19/09/2017
அ.தி.மு.க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்கம் ஜனநாயகப் படுகொலை - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை...
தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுனரிடம் கடிதம் கொடுத்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 18 பேரை தகுதிநீக்கம் செய்து பேரவைத்தலைவர் ஆணையிட்டுள்ளார். கட்சித் தாவல் தடை சட்டத்தின் எந்த பிரிவும் பொருந்தாத ஒரு செயலுக்காக இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜனநாயகப் படுகொலை கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசின் தலைமைக் கொறடா அளித்த மனுவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுத்திருக்கிறார். தகுதி நீக்கத்திற்கான இந்த அடிப்படையே தவறு ஆகும். சட்டப்பேரவைக்குள் கொறடா ஆணையை மீறி செயல்படும் பட்சத்தில் தான், சட்டப்பேரவை உறுப்பினர்களை பேரவைத் தலைவர் பதவி நீக்கம் செய்ய முடியும். கொறடா உத்தரவை 18 உறுப்பினர்களும் மீறாத நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையற்றது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முதல்வரும், அவரது துதிபாடிகளும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். மீதமுள்ள 3.5 ஆண்டுகள் பதவிக்காலத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கு துடிக்கின்றனர். ஆனால், மொத்தமுள்ள 233 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்குத் தேவையான 117 உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி அரசுக்கு இல்லை என்பதால், தங்களிடம் உள்ள உறுப்பினர்களையே பெரும்பான்மை பலமாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஆட்சியாளர்கள் துடித்தனர். அதற்காக உரிமைப் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்து பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுங்கட்சி முடிவு செய்தது. ஆனால், அந்த முயற்சிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்ட நிலையில், இப்போது அதிமுக அதிருப்தி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து தங்களின் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ள ஆளுங்கட்சி துடிக்கிறது. தங்களின் பிழைப்புக்காக அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்திய ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்தையும் பினாமி முதல்வர் படுகொலை செய்ய பேரவைத்தலைவர் துணை போயிருக்கிறார்.
தமிழகத்தில் இத்தகைய ஜனநாயகப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதில் தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கடந்த மாதம் 22-ஆம் தேதி எடப்பாடிக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக 19 உறுப்பினர்களும் கடிதம் கொடுத்த போதே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சருக்கு ஆளுனர் ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத ஆளுனர், குதிரைபேரம் மூலம் உறுப்பினர்களை வளைப்பதற்கு வசதியாக இந்த விஷயத்தில் காலதாமதம் செய்து வந்தார். அதன்படி நடத்தப்பட்ட குதிரைபேரம் வெற்றி பெறாத நிலையில் இப்போது சம்பந்தப்பட்ட 18 உறுப்பினர்களும் சட்டவிரோதமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுனர் மட்டும் மிகவும் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்த ஜனநாயகப் படுகொலை நடத்திருக்காது.
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த 11 பேர் உட்பட 16 உறுப்பினர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி அம்மாநில ஆளுனர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். அதையேற்ற ஆளுனர் பரத்வாஜ் அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆணையிட்டார். அதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் 16 பேரவை உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் போப்பையா ஆணையிட்டார். ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடக பேரவைத் தலைவருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவரது நடவடிக்கை செல்லாது என்று கூறி, 16 பேரவை உறுப்பினர்களின் பதவியையும் மீண்டும் வழங்கி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை மதிக்காமல் பேரவைத் தலைவர் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை சட்டத்தின் முன் செல்லுபடியாகாது.
பதவியில் தொடர்வதற்காக எந்த பாதகத்தையும் செய்யத் துணிந்து விட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆளுனரும், பேரவைத் தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் கூட சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி...
கீழடியில் அகழாய்வு நடக்கும் பகுதியில் 60 ஏக்கரில் குடியிருப்பு கண்டு பிடிப்பு...
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெங்களூரு அகழாய்வுப் பிரிவு தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், கீழடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது...
கீழடியில் கடந்த 2 ஆண்டுகளாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பருவத்தில் மிகவும் சிதிலமடைந்த, வளைந்த நிலையில் ஒரு செங்கல் கட்டிடம் மற்றும் மூன்று உறைகிணறுகள் மாத்திரமே தற்போது வெளிப்பட்டுள்ளன.
சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இதுதவிர சுமார் 3 மீட்டர் ஆழத்தில் தொடர்ச்சியற்ற நிலையில் பெரிய அளவிலான செங்கற்களை (38 செமீ நீளம்) கொண்டு கட்டப்பட்ட துண்டுச் சுவரொன்றும் காணக் கிடைத்துள்ளது.
சுமார் 3 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட துண்டுச் சுவரின் மூலம் இவ்விடத்தில் இரு காலகட்டங்களில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது.
இத்துண்டுச்சுவரே காலத்தால் முந்தைய கட்டுமானமாகும்.
400 ச.மீ பரப்பளவில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்மழை காரணமாக ஒரு சில குழிகளில் மட்டும் அகழ்வாராய்ச்சி தொடர்கிறது. அகழாய்வு அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்.
இதுதவிர இடைக்கால அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் தலைமையிடத்திற்கு இரு மாதங்களில் அளிக்கப்படும்.
இப்பருவத்திற்கான அகழாய்வு அனுமதி செப். 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தலின் பேரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு வரைவுத் திட்டம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
இணையத்தில் பதிவேற்றம்
ஸ்ரீராமன் கூறுகையில்...
கீழடியில் தற்போது கிடைத்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள அனைத்து தொல்பொருட்களின் விவரங்கள் http://nmma.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனுப்பப்படும்.
இது தேசிய நினைவுச்சின்னம் மற்றும் தொல்பொருட்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும், என்றார்.
1800க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டு பிடிப்பு..
கீழடியில் நடந்த அகழாய்வில் இதுவரை 1,800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 1,500க்கும் மேற்பட்டவை மணிகளே.
மொத்த மணிகளில் 90 சதவீதம் கண்ணாடியால் ஆனவை. மீதமுள்ள மணிகள் பளிங்கு, பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும்.
இதுதவிர தந்தத்தில் செய்த சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் கிடைத்துள்ளன.
இன்றுவரை 14 தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன.
அவற்றுள் ஒளிய(ன்) என்ற முழுப்பெயரும் மற்றவை தனி நபர்களின் பெயர்களில் ஓரிரு எழுத்துக்களே காணப்படுகின்றன.
இதில் பனிரெண்டு எழுத்துகளைக் கொண்ட பானை ஓடு ஒன்று குறிப்பிடத்தக்கது. இதன் மீது `……ணிஇய் கிதுவரன் வேய்இய்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும், சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக்காசுகள், ஐந்து தங்கப் பொருட்கள், ஒரு சில மண்ணுருவங்களும் அகழாய்வில் கிடைத்துள்ளன...
ஹேஷ்டேக் ரகசியம் அம்பலம்...
RightDecisionBySpeaker என்ற ஹேஷ் டாக் ஐ இந்திய அளவில் ட்ரண்ட் ஆக்கி விடும் வட மாநில Paid சோசியல் மீடியா ப்ரோகர்கள்..
சபாநாயகர் எடுத்த முடிவு சரி தான் என்ற ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரண்ட் ஆகி வருகின்றது.
இதற்கு பின்னால் உள்ள வேலையை நெட்டிசன்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இவர்களே சோசியல் மீடியா ப்ரோகர்களை தேடி கண்டு பிடித்தார்களா அல்லது இதில் கைதேர்ந்தவர்கள் வழி காட்டினார்களா?
வட மாநில காரனுக்கு தமிழ்நாட்டு அரசியலை பற்றி எப்படி தெரியும் ?
சென்னை, கேளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த முகாமில் 19 குடும்பங்களாக மொத்தம் 93 ரோஹிங்யா இஸ்லாமியர் தங்கியிருக்கிறார்கள்...
2012-ஆம் ஆண்டு மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து கடல் வழியாக வங்கதேசத்துக்கு வந்து பின்னர் சென்னைக்கு வந்து சேர்ந்ததாக இவர்கள் கூறுகிறார்கள்.
