நீங்கள் சபரிமலைக்கு ஜோதி தரிசனத்திற்கு போகிறீர்களா?
கேரளாவின் பதிவு எண் (KL) கொண்ட வாகனத்தில் போனால் பம்பா நதி வரை வாகனம் போகலாம்..
இன்னும் சில வருடம் போகட்டும் மலையாளியாக இருந்தால் பதினெட்டாம்படி வரையேகூட வாகனம் செல்லும் வசதி கிடைக்கலாம்..
அதே தமிழ்நாட்டின் பதிவு எண் (TN) கொண்ட வாகனத்தில் போனால்...
ஐயோ பாவம்...வெகு தூரத்திலேயே நீங்கள் உங்கள் வாகனத்தைவிட்டு இறங்கி நடந்து செல்ல வேண்டும்..
மலையேறி சாமி கும்பிட்டு உடல் சோர்ந்த பின்னரும் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் நடந்த பின்னர் தான் உங்கள் வாகனத்தை அடைய முடியும்..
ஏனென்றால் நீங்கள் தமிழன்.
பயணப்பாதைகளிலும்
கோயிலிலும் பெரும்பாலும் ஐயப்பா சேவாசங்கம்நடத்துவது தமிழர்கள் தான். அங்கு எல்லோருக்கும்சம உரிமை உண்டு.
ஆனால், மலையாளிகள் நடத்தும்
கடைகள், சன்னிதானக் கடைகள் இவற்றில்தமிழனுக்கு என்றால் விலை அதிகம்.
சன்னிதான அலுவலகத்தில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.
கண்கூடாக் காண முடிவது மலையாள போலீஸாரின் அராஜகம்.
எந்த ஒரு விஷயம் என்றாலும் மலையாளிகளிடம் மென்மையாகவும், தமிழர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்வார்கள்.
2012ல் சபரிமலையில் ஒரு சென்னைத் தமிழனை மலையாள டீக்கடைக்காரன் வெந்நீர் ஊற்றிக் கொன்றான்.
அதை கொலை முயற்சியாக பதியாமல் விபத்து என்று பதிவு செய்தது மலையாளக் காவல்துறை.
இதிலிருந்து அவர்களின் இனவெறிப் போக்கை தெரிந்து கொள்ளுங்கள்.
மலையாள போலீசார் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானத்தில் நுழைந்ததும் அப்படியே பதினெட்டாம் படியேறி ஐயப்பனிடம் இருமுடியைக் கட்டிவிட்டு பிறகுதான் முடியைப் பிரிக்கவேண்டும் என்பார்கள்.
(மலையாளிகளுக்கு அதெல்லாம் கிடையாது)
தமிழன் வளர்த்த சபரிமலையில் மலையாளிகள் தமிழனைப் புறக்கணிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது.
சரங்குத்தியில் குத்தப்படும் ஒவ்வொரு சரமும் தமிழினத்தின் நெஞ்சில் குத்தப்படும் ஊசியாகவே மாறிக் கொண்டிருக்கிறது சபரிமலையில்..
பந்தள ராசன், தமிழ் மூவேந்தர்களில் தெற்குப் பகுதிக்குச் சொந்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவன் தான்.
பழசிராஜா வம்சத்திலோ,வடக்கன் வம்சத்திலோ வந்தவன் அல்ல.
தமிழர்கள் ஐயப்பனை நாடி அதிகம் வருவார்கள் நிறைய கல்லா கட்டலாம் என்று இதை மறைக்காமல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மறைக்காமல் கூறிவந்தனர்.
இப்போது சபரிமலை வரலாறு பற்றிய தமிழ் வெளியீடுகளில் தான் பந்தள ராசனுக்கு, உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆனால், ஐயப்பன் பற்றி வரும் தற்போதைய மலையாள வெளியீடுகளில் பந்தள அரசன் பெயரும் அவன் ஒரு பாண்டிய மன்னன், தமிழன் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.
தமிழர்களிடம் இனியும் சபரிமலையைக் கொண்டு சேர்க்க வேண்டாம் என்ற அளவுக்கு தமிழர்கள் வரத்தொடங்கிவிட்டனர் அல்லவா..
