17/12/2017
பாமக அன்புமணி ராமதாஸ் அளித்த ஊழல் பட்டியலை படித்து ஷாக் ஆன ஆளுநர் : முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை..?
தமிழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விரிவான பட்டியலை ஆதாரத்துடன் டிசம்பர் 9-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.
அதில், ரூ. 7.10 லட்சம் கோடி ஆற்று மணல் கொள்ளை, ரூ.65 லட்சம் கோடி தாது மணல் கொள்ளை, ரூ. 5 லட்சம் கோடி கிரானைட் கொள்ளை, ரூ. 52 ஆயிரம் கோடி மின் கொள்முதல் ஊழல், ரூ.25 ஆயிரம் கோடி சிஎம்டிஏ கட்டிட அனுமதி ஊழல்.
ரூ. 2000 கோடி கேபிள் டிவி ஊழல், ரூ. 1000 கோடி தார் கொள்முதல் ஊழல், ரூ. 303 கோடி மருத்துவ காப்பீடு ஊழல், ரூ. 39 கோடி குட்கா ஊழல், துணை வேந்தர் நியமன ஊழல், தனியார் பள்ளிகள் முறைகேடு ஊழல் உட்பட 24 ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளது.
இந்த பட்டியலை வரி வரியாக படித்து, உண்மை இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதி அளித்ததாக அன்புமணி ராமதாஸ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அன்புமணி ராமதாஸ் சந்தித்த பிறகு, ஊழல் பட்டியலை கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபாலுடன் சேர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் படித்து பார்த்துள்ளாராம்.
ஊழல் குறித்த புள்ளி விவரங்களை பார்த்து ஷாக் ஆன ஆளுநர், ஒவ்வொன்றையும் மார்க் செய்துள்ளாராம். முழுமையாக படித்து பார்த்த பின்னர், இவை அனைத்தும் அரசு அதிகாரிகளின் உதவியில்லாமல் செய்திருக்க முடியாது.
இதன் மீது நடவடிக்கை எடுத்தால், ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல், அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள். பிறகு நிர்வாகம் சீராகும் என்று ராஜகோபாலிடம் கூறியிருக்கிறாராம்.
இந்த ஊழல் பட்டியல் குறித்து அரசிடம் விளக்கம் கேட்பதற்கான ஆவனங்களை தயார் செய்யும் படி ஆளுநர் கூறியிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசு மீது நடிவடிக்கை எடுக்க அதிகாரம் ஆளுநருக்கு இல்லாவிட்டாலும், உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அதன்மூலம் விசாரணை ஆணையம் அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அதில் அமைச்சர்கள் மட்டுமல்லாது முதல்வரும் சிக்குவார் என்றே கூறப்படுகிறது...
தணுராசனம்...
குப்புற படுத்துக் கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும்.
இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.
பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல், தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது...
கலப்பு திருமணம் முற்போக்கு சிந்தனையா? குரூர சிந்தனையா?
தமிழ் சமூகத்தில் சாதி...
குறிஞ்சி - குறவர்
முல்லை - இடையர்
மருதம் - பள்ளர்
நெய்தல் - பரதவர்
பாலை - எயினர்
இப்படி திணை வாரியாக உள்ள இனக்குழுக்கள் தான் கால ஓட்டத்தில் தங்களுக்குள் தேவையின் அடிப்படையில் கலந்து பல்வேறு அடையாளத்துடன் பல்வேறு இன குழுக்களை உருவாகினர். அந்த இனக்குழுக்கள் தான் இன்று இருக்கும் தமிழ் சாதிகள்.
உதாரணம்...
கவுண்டர் என்ற பெயரே சுமார் 1000 வருடங்களுக்கு முந்திய இலக்கியங்களில் இல்லை - பேரா.இரவி கவுண்டர், தொல்லியல் துறை, PSG கல்லூரி, கோவை.
கி.பி.12 ஆம் நூறாண்டுக்கு முன்பு தமிழில் 'பள்ளி' என்ற இனம் இல்லை.
