09/04/2017
தமிழர் என்பவர் ஒரு தேசிய இனம்.. தமிழர்களின் தாய் மொழி தமிழ்...
தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய இனக்குழுவைச் சேர்ந்தவராவர் மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும்.
உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும் இலங்கையுமே ஆகும்..
1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா சிங்கப்பூர் பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள்.
இவ்வாறே மொரிசியசு தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள்.
20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர்.
1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.
1983-இல் இலங்கை இனக் கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா பிரான்சு யேர்மனி சுவிற்சர்லாந்து டென்மார்க் நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள்.
உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது...
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணத்தில்...
செங்கோட்டையன் 37 பாகங்கள் 32, 830 வாக்காளர்களுக்கு , ரூ. 13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம்..
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் 38 பாகங்கள், 33, 193 ஓட்டுகள் ரூ. 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் என்றும் கூறப்பட்டுள்ளது...
ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம், 27,837 ஓட்டுகள், ரூ. 11 கோடியே 13 லட்சத்து, 48 ஆயிரம்...
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 36 பாகங்கள், 32,092 வாக்காளர்களுக்கு ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம்...
மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்கு 37 பாகங்கள், 31, 683 வாக்காளர்களுக்கு, ரூ.12 கோடியே, 67 லட்சத்து, 32 ஆயிரம்..
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலு மணிக்கு 42 பாகங்கள், 27,291 வாக்காளர்களுக்கு ரூ.14 கோடியே, 91 லட்சத்து, 64 ஆயிரம்..
நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு 33 பாகங்கள் 29219 வாக்காளர்களுக்கு ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம்...
என அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது...
மொத்தம் 89,65,80,000 ரூபாய்..
இவை ஓட்டுக்காக ₹4000 வீதம் வாக்களர்களுக்கு வழங்க ஏறக்குறைய
₹90 கோடி ரூபாய்.. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது..
இதுவரை ₹50 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
இனியும் என்ன தயக்கம்.. வெளிபடையாகவே பணம் தருவது தெரிகிறது.. அதை அமைச்சர்களே முன்னின்று பிரித்து வழங்கியதற்கான ஆதாரம் சோதனையின் போது சிக்கியிருக்கிறது..
அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்து விசாரிப்பது தானே முறை.. ஆளுநர் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டு முழு அளவிளான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்...
எப்படியும் வெற்றி பெற வேண்டும் அதைவிட பன்னீர் அணியைவிட கூடுதலாக வாக்குகளை பெற வேண்டுமென்பதற்காக ₹90 கோடியை சதாரணமாக செலவு செய்கிறார்கள்..
தினகரனுக்கு எங்கிருந்து வந்தது இந்த பணம்.. வரிஏய்ப்பு செய்து ₹28 கோடியை இன்னமும் அபதாரமாக செலுத்தாமல் இழுத்தடிக்கும் தினகரன் ₹90 கோடியை சர்வசாதாரணமாக செலவிட்டு ஜெயிக்க பார்க்கிறார்..
முதலில் பெரும் பொருட்செலவை செய்த இவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. பிறகு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்..
நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும் ஆணையம்.. அப்போது தான் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை மிளிரும்.. இல்லையெனில் நேரடியாகவே IPL போல ஏலம் விட்டு விடலாம்...
சித்தர் ஆவது எப்படி - 3...
சித்தத்தை சீர் செய்யும் முதல் படி-கனல் தன்மை அறிதல்...
சித்தத்தை சீர் செய்தல் மூலம் சித்தர் ஆவது எளிமையாகிறது.. மற்ற பூதங்கள் திறன் பட செயல் பட மாறுபட்ட முரண் பாடுகளை உடைய சித்தத்தை சீர் செய்ய அவசியமாகிறது.. சித்தத்தை சீர் செய்வதின் மூலம் ஆன்மீகம் முன்னேற்றம் மிக எளிதாகிறது..
சித்தத்தை சீர் செய்வது என்பது ஆன்மீக பணியில் 100 ல் 95 பங்கு செய்து முடித்தது போல... அதனால் தான் சித்தத்தை சீர் செய்து ஆன்மீகத்தில் உச்சத்திற்கு சென்றவர்களை சித்தர்கள் என்கிறோம்...
இப்பொழுது சித்தத்தை சீர் செய்யும் வழியினை ஆராய்வோம்..
இயல்பாக சித்தம், எண்ணக் குவியலால் ஆனது என்று முன்பே அறிந்தோம்.... பல ஜென்மங்களின் அனுபவங்கள் சூட்சும பதிவுகளாக சித்தத்தில் புதைந்துள்ளன... அதற்கு முன்னால் அனுபவம் என்னவென்று பார்ப்பது அவசியமாகிறது..
ஓர் அனுபவம் என்பது பஞ்சபூதங்களால் கூட்டாக அனுபவப் படுவது.. இதில் நிலம் நீர் பூதங்கள் உருவமாக திடமாக இருப்பதால், அவைகள் வெளிச்சத்தின் உதவியால் இயங்குவதால் அனுபவபடும் பொருளின் உருவ தோற்றத்தை நுகருகிறது..
காற்றும் ஆகாயமும் அருவமாக உருவமற்ற நிலையில் இருப்பதால் அவற்றை உணர்வாக நுகருகிறது...
