06/07/2020

இந்த இயற்கை புரிதல் கூட இல்லாத ஒரு அறிவை தான் நம் நவீன கல்வி முறை கொடுத்துள்ளது...


லாபத்திற்காக அரங்கேறி வரும் இந்தப் போலி அறிவியலை ஏற்றுக்கொண்டு இருப்பது வேடிக்கை தான்....

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு - வணிக நகரமா கீழடி ?


கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வில் 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ள எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் கீழடி வணிக நகரமாக செயல்பட்டதா என தொல்லியலாளர்கள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பண்பாட்டு மேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்டுள்ளன.

இந்த அகழாய்வுக் குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டது. அந்த அகழாய்வுக் குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு  எடைக்கற்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை உருளை  வடிவில் அமைந்துள்ளது. அதனின் கீழ்ப்பகுதி தட்டையாக உள்ளன. இவை ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன. கீழடி அகழாய்வுப் பகுதியானது தொழிற்சாலை என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு மற்றும் இக்குழிகளில் கிடைக்கப்பெற்றுள்ள இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருளிலிருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை தொழில் கூடமாக செயல்பட்டுள்ளதற்கு ஆதாரமாக திகழ்கிறது.

தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியில் சிறந்த வணிகம் நடைபெற்றுள்ளன என்பதை உறுதி செய்ய முடிகிறது என தொல்லியலாளர்கள் கூறினர்...

கோவையில் போலீசாருக்கு மீண்டும் பாடி ஓன் கேமரா...



கோவை: வீண் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து போலீசாருக்கான 'பாடி ஓன் கேமரா திட்டம்' மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

வாகன தணிக்கையின் போது, போக்குவரத்துக் போலீசார் வரம்பு மீறுவதாகவும், பிரச்னையில் ஈடுபடுவதாகவும், அதேபோல வாகன ஓட்டிகள் போலீசாருடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், பணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் மற்றும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் வகையில், 'பாடி ஓன் கேமிரா' திட்டம் அமல்படுத்தப்பட்டது.

போலீசாரின் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் இருதரப்பையும் கண்காணிக்க முடியும். போலீசார், வாகன ஓட்டிகள் இடையிலான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்க முடியும். பல்வேறு காரணங்களால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் போலீசார் கண்காணிப்பு கேமரா பொருத்தி பணியில் ஈடுபட வேண்டும் என்ற மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது இந்நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில், ''இதன் மூலமாக போலீசார், வாகன ஓட்டிகள் இடையே பிரச்னை எழும் போது யார் மீது தவறு உள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும். மேலும், இருதரப்பினரும் தாங்கள் கண்காணிக்கப்படுவதை உணர்வதால், எச்சரிக்கையுடன் நடந்து கொள்வர். கோவை போக்குவரத்து போலீசாருக்கு, 69 பாடி ஓன் கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார் அவற்றை அணிந்து பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்...

சீனாவில் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த உய்கூர் இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை - ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை...


கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியந்து பாராட்டுகின்றன - பாஜக மோடி...



கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது இந்தியா - செய்தி...

என்னடா ரங்கராஜ் பாண்டே சங்கி... அடி பலமாடா 😀😀😀


கொரோனாவுக்கு பின்பு கட்டமைக்கப்படும் "புதிய உலகம்" எப்படி இருக்கும்...?


அதிநவீன டிஜிட்டல் உலகமாய் மாறியிருக்கும்..

ஒரே உலகம், ஒரே அரசு, ஒரே குடிமகன், ஒரே சட்டம், என்ற நிலையில் இருப்போம்.

ஒட்டு மொத்த அதிகாரமும் ஒருவனின் கையில் இருக்கும்.

RFID Chip ஒவ்வொரு மனிதனின் கைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.

இதுவே தனிமனித அடையாளம், பணப்பரிவர்த்தனை, மருத்துவம், கல்வி  வியாபாரம் பயணங்கள், விமானம் போக்குவரத்து, போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும்.

இயற்கை சுற்றுப்புற சூழல்கள் அழிக்கப்பட்டு, நம்மை சுற்றி நவீன எலெட்ரிக்கல் சாதனங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.

மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மிருகங்களை போல், மனிதர்கள் அடைக்கப்பட்டிருப்பார்கள்.

பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்காக அடிமையாய் நாம் இருப்போம்.

மனிதர்களை கட்டுப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் பொறுப்பில், அதிநவீன ட்ரோன்கள், Artificial intelligence Robots, பணியில் அமர்த்தப்பட்டிருக்கும்.

