03/12/2017

மழை நேர உஷார் நடவடிக்கைகள்...


மழை நேரத்தில் அவசர சிகிச்சை அல்லது மருத்துவ உதவிக்கு டாக்டரை நேரில் சந்திக்க முடியாது. அதனால் முன்கூட்டியே உங்கள் குடும்பத்தினர் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவரின் தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளவும்.

மழை நேரங்களில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கமான நேரத்தில் இயங்கும் என்பது உறுதியற்ற நிலை. எனவே தேவையான மளிகை, காய்கறி பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம். காய்கறிகளில் சீக்கிரம் அழுகிவிடாத காய்கறிகள் மற்றும் கிழங்கு போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான அவசர நேர மருந்துகள் மாத்திரைகள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

சிறுவர்களுக்கு ரமணன் இருக்கிறார். பெரியவர்களுக்கு வழியில்லை. அலுவலகம் சென்றுதான் தீரவேண்டும். அதனால் ஓரளவுக்கு நல்ல மழைக்கோட்டை வாங்கி பயன்படுத்துங்கள்.

கிரைண்டர், மிக்சி போன்ற மின்னணு பொருட்களின் மின் இணைப்பை வேலை நேரம் போக மற்ற நேரங்களில் துண்டித்து வைத்துவிடுங்கள். ஷாக் அடிக்காமல் பாதுகாக்க உதவும்.

மழைநேரத்தில் வீட்டின் வெளியே துணிகளை காய வைக்க முடியாது. அதனால் வீட்டின் உள்ளே காயவைப்பீர்கள். ஆனால் படுக்கும் அறையில் காயப்போடாதீர்கள். குழந்தைகளுக்கு அறையின் குளிர்ச்சியால் ஜலதோஷம் உருவாகும்.

மழை நேரம்தான் குழந்தைகளை கூடுதல் பாதுகாப்புடன் கவனிக்க வேண்டும். அதனால் எப்போதும் காய்ச்சிய நீரையே குடிக்க கொடுங்கள். நீங்களும் குடியுங்கள்.

சேட்லைட் சேனல் கனெக்ஷன் இருந்தாலும் முடிந்தால் இந்த மழை சீசன் முடியும்வரை கேபிள் இணைப்பு வாங்கி வையுங்கள். காரணம் எந்த நடிகர் விளம்பரம் செய்த டிடிஎச் ஆக இருந்தாலும் மழை இடி வெள்ள நேரங்களில் டிக்கெட் வாங்கி விடும்..

உலகின் திகில் கிளப்பும் தீவு...


ஸ்ட்ரோமா தீவு (Stroma Island)...

ஸ்காட்லாண்டில் இருக்கும் சிறு தீவு..

1901யில் 375 பேர் வாழ்ந்த தீவில், 1961யில் 12 பேர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இன்று யாருமில்லை.

ஒரேயொருவர் மட்டும் தன்னுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டபடி, அவ்வப்போது வந்து போகிறார்.

ஒரு காலத்தில் இந்த தீவு மக்களின் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருந்திருக்கிறது. தன்னிறைவு பெற்ற தற்சார்பு சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

திடீரென மக்கள் தீவை விட்டு விலகியதற்கான உறுதியான காரணம் இன்று வரை தெரியவில்லை.

வெளியேறிய மக்களும் காரணங்களைப் பேச மறுக்கிறார்கள்.

மக்கள் வெளியேறியத் தொடங்கியது முதல் இந்தப் பகுதியில் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகின.

இன்றும் அலைகள் மிகச் சாதாரணமாக 12 அடி உயரம் வரை எழுகிறது.

ஒரு அமானுஷ்யமான அமைதியோடு தனியே நின்று கொண்டிருக்கிறது ஸ்ட்ரோமா தீவு...

ஷட்டர் உடைந்த கிருஷ்ணகிரி அணையில் 2016-ம் வருடம் தான் 3.65 கோடி ரூபாய்க்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்றதாக பில் சொல்கிறது...


உண்மையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதா?

மூலிகை காபி செய்முறை...


இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ அருந்தினால் தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.

காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை..

தேவையான மூலிகை பொருட்கள்...

1 - ஏலரிசி - 25-கிராம்.
2 - வால்மிளகு - 50 கிராம்.
3 - சீரகம் - 100 கிராம்.
4 - மிளகு - 200 கிராம்.

இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும். இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.

காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.

உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.

குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்) ஏற்படாது. பசி நன்கு எடுக்கும். சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்...

தமிழர்களின் வீர விளையாட்டு - மலேசியாவில் முதன் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு...


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மலேஷியாவில் வரும் ஜனவரி 7ம் தேதி தொடங்க உள்ளது.

