20/10/2021

சித்தராவது எப்படி - 26...

 


குண்டலினி சக்தி பயணம் - பாகம் இரண்டு...

இது இரண்டாம் நிலை பயிற்சி.. முதல் நிலை பயிற்சியில் மேன்மை அடைந்தவர்களிடம் ஏற்படும் அனுபவங்களின் விளைவாகவும், அந்த அனுபவங்களை முறை படுத்துவதற்காகவும் இந்த இரண்டாம் நிலை பயிற்சி தர வேண்டிய அவசியம் ஆகிறது..

முதல் நிலையான சுவாச ஒழுங்கில் மேன்மை அடையாதவர்கள் இந்த இரண்டாம் நிலை பயிற்சிக்கு வந்தால் குழப்பமே உருவாகும்...

முதல் நிலையில் மேன்மை அடைந்தவர்கள் பேரண்ட ஆற்றலை அதிகம் பெற்ற காரணத்தினால் உடம்பில் சில நகரும் ஊறல்கள் ( moving feeling ) தோன்றுகிறது.. அதுவே குண்டலினி சக்தி பயணமாகும்..

இந்த சக்தி பயணம் சூட்சும தேகத்திற்கே உரியது.. இந்த பயணத்தை முறை படுத்துவதின் மூலம் மிக பெரிய அளவில் ஆன்ம இலாபம் பெறலாம்..

சுவாச ஒழுங்கு ஆரம்பத்தில் சில இடங்களில் உறுத்தல் உணர்வுகள் ( spot feeling ) தோன்றி பின்பே அது நகரும் ஊறல் உணர்வாக மாறும்..

ஆனாலும் நாம் தூல உடம்பிலே இயங்கும் சுவாச ஒழுங்கிற்கு குறை ஏற்படுத்தினால் இந்த குண்டலினி சக்தி பயணமும் தடை படும்.. இதை மறக்காமல் செயல் பட வேண்டும்..

இந்த இரண்டாம் நிலை பயிற்சி முற்றிலும் சூட்சும தேக பயிற்சி ஆகும்...

அதிகபடியான ஆற்றலை சூட்சம தேகத்தில் முறை படுத்தும் நெறி ஆகும்.. ஆகவே சுவாச ஒழுங்கினை எந்த காரணம் கொண்டும் விட்டு விலகி செல்லக் கூடாது...

சுவாச ஒழுங்கு மேன்மை அடையும் போது பெறப்படும் அளவற்ற ஆற்றல் சூட்சம தேகத்தின் ஆதார சக்கரங்களில் தன்னிச்சையாக ஓட தொடங்கும் போது அதை முறை படுத்த வேண்டிய அவசியம் ஆகிறது..

முதல் அப்பியாசமாக அச்சக்தியை மூலாதாரத்திலிருந்து பிடரி ஆதாரத்திற்கு பயணப் பட வைத்து பிடரியை பலப் படுத்த வேண்டும்.. அது நினைவகம்..

நினைவு இல்லையென்றால் உயிரிடம் துளியும் முன்னேற்றம் ஏற்படாது..

உயிருக்கு அடுத்த படியாக முக்கியமான இடத்தில் இருப்பது நினைவகம் தான்..

இந்த நினைவகத்தில் மையம் கொண்டுள்ள பழைய அனுபவத்தின் தொடர்சியாகத்தான் புதிய அனுபவங்களுக்கு நகர்ந்து செல்லுகிறோம்..

இல்லையேல் மீண்டும் மீண்டும் பழைய அனுபவத்தை அனுபவப் படவே வாழ்ந்து கால விரையும் செய்து கொண்டு விலங்கு போல் இருப்போம்..

இந்த நினைவகம் பலப்பட பலப்பட வாழ்க்கையில் புதுமைகளை புகுத்து கொண்டே இருப்போம்.. இந்த பிடரி ஆதாரத்தை சித்தம் எனவும் சொல்லலாம்..

அனுபவங்களை தாங்கி நிற்கும் வலிமை உடைய இந்த சித்தம் என்னும் பிடரி ஆதாரம், மீண்டும் அதே அனுபவங்களை ஏற்றுக் கொள்ளாமல் அந்த அனுபவத்திலேயே நிறைவு கொண்டு இருக்கும்..

புகை பிடிப்பவர்கள் மது அருந்துபவர்கள் இந்த பிடரி ஆதாரத்தை பலப்படுத்திய உடனே அந்த பழக்கங்களின் தொடர் நிகழ்வு நின்று விடும்... கெட்ட பழக்கங்கள் காணாமல் போய் விடும்..

இப்படியாக சித்தமான பிடரி ஆதாரத்தை பலப் படுத்தியவர்கள் தான் சித்தர் ஆவதற்கான முதல் தகுதி பெறுகிறார்கள்..

