06/10/2021

சித்தர் ஆவது எப்படி - 6...

 


சாமியே சரணம் குருவே சரணம்...

சாமியே சரணம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.. சாமியை பிரித்தால் ச்+ ஆம்+ இ ஆக பிரியும்.. ச் என்ற நிகழ் காலம் ஆம் என்று அப்படியாய் இ என்று இருப்பவனே என பொருளாய் அமையும்...

சாமி என்றால் நிகழ் காலமாய் இருப்பவன் என பொருள்.. சாமியே என்று கடவுள் சிலைக்கு முன் வேண்டும் பக்தன், சிலையை சிலையாகத் தான் பார்கின்றானே தவிர அதை சாமியாக பார்ப்பதில்லை..

வேண்டுதல் என்ற செயல் பாட்டிற்கு முன்னே நிகழ் காலம் காணாமல் போய் விடுகிறது..

எண்ண ஆதிக்கங்கள் விளைவாக வேண்டுதல் எதிர்காலமாக தொடர்ந்தால் அங்கே நிகழ் காலம் இருக்க முடியாது..

சிலை என்பது ச் + இலை அதாவது நிகழ் காலம் இல்லை என பொருள்.. அது மட்டுமா மனிதன் சிலை அல்லாத உயிரோட்டம் உள்ள ஜீவர்களையுமே சிலை வடிவாகத் தான் பார்க்கிறான்..

அப்படி அன்பு நிலை இல்லாது சிலை வடிவாக அனைத்தையும் காணும் பண்பு எதனால் வந்தது?

நீர் பூதமாகிய சித்தத்தில் நிறைந்துள்ள பழைய எண்ண பதிவுகளின் ஆதிக்கமே காரணம்..

சிவம் என்ற சொல் நிகழ் கால குறிக்க வந்த சொல் என்பதை முன்பே அறிந்தோம்... அந்த நிகழ் காலமாய் மாறினால் மட்டுமே அன்பு என்பது உருவாகி சிவமே அன்பாகும் அல்லது அன்பே சிவமாகும்..

இந்த நிகழ் காலத்தில் அன்பு ஒன்று மட்டுமே உருவாகி இருப்பதால், சித்தத்தின் எண்ண ஆதிக்கம் இருக்கவே இருக்காது..

இப்படி சிலையை சாமி ஆக்க, அன்பு மலர, சிவம் தோன்ற, நிகழ் காலம் உதிக்க ஒரு சக்தி தேவை படிகிறது அல்லவா அது தான் குரு என்பது...

அந்த குரு, இரு என்ற நிலையில் இருந்து உருவாகிறது.. இரு என்ற இருத்தல் நிலை உருவாகும் வரை குரு தோன்றவே மாட்டார்.. எல்லா எண்ணங்களும் கற்பனை செயல் வடிவாய் இருப்பதால் இருத்தல் என்பது அதற்கு தெரியவே தெரியாது...

செயலாகிய இயக்கம் இருக்கும் இடத்தில் எப்படி இருத்தல்,நிலைத்தல், ஒய்வு, அமைதி இருக்க முடியும் ?  கற்பனை செயல் வடிவமாக, பிரகாசமாக இருந்து, கனல் என்ற பேரண்ட மூல ஆற்றலை, விரையமாக்கும்...

சித்தத்தின் எண்ண ஆதிக்கம் இல்லாத ஒரு இடம் தான், தொட்டு காட்டக் கூடிய தகுதியான ஒரு இடம் ஆகும்..

அங்கே மட்டுமே, இருத்தல் என்ற கனலின் இருப்பு நிலையை அடையாளம் காண முடியும்..

கனலின் இருப்பு நிலை என்பது கனலின் நிலையாய் நின்ற நிலை அதாவது static energy.. அதாவது கனல் சேமித்த அல்லது சேமிக்கப் பட்ட நிலை...

இந்த சேமித்த கனல் தான், புத்தி என்ற பூதமாய் பேரறிவின் துணையோடு சக்தி வாய்ந்த குருவாய் மலர, உருவாகத் தொடங்குகிறது..

குரு என்பது பிரிந்தால் க்+உரு ஆகும்.. க் என்றால் கடவுள் தன்மையிலிருந்து பெறும் கனல் சக்தி ஆகும்.. உரு என்பது உருவாகி பயன்பாட்டிற்கு வருவதாகும்...

சேமிக்கப் பட்ட கனலால் மட்டுமே, வலுவடைந்த புத்தி, குருவாய் எழுந்து செயலாற்ற தொடங்க முடியும்...

அப்படி கனலை பெருக்கும் பயிற்சி தான் கனல் தீட்சை என்கின்றனர்.. திருவடி தீட்சையும் நாத தீட்சையும் நயன தீட்சையும் கனல் தீட்சையின் உட் பிரிவாக உள்ளன...

ஆனால் வாசி யோகத்தில் இந்த கனல் தீட்சை மிக மிக எளிமையானது.. விரைவில் கனலை அதிகப் படுத்தக் கூடியது..

முறை தவறி போன வாசியோகத்தில் அங்கே கனல் பெருக்கத்திற்கு பதிலாக கனல் சுருக்கம் ஏற்பட்டு புத்தி வலு இழந்து போன அவல நிலை தான்..

ஆகவே முறையற்ற வாசியோகம், கனலை காட்ட தவறி விட்டது என்றே தோன்றுகிறது.. காரணம் தோன்றா நிலையாகிய பேரறிவு அதில் அனுபவப் படாததே...

வாசியோகத்தில் எவ்வாறு இந்த கனல் பெருக்கம் ஏற்படுகிறது என்பதை சற்று கவனிப்போம்..

குரு உருவாகாதவரை, சித்தத்தின் ஆதிக்கத்தை வேறு எந்த பூதத்தாலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது...

அதே சமயம் சித்தத்தின் ஆதிக்கம் இருக்கும் வரை குரு உருவாக மாட்டார்..

இந்த இக்கட்டான சூழ்நிலைதான் மனிதனை மேல் நிலைக்கு ஏற விடாமல் செய்கிறது..

இதிலிருந்து மீள தான் சித்தர்கள் வாசி யோகத்தை கண்டு அறிந்து பயின்றார்கள்..

சித்தத்திலிருந்து எண்ண ஆதிக்கங்கள் எழ அதற்கு சக்தி வேண்டும்.. சக்தி கிடைக்காவிட்டால் அது சித்தம் என்ற நீர் பூதத்தின் உள்ளே புதைந்தே கிடக்கும்..

கனல் சக்தி என்பது சதா காலமும் பேரண்ட பேராற்றலாய் சீராக கிடைக்கக் கூடிய ஓன்று..

எந்த ஏற்ற தாழ்வும் இன்றி சீராக கிடைக்கும் கனல் என்ற சக்தியை சித்தத்தின் எண்ண ஆதிக்கம் உறிஞ்சாத போது கனல் சற்று தேகத்திற்கு மனம் கொடுக்கிறது..