தமிழகத்தின் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் முயற்சியாக மலேஷியாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டிக்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

மலேஷியாவில் களப மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் மலேசியாவை சேர்ந்த 20 காளைகள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 15 மாநில வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மலேஷியாவைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்...

உத்திரபிரதேச உள்ளாட்சி தேர்தல்...


பாஜக + தேர்தல்ஆணையம் கூட்டணி மீண்டும் வெற்றி..

EVM பயன்படுத்திய இடங்களில் பாஜக 46% வெற்றி..

வாக்கு சீட்டு பயன்படுத்திய இடங்களில்
பாஜக வெறும் 15% மட்டுமே வெற்றி?

தமிழகத்திலும் வாக்கு சீட்டு இயந்திரத்தில் மிகபெரிய ஊழல் நடைபெற்றே வருகிறது ஆனால் இதைப்பற்றி எந்த அரசியல் இயக்கங்களும் வாயை திறப்பது இல்லை என்பதை பார்க்கையில் , எல்லா கட்சிகளும்  கூட்டுக் கலவாணிகளோ என்ற சந்தேகம் வராமல் இல்லை ?

பாஜக நம்பி இருப்பதே அந்த வாக்கு எந்திரத்தை தானே...


அதிமுக மதுசூதனன் vs ஜெயகுமார்.. மரணகலாய் ஒருத்தரு சமோசா திருடன்... இன்னொருத்தரு அமாவாசை பெருச்சாளி...


ஓசூர் அருகே 3000 ஆண்டு பழமையான கல்திட்டை கண்டு பிடிப்பு...


ஓசூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று ஆய்வாளர் அறம் கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத், சிவா, காமராஜ், ஜெகன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் வரலாற்று கல்திட்டைகள், கல்வெட்டுகளை கண்டறிந்து வருகிறார்கள்.

ஓசூர் தாலுகா உத்தனப்பள்ளி அருகே தாசனபுரத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நமது முன்னோர்களின் ஈமச்சின்னங்களான கல்திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அறம் கிருஷ்ணன் கூறியதாவது..

இந்த கல்திட்டைகள் அனைத்தும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சுமார் 50க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதில், உள்ள கல் வட்டங்கள் ஒரு அடுக்கு முதல் 3 அடுக்கு வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு அகழாய்வு செய்தால் புதிய வரலாற்று உண்மைகள் தெரிய வரும்.

இந்த பகுதியில் உள்ள கல்திட்டைகள் புதையலுக்காக தோண்டப்பட்டு, நமது முன்னோர்களின் வரலாற்று சின்னங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன.

இதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..

மாவீரன் தமிழ் மாமன்னன் இராவணன் அரக்கனா.?


பார்ப்பனீய மையம் உருவாக்கிய இராமாயணத்தில் மேலோட்டமாக பார்த்தால் இராவணன் ஒரு பெண் மோகம் கொண்ட அரக்கன் என்றுதான் சொல்லியிருப்பார்கள். அதையும் எமது உறவுகள் இன்று வரை நம்பிக்கொண்டு உள்ளார்கள் என்பது  நிதர்சனம் இது உண்மையா இல்லை பொய்மையா என்று சில உறவுகள் விடை தெரியாது உள்ளார்கள் உங்களுக்கான விடை இன்று பார்ப்போம்.

தமிழர்களாகிய நம்மை பார்ப்பனீயர் சூழ்ச்சி செய்யப்பட்டு  உளவியல் ரீதியாக தமிழ் இனத்திற்கு எதிரான  கருத்தியலை  விதைத்து நம்பும்படி செய்து விட்டார்கள்.

இதன் வெளிப்பாடே தமிழ் மன்னரான இராவணன் விட பார்ப்பனீய காமுகன்  ராமன் நல்லவர் வல்லவர் என்று  நினைத்துக் கொண்டுள்ளோம்.

சரி நமது உறவுகளிடம் யார் இராவணன் என கேட்ட்டால்?

இராவணன் ஒரு பெண் மோகம் கொண்ட அரக்கன் என்றுதான் சொல்லுவார்கள்.

சரி நமது உறவுகளிடம் யார் இராமன் என்று கேட்டுப் பார்த்தால் ?

இந்துக் கடவுள் திருமாலின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர் இப்படி பார்ப்பனீய  கருத்தியலை கக்குவார்கள்.

இந்த தொடர் ஊடாக  நீங்கள் உள்வாங்கும் கருத்தியல் எமக்கான  விடுதலை கருத்தியலாக அமைய வேண்டும் பார்ப்பனீய உளவியல் யுத்தத்தை ஊடருக்கும் கருத்தியலாக இருக்க வேண்டும்.

