21/06/2020

சித்த மருத்துவமும் கொரோனாவும்...


ஏற்கனவே பரிசோதனை முறையில் 160 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து அய்ந்தே நாட்களில் அத்தனை பேரையும் குணமாக்கி வீட்டுக்கு அனுப்பி வெற்றி கண்டுள்ளது சித்த மருத்துவ சிகிச்சை...

தனியாருக்குச் சொந்தமான SRM மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் 85- நோயாளிகள், சாலி கிராமத்தில் சென்னை மாநகராட்சியின் கொரோனா மையத்தில் 75- நோயாளிகள் மட்டுமல்லாமல் சென்னை மத்தியச் சிறையிலே 23 நோயாளிகளை குணப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

இந்த சித்த மருந்து சிகிச்சைக்கான செலவும் மிக மிக சொற்பம்தான் என்கிறார் இதன் இயக்குநர் டாக்டர்.ஆர்.மீனாகுமாரி.

"நோயாளிகளை எங்களிடம் ஒப்படையுங்கள் மூன்றே நாட்களில் முழுவதுமாக குணப்படுத்துகிறோம்"- என்று அனுமதி கேட்டு நிற்கின்றது தேசிய சித்த மருத்துவக் கழகம்.

சென்னையிலேயே மூன்று மாத காலமாக பல நூறு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்... ஆயிரங்களில் நோயாளிகள் பெருகியுள்ளனர்...

ஒரு மூன்று வாரங்கள் நம் சித்த மருத்துவர்களிடம் கொரோனா வார்டுகளை ஒப்படைக்கலாமே...

இந்த பேரழிவு காலத்திலாவது கார்ப்பொரேட்டுகள், மருந்து மாஃபியாக்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி, மக்கள் நலனை முன்னிறுத்த வேண்டும் தமிழக அரசு...

செய்வீர்களா....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.