06/10/2021

சித்தர் ஆவது எப்படி - 1...

 


சித்தர் என்பவர் யார்? இந்த உலகில் சித்தர்கள் இருக்கின்றார்களா ?

என்ற கேள்வி பல வருடங்களாக சாதாரண மனிதர்களால் கேட்கப் பட்டு வருகின்றது....

சித்தர்களை பார்க்கத் துடிக்கின்ற மனிதர்கள் பலர் இன்னும் இருக்கின்றார்கள்.... சிலர் தாம் பார்த்ததாக சொன்னார்களே தவிர யாரும் யாருக்கும் காட்டியதாக தெரியவில்லை...

மனிதகுலம் தம் தம் காலங்களில் தோன்றிய சில மாமனிதர்களை சித்தர்களாக, இல்லை இல்லை சித்தர்கள் போல சித்தரித்தார்களே தவிர அதில் உண்மை துளியும் இல்லை..

இறைவன் என்ற ஒரு உயர்நிலை இருக்க சித்தர்களை இறைவனை விட உயர்வாக போற்றும் போற்றிய மர்மம் என்ன ?

இறைவனால் சாதிக்காததை அப்படி என்ன சித்தர்கள் சாதித்தார்கள் ?..

சித்தர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் நம்பும் உலகம் ஒருவரையேனும் இன்று பார்க்க முடியவில்லையே அது ஏன் ?

இன்று என்ன உண்மையோ அப்படி தானே முன்னும் இருந்து இருக்க வேண்டும்.. அப்படியென்றால் சித்தர்களை இதுவரை எவரும் சரித்திரத்திலோ அல்லது எந்த தலைமுறையிலோ காண வில்லை என்ற பொருளாகி விடுமா ?

இது போன்ற கேள்விகள் எழுகின்ற போது பலரது புருவங்கள் உயர்த்தப் படலாம் என்பதில் சந்தேகம் இல்லை..

மன கசப்பும் அவர்களுடைய நம்பிக்கை உடையும் அபாயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. சற்று பொறுமை இழக்காமல், சித்தர் ஆவது எப்படி என்ற தொடர் பதிவினை முழுமையாக படிக்குமாறு வேண்டுக் கொள்கின்றேன்...

முழுவதுமாக படித்தால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறிந்து கொண்டு சித்தர் பாதையில் நேர் வழியில் பயணப்பட முடியும்...

சித்தர் ஆவது எப்படி என்ற தலைப்பில் வரும் பல பகுதிகளில் பல உண்மைகள் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு தொடர்பு கொண்டமையால், படித்த பதிவின் நினைவு கொண்டால் மட்டுமே தொடர்ந்து வரும் பகுதியை சரியாக புரிந்து கொள்ள முடியும்..

ஆகவே ஒவ்வொரு பதிவினையும் உற்று கவனித்து படிக்குமாறும், படித்ததை நினைவில் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்....

நம் பஞ்சபூதங்களிலேயே அதிகம் மாற்ற அடையக் கூடியதும், அதனால் நம் வாழ்வியலை பல மாற்றங்களை ஆக்கக் கூடியதும் ஆனது நீர் தன்மை உடைய சித்தம் என்ற பூதம்..

இந்த சித்தம் என்ற பூதத்தை முறை படுத்தி மண், ஆகாயத்தை போல் ஸ்திர தன்மை பெற்றால் மட்டுமே நித்திய நிலையாகிய மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியும்..

மாறும் போக்கு உடைய சித்தம் என்ற பூதம் உறுதி தன்மை அடைய வாழும் முறையை மேற் கொண்டவர்கள் தான் சித்தர்கள்..

அதாவது சித்தத்தை கையாளுகிறவர்கள் தான் சித்தர்கள்...

மாற்றம் காணும் சித்தம் உறுதி காணும் போது, முன் ஜென்மங்களில் சேர்த்து வைத்த ஆற்றல்கள் உள் வாங்கும் திறமை அதிகரிக்கப் படுவதால் அளவற்ற ஆற்றலை அடையும் பேறு கிடைக்கிறது... அதனால் மனிதன் மாமனிதன் ஆகிறான்..

இந்த சித்தர்கள் விசயத்தில் மனிதர்கள் செய்யும் பெரிய தவறு என்ன ?

சித்தர்கள் அடைந்ததாக கருதப் படும் பெரும் செயல்களால் ஈர்க்கப் பட்டு, சித்தர்கள் பால் மிகுந்த ஈர்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்..

இன்றைய திரைபடங்களில் மிக பெரிய செயல்களை செய்வது போல் நடித்துக் கொண்டு இருப்பவர்களையே தெய்வமாக கருதி அவர்களின் பெரிய பேனர் படங்களுக்கு குடம் குடமாக பால் அபிசேகம் செய்யும் காலம் இது...

இது முறையற்று செயல் படும் சித்தத்தால் உருவானது..

மாயா நிலையை அள்ளி தரும் இந்த முறையற்ற சித்தத்தை சீர் செய்பவனே சித்தன்..

மாயா நிலை என்ற மயக்க நிலைவிட்டு தெளிவு நிலை என்னும் ஞான நிலை பெற வேண்டும் என்றால் முறையற்ற சித்தத்தை சீர் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதே அன்றி அப்படி சித்தத்தை சீர் செய்து பெரும் ஆற்றலை பெற்ற சித்தர்களின் பெருமை பேசி பேசி சித்தத்தை சீர் செய்யும் செயலை விட்டு விலகி செல்லும் தந்திரத்தை இந்த உலகம் செய்து கொண்டு இருப்பதை பின் பற்றக்கூடாது..

உலகின் செயல் பாட்டை விட்டு விலகி உண்மை நிலைக்கு திரும்ப வேண்டும் ..

உலகத்தார் ஏன் அப்படி விலகி செல்ல விரும்புகிறார்கள் என்றால் அவர்களிடம் ஆற்றல் இல்லாத தன்மையால் உருவான சோம்பல் என்ற பலவீனமே..

எல்லாவற்றிக்கும் ஆற்றல் பெறுவதே முதல் ஆதாரமாக உள்ளது..

அதுவே எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பதால் ஆற்றல் பெறுவதே மூலாதாரம் அதாவது மூல ஆதாரம்..

இதனை தேகத்தில் ஒரு இடத்தை காட்டி குறிக்கோளை விட்டு அப்பால் நகர்ந்து செல்வோரும் உண்டு...

எப்படியோ உண்மையான ஆற்றலை பெறும் வழியை விட்டு தப்பி செல்வதே மனித இயல்பாக உள்ளது..

இப்படி தப்பிக்காமல் பொறுப்பை ஏற்று உண்மையை நோக்கி பயணப் படுவதுதான் சித்தர் வழி..

சித்தத்தை சீர் செய்யும் சித்தர் வழியையும் சித்தராகும் நுணுக்கங்களையும் பார்ப்போமாக...

ஆற்றல் பெருகுவதற்கு சித்தத்தின் பங்கு மற்ற பூதங்களை காட்டிலும் மிக மிக அதிகம்..

எண்ண ஆதிக்கங்களை தந்து நம் மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலின் கனலை வெளிச்சமாக விரையமாக்கி, நம்மை செயலற்ற சவநிலைக்கு அழைத்துச் செல்லும் சித்தத்தை சீர் செய்யாமல் சித்தராக முடியாது..

அதற்கான உளவுகளை பகுதி பகுதியாக பார்ப்போமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.