இந்த கருத்தியலை ஒவ்வொரு தமிழனும் மாற்றி உண்மையான கருத்தியலை உள்வாங்கிக் கொண்டு உங்களது குடுபத்திற்கு உண்மையை எடுத்து சொல்ல  வேண்டும் என்பதற்காகவே இந்த தொடர் எழுதப்படுகின்றது.

நமது தமிழ் மன்னர் இராவணன் பற்றி பார்ப்போம்.

இராவணன்  காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.

முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை சான்றுகள்  இருக்கின்றன.

இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது போக தமிழ் மன்னர் இராவணன்  பார்ப்பனீய காமுகன் இராமனால் கொல்லப்படவில்லை.

உலகத்தின் மூத்த இனம் தமிழினம. தற்போதைய இந்தியாவில் அரப்பா, மொகஞ்சதாரோ என்ற பகுதிவரை பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான் எனறும், உலகத்தின் மிகச்சிறந்த நாகரீகமடைந்த மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான் எனப் பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இன்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

ஆனால் இவ்வளவு பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழினம் இமயம் முதல் குமரிக்கண்டம்  வரை பரவி வாழ்ந்த நம் தமிழினம் இன்று தமிழ்நாடு மற்றும் தமிழீழம்  என்ற குறுகிய பகுதிக்குள் சுருங்கியது எப்படி என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?

உலகெங்கிலும் அடக்கி ஆண்டு வாழ்ந்து வந்த நம் தமிழ் இனம், ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு கைபர் போலன் கனவாய் வழியே துருக்கி பகுதியில் இருந்து புகுந்த ஆரிய இனத்தால் வீழ்ந்தது தமிழினம்.

உள்ளே புகுந்த ஆரிய இனம் மெல்ல மெல்ல நம்மை வஞ்சகமாக புராணம், இதிகாசம் என்ற பெயரில் வீழ்த்தியது.

அப்படி பார்ப்பனீய தமிழர்களுக்கு இடையே நடந்த போரில் ஆரியர்கள் தமிழர்களை  வஞ்சகமாக வெற்றி கொண்டதின் குறியீடகாவே, நம் தமிழ் மன்னர்களான இராவணர், நரகாசுரர், இரணியர் போன்றோர்களை அரக்கர்களாக, அசுரர்களாக சித்தரித்தது வந்தேரி ஆரிய பார்ப்பனிய இனம்.

புராணங்களில் வரும் அரக்கர்கள் அசுரர்கள் ஆகியோர் கருப்பாக இருப்பது என்பது அவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு எளிய உதாரணம்.

அப்படி ஒன்று தான் ஆரியர்கள் தங்களுக்காக எழுதிக்கொண்ட இராமாயணம்.

பார்ப்பனீய -தமிழர்  போரையே இராமாயணம என்றும், இராமாயணத்தில் சொல்லப்படும் அரக்கர்கள், குரங்குகள் என்பவை எல்லாம் தமிழர்ககளைத் தான் என்றும் பார்ப்பனீய ஜவர்களால் நேரு, விவேகானந்தர், பி.டி.சீனிவாசய்யங்கார் போன்றவர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.

அதில் தமிழ் மாமன்னராகிய இராவணன் அவர்களை அரக்கனாக, அசுரனாக சித்தரித்து  பார்ப்பனீய  இராமனை கதாநாயகனாக சித்தரித்து மகிழ்ந்தது வந்தேரி பார்ப்பனீய இனம்.

தமிழ்  இனத்தின் குறியீடாக இராவணன் உயர்ந்து நிற்க்கிறார். அத்தகைய இராவணனை அவரது குடும்ப உறுப்பினர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகியோரையும் உருவ பொம்மைகளாக செய்து, இந்த மாவீரர்களை நெருப்பில் போட்டுக் கெளுத்தும் இராமலீலாவை டெல்லியில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடி அரசாண்ட தமிழ் மக்களை  பார்ப்பனர்கள் அவமதித்து வருகிறார்கள்.


இராவணன் வீரம் போற்றுதலுக்குரியது  மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான். உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான்.

முதன் முதலில் இராவணன்  எங்கள் பாட்டன் என்ற குரல் பொது வெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான்.

இராவணனை தமிழ் மன்னன் என்று ராமசாமி நாயக்கர் சொன்னார். இராமாயன எரிப்பு என்றளவில் போராட்டம் நீண்டது.

சீதையைக் கடத்தி வந்ததைத் தவிர இராவணன் எந்தத் தவறும் செய்யாதவர், அதுவும் தன் தங்கை அவமானப்படுத்தப்பட்டதற்கு பழி வாங்கத்தானேத் தவிர காமத்தால் அல்ல. இந்தக் குரல்கள் மேலெழும்ப ஆரம்பித்திருக்கின்றன.