அப்படி பெற்ற ஆற்றலின் மூலம் தேகம், தான் தூக்கத்தில் பெற்ற ஆற்றலோடு இணைத்து ஈடு கட்டிக் கொள்கிறது..

சித்தத்தின் அதி மிக எண்ண ஆதிக்கம், அப்படி தேகம் ஈடு கட்டும் ஆற்றலையும், உறிஞ்சி வாங்கி கொள்ளும் போது, தேகம் விரைவாக ஈடு கட்டும் ஆற்றல் இன்றி சோர்வு அடைகிறது...

இதன் மூலம் அறியப் படும் இரகசியம் என்ன வென்றால், சித்தத்தின் எண்ண ஆதிக்கம் வலு இழக்கச் செய்யும் முறையிலும், அப்படி வலு இழந்த கால அளவை நீடிக்க செய்வதின் மூலமும் புத்தி அதிக கனலை பெற முடியும்..

சித்தத்தை வலு இழக்க செய்ய வல்லது எது.. வாசி யோகத்தில் மூச்சின் சூரிய கலையாகிய வெளி மூச்சில் சித்தம் சிறுக சிறுக வலு இழந்து சூரிய கலையின் முடிவில் முழுமையாக வலு இழந்து விடுகிறது..

அந்த இடத்தை புத்தியும் அறிவும் பிடித்துக்கொள்ளும் பொழுது அங்கே அகப்படும் கனல் அனைத்தையும் புத்தியும் அறிவும் பெற்றுக் கொள்கிறது..

சூரிய கலையில் வலு இழந்த அந்த முடிவான இடத்தின் தளர்ந்த அமைதியான சூழ்நிலையை அனுபவமாக அறிவு பற்றிக்கொள்ளும்...

அத்தகைய சூரிய கலையின் இரண்டரை விநாடி முழுமைக்கும் அளப்பறிய கனலை பெற்றுக்கொள்ளும் ஒரு அற்புத நிகழ்வினை எமது வாசி யோக பயிற்சியில் அனுபவப் பட்டீர்கள் என நம்புகிறேன்..

இதில் அனுபவ அறிவு தான் கனலை பெறும் கால அளவினை விரிவாக்கம் செய்ய கூடியது..

இதனை சுட்டி காட்டாத இன்றைய வாசியோகம், அற்ப கனலை மட்டுமே பெற்று, அதனையும் முறையற்ற பயிற்சியின் தீவிரத்தில் இழந்து விடுகிறது...

நம் முறையான வாசியோகத்தில் இப்படியாக பெற்ற கனல் உருவாகி குரு பலமாகிறார்.. பலப் பட்ட குரு தான் நமக்கு எல்லா வகையிலும் புத்தியாக இருந்து சிறந்த வழி காட்டியாக இருக்கிறார்..

அனுபவ அறிவின் துணையை இனி வரும் பகுதியில் கண்டு குரு பீடத்தை வலு படுவதை காணலாம்...

இதுவும் இனி வரும் பகுதிகளும் சற்று கடினமானவை..  அவைகளை அடுத்த பதிவுகளில் காண்போம்...

பயங்கரவாத பாஜக யோகியின் உ.பி. ஆட்சியின் லட்சணம்...

 


சமூக வலைதளங்களில் தொழில்நுட்ப கோளாறா..?

 


சித்தர் ஆவது எப்படி - 5...

 


புத்தியின் கனல் தன்மை மனிதன் இரண்டாக பிளவு பட்டு இருக்கிறான்.. மனம் கொண்ட மனிதன் தன் மனதில் கனலாகவும் வெளிச்சமாகவும் இரண்டாக பிளவு பட்டு இருப்பதையே இதை குறிக்கின்றது...

வெளிச்சமான உருவ பூதங்களான மண் நீர் பூதங்களை காட்டவும், கனலாய் அருவ பூதங்களான புத்தி அறிவினை வலு ஊட்டவும்,ஆக இரு செயல்களை மனம் செய்கிறது...

வெளிச்சத்தை மனம் காட்ட காட்ட மனிதன் விலங்கியல் நிலைக்கும், கனலாய் மாற மாற மனிதன், தெய்வநிலைக்கும் செல்லுவதை முன்பே பார்த்தோம்..

இயல் நிலையில் மனிதன் வெளிச்சமாய் உள்ள நிலையில் யோக பயிற்சியின் மூலம் கனலை பெருக்கி தெய்வீக நிலைக்கு போகிறான்..

கனலை பெருக்காத நிலையில் தெய்வ நிலையை அடைய முடியாமல், மனிதன் மனிதனாக ஜென்ம ஜென்மாக பிறவி எடுக்கிறான் என மகான்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்...

பிரபஞ்ச ஆற்றலை புத்தியின் மூலம் சுத்த கனலாக பெற்றுக்கொண்ட மனம் அதை வெளிச்சமாக மாற்றி உலகியலில் தொடர்புக்கு தன்னுடைய பஞ்ச பொறி புலன்களுக்கு செலவழிக்கிறது..

அப்படி செலவு செய்து பழக்கப் பட்ட மனம், பெற்ற மொத்த ஆற்றலையும், பொறி புலன்களுக்கே செலவு செய்ய துடிக்கிறது..

ஆனால் புத்தி அதனை தடுத்து விட்டாலும், புத்தியின் செயலில் தோய்வு ஏற்பட்டாலும், புத்தியின் பலத்தைக் காட்டிலும் மனம் மிகுந்த பலத்தோடு செயல் படுகின்ற பொழுது, புத்தி செயல் இழந்து போகும் போது, மனம் தான் பெற்ற கனல் சக்தி முழுமையையும் பொறி புலன் வாயிலாக தான் பெற்ற அனைத்து கனலையும் வெளிச்சமாக மாற்றி விடுகிறது...

அப்படி வெளிச்சமாக மாறும் போது, எண்ண அலைகளை உருவாக்குகின்றது..

அப்படி உருவான எண்ண அலைகள் சித்தத்தில் உள்ள அதற்கு ஒத்த பழைய எண்ண பதிவுகளையும் தூண்டி எண்ண குவியல்களை ஏற்படுத்துகிறது..

இந்த எண்ண குவியலின் ஆதிக்கமே புத்தியும் அறிவும் தாராளமாக செயல் பட முடியாமல் தடையாய் அமைகிறது.. இந்த நிலையில் தான் புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் ஏற்படுகின்றது...

மனம் புத்தியிடம் இருந்து பெற்ற ஆற்றலை அதாவது கனலை வெளிச்சமாக மாற்றுவதை குறைக்க, குறைக்க; புத்தியில் கனல் பெருகி புத்தியின் செயல் திறன் அதிகமாகிறது.... வலுவடைந்த புத்தி அறிவினை முழுமையாக பயன் படுத்திகொள்ளும்..