ஐ.நா. மேற்பார்வையில் தங்கியிருக்கும் இந்த ரோஹிங்யா அகதிகள் தங்களுக்கு அங்கு நடந்த கொடுமைகளை விவரிக்கின்றனர்.
மியான்மரின் ராணுவ அடக்குமுறைக்கு அஞ்சி, புலம்பெயர்ந்த ரோஹிங்யா இஸ்லாமியரில் ஒரு பிரிவினர் சென்னையிலும் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் ரோஹிங்கியாவில் அடைந்த துன்பங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
திருமணம் செய்து கொள்வது, குழந்தை பெற்றுக் கொள்வது ஏன் தங்களது சொந்த வீட்டில் தங்குவது என அனைத்துக்கும் மியான்மரின் அரசு அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்ற கொடுமைக்கு இவர்கள் நேரடிச் சாட்சியங்களாக இருக்கிறார்கள்.
ரோஹிங்யா இஸ்லாமியர் அல்கமா பீபி கூறுகையில், ‘திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண் ஒரு லட்ச கொடுக்க வேண்டும். அதேபோல் ஆணும் ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். ஆண் தந்தையின் வீட்டில் இருக்க வேண்டுமானால் தினமும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்கிறார் பரிதாபமாக...
கேளம்பாக்கம் முகாமில் வசிக்கும் ரோஹிங்யா இஸ்லாமிய அகதிகளுக்கு சென்னையில் இயங்கும் ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் ஆணையக் கிளையின் மூலமாக அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ஆதார் அட்டையும் கிடைத்திருக்கிறது.
ரோகிங்யா மொழி பேசும் தஸ்லிமா ஐந்து ஆண்டுகளுக்கு முன் மியான்மர் நாட்டின் ராக்கைன் மாநிலத்தில் நடத்தப்பட்ட ராணுவ அடக்குமுறைகளில் இருந்து தப்பி வந்தவர். இவர் கூறுகையில்,
’மியான்மரில் ராணுவம் எங்களை வாழவிடவில்லை. எல்லாவற்றுக்கும் பணம் கேட்பார்கள். பணம் கொடுக்க முடியாதவர்கள் அங்கு வாழ முடியாது. திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் அரசாங்கத்துக்குப் பணம் கட்ட வேண்டும் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்ற கருணை சற்றும் இல்லாமல் ராணுவத்தினரும் பௌத்தர்களும் எங்கள் மீது வன்முறைத் தாக்குலை நடத்தினர்’எனக் கூறுகிறார்.
முகமது யூசுப் கூறுகையில், ’நான் ரோஹிங்யா இஸ்லாமியர். மியான்மரில் அராக்கன் எனப்படும் ராக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவன். பௌத்தர்கள் இஸ்லாமியர்களாகிய எங்களைத் அடித்துத் துன்புறுத்தினார்கள். அதனால், அங்கிருந்து படகு மூலம் வங்கதேசத்துக்கு வந்தோம். அங்கு ஒரு ஏஜெண்ட் மூலமாக பேருந்தைப் பிடித்து கொல்கத்தாவுக்கு வந்தோம். பின்னர் ரயிலில் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்’என்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் மியான்மரில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள். இங்கு குப்பைகளில் இருந்து கிடைக்கும் இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை விற்றுப் பிழைக்கிறார்கள். பெண்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு, வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். ரோஹிங்யா குழந்தைகளில் பெரும்பாலானோர் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்.
தமிழில் சரளமாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். கேளம்பாக்கத்தின் ஒரு மூலையில் அமைந்திருக்கும் ஓலையும் தகரமும் மூடப்பட்ட குடிசைகள், ஒரு நெருக்கடியான கட்டடம் போன்றவை தான் இவர்களது இருப்பிடம். என்றாலும் அதிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தை தங்களது மதக்கடமைகளை ஆற்றுவதற்காக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்...
அதிமுக ஓபிஎஸ் கலாட்டா...
சீன படை நடுநடுங்க..
இலங்கை படை திணறடிக்க..
வர்றார் பாரு வேட்டைக்காரன்..
சிரிச்சா போச்சு..
சிரிக்காதவங்க மட்டும் லைன்ல வாங்க...
Subscribe to:
Posts (Atom)

