நாசிக்கில், பழங்குடி மாணவர்களின் ஹாஸ்டலில் இந்த செப்டம்பர் 30ம் தேதி, இராவணன் போல வேடமிட்டு இருந்த மனிதரைச் சுற்றி 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ”இராவண ராஜா வாழ்க, இராவண ராஜா வாழ்க” என முழக்கம் எழுப்பி இருக்கின்றனர்.

விதர்பா அருகில் இன்னொரு பழங்குடிச் சமூகத்தில் தசராவில், இராவணன் உருவ பொம்மை எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் இராவணன், மகிஷாசூரன் உருவ பொம்மைகளை எரிப்பதற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட பத்திரிகை செய்தி பற்றி இங்கு ஏற்கனவே பகிரப்பட்டு இருந்தது.

பழங்குடி மக்களின் திருமணங்களில் இராவணனிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல் நிகழ்ச்சிகள் இப்போது வழக்கமாகி வருகின்றன.

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மே.வங்காளத்தில் பழங்குடி மக்களிடம் எதிர்க் கலாச்சாரம் பரவி வருகிறது. ’மகாராஷ்ட்ரா ராஜ்ய ஆதிவாசி பச்சோ அபியான்’ என்னும் அமைப்பு இராவணன் மீது வாரி இறைக்கப்பட்டு இருக்கும் அவதூறுகளுக்கு எதிராக பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து வருகிறது. அவ்வமைப்பின் தலைவர், அசோக் பாகல், ‘இராவண வழிபாட்டை மையப்படுத்தி செயல்பாடுகள் இருந்தாலும், இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு, அவர்களின் ஆதாரங்களை மீட்டெடுப்பதுதான்’ அமைப்பின் நோக்கமாக சொல்கிறார்.

இந்திய வலதுசாரிகளின் பீடமான ஆர்.எஸ்.எஸ்ஸின் நெற்றிப் பொட்டில் விண்ணென்று உறைக்க, துடிதுடித்துக் கத்த ஆரம்பித்திருக்கிறது. அதன் தேசீயத் தலைவர்களில் ஒருவரான அனிருத்தா தேஷ் பாண்டே ‘இராவணனை மகிமைப்படுத்துவது’ என்பது நாட்டின் கலாச்சாரத்தையே பிளவுபடுத்துவதாகும் என அலறி இருக்கிறார். ‘பழங்குடி மக்களை கெடுக்கிறார்கள்’’ என புலம்புகிறார்கள். ஒன்றிரண்டு பழங்குடி மக்கள் பகுதிகளில்தான் ‘இராவணனை’ நாயகனாக கருதுகிறார்கள், பெரும்பாலானவர்கள் இன்னமும் ராமர் வெற்றி பெறுவதைத்தான் கொண்டாடுகிறார்கள்’ என்று தங்களை சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் தீப்பற்றி விட்டது. புகைய ஆரம்பித்து இருக்கிறது.

பார்ப்பனியம் காலம் காலமாய் இந்த சமூகத்தின் மூளைக்குள் ஏற்றி வைத்திருந்த பிம்பங்கள், சிந்தனைகளை தகர்த்து எறியும் விதைகள் முளைக்க ஆரம்பித்து விட்டன.

யோகி ஆதித்தியநாத் 100 மீட்டர் உயரத்தில் இராமருக்கு சிலை வைக்கட்டும். அவர்களின் இதிகாசங்கள், காவியங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இராமரை மையப்படுத்திய அரசியல் அதிகாரங்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிய இராவணன் மீண்டும் தோன்றி இருக்கிறார்.

தமிழினம் ஆபத்து வரும் போதெல்லாம்  தற்காக்கும் முகமாக இராவண மன்னர் வருவார் அது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபகரனாக இருக்கலாம். தமிழ் நாடு தேசியத் தலைவர் தோழர் தமிழரசனாக இருக்கலாம்.  இதை படிக்கும் உங்களில் பலராகவும்  இருக்கலாம் ஒவ்வொரு தமிழ்மக்களிடமும்  நமது முன்னோர்கள் மரபு இணைந்து உள்ளது.

தமிழ் இனத்திற்கு  எதிராக பார்ப்பனீயமும் அதன் அடிவருடிகளும் உருவாக்கப்படும்  எதிர் வினையாக்கத்தை முறியடிக்க  பேர்  புகழ், அடையாளம், தவிர்த்து  முகம் மறைத்து  இனத்தின் அடையாளம் மட்டுமே பெரியதென போராடும் ஒவ்வொரு தமிழனும் இராவணன் தான்...