ஏதோ ஒரு வகையில் ஒட்டு மொத்தமாக சிக்கி கொண்ட நாம், மனதின் செயல் பாட்டால் அதாவது கனலை வெளிச்சமாக பூரணமாக மாற்றிய விதத்தால், அனைவரும் ஒட்டு மொத்தமாக புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் உடையவர்களாக உள்ளோம்...

முதலில் எண்ண குவியலில் இருந்து விடுபட்டு பின் தனி தனி எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டால் ஒழிய வெளிச்சம் மூலமாக ஆற்றல் குறைந்த அவல நிலையிலிருந்து மீள முடியாது...

இப்போது நம்மை யார் மீட்பது என்பது தான் மிக பெரிய கேள்வி... தடு மாற்றம் அற்ற திடமாற்றம் காண என்ன வழி ?

புத்தி என்பது பூரண கனல்.. கனலான ஒன்றே ஆற்றலானது.. புத்தியில் கனல் நிறைந்து புத்தி வலு பெற வேண்டும் என்றால் புத்தியிடமிருந்து கனலை கிரகிக்கும் மனதின் செயல் பாட்டை நிறுத்த வேண்டும்..

புத்தியிலிருந்து ஒரு குறிபிட்ட அளவிற்கு மேல் மனம் கனலை பெற முடியாது.. புத்தியானது தன் தேவைக்கு வேண்டிய அவசியமான கனலை தன் பால் வைத்துக் கொண்டு சதாகாலமும் செயல் பட்டுக் கொண்டு இருக்கும்..

மனம் ஆனது புத்தியின் தேவைக்கு மேல் உள்ள கனலை பெறுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் கனல் இல்லாமல் சோர்ந்து தூங்கி விடும்.. ஆனால் புத்தி மட்டும் சதா காலமும் விழித்துக் கொண்டே இருக்கும்..

தூக்கத்தில் ஏதாவது சத்தம், அதிக வெளிச்சம் அல்லது தட்டி எழுப்புதல் மூலம், தேக உணர்வு அதிகமானால் புத்தி மனதை விழிப்பு அடைய செய்து வெளிச்சத்திற்கு வரும்.. அதாவது பொறிகள் மூலம் புலன்கள் வேலை செய்ய தொடங்கும்...

தியானத்தின் ஒரு செயல், பெற்ற கனலை மனம் வெளிச்சம் ஆக்காமல் புத்தி தடுத்து தன்பால் புத்தியானது கனலை தக்க வைத்துக் கொள்வது தான்...

புத்தியானது வேண்டிய அளவிற்கு மட்டுமே மனதிற்கு கனலை கொடுக்க தொடங்கி விட்டால் மனம் புத்தியின் பூரண கட்டுப் பாட்டில் வந்து விடும்...

மனதிற்கு தொல்லை கொடுப்பது, சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமே..

இந்த எண்ண பதிவுகளை மனம் கையாள அல்லது கட்டு படுத்த எந்த வகையிலும் முடியாது...

ஆனால் சித்தத்தை கட்டு படுத்த புத்தியால் மட்டுமே முடியும்.. பொறி புலன்களை ஆதிக்கம் செய்வதற்காகவே மனம் படைக்கப் பட்டு இருக்கிறது..

பொறி புலங்களின் மேல் புத்தி, மனம் இல்லாத போது மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்.. இப்படியான கட்டமைப்பினை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்...

நமக்கு இப்பொழுது முக்கியமான தேவை, தனக்கு தேவையான கனலை தக்க வைத்து உள்ள , ஆனால் மனத்தின் ஆதிக்கத்தால் செயல் பாடு குறைந்துள்ள, புத்தியை தட்டி எழுப்புவதே... புத்திமதி யார் வழங்குவார்.. ஒரு குரு தானே வழங்குவார்.. குருவின் துணை யின்றி எதுவும் நடக்காது..

புத்திமதி என்பது புத்தியின் விழித்து எழுந்த நிலை.. ஆம் புத்தியின் நிலையிலே இருந்து கொண்டு குரு செய்யும் பணியை செய்வது இந்த புத்தி என்ற எழுந்த பூதம் தான், முதலில் எழ வேண்டும்.. எழுந்த புத்தியே குருவாக முடியும்.... எழுந்து பலப்பட வேண்டும்.. பலப் பட்ட பின் தான் குருவினுடைய ஆதிக்கம் தொடங்கும்..

பின் ஒவ்வொன்றாக சீர் அடைய தொடங்கும்.. சதா காலமும் விழித்து கொண்டு இருக்கும் இந்த புத்தி என்ற பூதம் முதலில் தான் செய்ய வேண்டியது இன்னதென்று அறியாத, புத்தி கெட்ட நிலையில் உள்ளது..

அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய ஒரு இடத்தை காண்பித்து விட்டால், போதும் மற்றவை எல்லாவற்றையும் சித்தராகக் கூடிய நிலைவரை அதுவே குருவாக இருந்து வழி நடத்தி செல்லும்..

ஒரு தீக்குச்சி பெரும் காட்டு தீயிக்கு வழி வகுப்பது போல், அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய தகுந்த ஒரே ஒரு இடத்தையும் அங்கு புத்தி பலம்கெட்ட நிலையிலிருந்து புத்தி பலப்பட்ட நிலையை அடையும் நுணுக்கத்தையும் அடுத்த பகுதியில் விளக்கமாக பார்க்கலாம்...

தமிழக விரோத பாஜக மோடி அரசு மீண்டும் தமிழ் மொழியை புறக்கணித்தது...

 


சித்தர் ஆவது எப்படி - 4...

 



வெளிச்சத்தின் விரையத்தில் மனிதன்..

கனல் ஒன்றே உயிர் ஆற்றல்.. ஆன்மா முழுமைக்கும் தூய கனலாக உள்ளது...

இந்த கனல் பூமியில் படும் பொழுது பஞ்சபூதங்கள் கனலை பெறுவதில் உள்ள வேறு பாட்டினால் பல்வேறு உயிர் இனங்கள் தோன்றுகின்றன, மனித தேகத்தில் மட்டும் காற்று ஆகாயம் என்ற பூதங்கள் கனலை அதிகமாக பெற்று இருக்கின்றன... மனம் என்ற பூதம் மிக அதிக பட்ச கனலை பெற்று இருக்கின்றது...

அப்படி கனலை பெற்ற மனம், வலுவான பூதமான சித்தத்திற்கு அடிமையாகி உள்ளதால், மனம் சித்தம் செல்லும் வழிகளில் மட்டுமே அதிக நாட்டம் கொள்கிறது...

மனம் சித்தம் செல்லும் வழிகளில் மட்டுமே அதிக நாட்டம் கொள்கிறது... இதுதான் மனிதனின் மிக பெரிய ஆன்மீக தடை...

