21/11/2018

கஜா புயலால் தமிழகம் இழந்தவை...


46 பேர் சாவு.

படுகாயம் எண்ணிக்கை தெரியவில்லை.

இரண்டு லட்சம் பெரிய மரங்கள், இரு லட்சம் சிறிய மரங்கள் அழிந்தன.

ஆடுகள், மாடுகள் சாவு இனிதான் கணக்கெடுப்பு.

கோடியக்கரை சரணாலயம் காலி.

குடிநீர், மின்வசதி துண்டிப்பு.

விவசாயம், வீடு என வாழ்வாதாரம் இழப்பு.

டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் முழுதும் பாதிப்பு.

ஆனால் புயல் வெளியேறுவதற்கு முன்பே ஸ்டாலின் அரசு சிறப்பாக பணி ஆற்றுகிறது என பாராட்டுகிறார்.

அமைச்சர்கள் கஜாவை கூஜா ஆக்கி விட்டோம் என்கிறார்கள்.

இன்றிரவுக்குள் மின் வசதி 100 சதம் வந்து விடும் என்கிறார்கள்.

வானிலை மையமோ 90 கி.மீ, 100 கி.மீ புயல்தான் என்கிறது.

இந்திய அரசிடமிருந்து பேரிடர் அறிவிப்பு, நிவாரணத்தை வாங்க இயலாமையை மறைத்து, பேரழிவை மூடி மறைக்கிறார்களா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.