இப்போது அயாள் ஒரி பாண்டியானு... என்று மட்டும் கூறுகிறார்கள்.
பாண்டி என்ற சொல்லையே கேவலமாகச் சொல்லும் மலையாளிகளால், ஐயப்பனே அந்தப் பாண்டி யின் மகன் என்ற உண்மையை ஏற்க முடியவில்லை.
சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் சாமியே சரணம் ஐயப்பா என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும் வைக்கப்பட்டு இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.
ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி தனது சபரிமலை நோக்கியப் பயணத்தில் (தமிழக) செங்கோட்டை சிவன் கோயிலுக்கும் வந்து போவது காலம்காலமான ஐதீகம். அங்கும் வழிபடும் பக்தர்கள் ஏராளம்.
அதைத் தடுத்தால்வேறு வழியில்லாமல் சிவன் கோவிலில் வழிபாடு செய்பவரும் கேரளாவிற்குள் வந்து வழிபடுவார்கள், இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம் என்று கேரள அரசு முடிவு செய்த போது..
ஐயப்பனின் தீவிர பக்தரான செங்கோட்டை குருசாமி நாடார் என்ற தமிழர் கேரள அரசின் கையில் காலில் விழுந்து அந்த உரிமையை மீட்டு வந்தார்.
அதற்குள் அவருக்கு நுரை தள்ளிவிட்டது.
ஐயப்பன் கோயில் பயணத்தின் பெரும்பாலான பகுதிகள், தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகள்.
1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவை கேரளாவோடு சேர்க்கப்பட்டு தமிழனும் தமிழும் புறக்கணிக்கப்படும் வரை அவை பெரும்பாலும் தமிழ் நிலப் பகுதிகளாகவே இருந்தன.
எனவே, சபரிமலை என்பது மலையாளிகளுக்குத் தொடர்பேயில்லாத, முழுக்க முழுக்க தமிழர்களின் கோயிலாகவே இருந்த காலம் உண்டு.
70ஆண்டுகளில் எல்லாம் மாறிப்போனது.
பழனியைப் பார்த்து பொறாமை கொண்ட மலையாளிகள் மாலைபோட்டு விரதமிருந்து கடினமான பயணம் செல்லும் வழிபாட்டு முறையை காப்பியடித்து
ஏற்கனவே தமிழர்கள் சிறிய அளவில் சென்றுவந்த காட்டுக் கோவிலான ஐயப்பன் கோவிலை புது புராணக்கதை ஒன்று புனைந்து தமிழர்களிடமும் மலையாளிகளிடமும் நன்றாக விளம்பரப்படுத்தி காட்டை அழித்து வியாபாரமாக்கி இன்று தமிழன் மீதான இனவெறியைத் தீர்த்துக் கொள்ளும் இடமாகப் பயன்படுத்துகின்றனர்..
கடவுள் மறுப்புக் கொள்கையை வெளியே முழங்கிக் கொண்டு, தமதுவீட்டுப் பெண்களை ரகசியமாகக் கோயிலுக்கு அனுப்பிய திராவிட வாதிகளால்..
கண்ணகிக்கோயில், சபரிமலைப் பாதையின் பெரும்பகுதி, திருப்பதி, காளஹஸ்தி போன்ற தமிழனின் பக்தி கலாசாரச் செல்வங்கள் அதைச் சுற்றிய பகுதிகள் வேறு மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன.
இன்று பல மலையாளிகள் சபரிமலைக்கு இருமுடிகூட சுமந்து வருவது இல்லை.
பதினெட்டாம் படி ஏறாமல் பக்கவாட்டு வழியாக வந்து முதல்மரியாதையோடு சாமி கும்பிட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.
சபரிமலையைப் பிரபலமாக்கியவர்கள் என்றால், எம்.என்.நம்பியார் என்று சொல்வார்கள்.
ஆனால் எம்.என்.நம்பியாருக்கு சபரிமலையைப் பற்றி ஐயப்பனைப் பற்றிச் சொல்லி மாலை போட வைத்தவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்ற பச்சைத்தமிழர்.
ஐயப்பனின் தீவிர பக்தர் அவர்.