சித்தத்தின் தன்மையே மனதை வசப்படுத்துவது தான்..

சித்தம் என்ற நீர் பூதம் நீரின் தன்மை போல் ஓடி ஓடி பள்ளத்தில் தங்க முயலுவது போல் மனம் என்ற பாத்திரத்திரமான பள்ளத்தை நோக்கியே சித்தம் போய் கொண்டு இருக்கும்..

சித்தத்திற்கு மனதை விட்டால் வேறு புகலிடம் இல்லை.. அது மேல் நோக்கி நகர முடியாததால் கீழ் நோக்கி செல்லும் பொழுது, மண்ணின் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்டே நகர தொடங்குவதால், மனதை சதா காலமும் சித்தம் மண் என்ற பூதத்தின் பக்கமே இழுத்து செல்லும்...

மண் அம்சமான ஆணவ குணம் சதா காலமும் ஒடுக்கத்தை நோக்கியே நோக்கியே போய் கொண்டு இருக்கும்...

அதனால் தான் மனம் முழுமைக்கும் சித்தத்தின் எண்ண ஆதிக்கமாகவே இருக்கும்.. குறுகிய வட்டமாகிய ஆணவத்தில் சதா காலமும் மனம் சிக்குண்டதாகவே இருக்கும்..

பழைய பதிவுகளான சித்தத்தின் எண்ண ஆதிக்கம் பழைய வாழ்க்கையே வாழ தொடங்குவதால் அது பழக்கமாகவும், குணமாகவும், இயல்பாகவும் மனதை தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு புதிய நிகழ் காலத்தில் மனதை ஈடு பட விடாது..

இறந்த கால வாழ்க்கையை வாழும் மனிதன் செத்தாரை போன்று இருக்கின்றான்.. நிகழ் காலத்தில் இந்த உலகில் உள்ள புதுமைகளில், மனம் மலர இந்த சித்தம் விடுவதில்லை...

நிகழ் காலத்தின் ஈடுபாட்டையே சி என்ற உயிர் மெய் எழுத்து குறிக்கிறது... அதில் வன்மையாக பொருந்தி இணைந்து கொள்வதையே வம் என்ற சொல்..

இறந்த கால எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு நிகழ் காலத்தில் இணைவதையே சிவம் என்றனர்..

சிவத்தை கைகொண்டால் சிவன் ஆகலாம்..

சிவன் பெற்ற அத்தனை சக்திகளையும் நிகழ்கால இணைப்பால் பெறலாம் என்பதே உண்மை அறிந்தோரின் சத்திய வாக்கு..

ஆனால் கனலாக அனுபவக்கூடிய சிவம் இன்று மதத்தில் சடங்காக

மாறி வெளிச்சமாக விரையமாகி விட்டதே.. சடங்கு என்பதே ச் + அடங்கு என்பதாகும்..

நிகழ் கால இணைப்பு அதாவது சிவ கலப்பு இன்று அடங்கி போய் விட்டதே..

அதை விட மிக பெரிய கொடுமை என்றும் எங்கும் நீக்கமற உள்ள இறைவனையே இன்று இல்லாதது போலும் நாளை தீர்ப்பு நாளில் வருவார் என்று இறைவனையே நிகழ் காலத்திலேயே சவமாக்கி விட்டார்களே...

கனல் ஒளியை போன்றது.. ஒளிக்கும் வெளிச்சத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்..

தேவையான ஒன்றிலே ஒன்றித்து பயிலுவது ஒளி ஆகும்.. அது தேவையை நிறை வேற்ற ஆற்றலை கொடுத்து தேவையை முடித்து வைக்கும்...

தேவை எது என்று தெரியாமல், குறிக்கோள் அற்று, சும்மா இருக்க முடியாமல், எதையாவது தேடி, வெளியே உள்ள பொருள்களில் ஆற்றலை சிதறி போக செய்து, பின் வாழ்வின் தேவை என்று ஒன்று வரும் போது அதை நிறை வேற்ற ஆற்றலற்று போய் தோல்வி அடைவது வெளிச்சம்...

ஒளி வாழ்வையும் உயர்வையும் கொடுக்கும்.. வெளிச்சமோ தாழ்வையும் பலவீனத்தை கொடுக்கும்..

ஒளி என்பது 'ஒ' (ஒன்றித்தல்) + 'ளி' ( பயிலல் ) ஆகும்.. வெளிச்சம் என்பது வெளி ( வெளியே உள்ள அனைத்தும் ) + எச்சம் ( மலம் விரையம் ) என்பதாகும்...

உணர்வு என்பது ஒளி தன்மை உடையது.. எண்ணம் சிதறு போகும் தன்மையால் வெளிச்சமாக உள்ளது.. மனம் இரண்டாக பிரிந்து இருக்கிறது..

உணர்வு என்ற ஒளியால் மேல் நிலை பூதங்களான காற்று, ஆகாயம் புலப்படுகிறது..

நினைத்தல் என்ற வெளிச்சத்தால் உருவ அமைப்புகளான கீழ் நிலைபூதங்களான நீர் மண் புலப்படுகிறது..

உணர்வால் மனிதன், மேல் நிலையும் நினைத்தலால் மனிதன் கீழ் நிலையும் அடைகிறான்..

இன்றைய மனிதன் நிலை என்ன ?

பூர்வீக ஜென்மங்களின் உணர்வுகளை தாங்கி நிற்கும் வல்லமை உடைய சித்தம் என்ற பூதம், இந்த பிறவியில் காலையில் உண்ட உணவின் சுவையின் உணர்வினை, மதியத்திற்குள் ஏன் இழந்து விடுகிறது..

கோவிலில் இறைவனை தொழும் போது ஏற்பட்ட பக்தி உணர்வு, கோவில் வாசலை தாண்டும் முன்பே ஏன் காணாமல் போய் விடுகிறது?

அன்பு பாசம் போன்ற உணர்வுகள் குறுகிய கால அளவிலே மறைந்து போக என்ன காரணம்?

முதியோர் இல்லங்களிலும் நடு தெருவிலும் தாய் தந்தையரை அநாதையாக விட்ட மகனின் பாச உணர்வு எப்படி காணாமல் போய் விட்டது?

வல்லமை வாய்ந்த சித்தம் எதனால் பலவீனம் அடைந்தது ?

பயன்தூய்ப்பில் நிறைவு பெறாமலே மனிதன் மீண்டும் மீண்டும் ஏன் தேடுதலையே தொழிலாக கொண்டுள்ளான் ?

இறைவனே நேரில் காட்சி அளித்தாலும் அவனால் உணர்வில் ஏன் நிறைவு கொள்ள முடியாத நிலையில் உள்ளான்?

சொர்க்கமே கிடைத்தாலும் அதனுடைய அனுபவ உணர்வுகள் விரைவில் தொலைத்து விட்டு சொர்க்கமே கசந்து போகும் நிலை ஏன் அடைகிறான் ?

