1)15 லட்சம் வேலைவாய்ப்பு இழப்பு.
2)15 கோடி தின தொழிலாளிகள் சம்பள பிரச்சனை, வேலையில்லாமையால் 2 மாதம் அவதிப்பட்டது.
3)1.5% ஜிடிபி இழப்பு அதாவது கிட்டத்தட்ட 2.5 லட்சம் கோடி இழப்பு.
4)100 அப்பாவி பொது மக்கள் உயிரிழப்பு.
5) கருப்பு பணம் ஒழிப்பா ? : 99.3% சதவீத பணம் மீண்டும் வங்கிகளுக்கே திரும்பியது. இத்தனை காலம் பதுக்கிவைக்கப்பட்ட பணம் மீண்டும் வெள்ளையாக்கபட ஒரு வாய்ப்பாக அமைந்தது.
6) Digital India என்ற சப்பைக்கட்டு , முன் எப்போதும் இல்லாத அளவு பண சுழற்சி அதிகரித்துள்ளது. 18.5 லட்சம் கோடியாக சுழற்சியில் உள்ள பணம் அதிகரிப்பு . இது கிட்டத்தட்ட டீமானிடேஷன் முன்னை 37% அதிகம். அக்டோபர் 2016ல் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்ட பண அளவு 2.54 லட்சம் கோடி, ஆகஸ்ட் 2018 ல் அது 2.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அக்டோபர் தீபாவளி மாதம் என்பதால் அக்டோபர் 2018 அளவு இதைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7) கள்ளப்பணம் என்ற கண் துடைப்பு. டிமானிடேஷனுக்கு முந்தைய மூன்று வருட கள்ளபணம் கண்டுபிடிப்பு வெறும் 63 கோடி. மக்களிடமிருந்து மொத்தமாக கொடுக்கப்பட்ட பணத்திலும் பெரிய அளவில் கள்ளப்பணம் சுழற்சியில் இருப்பதாக தெரியவில்லை. டிமானிடேஷன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கள்ளப்பணம் 11.23 கோடி மட்டுமே ! இதை விட பெரிய கொடுமை சிப் எல்லாம் இருப்பதாக பக்தாள் அளந்த புதிய 2000 தாள்களை போன்ற கள்ளப்பணம் உருவாக துவங்கிவிட்டதாக ஆர்பிஐ சொல்லியுள்ளது.
8) டேரக்ட் டேக்ஸ் - நேரடி வருமான வரி - இது மற்றொரு பொய் " NIPFP's Rathin Roy, a member of the PM's Economic Advisory Council, has put it, "the growth and buoyancy of direct tax revenue in the 2014-17 period is lower than in any sub-period this millennium."" அதாவது ஐடி ரிட்ரன் செய்தோர் எண்ணிக்கை கூடியிருந்தாலும் அது 2014-17 வருடங்களுக்கு முந்தைய பத்து வருட நேரடி வருமான வரி சதவீத வளர்ச்சி அளவை விட தற்போதைய வளர்ச்சி விகிதம் குறைவு தான்.
9) பொது மக்களின் வங்கிகளின் மீதான நம்பிக்கை இழப்பு - தன்னுடைய சொந்த பணம் வங்கியில் இருக்கும் தன்னால் அதை எப்போது வேண்டுமானாலும் உபயோகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உடைக்கப்பட்டது. இன்று முன் எப்போதும் இல்லாத அளவு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு அளவிலாவது பணமாக அவசர தேவை என்று கையில் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியா முழுதும் இவ்வாறு ஒவ்வொரு கையில் பணம் வைக்க வங்கிக்கான பணம் முன் எப்போதும் இல்லாத அளவு குறைந்திருக்கிறது.
10) அருண் ஜெட்லி சொன்னது இது : டிமானிடேஷனால் மக்கள் பணமாக கையில் வைத்திருக்காமல் சேமிப்பாக அதிகரிப்பார்கள் ! நடந்தது என்ன ? ஆர்பிஐ வெப்சைட்டில் உள்ள "சேவிங்ஸ் பை அவுஸ்வோல்ட்" சராசரி 7.1% இது முந்தைய ஆண்டுகளை விட 50% குறைவு.
