்லது 'சிந்து' ஆற்றின் பெயரிலிருந்து வந்தது என்பர் அல்லது 'பாகியான்' (Fagian) குறிப்புகளில் 'இந்து சமுத்திரம்' எனும் சொல் கையாளப்பட்டது என்பர்.

எது எப்படியோ. ஆனால்,  இதுவரை உலகில் அமைந்த ஆட்சிகளை எல்லாம்விட மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட ஆங்கிலேயர் அதைக் கட்டமைக்க கடைப்பிடித்த தாரகமந்திரம் 'பிரித்தாளுதல்'..

எந்த நாட்டில் காலடிவைத்தாலும் அங்குள்ள மக்களை இனத்தால், மதத்தால், நிறத்தால், சாதியால் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரிவினையைப் பரப்பி..

அவர்களை அவர்களாலேயே அழித்து தமது ஆதிக்கத்தை நிறுவுவதில் கைதேர்ந்தவர்கள்.

அவர்கள் செய்த வினையின் விளைவுகள் பல நாடுகளில் இன்றும் மோதல்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கின்றன.

'இந்து' பிறந்த கதைக்கும் 'திராவிடம்' பிறந்த கதைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் மக்களை பிரிக்க, ஒன்று ஏற்கனவே உள்ள பிரச்சனையை பெரிதாக்குவார்கள் அல்லது இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.

'இந்து-இசுலாம்' முதல் வகை.
'திராவிடம்'  இரண்டாம் வகை.

ஏட்டளவில் 'திராவிடம்' எப்படி உருவாக்கப்பட்டது?

ஏட்டளவில் உருவாக்கப்பட்ட 'திராவிடம்' நடைமுறையில்  எப்படிப் பிறந்தது?

தமிழர் தமது வரலாற்றில் கூறியும் கேட்டுமிராத திராவிடம் எப்படி தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தது?

- தொடரும்...

காவல்துறையின் கதிராமங்கலம் முற்றுகை, பேரா. த. செயராமன் உள்ளிட்டோர் சிறையடைப்பு...


குடந்தையில் - சூன் 20 - செவ்வாய் மாலையில்.. காவிரி உரிமை மீட்புக் குழு கண்டன ஆர்ப்பாட்டம்...

தஞ்சை மாவட்டம் - திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலத்தில் இருபதாண்டுகளாகப் பதினோரு பெட்ரோலிய ஆழ்குழாய்க் கிணறுகள் செயல்படுகின்றன. இவற்றால் நிலத்தடி நீர் மேலும் மேலும் கீழே இறங்கிப் போய்விட்டது. நிலத்தடி நீர் மஞ்சளாகி நஞ்சாகிவிட்டது. நிலத்தடி நீர் குடிநீருக்கும் வேளாண்மைக்கும் பயன்படாமல் போய்விட்டது.

பெட்ரோலியக் குழாய்கள் செயல்படும் வட்டாரத்தில் நெற்பயிர்கள் கருகிப்போகின்றன. அக் குழாய்களின் கழிவுநீரைக் குடிக்கும் கால்நடைகள் இறந்துவிட்டன. மனிதர்களுக்குத் தீக்காயங்களும் ஏற்பட்டன.

கடந்த மே மாதம் (2017) மேலும் புதிதாக ஆழ்குழாய்க் கிணறுகள் இறக்க வந்த இந்திய எண்ணெய் - எரிவளிக் கழக (ஓ.என்.ஜி.சி.) அதிகாரிகளையும், தொழிலாளர்களையும் ஊர் மக்கள் ஒன்றுகூடித் தடுத்தனர். அன்று திரும்பிப் போய்விட்டனர்.

ஆனால், 2.6.2017 வெள்ளிக்கிழமை விடியற்காலை, பாகிஸ்தான் படையாட்கள் புகுந்துள்ள எல்லைக் கிராமத்தை இந்தியப்படை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்துவது போல், கதிராமங்கலம் கிராமத்தைத் தமிழ்நாடு காவல்துறையினர் ஆயிரம் பேர் சுற்றி வளைத்து - யாரும் ஊருக்குள் போகாமலும் ஊருக்குள்ளிருந்து வெளியே வராமலும் தடுத்தனர். ஊருக்குள் வீடுகள், தெருக்கள், திடல்கள் அனைத்திலும் காவல்துறையினரை நிரப்பினர்.