எந்த சுகத்தையும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மேல் அனுபவிக்கும் தகுதியை ஏன் இழக்கிறான்?

இந்த பிரபஞ்சத்தில் எந்த அற்புதம் கிடைத்தாலும் அது மனிதனின் மன நிலையில் விரைவில் அது தன் மகத்துவத்தை ஏன் இழந்து விடுகிறது?

நினைவு பதிவுகளமான கலங்கிய சித்தத்தில் எந்த உணர்வும் நிலைப்பதில்லை.. அது வெளிச்சமாக இருப்பதால் பெற்ற உணர்வை வெளிச்சமாக விரையம் செய்கிறது.. அதுவே காரணம்...

அப்படி விரையம் செய்யாமல் தடுத்து, சித்தத்தை கனலால் நிரப்பும் பயிற்சியான கனல் தீட்சை நயன தீட்சை திருவடி தீட்சை என பயிற்சிகளை பயின்றார்கள் நம் சித்தர் பெருமக்கள்..

இந்த மூன்றும் ஒன்றே.. வெளிச்சத்தை எவ்வாறு தடுப்பது, கனலால் உணர்வால் எப்படி நிரப்புவது என்பதை வரும் பகுதிகளில் காணலாம்... சித்தர் ஆவதில் சிரமம் ஒன்றும் இல்லை...


திருட்டு திமுக ஸ்டாலின் அரசின் லட்சணம்...

 


சித்தர் ஆவது எப்படி - 3...


சித்தத்தை சீர் செய்யும் முதல் படி-கனல் தன்மை அறிதல்...

சித்தத்தை சீர் செய்தல் மூலம் சித்தர் ஆவது எளிமையாகிறது.. மற்ற பூதங்கள் திறன் பட செயல் பட மாறுபட்ட முரண் பாடுகளை உடைய சித்தத்தை சீர் செய்ய அவசியமாகிறது.. சித்தத்தை சீர் செய்வதின் மூலம் ஆன்மீகம் முன்னேற்றம் மிக எளிதாகிறது..

சித்தத்தை சீர் செய்வது என்பது ஆன்மீக பணியில் 100 ல் 95 பங்கு செய்து முடித்தது போல... அதனால் தான் சித்தத்தை சீர் செய்து ஆன்மீகத்தில் உச்சத்திற்கு சென்றவர்களை சித்தர்கள் என்கிறோம்...

இப்பொழுது சித்தத்தை சீர் செய்யும் வழியினை ஆராய்வோம்..

இயல்பாக சித்தம், எண்ணக் குவியலால் ஆனது என்று முன்பே அறிந்தோம்.... பல ஜென்மங்களின் அனுபவங்கள் சூட்சும பதிவுகளாக சித்தத்தில் புதைந்துள்ளன... அதற்கு முன்னால் அனுபவம் என்னவென்று பார்ப்பது அவசியமாகிறது..

ஓர் அனுபவம் என்பது பஞ்சபூதங்களால் கூட்டாக அனுபவப் படுவது.. இதில் நிலம் நீர் பூதங்கள் உருவமாக திடமாக இருப்பதால், அவைகள் வெளிச்சத்தின் உதவியால் இயங்குவதால் அனுபவபடும் பொருளின் உருவ தோற்றத்தை நுகருகிறது..

காற்றும் ஆகாயமும் அருவமாக உருவமற்ற நிலையில் இருப்பதால் அவற்றை உணர்வாக நுகருகிறது...

மனம் என்ற பூதம், சித்தத்திலிருந்து தன்னை வந்து அடைந்த எண்ணத்தை நுகரும் போது அதை வெளிச்சமாகவும் உணர்வாகவும் பிரித்து வெளிச்சத்தை நீர் மண் பூதத்திற்கும், உணர்வை காற்று ஆகாய பூதத்திற்கும் அனுப்புகிறது...

ஆகையால் தான் மனம் என்ற பூதத்தை நெருப்பின் அம்சமாக கூறுகின்றனர்..

அதாவது நெருப்பிற்கு வெளிச்சத்தை தரும் சுடரும், சூடு என்ற உணர்வை தரும் கனலும், இருப்பதால், மனத்திற்கு நெருப்பை உதாரணமாக வைத்தார்கள்...

முக்கியமாக அறிய வேண்டியது என்ன வென்றால் பிரபஞ்ச பேராற்றல் வருகின்ற பொழுது, அந்த ஆற்றலை உணர்வாக எடுத்துக் கொண்டால், அது தேக ஆற்றலாக மாறிக்கொள்கிறது..

அதே வெளிச்சமாக மாறும் பொழுது பொறி புலங்கள் வழியாக உலக தொடர்பு கொண்டு விரையமாகிறது..

ஆனால் எண்ணம் பெரும்பாலும் வெளிச்சமாகவும், குறைந்த அளவாய் உணர்வாகவும் இருக்கும்.. அதனால் தான் எண்ணங்களில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்..

ஆனால் காமம் கோபம் இரண்டில் உள்ள எண்ணங்களில் உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.. ஆனாலும் அது வெளிச்சத்தை விட குறைவாகவே இருக்கும்...

சித்தத்தில் வெளிவரும் எண்ணங்கள் மனதை சாரும் போது, வெளிச்சமாகவும் கனலாகவும் பிரிக்கின்ற ஒரு செயலை பார்த்தோம்.. அதே நேரத்தில் கனலானது வெளிச்சமாகி மாறி வெளி சார்புகளை நோக்கி சென்று விரமாகக் கூடிய செயலும் நடக்கிறது...

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் நம்முடைய தேக அமைப்பில் உள்ள பொறி புலன்கள் வெளியே உள்ள சார்புகளில் பொருள்களில் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வெளிச்சமாகி மாறி விடுகிறது..

இதன் காரணமாக தான் பகல் நேரங்களில் பொறி புலன்கள் அதிகமாக வேலை செய்து தேக கனல் பெரும்பாலும் வெளிச்சமாக மாறி நம் ஆற்றல் குறைய தொடங்குகிறது... ஆற்றல் குறைவால் உறக்கம் வர தொடங்குகிறது..

உறக்கத்தில் பொறி புலன்கள் செயல்பாடு மிக மிக குறைவாக உள்ளதால், கனல் பெருகி தேகம் புத்துணர்ச்சி பெறுகிறது...

இந்த கனலை பற்றி சற்று அறிந்து கொள்வோம்..

எப்படி சூரிய ஒளி அலைவரிசை பூமியில் பட்டு பூமி சூட்டை, வெப்பத்தை பெறுகிறதோ அதே போல் பேரண்ட பேராற்றலின் அலைவரிசை தான், உயிர் ஆற்றல் பெறுவதற்கு மூல ஆதாரமாக உள்ளது.. இதை சில யோகிகள் காந்த அலை சக்தி என்று சொல்லிகிறார்கள்.... அதைதான் தேக கனலாக இங்கே நாம் புரிந்து கொள்கிறோம்..