டிஜிட்டல் டிரான்சாக்ஷன் எனப்படும் இணைய பணபரிமாற்ற வர்த்தகம் அதிகரித்திருந்தாலும் இது பெரும்பாலும் நடுத்தர, உயர் வகுப்பு மக்களிடமிருந்தே வந்துள்ளது அவர்கள் புது பரிமாற்ற முறைகளை தொடர்ந்து வரவேற்பவர்களே. 80% மக்கள் தொகையின் ஒவ்வொரு பரிமாற்றமும் இன்றும் பணமாக தான் இருக்கிறது. அதை மாற்ற டிமானிடேஷன் வழியல்ல எளிதான, என்றும் பயன் தரக்கூடிய, கட்டணமற்ற பண பரிமாற்ற வழியே ஆகும். அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளதா ??? இல்லை ! நாட்டின் மிக பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ மட்டும் 42 லட்சம் வங்கி கணக்குகளை போதுமான பேலன்ஸ் இல்லை என்ற ஒற்றை காரணத்திற்காக ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை மூடியுள்ளது. பேலன்ஸ் வைத்து வங்கியின் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது எத்தனை பேரால் முடியும் ? அன்றாட வரவும் செலவும் சரியாக இருப்பது எத்தனை இடத்தில் தெரியுமா ? அது மட்டுமல்ல எவ்வளவு பணம் எடுக்கலாம், எத்தனை முறை இலவசமாக எடுக்கலாம் என்றெல்லாம் கணக்குகள் இருக்கையில் எல்லோருக்கும்/ எல்லா தருணத்திற்கும் வங்கி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.
" Economics is the science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses "
பொருளாதார மேலாண்மை பற்றி புரிதலுக்கு இதை விட சிறந்த பதில் இருக்க முடியாது.
டிமானிடேஷன் என்ற பெயரில் நடந்த மாபெரும் தவறு டிஜிட்டல் இந்தியாவிற்கான விடையல்ல, நேரடி வருமான அதிகரிப்பிற்கான வழியல்ல, கள்ளப்பணம் கண்டெடுக்க கொண்டு வரப்பட்ட திட்டமல்ல,
இதைப்பற்றிய சிறு புரிதல் இருந்தால் கூட சங்கிகள் 3000 கோடி , 4000 கோடி, 2000 கோடி விரயத்தில் அமைக்கப்படும் ராமர் (பிஜேபி உத்திர பிரதேசம்ங) , சிவாஜி (பிஜேபி மகாராஷ்டரா ) , பட்டேல் (பிஜேபி குஜராத்) சிலைகளுக்கு காரணங்கள் பேச மாட்டார்கள்.
இவர்களுக்கு பொருளாதாரமும் புரிவதில்லை, சமூக முன்னேற்றத்திலும் அக்கறையில்லை.
ஒரு மாபெரும் தோல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களை அவதிக்குள்ளாக்கி அதை ஒப்புக்கொள்ளும் தைரியம் கூட இல்லாத அரசு இது. இந்த திட்டத்தின் மாஸ்டர் மைன்ட் குருமூர்த்தி இன்று அரசால் ஆர்பிஐயில் டேரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அரசின் அடுத்த அழிவு திட்டமாக ஆர்பிஐயை தன் சொல்லுக்கு கட்டுப்படுத்த முற்படுவதும், 3.6 லட்சம் கோடி ரூபாயை ஆர்பிஐ இருப்பியில் இருந்து அரசிற்கு மாற்றவும் அழுத்தம் தரப்படுகிறது. ஒரே நல்ல விடயம் சென்ற முறை போல் இல்லாமல் மொத்த ஆர்பிஐயும் அரசின் முட்டாள்தனத்திற்கு அடி பணியாமல் எதிர்த்து நிற்பதே.
இன்று வந்த செய்தி : வேலையில்லா திண்டாட்டம் இரண்டு வருட அதிக அளவாக 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. வேலைதேடும் மக்கள் தொகை 3 கோடியாக அதிகரித்துள்ளது. வேலையில் உள்ள மக்கள் தொகை 40.7 கோடியில் இருந்து 39.7 கோடியாக குறைந்துள்ளது அதாவது வேலைவாய்ப்பு பெருகுவதற்கு பதிலாக 1 கோடி மக்கள் வேலை இழந்துள்ளார்கள்...