14/08/2021

தனக்கு நிகர் வேறு யாரும் மொழி உணர்வாளர் இல்லை என்று நினைக்கும் ஒரு அறிவாளித் தமிழர் நம்மிடம் கேட்டுள்ள கேள்வி இது தான்...

 


தமிழை மட்டும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த தமிழ் அமைப்புகளுக்கு குறைந்த அளவு பொதுபுத்தி கூட இல்லை.

எல்லா மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று தானே தமிழர்கள் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? அதை விடுத்து ஒரே ஒரு மொழி மட்டும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நியாயம் தானா ?

இவருக்கு நம் பதில்...

இவருக்கு குறைந்த அளவு அரசியல் அறிவு இல்லை என்பதே உண்மை.

இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர்கள் அளவு எந்த மாநிலமும் போராடவில்லை.

தமிழகம் இந்தியை எதிர்த்து போல் எந்த மாநிலமும் எதிர்க்கவும் இல்லை.

இன்னும் பல மாநிலங்கள் தங்கள் மேல் திணிப்பு உள்ளது என உணரக் கூட இல்லை.

பல மாநிலங்கள் இந்தியை ஏற்றுக் கொண்டும் விட்டனர்.

இந்தி எதிர்ப்பு பலமாக உயிர்ப்புடன் இருப்பது தமிழகம் மட்டுமே.

இந்த நிலையில் நம் பக்க நியாயத்தை புரிய வைக்கவும் , நம் மீது ஏவப்பட்டுள்ள இந்தித் திணிப்பையும் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க நாம் கையில் எடுத்த கோரிக்கை தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவது தான்.

இந்த கோரிக்கையே பல தமிழர்களுக்கு என்னவென்று புரியவில்லை.

ஏன் தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும் என பல தமிழர்கள் கேள்வி கேட்கும் நிலை தான் இன்றும் நிலவுகிறது.

இந்நிலையில் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை தான் தமிழ்நாட்டில் எடுபடும் .

குறைந்த அளவு வரவேற்பு பெரும்.

இங்கு தமிழர்களின் பலத்தை திரட்ட இம்முயற்சி பலன் தரும்.

ஆனால் எல்லா மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை தொடக்கக் காலத்தில் பயன்தராது.

காரணம் அதற்கான முன்னெடுப்பு அந்தந்த மாநிலங்களின் சூடு பிடிக்க வேண்டும். எல்லா மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் வைக்கப்பட்ட இதே கோரிக்கை வலுப்பெற வேண்டும்.

அது வலுப்பெறாமல் நாம் மட்டும் அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைப்பது தமிழகத்தில் கூட அந்த கருத்து எடுபடாது.

இது தான் அரசியல் யதார்த்தம்.

இதை புரிந்து கொண்டே தமிழை முன்னிறுத்தி கோரிக்கை வைக்கிறார்கள்.

இது நாம் புதிதாக வைத்த கோரிக்கை அல்ல .

காயிதே மில்லத் 50 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை தான்.

உண்மையில் தமிழ் மொழிக்கு மட்டுமே இந்தியாவின் தேசிய மொழியாவதற்கு அனைத்து தகுதியும் உண்டு என்று நிரூபித்தவர் காயிதே மில்லத் அவர்கள்.

இப்போது நாம் அதே கோரிக்கையை வைக்கிறோம்..

இதற்கு மேல் அந்த அறிவாளித் தமிழருக்கு நாம் எந்த பதிலும் அளிக்கப் போவதில்லை...

நண்பன் பரிதாபங்கள்...

 


நண்பன் : நானும் ஒவ்வொரு புது பிகரை காதலிக்கும் போதும் முருகன் கோவிலுக்கு போய் "முருகா இந்த புள்ளைய கல்யாணம் பண்ணி அடுத்த முறை ஜோடியா உன் கோவிலுக்கு வரணும்"ன்னு வேண்டிட்டு வரேன்...

அந்த புள்ளையும் என்னைய ஏமாத்திட்டு வேறொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போய்டுறா...

என்னைக்கு முருகன் என்னைய காரி துப்ப போறாருன்னு தெரியல...

மீ : துப்புனாலும் ஓகே கடுப்பாகி வேல விட்டு எறியாம இருந்தா சரி..

😃😃😃

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...

 


இஸ்லாம் கிருத்துவம் இந்து மூன்றுமே தமிழனுக்கு அந்நிய மதங்கள் தான்...