தேகத்தில் இந்த கனல் ஒரு குறிபிட்ட அளவிற்கு கீழே குறைந்தால் தேகம் வலு இழந்து மரணம் அடைகிறது..

சித்தர்களிடம் இந்த கனலை தேகம் பூரணமாக பெற்றக் கொண்ட பின் அந்த கனலை சூட்சம, நுண்ணிய தேகமாக மாறுகிறது.. அந்த சூட்சம தேகம் அளவற்ற கனலை பெறக்கூடிய ஆற்றல் உள்ளது..

ஆனால் சூட்சும தேகத்தை பழகி கொண்ட மனிதன் அளவற்ற ஆற்றல் அடைவதற்கு எல்லையே இல்லை.. ஒரு குறிபிட்ட ஆற்றலை பெறும் தகுதி உடைய தூல தேகத்தில் வாழும் மனிதன் தன் சூட்சும தேகத்தின் மூலம் அளவற்ற பிரபஞ்ச ஆற்றலான கனலை பெறும் தகுதி உடையவன் ஆகிறான்..

இந்த தூல தேகம் தன் சூட்சும தேகத்தின் உதவியால் பல பிரமிக்க வைக்கும் செயல்களை செய்யும் திறனை பெறுகிறது...

இந்த ஒரு இரகசியத்திலே சித்தர் ஆகும் பாதையில் இந்த பிரபஞ்ச கனல் மிக முக்கியமாக உள்ளதால், நம் தேக கனலை தக்க வைக்கவும் தேக கனலை பெருக்கவும் உகந்த உளவுகளை இனி வரும் பகுதிகளில் பார்ப்போமாக....

Save Petrol...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...



பஸ்சில் பயணம்
சென்று
கொண்டிருக்கையில்..

அவளுக்கு
பிடித்த பாடல்களே பாடிக்
கொண்டிருந்தன...

அவளால் ஏற்பட்ட காயத்தை 
மறக்க நினைத்துக் கொண்டிருந்த மனம்....

மீண்டும் அவளது நினைவுகளிலே
தொடர்கின்றது..
என் பயணம்....

சித்தர் ஆவது எப்படி - 2...

 


சித்தம் என்ற பூதத்தின் இயல் தன்மை சித்தத்தை சீர் செய்வதின் மூலம் மட்டுமே ஒருவர் சித்தர் ஆகமுடியும் என தெரிந்து கொண்ட நாம், சித்தம் என்ற நீர் பூதத்தின் சுய வடிவத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது...

நீர் இன்றி அமையாது உலகு என மறை பொருளால் வள்ளுவர் சொன்னார்..

புல்லாகி பூண்டாகி, மரமாகி பல்விருச்சமாகி பறவையாய் பாம்பாய் மனிதனாய் என அடுக்கி கொண்டே ஞான சம்பந்தர் சொன்னது போல் பல் பிறவிகளை எடுத்துள்ள நாம், அப்பிறவிகளை நமது மேல் மன நிலையில் அறியாது இருக்கின்றோம்..

நம் மேல் மன நிலையில் நம் குழந்தை கால நினைவுகளையும் அறியாது இருக்கின்றோம்..

ஆனால் அத்தனை பிறவிகளின் நினைவுகளை நம் ஆழ் மனதில் எண்ணப் பதிவுகளாக பதிக்கப் பட்டு இருக்கின்றன...

ஆனால் இந்த பிறவியின் எண்ண ஆதிக்கத்தால் அமுக்கப்பட்ட ஆழ் மனதின் எண்ணங்கள் எழும்பி வர முடியாத நிலையில் நமது சித்தம் உள்ளது..

ஆனாலும் சித்தத்தில் அமுங்கி கிடக்கின்ற சில எண்ண பதிவுகளின் எழுச்சியின் காரணமாக நமது இன்றைய வாழ்வு வடிவமைக்கப் படுகின்றது..

இதை தான் விதி வழி வாழ்க்கை என்கிறார்கள்..

எல்லா விலங்குகளும் விதி வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருகின்றன... மனிதன் மட்டுமே அதை மாற்ற முயலுகின்றான்....

விதி என்பதே வ்+ இதி ஆகும்.. வ் என்ற வகர மெய் எழுத்து விண்ணின் அம்சமான அறிவினை குறிக்க இதி என்பது இல்லாத நிலையை குறிக்கிறது...

அதாவது விதி எனபது அறிவு அற்ற நிலையாகும்... விதியின் எதிர் மறை சொல் தான் வாசி என்பது..

அறிவின் பலப்பட்ட உறுதி பெற்ற நிலையான மதியே வாசி.. அந்த வாசியான மதியால் மட்டுமே விதியை வெல்லலாம்...

சித்தர்கள் விதி வழி வாழ்க்கை வாழாமல், வாசி வழி வாழ்க்கை வாழ முயன்றார்கள்.. அதற்காகவே வாசி யோகத்தை கண்டு பிடித்தனர்...

அதில் சித்தத்தை பூரணமாக அறிந்து சித்தத்தின் உள்ளே சதாசிவத்தை காண முயன்றார்கள்..

சித்தம் தரும் எதிர் மறை கட்டுபாடுகளை தகர்த்து எறிந்து, அவைகளை தங்கள் அறிவு கனலால் சுட்டெரித்து, அதிலிருந்து விடுபட்டு சித்தம் தரும் மிக பெரிய பயனை பயன் படுத்த முயன்றார்கள்... அதன் விளைவாக சித்தர் என்ற ஏற்றம் பெற்றார்கள்...

இயல்பாகவே மனிதனுக்கு சித்தத்தில் எண்ண குவியல் இருக்கும்.. இந்த எண்ண குவியலிருந்து வலு பெற்ற எண்ணங்கள் தானாகவே வெளி பட்டு மனதில் பிரதிபலிக்கின்றன.. அதனால் மனதில் ஒரு குறிபிட்ட எண்ணம் என்று இல்லாமல், ஏதாவது எண்ணம் தோன்றும்..

எண்ண குவியலை சித்தத்தில் தாங்கிய மனிதன் தன் மனதில் தான் தோன்றிதனமாக தோன்றிய எண்ணங்கள் பிரகாரம் தான் பேசுவான் நடப்பான்.. அவன் நடை பாவனை எல்லாம் முன்னுக்கு பின்னும் முரணாகத்தான் தோன்றும்..

மனிதன் எதை நினைகின்றானோ அதுவாகவே ஆகிறான் என்ற சத்திய வார்த்தைகளை ஒரு போதும் மறக்கக் கூடாது... அதே போல் மனிதன் தான் நினைத்ததை தான் செய்ய தொடங்குவான் என்பது அசைக்க முடியாத விதியாகும்...