இவ்வாறான முற்றுகை ஆக்கிரமிப்பை நடத்திக் கொண்டு புதிய ஆழ்குழாய்க் கிணறு இறக்கும் வேலையை ஓ.என்.ஜி.சி. செய்யவிட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஊர் மக்கள் 500 பேரையும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், வழக்கறிஞர் கரிகாலன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த நால்வருடன் கதிராமங்கலம் உழவர்கள் ஆறு பேரையும் சேர்த்து பத்துப்பேர் மீது பிணை மறுப்புப் பிரிவையும் இணைத்து வழக்குப்போட்டு, குடந்தைக் கிளைச் சிறையில் அடைத்தனர்.

காவல்துறையின் முற்றுகை ஆக்கிரமிப்புக்குள் வைக்கப்பட்டிருந்த கதிராமங்கலம் மக்கள் வீரத்துடன் உரிமைப் போராட்டம் நடத்தினர். மொத்தமுள்ள 93 கடைகளையும் முழு அடைப்புச் செய்தனர்; வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்.

குடிமை உரிமை மறுக்கப்பட்டு, கொடுமையான காவல்துறை முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட கதிராமங்கலம் மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தோழர்கள் பெ. மணியரசன், அய்யனாபுரம் சி. முருகேசன், த. மணிமொழியன், மருத்துவர் பாரதிச்செல்வன், சு. பழனிராசன், குழ. பால்ராசு, ச. கலைச்செல்வம், க. விடுதலைச்சுடர் உள்ளிட்டோர் 4.6.2017 மாலை இரு ஊர்திகளில் சென்றனர். அவர்களை குடந்தை அருகே கருப்பூர் ரவுண்டானாவில் காவல்துறையினர் மறித்துக் கைது செய்தனர்.

கதிராமங்கலம் மக்கள் 5.6.2017 அன்று குடியிருப்புக்கு வெளியே ஒரு திடலில், அனைவரும் கூடி ஊரைக் காலி செய்துவிட்டு வெளியேறுகிறோம், எங்களுக்கு வழிவிடுங்கள் என்று காவல் துறையினரிடம் கேட்டனர்.

அன்று மாலையே வருவாய்த்துறை அதிகாரிகள், “ஓ.என்.ஜி.சி. வேலை முடிந்துவிட்டது; காவல் முற்றுகையை விலக்கிக் கொள்கிறோம்; உங்கள் வீடுகளுக்குப் போங்கள்” என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்தனர். இந்த அளவு முதற்கட்ட வெற்றியுடன் மக்கள் வீடு திரும்பினர். ஓ.என்.ஜி.சி. வேலை பார்த்த இடத்தில் போய்ப் பார்த்தால், புதிதாக ஓர் ஆழ்குழாய்க் கிணறு மண்ணுக்குள் இறக்கப்பட்டிருந்தது.

பேராசிரியர் த. செயராமன், வழக்கறிஞர் கரிகாலன் உள்ளிட்ட பத்து பேர்க்கும் 6.6.2017 அன்று முன்னிரவில் குடந்தை குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொறுப்பு வகித்த பாபநாசம் நீதிபதி பிணை வழங்கினார். மறுநாள் 7.6.2017 காலை வெளியே வந்தனர். ஆனால் பேராசிரியர் த. செயராமன் மீது புதிது புதிதாக வழக்குகள் போட்டுக் கொண்டுள்ளது காவல்துறை.

கதிராமங்கலம் காவல்துறை முற்றுகை என்பது மற்ற ஊர்களில் செயல்படுத்துவதற்கான வெள்ளோட்டமே என்று புரிந்து கொண்டு, இந்த சனநாயகப் பறிப்பை முறியடிக்க வரும் 20.06.2017 - செவ்வாய் மாலை 4 மணிக்கு, குடந்தையில் காந்தி பூங்கா அருகில், காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரண்டு வர வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்...

கோடி கணக்கான ரூபாய்க்கு விற்க்கபடும் இந்திய தேச பக்தி...


தேசபக்தியை காட்டும் ஒரே வழியாக கிரிக்கெட் இருக்குமானால், தோற்று ஒழியட்டும் இந்திய அணி. குறிப்பாக பாகிஸ்தானிடம் 5 வருடங்களாவது தோற்றுக்கொண்டே இருக்கட்டும்.

ஒரு விளையாட்டு போட்டிக்கு எதற்கு ராணுவ வீரர்களின் பேட்டி?

பாக். விக்கெட் விழுந்தால் வர்ணனையாளர் ஏன் பாரத் மாதாக்கீ ஜே என அலற வேண்டும் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில்) ?

இந்தியா & பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எந்த விதமான தொடர்பும் இல்லாத தனியார் வியாபார விளையாட்டு கம்பெனிகள் இந்த கிரிகெட் கம்பெனிகள்.

