09/04/2017

சிலிண்டரை போன்று இனி ரேஷன் பொருட்களின் மானியமும் வங்கியில் போடப்படும், முழு தொகையை கொடுத்து ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வேண்டும் - ஆதார் கார்டு இணைக்கும் பணி முடிவடைந்தவுடன் விரைவில் வரவுள்ள திட்டம்...


முதல்வர் எடப்பாடி கூட கை எழுத்து போட்ருக்காருயா...


தேசம் என்றால் என்ன ?


சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில்
ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப் பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்..

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான நாம் நம்மவர் என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி. ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது.

இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது.

இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு...

வக்கீல்கள் சட்டத்தில் மத்திய அரசு கடுமையான திருத்தங்கள் கொண்டு வருவதை கண்டித்து உயர் நீதிமன்ற வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம்...


தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா?


இல்லை. தேசம் (Nation ) வேறு; நாடு (Country ) வேறு.

ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம்.

ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு.

ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும்.

ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.

ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம்.

வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம்.

எ-டு: கொரியா.

தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்.

நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்..

ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்.

மேலும் அது கூறுகிறது.. பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.

நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும்.
சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல.. அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( Swiss confederation ) என்பதாகும்.

இந்தியா ஒரு நாடு.. ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல.

இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.

(Article 1(1) India, that is Bharat shall be a Union of States)...

தேசிய இனம் என்பது என்ன ? தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன ?


ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, கால வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.

இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race ) அடுத்த கட்டம் தேசிய இனம் (Nationality).

ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம்.

ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது.

தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பிராமணர்களின் மனக்கோணல், இந்தப் பொது வரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.
       
தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது.

இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது.

திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல. அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல.

ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் திராவிட என்று அழைத்தனர்.

தமிழ் என்பதை ஒலிக்கத் தெரியாமல் த்ரமிள் என்று உச்சரித்து அதுவே பின்னர் த்ரமிள, த்ராவிட என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள் (பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.

இந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது.

சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.
         
அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த மொழிக் குடும்பத்தில்  தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி ( Proto Language ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார்.

அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான த்ராவிட என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு திராவிடம் என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை.

ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.

பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும்.

அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
தனித்தன்மை எதுவுமில்லை.

அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.

ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் திராவிட என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

இந்தியர் என்பது மரபினமும் அல்ல. தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர் (Geo political name).

ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை ஐரோப்பியர் என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை இந்தியர் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல.. இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள் (Hindoos) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர்.

இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே. எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்.

இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தியர்  என்று ஒரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறவில்லை.

ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை  (Citizenship) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன.

இந்தியாவின் குடிமகன் (Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.

 இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும்  இந்தியன் என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்ட விரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.

சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள்.

இந்தியர் என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள்.

இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர்.. கவரிங் தங்க நகை போல..

அரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு இந்தியர்  என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும்.

ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக இந்தியர் என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர்.

தமிழர், தெலுங்கர், வங்காளி என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. இந்தியக் குடியுரிமை என்று மட்டுமே அது கூறுகிறது.

தமிழர் போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.

லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் (Union of nations) என்றே அழைத்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் விதி  371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது...

பெரியாரின் போலித் தமிழ்ப்பற்று...


உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)..

பலர் இன்னும் பெரியாரை தழிழர்களையும் தழிழ் மொழியையும் காக்க வந்த இரட்சகர் என்றே நினைத்துள்ளனர். பாருங்கள் மொழிகள் பற்றி அவர் சொன்ன கருத்துக்களை ஆதாரங்களுடன்....

ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத்... தகுந்த மொழியாகும். தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.

தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நூல்:- தமிழும் தமிழரும்.

இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டு விடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான். (விடுதலை 03.03.1965).

முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடான பேச்சு என்பதைப் பாருங்கள்.. இதுதான் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு மிக்க, நாணயமான பேச்சு..

இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியே தான் ஆகும். (குடியரசு 20.01.1920).

காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன். (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி).

இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.

இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா? (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி).

ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.

உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். (பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி).

ஆனால் இந்த பகுத்தறிவாளர் மட்டும்
சாகும் வரை தன் பொண்டாட்டி வைப்பாட்டி வேளைக்காரி என்று அனைவரிடமும் தமிழில் மட்டும் தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது..

திராவிடம் என்பது தமிழனை ஏமாற்றி பிழைக்கும் கூட்டமே...

வைகோ நாயூடு சிறையிலிருந்து கடிதம்...


மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை சீர்குலைக்கக்கூடிய..  யூக்கலிப்டஸ் தைலமரத்தை முற்றிலும் அகற்றி நாட்டு மரங்களை நடுமாறு.. தலைமைச் செயலாளர், அரசுச் செயலாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறையிலிருந்து வைகோ நாயூடு கடிதம்...

மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை சீர்குலைக்கக்கூடிய யூக்கலிப்டஸ் (Eucalyptus) எனும் தைல மரம் தமிழகத்தின் மழைப்பகுதிகளிலும் மற்றும் நிலப்பகுதிகளிலும் பரவியுள்ள மரங்களை முற்றிலுமாக அகற்றி, அகற்றப்பட்ட இடத்தில் நாட்டு மரங்களை நடுதல் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர், பொதுப்பணித் துறைச் செயலாளர், தலைமை வனப்பாதுகாவலர், திண்டுக்கல், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், திண்டுக்கல் மாவட்ட வன பாதுகாவலர் ஆகியோருக்கு இன்று (08.04.2017) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ நாயூடு அவர்கள் சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதன் விவரம்:

யூக்கலிப்டஸ் (Eucalyptus) எனும் தைல மரம் 1843-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது.

மலைப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய பொழுது பல்வேறு பகுதிகளில் நீர்க் கசிவால் சொதசொதப்பாக இருந்த சுற்றுச்சூழலை மாற்றுவதற்காகவும், நிலத்தின் சுற்றுச்சூழலை மாற்றுவதற்காகவும், நிலத்தின் சொதசொதப்புத் தன்மையைக் குறைப்பதற்காகவும் இந்தத் தைல மரங்கள் பயிரிடப்பட்டன.

பின்வரும் காலங்களில் மரவகைப் பொருட்கள் தயார் செய்யவும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரக்கூழ் தயாரிக்கவும் ஊக்குவிக்கப்பட்டது.

அதன் தாக்கத்தினால் சமவெளிப் பகுதிகளிலும் மற்ற இடங்களிலும் இந்தத் தைல மரங்கள் பயிரிடப்பட்டன.

யூக்கலிப்டஸ் (Eucalyptus) மரம், மிர்டேசியா (Myrtaceae) என்ற குடும்ப வகையைச் சார்ந்தது. இம்மரங்கள் ஆஸ்திரேலியா, டாஸ்மானிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டவை. இம்மரங்களில் 700க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மில்லி மீட்டரிலிருந்து 1500 மில்லி மீட்டர் வரை மழையளவு உள்ள பகுதிகளில் வளரும். இவை விரைவாகவும், உயரமாகவும் வளரக் கூடியவை.

இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது ஆகும்.

சீமைக் கருவேல மரத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது யூக்கலிப்டஸ் தைல மரம்.

இதனை இயற்கை ஆழ்துளை கிணறு என்றுகூட அழைப்பார்கள். இது நிலத்தில் உள்ள நீரை மட்டுமல்லாது காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சக் கூடியது. ஆகையினால் மழைப் பொழிவு மிகவும் குறையும். காற்றின் ஈரப்பத குறைவால் வெப்ப சூழல் அதிகரிக்கும்.

1960-ஆம் ஆண்டில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அரசுகளின் துணையோடு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை  என்று யூக்கலிப்டஸ் விவசாயிகளிடம் பரிந்துரைக்கப்பட்டது. இம்மரம் வறட்சியைத் தாங்கிக் கொள்ளக்கூடியது. மிகக் குறைந்த செலவில் அதிக வருமானம் தரும் என பறைசாற்றப்பட்டது.

1843-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கர்நாடகா மாநிலம் நந்திமலைக் குண்டு பகுதிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டமானது, 1960 களில் இந்தியாவில் பரவலாக சமவெளிப் பகுதிகளில் பயிரிடப்பட்டது.

தமிழ்நாட்டில் கொடைக்கானல் பகுதியில் மொத்தம் உள்ள 80,000 ஹெக்டேரில் 60,000 ஹெக்டேர் பயிரிடப்பட்டது.

வறட்சி மாவட்டங்களான  இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை பகுதியில் அதிகமாக பயிரிடப்பட்டது.

மேலும் இந்த மரங்கள் அதிக அளவில் கொடைக்கானல் மலைப்பகுதியில் வளர்வதால் அங்கு மழை அளவும் குறைந்து வருகிறது; குடிதண்ணீர் பிரச்சினையும் அதிக அளவில் உள்ளது.