யானை வரும் பின்னே மணி ஒசை வரும் முன்னே என்பது போல் முதலில் எண்ணம் தோன்றி அதன் பிறகே செயல் தோன்றும்...

ஆகவே தான், தான் தோன்றி தனமாக வரும் எண்ணங்களால் மனிதனின் செயல் பாடுகளில் மிகுந்த முரண் பாடுகள் உள்ளன..

இந்த முரண்பாடுகள் சமுதாய சூழ்நிலைகளாலும் சமுதாய பயிற்சியினாலும் கட்டுப் படுத்தப் படுகிறது..

இந்த முரண்பாடுகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் ஏதோ ஒரு நிலையில் கட்டுப் படுத்தப் படுகிறது..

அந்த ஒரு நிலையே அந்த சமுதாயத்தின் கலாசாரமாக கருதப் படுகிறது..

நிலை நிறுத்தப் பட்ட அந்த நிலைக்கு கீழே முரண் பாடுகளை நீக்கினாலும் மேலே கூடினாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை..

சமுதாயம் அங்கீகாரம் செய்து கொண்ட முரண்பாடுகளை ஒரு மனிதன் நீக்க முயற்சித்தால் அவனை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது..

ஒரு மனிதன் புனிதனாக முடிவு செய்து சமுதாய முரண்பாடுகளை நீக்க முயன்றால், அவனை சமுதாயம் ஒதுக்கி வைத்து விடும்...

அப்படியான சமுதாயம் யாரையும் தூய சித்தனாக்க விடாது..

அப்படியான சமுதாயம், சித்தனாக ஏற்றுக்கொண்ட ஒர் மனிதன் சமுதாய முரண் பாட்டிற்கு ஒத்து போனால் மட்டுமே சமுதாயத்தோடு வாழ முடியும்...

அப்படியான மனிதன் தூய சித்தனாக எப்படி இருக்க முடியும் என்பது தான் கேள்வி...

சமுதாயமா அல்லது புனிதமா என்பதில் புனிதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு மனிதன் தூய சித்தர் பாதையில் பயணப் படுகிறான்..

சித்தர் யார் என்ற கேள்விக்கு முக்கியமான பதிலை இங்கே உன்னிப்பாக கவனிக்குமாறு வேண்டுகிறேன்..

சித்தத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தான் மட்டுமே புனித பாதையில் பயணப் படும் சித்தன் தன்னை சூழ்ந்த சூழ்நிலை மனிதர்களை மாற்ற முயலுவதில்லை.. காரணம் தன்னிடம் ஆன்மா பலம் இல்லை..

அப்படி மாற்ற நினைத்தால், மனிதர்களிடமிருந்து பெரிய தொல்லைகள் வரும் என்பதை அறிந்து ஒதுங்கி கொள்ளவே முயலுகிறான்..

தான் மட்டுமே வாழ, தன்னை சூழ்ந்த மனிதர்கள் மாள ( இறந்து போக ) பயணப்படும் மனிதனை தர்மம் என்ற பிரபஞ்சம் ஒரு சித்தனாக ஒரு போதும் ஏற்றுக் கொள்வது இல்லை.. இது சத்தியமாக இருக்கிறது..

இந்த தர்மத்தின் பிரபஞ்சத்தின் பார்வையில், சித்தர்களாக உலக சமுதாய கருதப் படும்.

சித்தர்கள், தங்கள் பதவிகளை இழக்கிறார்கள்.. தர்மம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருவர் சித்தர் ஆக முடியும்.. முரண் பட்ட உலகம் கருதும் சித்தர்கள் ஒரு போதும் சித்தர்கள் ஆக முடியாது.. இது மிக கசப்பான உண்மை தான்... பொறுத்துக் கொள்ளதான் வேண்டும்....

ஆகவே பிரபஞ்சத்தின், தர்மத்தின் பார்வை, முரண் பட்ட சமுதாய பார்வைக்கு எதிராக உள்ளது..

இனி வரும் பகுதிகளில் புனித சித்தனின் இயல்பையும், அவனது செயல் பாடுகளையும் ஆராய்ந்து முதல் பகுதியில் சொன்னது போல், புனித சித்தனின் நேர் வழியில் புனித தூய வழியில் பயணப் பட முயல்வோமாக....

உண்மையான பேய்களையே பார்த்தவன் டா நான்...

 


ஏன் பெண்ணை பேயி, பிசாசு (பேபி) என்று சொல்கிறார்கள் என்று புரிகிறதா...

 


சித்தர் ஆவது எப்படி - 1...

 


சித்தர் என்பவர் யார்? இந்த உலகில் சித்தர்கள் இருக்கின்றார்களா ?

என்ற கேள்வி பல வருடங்களாக சாதாரண மனிதர்களால் கேட்கப் பட்டு வருகின்றது....

சித்தர்களை பார்க்கத் துடிக்கின்ற மனிதர்கள் பலர் இன்னும் இருக்கின்றார்கள்.... சிலர் தாம் பார்த்ததாக சொன்னார்களே தவிர யாரும் யாருக்கும் காட்டியதாக தெரியவில்லை...

மனிதகுலம் தம் தம் காலங்களில் தோன்றிய சில மாமனிதர்களை சித்தர்களாக, இல்லை இல்லை சித்தர்கள் போல சித்தரித்தார்களே தவிர அதில் உண்மை துளியும் இல்லை..

இறைவன் என்ற ஒரு உயர்நிலை இருக்க சித்தர்களை இறைவனை விட உயர்வாக போற்றும் போற்றிய மர்மம் என்ன ?

இறைவனால் சாதிக்காததை அப்படி என்ன சித்தர்கள் சாதித்தார்கள் ?..

சித்தர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் நம்பும் உலகம் ஒருவரையேனும் இன்று பார்க்க முடியவில்லையே அது ஏன் ?

இன்று என்ன உண்மையோ அப்படி தானே முன்னும் இருந்து இருக்க வேண்டும்.. அப்படியென்றால் சித்தர்களை இதுவரை எவரும் சரித்திரத்திலோ அல்லது எந்த தலைமுறையிலோ காண வில்லை என்ற பொருளாகி விடுமா ?

இது போன்ற கேள்விகள் எழுகின்ற போது பலரது புருவங்கள் உயர்த்தப் படலாம் என்பதில் சந்தேகம் இல்லை..

மன கசப்பும் அவர்களுடைய நம்பிக்கை உடையும் அபாயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. சற்று பொறுமை இழக்காமல், சித்தர் ஆவது எப்படி என்ற தொடர் பதிவினை முழுமையாக படிக்குமாறு வேண்டுக் கொள்கின்றேன்...

முழுவதுமாக படித்தால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறிந்து கொண்டு சித்தர் பாதையில் நேர் வழியில் பயணப்பட முடியும்...

