12/10/2017

தமிழன் பொருளாதாரத்தின் முன்னோடி...


இந்திய இளைஞர்கள் காவு கொடுக்கப்பட்டு கொண்டுள்ளார்கள்.?



சமீபத்தில் பிரிக்ஸ் மாநாடு என்று ஊடகங்கள் வாயிலாக நாம்  தெரிந்து கொண்டோம் அல்லவா ?

அந்த மாநாட்டில் முக்கியமாக பங்குபெற்ற நாடுகள் இந்தியா, சைனா, பிரேசில், சவுத் ஆப்பிரிக்கா..

இங்கு கூறப்பட்டுள்ள ஒரு தகவல் தான்...

இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்றும் படித்த மாணவர்கள் உள்ளனர் என்றும் பெருமிதமாக பேசியது..

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் இளைஞர் படை அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது..

கிட்டத்தட்ட  25 % இளைஞர்கள் இந்தியாவில் உள்ளவராகவும் தெரிவிக்கப்பட்டது..

இந்தியாவில் கிட்டத்தட்ட 30 கோடி இளைஞர்கள் உள்ளனர் என்றும் கூறப்பட்டது..

பலத்த கைத்தட்டலுடன் இந்தியன்டா என்று பெருமை பீற்றிக்கொண்டது இந்திய ஊடகமும்..

இது அப்படியே இருக்கட்டும்....

மருத்துவ நோய் கண்டறியும் காரணி துறையில் ஒன்றுதான் எப்பிடமாலஜி என்ற துறை..

இவங்க இந்தியாவுக்கு ஒரு ஆய்வறிக்கையை சமர்பிக்கிறார்கள்.

அது தான் தொற்றாத வாழ்வியல் நோய் [non communicable diseases]..

நீரழிவு நோய், இரத்த கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய், நுரையீரல் நோய், மற்றும் உளவியல் நோய், இவை தான் இதில் அடங்கும்..

இதை கட்டுப்படுத்த நடவடிக்கை உடனே இந்தியா எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது..

செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று தான்..

இதில் அடுத்த வார்த்தை தான் மிகவும் முக்கியம்..

இது 25 வயது முதல் 40 வயது இளைஞர்களுக்கு தான் வேகமாக பரவுகிறது என்றும் கூறுகின்றது அந்த ஆய்வு..

அதெல்லாம் இல்லைங்க பரம்பரை நோய் அது..

அப்பாவுக்கு இருந்தால்  பிள்ளைக்கும் சக்கரை நோய் இருப்பது சகஜம் தானே என்று சிலர் ஆசுவாசப்படுத்தி கொண்டு இருக்கும் நிலையில் தான்..

ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகம் ஒரு ஆய்வை கடந்த ஆண்டு வெளியிட்டது..

அதில் கூறியுள்ள வாசகங்கள் என்ன தெரியுமா ?

காலையில் 8 மணிக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் கூலி தொழிலாளியின் மகனுக்கு கூட சக்கரை நோய் வருகிறது..

பாரம்பரிய நோய் என்பதை தாண்டி கடந்த 4 வருடத்தில் சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.. முக்கியமாக இதில் கிட்டத்தட்ட 75 % பேருக்கு பரம்பரையில் சக்கரை நோய் இல்லை
எல்லோருக்குமே புதிதாக சக்கரை நோய் வந்துள்ளது என்பது தான் அந்த ஆய்வு ...

என்ன நடக்கிறது ?

நாம் சிறு வயதாக இருந்த காலத்தில் தேன் மிட்டாய் கடலை மிட்டாய் ஜவ்வு மிட்டாய்.. ஏன் வாழையிலையில் கூட முதலில் இனிப்பை தானே
வைப்பார்கள்..

எல்லாவற்றையும் தானே உண்டு வந்தோம்..

இப்பொழுது குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்கவே பயப்படுகிறோம் ஏன் ?

நீரழிவு நோய்க்கு இந்தியா தான் தலைமை பீடம் என்ற கட்டுரையை கடந்த ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது படித்தால் மயக்கம் வராத குறை தான்..

நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/India-is-the-diabetes-capital-of-the-world/articleshow/50753461.cms

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3920109/

இப்பொழுது முதல் பகுதியில் கூறிய விடயமும் இறுதியான விடயமும் ஒத்து போகிறதா ?

ஏன் இளைஞர்கள் காவு கொடுக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ?

இன்றைய அரசியல் வாதிகளுக்கு தான் வெளிச்சம்...

சாட்டையை சுழற்றுவோம்...

15 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் குற்றம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...


கார்ப்பரேட் பொருள்களை தயவு செய்து உண்ணாதே...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வை உலக வங்கியும் உறுதி செய்தது...


2017ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் மந்தமான நிலைக்கு சென்றுவிட்ட தாகவும்; 2018-ஆம் ஆண்டிலும் இந்த பொருளாதார மந்தம் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக விளங்கிய இந்தியா, தற்போது அந்த தகுதியை சீனாவிடம் இழந்து நிற்பதாகவும்; இத்தகைய சூழ்நிலைக்கு இந்திய அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கமே முக்கியக் காரணம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தெற்காசியப் பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இவ்வாறு கூறியுள்ள உலக வங்கி, 2015-ஆம் ஆண்டில் 8.6 சதவிகிதமாக இருந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி, 2017-இல் 7 சதவிகிதமாக சரிந்துவிட்டது என்று புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய வற்றின் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது; நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது; சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் 6.7 சதவிகித வளர்ச்சியை மட்டுமே இந்தியா எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்றது- ஜிஎஸ்டி வரி விதித்தது- உள்ளிட்ட நட வடிக்கைகளுக்குப் பின்னர், இந்தியப் பொருளாதாரம் 2018-இல் அதிகபட்சம் 7.3 சதவிகிதம் வரையே வளர்ச்சி காணு வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளஉலக வங்கி, ஆனால், அது எளிதில் நடக்க வாய்ப்பு இல்லை என்றும், அதற்கேற்ற நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே 7.3 சதவிகித வளர்ச்சியும்கூட சாத்தியமாகும் என்று கூறியுள்ளது.“ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு, இந்தியாவில் உற்பத்தி குறைந்துள்ளது, எனினும் 2018 காலாண்டிற்குள் இந்த நிலைமை சரியாகும் என்று எதிர்பார்க்கலாம்; இந்தியா நீடித்த வளர்ச்சி பெற வறுமை ஒழிப்பு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்; ஏனெனில் இந்தியாவின் வளர்ச்சி விகித மந்த நிலை, தெற்காசிய வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும்; தற்போதே இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகாரணமாக தெற்காசியா பிராந்தியமானது, கிழக்காசிய மற்றும் பசிபிக் நாடுகளை விட இரண்டு இடங்கள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது;

இந்தியாவை பொறுத்தவரை 2016-இல் 7.1 சதவிகிதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவிகிதத்திற்கு சரிந்துள்ளது; ஜிஎஸ்டி, 2018-ஆம் ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது” என்று உலக வங்கி தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி அமலாக்கமும் நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் துவக்கத் திலேயே கூறினர். பாதிப்பு ஏற்பட்ட பின்னரும் உண்மையை ஒப்புக் கொள்ள மோடி அரசு தயாராக இல்லை.

இந்நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் நிலையை உலக வங்கி அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது...

நாட்டுச் சக்கரையை உபயோகிப்போம்...


ஆன்மாக்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் இறைவன் கைப்பற்றுகிறான்...


எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான்.

சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளது.. குர்ஆன் 39: 42..

இந்த வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மைகளை மனிதர்களுக்கு கூறிக் கொண்டுள்ளது.

பலருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். உயிர் என்பது என்ன? ஆன்மா என்பது என்ன?

இந்த குழப்பம் நீண்ட நாட்களாக எனக்கும் இருந்தது. மேலே உள்ள வசனத்தை வாசித்து உள் வாங்கிக் கொண்டவுடன் எனக்கு ஓரளவு உயிருக்கும் ஆன்மாவுக்குமுள்ள வித்தியாசம் புரிய ஆரம்பித்தது.