மனம் என்ற பூதம், சித்தத்திலிருந்து தன்னை வந்து அடைந்த எண்ணத்தை நுகரும் போது அதை வெளிச்சமாகவும் உணர்வாகவும் பிரித்து வெளிச்சத்தை நீர் மண் பூதத்திற்கும், உணர்வை காற்று ஆகாய பூதத்திற்கும் அனுப்புகிறது...
ஆகையால் தான் மனம் என்ற பூதத்தை நெருப்பின் அம்சமாக கூறுகின்றனர்..
அதாவது நெருப்பிற்கு வெளிச்சத்தை தரும் சுடரும், சூடு என்ற உணர்வை தரும் கனலும், இருப்பதால், மனத்திற்கு நெருப்பை உதாரணமாக வைத்தார்கள்...
முக்கியமாக அறிய வேண்டியது என்ன வென்றால் பிரபஞ்ச பேராற்றல் வருகின்ற பொழுது, அந்த ஆற்றலை உணர்வாக எடுத்துக் கொண்டால், அது தேக ஆற்றலாக மாறிக்கொள்கிறது..
அதே வெளிச்சமாக மாறும் பொழுது பொறி புலங்கள் வழியாக உலக தொடர்பு கொண்டு விரையமாகிறது..
ஆனால் எண்ணம் பெரும்பாலும் வெளிச்சமாகவும், குறைந்த அளவாய் உணர்வாகவும் இருக்கும்.. அதனால் தான் எண்ணங்களில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்..
ஆனால் காமம் கோபம் இரண்டில் உள்ள எண்ணங்களில் உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.. ஆனாலும் அது வெளிச்சத்தை விட குறைவாகவே இருக்கும்...
சித்தத்தில் வெளிவரும் எண்ணங்கள் மனதை சாரும் போது, வெளிச்சமாகவும் கனலாகவும் பிரிக்கின்ற ஒரு செயலை பார்த்தோம்.. அதே நேரத்தில் கனலானது வெளிச்சமாகி மாறி வெளி சார்புகளை நோக்கி சென்று விரமாகக் கூடிய செயலும் நடக்கிறது...
இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் நம்முடைய தேக அமைப்பில் உள்ள பொறி புலன்கள் வெளியே உள்ள சார்புகளில் பொருள்களில் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வெளிச்சமாகி மாறி விடுகிறது..
இதன் காரணமாக தான் பகல் நேரங்களில் பொறி புலன்கள் அதிகமாக வேலை செய்து தேக கனல் பெரும்பாலும் வெளிச்சமாக மாறி நம் ஆற்றல் குறைய தொடங்குகிறது... ஆற்றல் குறைவால் உறக்கம் வர தொடங்குகிறது..
உறக்கத்தில் பொறி புலன்கள் செயல்பாடு மிக மிக குறைவாக உள்ளதால், கனல் பெருகி தேகம் புத்துணர்ச்சி பெறுகிறது...
இந்த கனலை பற்றி சற்று அறிந்து கொள்வோம்..
எப்படி சூரிய ஒளி அலைவரிசை பூமியில் பட்டு பூமி சூட்டை, வெப்பத்தை பெறுகிறதோ அதே போல் பேரண்ட பேராற்றலின் அலைவரிசை தான், உயிர் ஆற்றல் பெறுவதற்கு மூல ஆதாரமாக உள்ளது.. இதை சில யோகிகள் காந்த அலை சக்தி என்று சொல்லிகிறார்கள்.... அதைதான் தேக கனலாக இங்கே நாம் புரிந்து கொள்கிறோம்..
தேகத்தில் இந்த கனல் ஒரு குறிபிட்ட அளவிற்கு கீழே குறைந்தால் தேகம் வலு இழந்து மரணம் அடைகிறது..
சித்தர்களிடம் இந்த கனலை தேகம் பூரணமாக பெற்றக் கொண்ட பின் அந்த கனலை சூட்சம, நுண்ணிய தேகமாக மாறுகிறது.. அந்த சூட்சம தேகம் அளவற்ற கனலை பெறக்கூடிய ஆற்றல் உள்ளது..
ஆனால் சூட்சும தேகத்தை பழகி கொண்ட மனிதன் அளவற்ற ஆற்றல் அடைவதற்கு எல்லையே இல்லை.. ஒரு குறிபிட்ட ஆற்றலை பெறும் தகுதி உடைய தூல தேகத்தில் வாழும் மனிதன் தன் சூட்சும தேகத்தின் மூலம் அளவற்ற பிரபஞ்ச ஆற்றலான கனலை பெறும் தகுதி உடையவன் ஆகிறான்..
இந்த தூல தேகம் தன் சூட்சும தேகத்தின் உதவியால் பல பிரமிக்க வைக்கும் செயல்களை செய்யும் திறனை பெறுகிறது...
இந்த ஒரு இரகசியத்திலே சித்தர் ஆகும் பாதையில் இந்த பிரபஞ்ச கனல் மிக முக்கியமாக உள்ளதால், நம் தேக கனலை தக்க வைக்கவும் தேக கனலை பெருக்கவும் உகந்த உளவுகளை இனி வரும் பகுதிகளில் பார்ப்போமாக....
Subscribe to:
Posts (Atom)












