20/06/2017

கோடி கணக்கான ரூபாய்க்கு விற்க்கபடும் இந்திய தேச பக்தி...


தேசபக்தியை காட்டும் ஒரே வழியாக கிரிக்கெட் இருக்குமானால், தோற்று ஒழியட்டும் இந்திய அணி. குறிப்பாக பாகிஸ்தானிடம் 5 வருடங்களாவது தோற்றுக்கொண்டே இருக்கட்டும்.

ஒரு விளையாட்டு போட்டிக்கு எதற்கு ராணுவ வீரர்களின் பேட்டி?

பாக். விக்கெட் விழுந்தால் வர்ணனையாளர் ஏன் பாரத் மாதாக்கீ ஜே என அலற வேண்டும் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில்) ?

இந்தியா & பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எந்த விதமான தொடர்பும் இல்லாத தனியார் வியாபார விளையாட்டு கம்பெனிகள் இந்த கிரிகெட் கம்பெனிகள்.

இரண்டு நாட்டிலும் தனி முதலாளிகளுக்கு சொந்தமானது கிரிகெட் கம்பெனிகள் அதற்க்கு ஏன் இந்தியர்கள் தேச பக்தியில பொங்கனும்கிறான் இவன் ?

கிரிகெட் கம்பெனி காரர்கள் வியைாடினால் என்னா, விளையாடவிட்டால் என்னா ?

இந்தி அரசாங்கத்திற்க்கும் இந்திய மக்களுக்கும் அதனால் என்ன பிரயோஜனம் ?

தனியார் முதலாளிகளின் கிரிகெட் கம்பெனிகள் விளையாடுவதால் அதில் விளையாடுபவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குறாங்க, அந்த கிரிகெட் கம்பெனி முதலாளிகள் அதன் நிர்வாகிகள் பல கோடிகளில் சம்பாதிக்கிறாங்க .

இந்திய கிரிகெட் டீம் , பாகிஸ்தான் கிரிகெட் டீம் என்று அழைப்பதே தவறானது.

அது ஒன்றும் இந்தியன் ஆர்மி , இந்தியன் நேவி போன்ற அரசாங்க துறை சார்ந்தது அல்ல..

இதுக்கு ஏன் இவ்வளவு தேச பக்தி பில்டப் கொடுக்குறாங்க .

தொடர்ந்து மக்களை மாக்களாக மேனேஜ் பண்ணுவதற்க்கு கிரிகெட் விளையாட்டும் பயன்படுகின்றது, இது தான் உண்மை.

The BCCI is an autonomous body registered under the Societies Registration Act. Recognition has not been granted by the government. However, given that the ICC recognises the BCCI as the apex national federation responsible for promotion of cricket in India, a team selected by BCCI is considered as the Indian team. The ministry only grants the BCCI permission to participate in international events and for holding international matches in India at no cost to the government. This is subject to clearances from the ministry of external affairs from a political angle and the ministry of home affairs from the security one.

இந்திய அணியின் தோல்வி நல்லது.

மக்கள் உண்மையான தேச பக்தியை கற்கும்வரை அல்லது குறைந்தபட்சம் விளையாட்டை விளையாட்டாக பார்க்கும் வரை..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.