இந்த சித்தர்கள் ஏன் உலகியல் விவகாரங்களில் அதிகம் நாட்டம் இல்லாமல் இருக்கிறார்கள்..

ஏற்கனவே அனுபவித்த உலகியல் அனுபவங்கள் அதன் வீரியம் குறையாமல் பலம் வாய்ந்த சித்தத்தில் தக்க வைத்து கொண்டிருப்பதால் அவர்களின் அந்த பழைய அனுபவங்களுக்கான ஏக்கம் மிகவும் தளர்ந்த குறைந்த அல்லது நீங்கிய நிலையில் பூரண நிறைவு காரணமாக மீண்டும் பழைய செயலில் ஈடுபட விரும்பாமல் போவதே..

இந்த பிடரி ஆதாரம் பலப்படும் பொழுது பழைய அனுபவங்களும் நினைவாற்றலால் பலம் ஆகி அந்த அனுபவங்களுக்காக ஏக்கமும் நீங்க ஆரம்பித்து, மீண்டும் அந்த அனுபவங்களுக்கு ஆசை படாத நிலையும் உருவாகும் அற்புதமும் நடக்கிறது..

சில ஆழமான அழுத்தமான ஆசைகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்..

சுவாச ஒழுங்கில் மூலம் பெறப் படும் அதிக ஆற்றலை மூலாதாரத்திலிருந்து பிடரிக்கு அனுப்பி பிடரி ஆதாரத்தை வலுவாக்குவதின் மூலம் ஆசைகளை வேரறுக்கும் சூத்திரமும் இரகசியமும் இது தான்..

உள் நகைத்தல் மூலம் குண்டலினி சக்தி ஓட்டத்தை அடையாளம் தெரிந்து கொண்ட நாம் அதிகப் பட்ட ஆற்றலை மூலதாரத்திற்கும் பிடரிக்கும் பயணப் பட வைத்து பிடரி ஆதாரமான சித்தத்தை வலு படுத்துவதின் மூலம் அதிக பலன் பெற முடியும் என்பதை நினைவில் கொண்டு எல்லாவற்றிக்கும் சுவாச ஒழுங்கே அடிப்படையானது என்பதை மறவாது சுவாச ஒழுங்கிலே இருக்க முனைவோமாக...

அடுத்த பதிவில் பிடரியில் இருந்து சுழுமுனை ஆதாரத்திற்கு பயணப் படும் முறையையும், சுழுமுனையின் மேன்மையும் தெரிந்து கொள்வோமாக...

தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லையாம் Reject_Zomato 😡

 


அப்டி தான்டா பண்ணுவோம் முடியலனா கடையை காலி பண்ணிட்டு போ 🤣

 


இந்தியாவது மயிராவது 🤣

 


அட்டாங்க யோகப் பயிற்சிகள்...

 


அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர்.

இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன.

இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சிகளால் பெற்றனர்.

அத்தகைய சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது..

அட்டாங்க யோகப் பயிற்சிகள்...

1. அணிமா

2. மஹிமா

3. லஹிமா

4. கரிமா

5. பிராத்தி

6. பிரகாமியம்

7. ஈசத்துவம்

8. வசித்துவம்

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின் அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா, திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா, சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி, பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே...

1. அணிமா: பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது. பிருங்கி முனிவ ர் முத்தேவர்களைமட்டும் வலம் வருவதற்கா க சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

2. மஹிமா: சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருட்ண பரமா த்மா அர்ஜூனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

3. லஹிமா: கனமான பொருளை இலேசான பொருளா க ஆக்குவது. திருநாவுக் கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்ட போது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

4. கரிமா: இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரி டம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடை சியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரிசெய்த சித்தி கரிமா.

5. பிராத்தி: எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற் புராணத்தில் எல்லாம்வல்ல சித்தரான படலம் என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்த தாக வரும் சித்தி பிராத்தி.

6. பிரகாமியம்: வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன் றுதல். அவ்வையார் இளவயதி லேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக் கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்..

7. ஈசத்துவம்: ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞான சம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பி யமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

8. வசித்துவம்: ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல். திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்...

நான் தனியாவே சரக்கு அடிச்சுக்குறேன்... நீ ஓடி போ நாயே 😏

 


யாருகிட்ட 😁😁😁

 


உரோம விருட்சம் மூலிகை...

 


உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.

இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது. இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும்.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.

சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

Zomato கலாட்டா...

 


பிராடு பாஜக மோடியின் பெட்ரோல் கொள்ளை...

 


எண்ணமின் அலைகளின் பயணம்...


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது...

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




என்
கவிதைகளெல்லாம்
எட்டா
உயரத்தில் உள்ள
உன் அழகை
எட்டி தொட நினைக்கும்
ஏணி படிகள் மட்டும் தான்...

காலை வணக்கம்...