மேற்படி யூக்கலிப்டஸ் மரம், வறண்ட சமவெளிப் பகுதிகளில் விவசாய பயிர்கள் ஓராண்டுக்குப் பயன்படுத்தும் நீரைவிட இரண்டு மடங்கு நீரை உறிஞ்சுவதால் வெப்பமயமாதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப் பதத்தைச் சீர்குலைக்கக்கூடிய இம்மரம் வளரக்கூடிய பகுதிகளில் மற்ற அரிய வகை தாவரங்கள் உட்பட வேறு எந்த ஒரு தாவரமும் வளராது.

மண்ணின் நுண்ணுயிர் சத்துகளை அழிக்கக் கூடியது. மூன்று வருடங்களில் பெறக்கூடிய 2100 மில்லி மீட்டர் அளவுடைய மழை நீரையும் சேர்த்து 3400 மில்லி மீட்டர் நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் நிலத்தடி நீர் குறையும் நிகழ்வு நடைபெறுகிறது.

மேலும் இம்மரத்தின் இலைகளுக்கு மக்கும் தன்மை குறைவு. ஆகையால் மழை நீர் நிலத்தில் இறங்குவதும், புதிய தாவரங்கள் தோன்றுவதும் பாதிக்கப்படும்.

தைல மரங்களிலிருந்து உருவாகும் பூஞ்சைகள் மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் சக்தி கொண்டவை. இப்பாதிப்புக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்தால்தான் சரியாகும்; இல்லையென்றால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

1980-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தை மிகப் பெரிய வறட்சி தாக்கியது. அதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது தைல மரங்களே காரணம் என்று அறிந்தார்கள். இதற்காக வேணுகோபால் அவர்கள் தலைமையில் உருவான ‘நீலகிரியைக் காப்போம்’ என்ற அமைப்பு பெரிதும் போராடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

விவசாயிகளின் சிறு சிறு எதிர்ப்பால் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர். அவர்களின் அரசு, கொள்கை அளவில் இத் தைல மரங்களைப் பயிரிடுவதில்லை என்று அறிவித்தது. ஆயினும் தொடர்ந்து பயிரிட்டுக் கொண்டு தான் இருந்தார்கள்.

யூக்கலிப்டசின் பாதிப்புகளை முதலில் அறிந்துகொண்டது கேரள மாநிலம்தான். 40,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட தைல மரம் பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தினால் 5,000 ஹெக்டேராகக் குறைக்கப்பட்டது. தைல மரங்கள் படிப்படியாக முற்றிலும் தடை செய்யப்பட்டது.

மேற்படி யூக்கலிப்டஸ் மரங்களின் ஆபத்துகளை உணர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 27.02.2015 அன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யூக்கலிப்டஸ் மரம் பயிரிடப்படுவதைத் தடை செய்து வனத்துறைக்கு உத்தரவிட்டது.

அதே போல், முந்திரிக்காட்டை அகற்றி, யூக்கலிப்டஸ்  மரம் பயிரிடுவதைத் தடை செய்ய தொடரப்பட்ட வழக்கில் மாண்புமிகு நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்படி யூக்கலிப்டஸ்  மரங்கள் பயிரிடுவதை தடை செய்து உத்தரவிட்டது.

மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 2005-ஆம் ஆண்டு வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் யூக்கலிப்டஸ் மரங்களினால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து மேற்படி மரங்களை வளர்ப்பதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

யூக்கலிப்டஸ் மரங்களினால் மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதம் சீர்குலைக்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டின் இயற்கைக்கு முற்றிலும் எதிரான யூக்கலிப்டஸ் மரங்களை வளர்க்கக் கூடாது என்றும், ஏற்கனவே வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, மேற்படி யூக்கலிப்டஸ் மரங்கள் அப்புறப்படுத்தப்படும் இடங்களில் தேவையான அளவு நாட்டு மரங்களை நடுவதற்கும் தகுந்த நடவடிக்கை எடுத்து நீர் வளங்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                                                                இப்படிக்கு,
                                                                                  வைகோ,
மத்திய சிறைச்சாலை -2,புழல், சென்னை - 600 066..

இவ்வாறு வைகோ நாயூடு தமது கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்...

தேவரடியாரும் - தேவதாசிகளும் : தமிழரும் - திராவிடரும்...


தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது.

தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

தேவதாசி என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’ (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17).

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுல சுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது.

சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை. (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334).

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது. (கர். கல் VAK 105).. (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19).

இந்துத்துவ வாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவு செய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர்.

மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை, ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.

இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005).

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்..

கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்... இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். (மேலது நூல் /பக் 22).

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.

பெண்களின் நிலை..

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா..

திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?

லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.

கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன என்கிறார் அவர்.

கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர்.

தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில் தான்.

இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே.

இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழ்ப் பணிகளைச் செய்தார்...

தமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை...


அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்..

வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறித்து இருக்கிறார் தொல்காப்பியர்...