13/08/2017
தமிழரைக் கூறுபோடும் அரசியலும் சினிமாவும்...
அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட திராவிடம் என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டது போல்......
திரைத்துறையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட.
இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....
தமிழர் பகையை அடையாளம் காண்போம்..
தமிழின விடுதலை அடைந்திட
களம் நிற்போம்...
நோய்களை உருவாக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்...
மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள்.
ஒட்டவே ஒட்டாது:
நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்வதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டுவதில்லை. எண்ணையின் அளவை குறைப்பதற்காக மட்டுமின்றி நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்வது இன்றைக்கு நாகரீகமாக கருதப்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இது உடலின் கொழுப்புச் சத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் சமையல் செய்து உண்பது குறித்து வர்ஜீனியா பல்கலைக் கழக ஆய்வாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். அதில் நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் பேப்ரிக்குகளும், உணவில் கொழுப்பு சத்தினை அதிகரிக்கச் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
கொழுப்பு சத்து அதிகரிக்கும்:
உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க நான்-ஸ்டிக் பாத்திரங்களில் பூசப்படும் திரவம் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எப் ஒ ஏ ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) என்ற வேதிப்பொருள் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை. எனவே இந்தவகை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. மேலும் லிபோபுரோட்டீனின் அளவை குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.
விலை கொடுத்து வாங்கப்படும் நோய்கள்:
மேலும் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகமாக உபயோகிக்கும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.
பெண்களின் உடலில் பிஎப்ஒஏ எனப்படும் ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து மெனோபாஸ் விரைவில் நிகழ முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. அழகுக்கு ஆசைப்பட்டு அனைவரும் நோயை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதை படிக்கும் பலரும் சற்று சிந்தித்து உணவு தயாரிக்கும் முறையில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதர்க்காகவே இந்த பதிவு.
உங்களை திரும்பவும் மண்சட்டியில் சமைக்க சொல்லவில்லை ஆனால் மண்சட்டியில் தயார் செய்யும் உணவு உடலுக்கு ஆரோக்கியமானது என்பது மட்டும் முற்றிலும் உண்மை...
ஆரியம் மாயை என்ற முழக்கத்துடன் வந்த திராவிடர்கள்...
தமிழர்களின் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டதோடு தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி போன்ற அனைதுக் கூறுகளையும் இழிவு படுத்தி சிதைத்தனர்..
இத்தோடு நில்லாமல், உலக ஆட்சி அதிகாரச் சூட்சுமமான பெரும்பான்மை சிறுபான்மை ஆளும் என்ற அடிப்படையைக் கூட தமிழர்கள் உணராதவாறு திராவிட இன பிறமொழியாளர்கள், பெரும்பான்மை தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணிலேயே "திராவிடர்கள்" என்ற அடையாளத் திணிப்பைச் செய்து சிறுபான்மை திராவிடத்தை பெரும்பான்மைச் சமூகமாக்கி தலைமையை கைப்பற்றிக் கொன்டனர்...
தமிழர், தமிழினம் என்றதொரு தனித்த ஓர்மையையும் குலைத்தனர்..
சமகாலத்தில் நம் கண்முன்னேயே போக்குவரத்து கழகங்களின் பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவர், சேரன், சோழன், பாண்டியன், தளபதி சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, மருது சாகோதரர், போன்ற தமிழின ஆளுமைகளின் அடையளங்களை செயற்கை கலவரம் மூலம் துணிச்சலாக தூக்கினர்..
தமிழர்களின் திருநாளான பொங்கலை "திராவிடர் பொங்கல்" என்ற பெயர் மாற்ற முயற்சியும் நடைபெற்றது.. பின் முறியடிக்கப் பட்டது.. தற்போது மீண்டும் முயற்சி நடக்கத் தொடங்கியுள்ளது...
இப்பொழுது, பெரியார் பிறந்த மண் என்றெல்லாம் பேசி, வந்தேறி கட்சிகளெல்லாம் அரசியலில் எதிரெதிராக நின்றாலும், இன்று தமிழ் தேசியத்திற்கு எதிராக பகை மறந்து ஒன்று படக் கூடிய நேரம் வந்து விட்டதென வெளிப்படையாகக் கொக்கறிக்கும் நிலையையும் கண்டோம்..
ஆரியம் மாயை என்று வந்த திராவிடக் கூட்டத்தின் கருத்தியல் முழுதும், வெறும் வாய் ஜால பேச்சுக்கள். இதுவும் மாயையே என புரிந்து புறந்தள்ளும் விளிம்பு நிலையிலுள்ளோம் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து பயணித்தால் தமிழ் தேசியம் சென்று சேரலாம்...
கேரளா கண்ணூரில் பாஜக டெப்பாசிட் காலி...
கேரள ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க வின் பொய்ப் பிரச்சாரம், மத்தியிலிருந்து கடுமையான அரசியல் நெருக்கடி, அரசியல் கொலைகள், பந்த் இவைகளுக்கு மத்தியில் மட்டனூர் நகராட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது மற்றும் 19 வார்டுகளில் பா.ஜ.க வுக்கு டெப்பாசிட் காலி...
கம்யூ : 28 காங் : 07 பாஜக : 00...
சோழப் பேரரசு...
சோழப் பேரரசு இவ்வளவு பெரியதாக இருந்திருக்கலாம்...
இராசேந்திர சோழனுக்குப் பிறகு முதலில் இலங்கை, பிறகு இந்தோனேசியா, பிறகு மலேசியாவின் வடக்குப் பகுதியும் பர்மாவும், அதன் பிறகு வடயிந்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் என சோழர்கள் கையை விட்டுப் போய்விட்டன..
சோழ அரசு தஞ்சாவூரை மட்டும் கொண்டதாக சுருங்கி பிறகு மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் முடிவுற்றது...
Subscribe to:
Posts (Atom)