இரண்டு நாட்டிலும் தனி முதலாளிகளுக்கு சொந்தமானது கிரிகெட் கம்பெனிகள் அதற்க்கு ஏன் இந்தியர்கள் தேச பக்தியில பொங்கனும்கிறான் இவன் ?

கிரிகெட் கம்பெனி காரர்கள் வியைாடினால் என்னா, விளையாடவிட்டால் என்னா ?

இந்தி அரசாங்கத்திற்க்கும் இந்திய மக்களுக்கும் அதனால் என்ன பிரயோஜனம் ?

தனியார் முதலாளிகளின் கிரிகெட் கம்பெனிகள் விளையாடுவதால் அதில் விளையாடுபவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குறாங்க, அந்த கிரிகெட் கம்பெனி முதலாளிகள் அதன் நிர்வாகிகள் பல கோடிகளில் சம்பாதிக்கிறாங்க .

இந்திய கிரிகெட் டீம் , பாகிஸ்தான் கிரிகெட் டீம் என்று அழைப்பதே தவறானது.

அது ஒன்றும் இந்தியன் ஆர்மி , இந்தியன் நேவி போன்ற அரசாங்க துறை சார்ந்தது அல்ல..

இதுக்கு ஏன் இவ்வளவு தேச பக்தி பில்டப் கொடுக்குறாங்க .

தொடர்ந்து மக்களை மாக்களாக மேனேஜ் பண்ணுவதற்க்கு கிரிகெட் விளையாட்டும் பயன்படுகின்றது, இது தான் உண்மை.

The BCCI is an autonomous body registered under the Societies Registration Act. Recognition has not been granted by the government. However, given that the ICC recognises the BCCI as the apex national federation responsible for promotion of cricket in India, a team selected by BCCI is considered as the Indian team. The ministry only grants the BCCI permission to participate in international events and for holding international matches in India at no cost to the government. This is subject to clearances from the ministry of external affairs from a political angle and the ministry of home affairs from the security one.

இந்திய அணியின் தோல்வி நல்லது.

மக்கள் உண்மையான தேச பக்தியை கற்கும்வரை அல்லது குறைந்தபட்சம் விளையாட்டை விளையாட்டாக பார்க்கும் வரை..

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


பாஜக மோடியும் மானம் கெட்ட பொழைப்பும்...


மராட்டிய கன்னட ரஜினி யும் டூபாக்கூர் வேலையும்...


நான் 45 வருசமா இங்கையே இருக்கிறேன் அதனால் நான் தமிழன் என்று சொன்ன ரஜினி வீட்டில் ஏன் மராட்டிய மன்னன் சிவாஜி படம் இருக்கு?

அதுக்கு பேருதான் இனப்பாசம்...

இலுமினாட்டி அமெரிக்காவே உலக பயங்கிரவாதி நாடு...


நம்ப முடியாத உண்மைகள்...


படத்தின் பின்னிருப்பது 1990களில் sonograph கருவிமூலம் பூம்காரின் கடலில் 5 கடல்மைல் அளவில் கண்டு பிடிக்கப்பட்ட படிமங்கள் ஆகும்...


நம்ப முடியாத உண்மைகள்...


சட்டப் பேரவையில் இருந்து டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச் செல்வன் வெளிநடப்பு...


ஆண்டிபட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்து தன்னை சபாநாயகர் பேச விடவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்துள்ளார்...

ஒட்டன்சத்திரத்தில் 19 ஆம் நூற்றாண்டின் விக்டோரியா ராணி நாணயம் கண்டெடுப்பு...



நெடுவாசலில் 68 வது நாளாக தொடர்ந்து போராடும் கிராமத்தினர், மறந்த போன தலைவர்களும், ஊடகங்களும்...


ஹைட்ரோகார்பனுக்கு எதிராக 68 வது நாளாக நெடுவாசலில் கிராம மக்கள் போராடி வருகின்றனர். இன்றய போராட்டத்தில் ஆலங்குடி MLA மெய்யநாதன் அவர்கள் கலந்து கொண்டு கிராமத்தினருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்...

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, கிரிகட்டில் அல்ல ஹாக்கியில்...


இன்று நடைபெற்ற Hockey World League Semi-Final போாட்டியில் பாகிஸ்தானை 7-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று முன்னேரியுள்ளது.

கிரிகட்டில் தோற்றது பெரிய செய்தியாகின்றது, ஹாக்கியில் அபார வெற்றி பெற்றது பெட்டி செய்தியாகின்றது. காரணம் கிரிகட்டில் வர்த்தகம் அதிகம் ஹாக்கில் வர்த்தகம் குறைவு...