09/10/2017

சரியாக 11 மாதங்களுக்கு முன்பாக கோவாவில் பேசிய பாஜக மோடி...


டீமானிட்டைசேசன் ஒரு ஆரம்பம் தான், இனி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு விபரத்தை அளிப்பது கட்டாயம், ஊழல் பேர்வழிகளுக்கு இனி இரவில் தூக்கம் கிடையாது என்றார்.

ஒரு வருடம் கூட ஆகவில்லை. தற்போது, அதெல்லாம் கிடையாது, நீங்க எவ்ளோ பணம் கொடுத்து வேணாலும் தங்கமோ வைரமோ வாங்கிக்கலாம், பான் கார்டும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது .

அதுமட்டுமின்றி Prevention of Money Laundering Act (PMLA) லிருந்து தங்கமும் வைரமும் விடுவிக்கப்பட்டுள்ளன.

ஒரே வருஷத்துலயே மோடி பவிசு இப்படி சிரிப்பா சிரிக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
டீமானிட்டைசேசன் நடவடிக்கையின் போது பொதுமக்கள் படுகிற கஷ்டங்களை தாங்க முடியாமல் நாங்கள் எழுதியபோது, மனசாட்சியே இல்லாமல் எங்களை ஊழலுக்கு ஆதரவானவர்கள் என்றும், கார்டு யூஸ் பண்ணுங்க, கான்டம் யூஸ் பண்ணுங்க என எகத்தாளம் பேசியவர்கள் இப்போது நினைவுக்கு வருகிறார்கள்.

எந்த தவறும் செய்யாத, டீமானிட்டைசேசன் என்ற ஒரே காரணத்தாலேயே செத்து போன நூற்றுக்கும் அதிகமான அப்பாவி அபலை இந்தியர்களின் ஆன்மா உங்களை மன்னிக்கவே மன்னிக்காது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.