08/11/2018

பாஜக மோடி மஸ்தான்கள்...


அரசிற்கும் ஆர்பிஐக்குமான பிரச்சனை மேலும் வலுத்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஆர்பிஐயின் கையிருப்பு கிட்டத்தட்ட 9.6 லட்சம் கோடி.  எதிர்பார்க்காத தேவை நிதி, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி கையிருப்பின் தற்போதைய மதிப்பு போன்ற அடிப்படையில் ஆர்பிஐயின் தற்போதைய கையிருப்பு இது.

ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்திடம் தங்கள் வருவாயில் இருந்து டிவிடன்ட் தருவது உண்டு. சென்ற வருடம் 50000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கத்திற்கு ஆர்பிஐ தந்தது.

தற்போதைய பிரச்சனை என்ன தெரியுமா ? கையிருப்பில் உள்ள 9.6 லட்சம் கோடி ரூபாயில் மூன்றில் ஒரு பங்கான 3.6 லட்சம் கோடி ரூபாயை ஆர்பிஐ தன்னிடம் தர வேண்டும் என்று மோடி அரசாங்கம் வற்புறுத்துவதே.

ஆர்பிஐ இது முடியாது என்று சொல்கிறது. காரணம் ஆர்பிஐயின் மூலம் கிடைக்கும் டிவிடன்ட் மற்றும் இதர அரசாங்க வருவாயின் மூலமே நீங்கள் உங்கள் செலவுகளை சமாளிக்க வேண்டும். அப்படி அல்லாது இது போன்ற ரீவேல்யூஷன் நிதியை நீங்கள் வாங்குவது நிதி பராமரிப்பில் ஒழுங்கீனத்தை ஏற்படுத்தும் மேலும் அரசாங்க நிதி மேலாண்மை மீதான கேள்வியை எழுப்பும் என்று சொல்கிறது. அது போன்றே அர்ஜென்டினாவில் மத்திய வங்கி அரசாங்கத்திடம் தர மிக பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது அது போல் இந்தியாவில் நடக்க கூடாது என்று சொல்கிறது.

ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை என பல நிலைகளில் கிடைத்த வருவாய் மூலமாக மத்திய அரசை நடத்த தெரியாமல், பண ஏய்ப்பு செய்துவிட்டு நாடு விட்ட பலர் ஓட அமைதி காத்துவிட்டு நமது ஆர்பிஐ நிதி இருப்பிலும் கைவைக்க பார்க்கிறது மோடி அரசு.

அதன் தொடர்ச்சியே தற்போதைய மொத்த ஆர்பிஐ குழுவையும் பதவி விலக அழுத்தம் தருவது....

https://indianexpress.com/article/india/govt-wants-rs-3-6-lakh-crore-from-rbi-a-third-of-its-reserves-central-bank-says-no-5435504/

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.