 


இந்துமதம் பறையர்களை மட்டும் ஒதிக்கியது என்று பரப்பி  கிருத்துவம் இஸ்லாத்துக்கு ஆள் பிடிக்கும் கூட்டங்களே ....

இந்து மதம் என்கிற முக மூடி போட்டு எம்மை வீழ்த்தியவன் நோக்கம் வேறு..

அதில் புரிதல் இல்லாத இந்துக்களும் துணை நின்றார்கள் என்பதை மறுக்க முடியாது..

இருந்தாலும்.... தொடர்ந்து பறையர்களை இந்துக்கு எதிரானவனாகவும் இஸ்லாம் கிறுத்துவத்திற்க்கு ஆதராணவன் போலவும் பரப்பும் நோக்கம் என்ன ?

ஒன்னு எல்லா மதமும் இல்லனு சொல்லு, இல்ல எல்லா மதமும் இருக்குனு சொல்லு, இல்ல எல்லா மதத்தில் இருக்கும் நன்மையும் தீமையும் ரெண்டையும் சொல்லு...

இதில் நீ எதையும் பேசவில்லை என்றால் உங்கள் புரட்சியை நிறுத்தி கொள்ளுங்கள்...

சம நீதி...

 


சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது என்றால், அந்த சட்டத்தை ஏன் மக்கள் புரிந்துக் கொள்ளும்படி இயற்றலாமே..

மக்கள் எந்தவொரு சட்டப் பிரச்சனை என்றாலும் வழக்குறைஞர்களை நாட வேண்டி இருக்கிறது..

அனைத்து சட்டங்களும் மக்களுக்கு புரியும்படி இருந்தால் தான் சட்டம் உண்மையாக மக்களுக்காக இயற்றப்பட்டது என்றாகும்..

இல்லையென்றால் பணம் படைத்தவனும் மெத்த படித்தவனும் தான் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தனகேற்றது போல வளைத்துக்கொள்ள முடியும்...

அதைப் போல் பெரும்பாலும் உலகெங்கிலும் இருக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளை "MY LORD" என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதே.

தீர்ப்பை வழங்கும் ஒரே காரணத்தால் நீதிபதிகளை கடவுளுக்கு இணையாக வைத்து கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா.?




தான் அழகு என்பதை
பார்வையில் வெளிப்படுத்துவதை
விட..

மற்றவர்களிடம் பழகுவதில்
உணர்த்திடும் பெண்களே
உண்மையான அழகு...

உங்க பெயரில் 2.60 லட்சம் கடன் இருக்கு.. வசூல் பண்ணி விட்டு போகலாம் என்று வந்தேன்..

 




நல்லது. டக்ளஸ் அந்த கால்குலேட்டர் எடு..

நான் இலவச கம்ப்யூட்டர், இலவச சைக்கிள் வாங்கவில்லை. இரண்டும் சேர்த்து 30,000 போடு.

விவசாய கடன் வாங்கவில்லை. அதுக்கு 10,000 போடு.

ஹஜ் யாத்திரை, ஜெருசலேம் யாத்திரை போக துட்டு வாங்கவில்லை. அதுக்கு ஒரு 50,000 போடு..

இலவச பேருந்து பயணம் போகவில்லை. அதுக்கு ஒரு 10,000 போடு. 

எங்க கிட்ட இருந்து வரும் பணத்தில் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுறீங்க. நானும் அரசு ஊழியர் இல்லை.. அதுக்கு ஒரு லட்சம் போடு..

அந்த உதவித்தொகை, இந்த உதவித்தொகை எதுவும் வாங்கவில்லை. அதுக்கு 50,000  போடு..

எந்த நலவாரியத்தில் இல்லை. அதிலிருந்து சல்லி பைசா வாங்கவில்லை. அதக்கு 10,000 போடு.

தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை எதுவும் வாங்கவில்லை. அதுக்கு 30,000  போடு..

புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம் வாங்கவில்லை. அதுக்கு 30,000 போடு.

மொத்தம் எவ்வளவு ஆச்சு.

மூணு லட்சத்து இருபதாயிரம் வந்துச்சு.

நான் உனக்கு எவ்வளவு தரணும்.

2,60,000..

நீ எனக்கு எவ்வளவு தரணும்.

3,20,000.

அந்த 3,20,000 த்தில் 2,60,000 எடுத்துக்க. மிச்சம் 60,000 எப்படா தருவிங்க...

🤣🤣🤣

மண் பானை சமையல் நல்லதா?


மண்பானையில் சமைப்பது பாரம்பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். தற்போது தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தினால் தான் அறிய முடியும்.