அவரது நாடகக் குழுவில் இருந்த போதுதான், ஐயப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத் தெரியவந்தது.
1949ல் ஐயப்பன் கோயிலில் சிலர் தீவைத்து விட்டனர்.
சிலைகள் உள்பட கோயிலின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இதனால் மனம் வருந்திய கேரள பக்தர்கள் சிலர், ஐயப்ப பக்தரும் முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தையுமான பி.டி.ராசனிடம்
கோரிக்கை விடுத்தார்கள்.
(கோவில் தமிழருடையது அதனால் தமிழர்களிடம் புணரமைக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது)அவரும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் சேர்ந்து ஐயப்பன் திருவுருவச்சிலை ஒன்றைச் செய்தார்கள்.
சிலை செய்யும் பணி கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் நடந்தது.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் கண் திறக்கும் சடங்கு நடந்தது .
சுவாமிமலையில் ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் தோட்டத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, தமிழகமெங்கும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு சபரிமலையில் நிறுவப்பட்டது.
பல கோயில்களில் ஐயப்பனை வைதீகர்கள் அனுமதிக்கவில்லை.
எல்லைச்சாமியான அய்யனார்தான் ஐயப்பன். (இது உண்மையோ) எனவே அவரை அனுமதிக்க முடியாது என்றார்கள்.
பி.டி.ராசன் அந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து ஊர்வலத்தை சிறப்பாக முடித்து சபரிமலைக்கு ஐயப்பனைக் கொண்டு சென்றார்.
தற்போதைய ஐயப்பன் திருவுருவச்சிலையை செய்தவர் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதி (ஸ்தபதி=பெருந்தச்சன்)
என்ற தமிழரே..
அந்தக் காலத்தில் பெரிய பாதையில் மலை ஏற, இப்போது இருக்கிற குறுகியப்பாதைகள் கூடக் கிடையாது.
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்கிற ஐயப்ப சாமிகள் கூட்டமாக இருமுடியோடு, தீப்பந்தங்களை கொளுத்திக் கொண்டு, கூடவே ஒரு கூரிய கத்தியும் கொண்டு செல்வார்கள்.
வழியெங்கும் செடிகொடிகளை வெட்டி பாதையமைத்துக் கொண்டே செல்வார்கள்.
அவ்வளவு சிரமப்பட்டு சபரிமலையைச் செப்பனிட்டவர்கள் தமிழர்கள்.
தமிழர்களைப் பார்த்துதான் தெலுங்கர்கள், கன்னடர்கள், வடஇந்தியர்கள் வந்தனர்.
இனவேறுபாடு காட்டாமல் தமிழர்கள் தாம் கடைப்பிடிக்கிற அதே நியமங்களோடு மற்றவர்களுக்கும் இருமுடி ஏற்றினார்கள்.
மலையாளிகள் செய்தது விளம்பரப்படுதத்துதல் மட்டுமே.
இதன் விளைவாக 75ஆண்டுகள் முன்புவரை தமிழ் வம்சாவவழி மலையாளிகள் பழனிக்குத் தந்த முக்கியத்துவம் குறைந்தது.
சபரிமலை புகழ் பெற்றது.
கல்லா நிறைய ஆரம்பித்ததும் தமிழனை வெட்டிவிட நினைக்கிறார்கள் மலையாள ஆன்மீக வியாபாரிகள்.
இதே நிலைதான் கண்ணகி கோவிலிலும்.
அதுபற்றி விரிவான ஒரு பதிவு போடுகிறேன்.
ஆக, சபரி மலையை ஆண்ட மன்னன் தமிழன்.
சிலை வைத்தவன் தமிழன்.
அங்கே கோவில் கட்டி பாதையமைத்து ஆன்மீகத் தலமாக்கியவன் தமிழன்.
அந்தப் பகுதி பெரும்பான்மை மக்கள் தமிழர்கள்.
கோவிலுக்கு சேவை செய்பவர்களும் பெருமளவில் செல்பவர்களும் காசு போடுபவர்களும் தமிழர்கள்.
நிர்வாகமும் பணமும் நிலமும் மலையாளிக்குச் சொந்தமா?
இருக்குடா உங்களுக்கெல்லாம் ஒருநாள்...