சித்தர் ஆவது எப்படி என்ற தலைப்பில் வரும் பல பகுதிகளில் பல உண்மைகள் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு தொடர்பு கொண்டமையால், படித்த பதிவின் நினைவு கொண்டால் மட்டுமே தொடர்ந்து வரும் பகுதியை சரியாக புரிந்து கொள்ள முடியும்..

ஆகவே ஒவ்வொரு பதிவினையும் உற்று கவனித்து படிக்குமாறும், படித்ததை நினைவில் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்....

நம் பஞ்சபூதங்களிலேயே அதிகம் மாற்ற அடையக் கூடியதும், அதனால் நம் வாழ்வியலை பல மாற்றங்களை ஆக்கக் கூடியதும் ஆனது நீர் தன்மை உடைய சித்தம் என்ற பூதம்..

இந்த சித்தம் என்ற பூதத்தை முறை படுத்தி மண், ஆகாயத்தை போல் ஸ்திர தன்மை பெற்றால் மட்டுமே நித்திய நிலையாகிய மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியும்..

மாறும் போக்கு உடைய சித்தம் என்ற பூதம் உறுதி தன்மை அடைய வாழும் முறையை மேற் கொண்டவர்கள் தான் சித்தர்கள்..

அதாவது சித்தத்தை கையாளுகிறவர்கள் தான் சித்தர்கள்...

மாற்றம் காணும் சித்தம் உறுதி காணும் போது, முன் ஜென்மங்களில் சேர்த்து வைத்த ஆற்றல்கள் உள் வாங்கும் திறமை அதிகரிக்கப் படுவதால் அளவற்ற ஆற்றலை அடையும் பேறு கிடைக்கிறது... அதனால் மனிதன் மாமனிதன் ஆகிறான்..

இந்த சித்தர்கள் விசயத்தில் மனிதர்கள் செய்யும் பெரிய தவறு என்ன ?

சித்தர்கள் அடைந்ததாக கருதப் படும் பெரும் செயல்களால் ஈர்க்கப் பட்டு, சித்தர்கள் பால் மிகுந்த ஈர்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்..

இன்றைய திரைபடங்களில் மிக பெரிய செயல்களை செய்வது போல் நடித்துக் கொண்டு இருப்பவர்களையே தெய்வமாக கருதி அவர்களின் பெரிய பேனர் படங்களுக்கு குடம் குடமாக பால் அபிசேகம் செய்யும் காலம் இது...

இது முறையற்று செயல் படும் சித்தத்தால் உருவானது..

மாயா நிலையை அள்ளி தரும் இந்த முறையற்ற சித்தத்தை சீர் செய்பவனே சித்தன்..

மாயா நிலை என்ற மயக்க நிலைவிட்டு தெளிவு நிலை என்னும் ஞான நிலை பெற வேண்டும் என்றால் முறையற்ற சித்தத்தை சீர் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதே அன்றி அப்படி சித்தத்தை சீர் செய்து பெரும் ஆற்றலை பெற்ற சித்தர்களின் பெருமை பேசி பேசி சித்தத்தை சீர் செய்யும் செயலை விட்டு விலகி செல்லும் தந்திரத்தை இந்த உலகம் செய்து கொண்டு இருப்பதை பின் பற்றக்கூடாது..

உலகின் செயல் பாட்டை விட்டு விலகி உண்மை நிலைக்கு திரும்ப வேண்டும் ..

உலகத்தார் ஏன் அப்படி விலகி செல்ல விரும்புகிறார்கள் என்றால் அவர்களிடம் ஆற்றல் இல்லாத தன்மையால் உருவான சோம்பல் என்ற பலவீனமே..

எல்லாவற்றிக்கும் ஆற்றல் பெறுவதே முதல் ஆதாரமாக உள்ளது..

அதுவே எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பதால் ஆற்றல் பெறுவதே மூலாதாரம் அதாவது மூல ஆதாரம்..

இதனை தேகத்தில் ஒரு இடத்தை காட்டி குறிக்கோளை விட்டு அப்பால் நகர்ந்து செல்வோரும் உண்டு...

எப்படியோ உண்மையான ஆற்றலை பெறும் வழியை விட்டு தப்பி செல்வதே மனித இயல்பாக உள்ளது..

இப்படி தப்பிக்காமல் பொறுப்பை ஏற்று உண்மையை நோக்கி பயணப் படுவதுதான் சித்தர் வழி..

சித்தத்தை சீர் செய்யும் சித்தர் வழியையும் சித்தராகும் நுணுக்கங்களையும் பார்ப்போமாக...

ஆற்றல் பெருகுவதற்கு சித்தத்தின் பங்கு மற்ற பூதங்களை காட்டிலும் மிக மிக அதிகம்..

எண்ண ஆதிக்கங்களை தந்து நம் மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலின் கனலை வெளிச்சமாக விரையமாக்கி, நம்மை செயலற்ற சவநிலைக்கு அழைத்துச் செல்லும் சித்தத்தை சீர் செய்யாமல் சித்தராக முடியாது..

அதற்கான உளவுகளை பகுதி பகுதியாக பார்ப்போமாக...

தீபாவளி முக்கிய அறிவிப்பு...

 



சிங்கிள் ஆகிய நான்.. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுகிறேன்..
 
வரும் தீபாவளிக்கு எனக்கு ஐ லவ் யூ சொல்லும் பெண்களுக்கு...

ஒரு பட்டுப் புடவை, 
ஒரு பட்டாசு பாக்ஸ், 
ஒரு கிலோ ஸ்வீட், 
ஒரு கிலோ காரம்,
இரண்டு மேக்கப் செட் பாக்ஸ் 
வாங்கி தருவேன்..
சீக்கிரம் வா என் மரண தேவதையே..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

காலை வணக்கம் மக்களே...

 


பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டு ஈ.வே.ராமசாமி நாயூடு கூறுகிறார்...

 


பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக் கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா? (விடுதலை 20-04-1962)..

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடை பிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயூடுக்கு என்ன தகுதியிருக்கிறது?

நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்து கொள்ளவில்லை?

தத்துவம் கேளுங்கோ...

 



அன்பு எங்கே இருக்கிறதோ 
அங்கே காதல் இருக்கும்...

எங்கே காதல் இருக்கிறதோ 
அங்கே வலி இருக்கும்..
 
எங்கே வலி இருக்கிறதோ..

அங்கே...
.
.
.
.
moov தடவுங்கள் 
வலி பறந்தே போய் விடும்...

🤣🤣🤣🤣

பாஜக எச். ராஜா சர்மா கலாட்டா...

 


பகுத்தறிவு பிராடு பண்ணாடைகள்...

 


தமிழன் போட்ட பிச்சையில் வளர்ந்து.. தமிழர்களுக்கு எதிராக செய்தால் இது தான் நிலைமை...