ஆனால் அது போல் இல்லாமல் மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது.

மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது.

மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது.

மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை.

எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கிய மானதாகும்...

திருட்டு திமுக காரனுங்க நவீன கொள்ளையை தொடங்கிட்டானுங்க 😁

 


3 கோடி * 5 வருடம் = 15 கோடி...

அதிமுக ஆட்சியில திருட்டு திமுக வெளி நடப்பு செய்தது... இப்போது அதிமுக வெளி நடப்பு செய்கிறது அம்பூட்டு தான் அரசியல்...


 

ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்...

 


ஆஸ்திரேலியாவின் அடிலைடு நகரிலிருந்து 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூப்பர் பெடி நகரம், விலையுயர்ந்த கற்களுக்கான சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் சிம்சன் பாலைவனத்தை ஒட்டியுள்ள இந்த நகரத்துக்கு 80 ஆண்டுகளுக்கு முன் சுரங்கத் தொழிலாளர்கள் வந்து குடியேறினர்.

அவர்கள், இங்கு வீசும் மணற்புயல், கோடை வெயிலிலிருந்து தப்பிப்பதற்கு (அது உச்சபட்சமாக 47 டிகிரி செல்சியசாக இருக்கும்) நிலத்தடியில் வசிப்பதை வசதியாகக் கருதினர்.

இந்த வறண் ட, மரங்களற்ற நகரின் சுண்ணாம்புக் கல் குன்றுகளைக் குடைந்து 'டக்கவுட்' எனப்படும் நிலத்தடி வீடுகள் உருவாக்கப்பட்டன.

குடைவுப் பணி முடிந்ததும் சுவர்களில் ஓர் இயற்கை 'வார்னிஷ்' பூசப்படுகிறது, தரையில் கான்கிரீட் இடப்படுகிறது.

நவீனமான 'டக்கவுட்'டுகள் அனைத்திலும் சுவர் கம்பள அமைப்பு, வழக்கமான வீட்டு உபயோகப் பொருட்கள், மேஜை, நாற்காலிகள், குடிநீர், மின்சார இணைப்பு உண்டு. கூப்பர் பெடி நகரில் இந்த நிலத்தடி வீடுகள் மட்டுமின்றி, மூன்று நிலத்தடி தேவாலயங்களும் உண்டு.

நல்ல காற்றோட்ட வசதியுடன் இந்தக் குகை வீடுகளின் வெப்பநிலை எப்போதும் நிலையாக வைத்திருக்கப்படுகிறது.

கொஞ்சம் வெளிச்சக் குறைவு, இலேசான எதிரொலி, பூமியின் உப்பு வாசனை தவிர இந்த வீடுகளில் வாழ்க்கை சாதாரண வீடுகளைப் போல இயல்பாகவே இருக்கிறது.

இந்த நகரத்தின் ஆயிரத்து 900 குடும்பங்களில் 70 சதவீதம் பேர் நிலத்தடி வீடுகளிலேயே வசிக்கின்றனர்.

இந்த வீடுகள் தவிர வேறு எங்கும் தங்களுக்கு வாழப் பிடிக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.

புதிதாக இடம் வாங்கி ஒரு 'டக்கவுட்'டை உருவாக்குவதற்கு ஏறக்குறைய 17 லட்ச ரூபாயும், ஏற்கனவே தயாராக உள்ள, மூன்று அறைகள் கொண்ட 'டக்கவுட்'டை வாங்குவதற்கு 30 லட்ச ரூபாயும் ஆகிறது.

ராபர்ட் கோரோ என்பவர் இங்கு 'டெசர்ட் கேவ்' என்ற நான்கு நட்சத்திர நிலத்தடி ஓட்டலை நடத்தி வருகிறார்.

உலகில் இதுதான் ஒரே நிலத்தடி ஆடம்பர ஓட்டல் என்கிறார் அவர்.

தனது ஓட்டலில் வேறு எங்கும் இல்லாத அமைதியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம், அவர்கள் தமது அறைக் கதவை மூடிவிட்டால் எந்த வெளிச்சத்தமும் கேட்காது என்று கூறுகிறார் ராபர்ட் கோரோ.

நிலத்தடி கட்டிடங்களின் ஒரே குறைபாடு தூசிதான்.

தரை, மேஜை மற்றும் உணவிலும் கூட குறிப்பிட்ட நேரத்தில் ஒரு படலமாக தூசி படர்ந்து விடும்...

இன்றைய அரசியல்...