நாம் பழக்கத்தில் உபயோகிக்கும் உயிர் என்றால் என்ன?

சுவாசத்தை சீராக்குதல், உணவு செரிக்கப்படுதல், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படுதல், இரத்தம் சுத்தமாக்கப்படுதல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படுதல், தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படுதல், உடலுக்கு தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படுதல் ஆகிய இந்த செயல்களை, உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் ஊட்டிக் கொண்டு இருப்பதையே உயிர் என்கிறோம்..

உயிர் இருக்கும் வரை அந்த செயல்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன.... உடலும் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் உயிர் எப்பொழுது உடலினைப் பிரிகின்றதோ அப்பொழுது அந்த செயல்கள் எல்லாம் நிறுத்தப் பட்டு உடலும் அழியத் துவங்குகின்றது.

மனிதன் தூங்கும் போதும் மரணிக்கும் போதும் ஆன்மாக்களை கைப்பற்றுவதாக இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் கூறுகிறான்.

நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது உடலின் மற்ற அங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை இறைவன் கைப்பற்றினால் நாம் இறந்து விடுவோம்.

ஆனால் இங்கு இறைவன் தூக்கத்தில் கைப்பற்றி திரும்பவும் விட்டு விடுவதாக குறிப்பிடுகிறான்.

எனவே இறைவன் கைப்பற்றுவது நமது உயிரை அல்ல. நமது ஆன்மாவை என்ற முடிவுக்கு வருகிறோம். குழப்புகிறதா?

இதனை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளங்க முயற்சிப்போம்.

அன்றாடம் நாம் பயன் படுத்தும் வாகனத்தை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

உடல் = வாகனம்
ஓட்டுனர் = ஆன்மா
என்ஜின் = மனம்
பெட்ரோல் = உயிர்

வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் போது எரிபொருள் (பெட்ரோல்) காலி ஆகிவிட்டால் வண்டி நின்றுவிடும். மனிதன் இறந்து விடுகிறான்.

எரி பொருள் தீர்ந்ததால் ஓட்டுனர் (ஆன்மா) வண்டியை விட்டு இறங்கி விடுகிறார். இந்த உடலை விட்டு உயிர் பிரிந்ததும் ஆன்மாவும் உடலை விட்டு வெளியேறி விடுகிறது..

ஆன்மா, மனம், உயிர் இதில் எது, அதிக சக்தி வாய்ந்தது? என்றால் ஆன்மா தான்.

ஆன்மாவிற்கு அழிவில்லை. இந்த ஆன்மாவைத்தான் இறைவன் உறங்கும் போது தன் கைவசம் எடுத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் நமது உடலுக்கு திரும்பவும் அனுப்புகிறான்.

இப்போது உயிருக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறதல்லவா?

இனி ஆதாரபூர்வமான நபி மொழி ஒன்றை பார்போம்.

நபியவர்கள் கூறினார்கள்...

ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்து விடுகின்றார். (முஸ்லிம்).

இந்த நபி மொழியின் படி குழந்தையின் 40 வது நாளில் ஒரு வானவர் இறை கட்டளைபடி ஊதுகிறார் அல்லவா? அதுதான் இறைவன் அனுப்பும் ரூஹ். அதாவது ஆன்மா.

அதற்கு முன்னால் விந்தணுவும் கரு முட்டையும் சேர்ந்து சதைக் கட்டியாக 40 நாள் வரை வளருகிறதே அதுதான் உயிர்.

ஒரு பொருளுக்கு உயிர் இல்லை என்றால் அது நாற்பது நாள் தாயின் வயிற்றில் வாழ முடியாது. வளர்சியும் இருக்காது.

ஆன்மாவுக்கும் உயிருக்கும் உள்ள வித்தியாசங்களை இப்போது நாம் புரிந்து கொண்டோம்.

இந்த ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே சிறப்புத் தகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.

நன்மை எது தீமை எது என்பதை பகுத்தறியும் பகுத்தறிவை இறைவன் மனிதனுக்கு மட்டுமே விஷேசமாக வழங்கியுள்ளான்...

பாஜக வின் ஊழல் லிஸ்ட்...