நாம் அடிமைகள் என்பதை உணராமல் இருக்க, அதிவேக இணைய சேவைகள், அதன் உபகரணங்கள், கேளிகை விடுதிகள், போதை பொருட்கள், விபச்சாரங்கள், ஆடம்பரங்கள் என அணைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பார்கள்.

விவசாயம், விவசாய நிலம் அனைத்தும்  முழுவதும் அழிக்கப்பட்டிருக்கும்.

நமது தற்சார்பு வாழ்கை முறை முழுவதும் அழிக்கப்பட்டிருக்கும்,

வீட்டில் ஆடு, மாடு, கோழி, பன்றிகள்  போற்றவற்றை வளர்க்க தடை செய்யப்பற்றிருக்கும்,

Stem cells மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை முறை இறைச்சி விற்பனை அமலில் இருக்கும்.

உணவு, உணவு பொருட்கள், தண்ணீர், என அனைத்திற்கும், ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் 100 சதவீதம் கையேந்தும் நிலையில் இருப்போம்.

தண்ணீர் பயன்பாட்டிற்கு, குறிப்பிட்ட அளவில் தான் போர் போட வேண்டும் என்ற சட்டம் அமலில் இருக்கும்.

தண்ணீரும், மின்சாரமும் குறிப்பிட்ட அளவே விநியோகம் செய்யப்படும்.

சுவாசிக்கும் காற்றிற்கு ஒரு கார்ப்ரேட் நிறுவனம் உரிமம் வாங்கியிருக்கும்.

குழந்தைகள் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும்.

தடுப்பூசி வழங்கவோ, பிற மருத்துவ பரிசோதனைகள் செய்யாவோ, பெற்றோர்களிடமோ, யாரிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை, என்ற சட்டம் இருக்கும்.

இயற்கை முறை வைத்தியம், பாரம்பரிய முறை வைத்தியம் என அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும்.

கடல் பகுதிகள் அனைத்தும் தனியார் வசம் இருக்கும்.

சிறு, குறு வணிகம் முழுவதும் ஒழிக்கப்பட்டிருக்கும்.

தங்கம் மற்றும் சொத்துக்கள் குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும்.

நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும், கனிமங்கள், இயற்க்கை வளங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்ற சட்டம் இருக்கும்.

மலைப்பகுதிகளில் மக்கள் வாழ தடை செய்யப்பட்டிருக்கும். மேலும் மக்கள், காடுப்பகுதிகள், மலைப்பகுதிகளுக்கு செல்லவும் தடை செய்யப்பட்டிருக்கும்.

2030ஆம் ஆண்டில் இவையெல்லாம் சாதாரண செய்தியாகவே இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள பலவற்றிக்கு, தற்போதே அடித்தளம் போட்டு விட்டார்கள். நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு புது உலகை உருவாக்க திட்டமிட்டுள்ளனர், சுற்றி பாருங்கள் தெரியும்..

விழித்துக்கொள்வோம்...

மக்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர் அரசியல்வாதிகளும், தனியார் முதலாளிகள் அமைப்புகளும்...



மக்கள் இதை தான் உண்ண வேண்டும், இதை தான் உடுத்த வேண்டும்.

இப்படி தான் வாழ வேண்டும், இங்கே தான் செல்ல வேண்டும்,

இவரிடம் மட்டுமே தான் பேச வேண்டும். இதனை பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.

இவ்வளவு நேரம் தான் வேலை செய்ய வேண்டும், இவ்வளவு தூரம் மட்டுமே போக முடியும்.

இந்த குறிபிட்ட கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும்..

உடுத்தும் உடையில் இருந்து உண்ணும் உணவு வரை அவர்களின் கட்டுக்குள் வந்தாயிற்று இந்த ஊரடங்கு காலத்தில்.

ஊரடங்கு நோய்கான கட்டுபாடுகள் அல்ல முதலாலிகளின் கட்டுபாட்டுக்குள் வரவே.

யோசித்து பாருங்கள் நீங்கள் நீங்களாக உள்ளீர்களா?

பாஜக மோடியின் சாதனைகள் புத்தகமாக வெளியீடு...


பாஜக மோடியின் நாடக அரசியல் இராணுவத்தையும்விட்டு வைக்கவில்லை...





கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்.. பத்தாள்ஸ் சொல்வதே மெய் 😂😂😂

பாஜக மோடியின் சாதனை...