06/07/2020

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு - வணிக நகரமா கீழடி ?


கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வில் 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ள எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் கீழடி வணிக நகரமாக செயல்பட்டதா என தொல்லியலாளர்கள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பண்பாட்டு மேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்டுள்ளன.

இந்த அகழாய்வுக் குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டது. அந்த அகழாய்வுக் குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு  எடைக்கற்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை உருளை  வடிவில் அமைந்துள்ளது. அதனின் கீழ்ப்பகுதி தட்டையாக உள்ளன. இவை ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன. கீழடி அகழாய்வுப் பகுதியானது தொழிற்சாலை என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு மற்றும் இக்குழிகளில் கிடைக்கப்பெற்றுள்ள இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருளிலிருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை தொழில் கூடமாக செயல்பட்டுள்ளதற்கு ஆதாரமாக திகழ்கிறது.

தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் மூலம் இப்பகுதியில் சிறந்த வணிகம் நடைபெற்றுள்ளன என்பதை உறுதி செய்ய முடிகிறது என தொல்லியலாளர்கள் கூறினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.