காங்கிரஸ் கட்சிலாம் பக்கத்தில் நிற்க முடியாது, அந்த அளவிற்கு ஊழல் செய்து இருக்கிறார்கள் பாஜக.

மோடி வந்த மூன்று ஆண்டுகளின் கார்ப்பரேட்  வளர்ச்சியை பாக்கும் போது தலை சுற்றுகிறது...

திராவிடத்தால் வீழ்ந்தோம்...


திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப்  பெரியார் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்.

சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார். ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.

"திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ்(திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிரார்கள்.அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556)

என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

"திராவிடர் என்று நம்மைக் சொல்லிக்கொள்ளவே பெரும்பாடாக இருக்கும்போது, தமிழர் என்று எல்லாரையும் ஒர்மையாக்க முயற்சிஎடுப்பதால் இன்னல்கள் கூடும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தெலுங்கர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550)

இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ,தெலுங்கர்களோ,மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும். இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு.

தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை

'நமது மொழி தமிழ் என்றார்; எனது மொழி கன்னடம் என்றார்" (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்.

இப்படி தமிழின உணர்வை அழித்து திராவிட மாயை தீணித்த தமிழினத்தின் எதிரியை வழிகாட்டி என்று சொல்லி ஏற்றுக் கொண்டவன் எல்லாம் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வான்...

சிந்தி முட்டாள் தமிழினமே...

மதுரை திருக்கோயில் நுழைவு போராட்டம் - ஒரு வரலாற்றுப் பதிவு..


1920களில் திருகோயில்களில் பட்டியல் இன சமூக மக்களை அனுமதிக்காததை எதிர்த்து எதிர்ப்புகுரல்கள் தோன்றத்துவங்கின.

 முதல் முதலாக 1927ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய நீதிகட்சியின் ஜே.என் ராமநாதன் தலைமையில் மக்கள் கூடினார்கள். ஆனால் அவர்கள் கோயில் வாசலில் தடுத்து நிறுத்தபட்டார்கள்.

அதே சமயம் ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்த நீதிபதி கண்ணப்பர் தலைமையில் திருவண்னாமலை, திருச்சி மலைகோட்டை ஆகிய இடங்களில் 1927ல் ஆலயநுழைவு போராட்டங்கள் நிகழ்ந்தன. அவையும் தடுக்கபட்டன.

உடனே கண்ணப்பர் நீதிமன்றத்தில் திருவண்னாமலை கோயில் பூசாரிக்கெதிராக வழக்குப்பதிவு செய்தார்.

திருவண்னாமலை சப் மாஜிஸ்திரெட் கோர்ட்டும் "கண்ணப்பர் இந்து என்பதால் இந்துகோயிலில் நுழைய முழு உரிமை உண்டு" என தீர்ப்பளித்தது.

ஆனாலும் கோயிலுக்குள் நுழைய பொலிஸ் அனுமதிக்கவில்லை.

1920களுக்கு பின் காங்கிரஸ் கட்சி கோயில் நுழைவு போராட்டத்தை முன்னெடுத்ததும் இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

காங்கிரஸ் இந்த போராட்டத்துக்கு தேர்ந்தெடுத்த தலைவர்கள் வைத்தியநாதய்யர், ராஜாஜி, பக்தவத்சலம், டி.எஸ்.எஸ் ராஜன் ஆகியோர். இவர்கள் அனைவருமே ஆதிக்கசாதி சமூகங்களில் இருந்து வந்தவர்கள்.

இவர்கள் தலைமையில் போராட்டம் நடந்தால் பெருவாரி மக்களின் எதிர்ப்பு குறையும் என காங்கிரச் கட்சி கருதியது

சென்னையில் காங்கிரச் அரசு அமைந்ததும் 1932ல் பி.சுப்பராயன் முதல்வராக இருந்த சமயம் அவர் பட்டியல்சாதி மக்களை ஆலயநுழைவுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். ராமலிங்கம் செட்டியார் அதை வழிமொழிந்தார்.

மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால் இதை கண்டித்து மதுரையில் "வருணாசிரம ஸ்வராஜ்ய சங்கம்" தோற்றுவிக்கபட்டது. அதன் தலைவர் நடேசய்யர்.

ஆனால் ப்ரிட்டிஷ் அரசாங்கம் இந்த பிரச்சனையில் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்திபோட்டு கொண்டே வந்தது.

இதனால் ஹரிஜன் சேவா சங்கம் எனும் அமைப்பை துவக்கிய வைத்தியநாதய்யர் தமிழகமெங்கும் கருத்துகணிப்பை நடத்தினார். காஞ்சிபுரம், மதுரை, கும்பகோணம், திருவரங்கம் என முக்கிய திருகோயில் நகரங்களில் பெருவாரியான மக்கள் ஆலய நுழைவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.


வெறுமனே கருத்துகணிப்புடன் நில்லாது மதுரை மீனாட்சியம்மன் தேவஸ்தான கமிட்டி தேர்தலில் நின்ற ஹரிஜன் சேவா சங்க அமைப்பின் ஆறு வேட்பாளர்களும் வெற்றி பெற்று தேவ்ஸ்தான போர்டில் இடம் பிடித்தார்கள்.

இது "வருணாசிரம ஸ்வாராஜ்ய சங்கத்திற்கு" மிகப்பெரும் பின்னடைவாக கருதபட்டது.

1937ல் ராஜாஜி முதல்வரானார். அதன் பின் "மலபார் கோயில் நுழைவு சட்ட்டத்தை" கொன்டு வந்தார். சட்டம் நிறைவேறியது.

அதன்பின் ஆலய நுழைவுக்கு ஜூலை 8 1939 எனும் தேதி குறிக்கபட்டது.

கலவரம் நடக்கலாம் எனும் சூழலில் வைத்தியநாத ஐயருக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரல் கொடுத்தார்.

தேவர் ஆதரவு கிடைத்தது என்றவுடன் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தது. சொன்ன தேதியில் வைத்தியநாதய்யருடன் எல்.என்.கோபால்சாமி, கக்கன் (பின்னாளைய மந்திரி) மற்றும் ஆறு பட்டியல் சாதி இனமக்கள் நுழைந்து மீனாட்சியை தரிசினம் செய்தார்கள். அவர்களை தடுக்க ஆலயத்தில் ஒருவர் கூட இல்லை.

நடேசய்யர் விடவில்லை...உடனே வெள்ளைகார கவர்னருக்கு தந்திகளையும், கடிதங்களையும் அனுப்பினார். "தீட்டுபட்ட" மீனாட்சி ஆலயத்திற்கு குடமுழுக்கு விழா நடத்தவேண்டும் என்றெல்லாம் கோரினார்.வைசிராய், கவர்னர் வரை புகார்கள் போக, அன்ரைய சென்னை கவர்னர் எர்க்ஸைன், மற்றும் வைசிராய் ஜான் ஹோப் (இவர் பெயரால் கோவையில் ஓப் காலேஜ் எனும் பிரபல பஸ்நிலையம் உள்ளது) ஆகியோர் அவற்றை புறக்கணித்து ஆலயநுழைவு சட்டத்திற்கு முழு அனுமதி அளித்து அதை சட்டமாக்கினார்கள்.

ஆக ஆலயநுழைவு போராட்டம் என்பது அன்றைய நீதிகட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் அனைத்து சாதி மக்கள் ஆகியோரின் ஒருமித்த போராட்டத்தின் விளைவாக நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சாத்தியமானது.

இதில் வியப்பான விஷயம் என்னவெனில் இவர்கள் எல்லாரும் அப்போது ஒருவருக்கொருவர் கடுமையான கருத்து முரன்பாடு கொன்டிருந்தார்கள் என்பதுதான்.

ஆனால் பொதுபிரச்சனை என வந்தபின் அதில் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றியை எட்டினார்கள்.

இந்த ஒற்றுமையை இன்னபிற மக்கள் கோரிக்கைகளுக்கும் இன்றைய கட்சிகள் காட்டினால் காவிரி உள்ளிட்ட பல பொது பிரச்சனைகளை தீர்க்கலாம்...