இவற்றில் இருந்து, வெவேறு திணை மக்கள் தங்களுக்குள் தேவையின் பொருட்டு கலந்து வெவேறு இனக் குழுக்களை உருவாக்கி உள்ளது தெளிவு.
இப்படி உருவான இனக் குழுக்களின் வாழ்வு முறை, பின்னணி, நிலைதன்மை என்பவை உறுதியானவை. காலம் கடந்தும் நிற்பவை. அவ்வாறு இனக்குழுக்கள் புதியதாய் உருவாகும் போது எந்த பிரச்சனையும் (அரிவாள் வெட்டு, கலவரம், ஊரை உடமையை எரித்தல், கொலை) இல்லை.
ஆனால் இன்று திராவிடம் என்ற பெயரில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் வந்தேறி வடுகர்கள் முன்வைக்கும் 'கலப்பு திருமணம்' என்பது அவசர கதியில் வளர்க்கப்படும் 'பிராயிலர் கோழி'வகையை சார்ந்தது.
அவர்களின் பிரச்சாரமே 'கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்கும் திருமணம்' செய்து வைத்தால் சாதி ஒழிந்துவிடும். இதை பார்க்கும் போது, திராவிட கட்சிகள் அனைத்தும் ஏதோ 'கீழ் சாதி' மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை அது அல்ல.
உதாரணம்..
வட தமிழக மாநிலங்களில் வன்னியர் - பறையர் இடையேயும், தென் தமிழகத்தில் பள்ளர் - மறவர் இடையேயும் ஓயாத சாதி மோதல்கள் இருந்து வருகின்றன.
வட மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சாதி சார்பாக குரல் கொடுத்தும், ஊடகங்களில் ஊதி பெருக்கியும், அதை ஒரு மிக பெரிய அரசியலாக செய்து வரும் திராவிட கட்சிகள், இயக்கங்கள், ஆதிக்க சாதி என்று இவர்கள் சொல்லும் வன்னியரை (உண்மையில் இவர்களுக்கு தான் இழப்பு அதிகம்) சாதி வெறியர்கள் போல சித்தரிப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
ஒடுக்கப்பட்டோரின் காவலானாக விளங்கும் இந்த திராவிட இயக்கங்களின் உண்மை நிலை தென் தமிழகத்தில் தான் பல் இளிக்கிறது.
இவர்கள் உண்மையில் யாருக்கு ஒத்துழைப்பு தந்து இருக்க வேண்டும்?
இவர்கள் பார்வையில் கீழ் சாதி என்று சொல்லபப்டும் பள்ளருக்கு தானே?
ஆனால், இவர்கள் ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மறவர்களுக்கு தானே இன்றும் துணை நிற்கிறார்கள்.?
மறவர் ஒட்டு என்பது அதிமுகவுக்கு சொந்தமானது என்பது எழுதப்படாத விதி. இருந்தாலும் திமுக, மதிமுக, தேமுதிக போன்ற ஓட்டுபொறுக்கி கட்சிகளுக்கு அங்கு என்ன வேலை?
மறவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜையை அரசு விழாவாக்கி, அனைத்து ஊடங்களிலும் பிரச்சாரம் செய்து, தங்க கிரீடம் தருகிறோம், விமான நிலையத்துக்கு பெயர் வைக்க மத்தய அரசை வலியுறுத்துகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
ஆனால் பரமகுடியையே ஸ்தம்பிக்க வைக்கும் சுமார் 4 லட்சத்துக்கும் மேலாக பள்ளர்கள் கூடும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூஜை நிகழ்வு எந்த ஊடத்திலும் வெளிவராமல் தடுக்கப்படுவதோ மட்டுமின்றி, ஏகப்பட்ட கெடுபிடிகளும் செய்யபடுகின்றன.
பேருக்கு எல்லா கட்சி சார்பிலும் யாரவது ஒருவர் ஒப்புக்கு சப்பாணியாக வந்து அங்கு தலையை காட்டி விட்டு செல்வர்.
இது என்ன மாதிரியான முற்போக்கு சிந்தனை திராவிடர்களே?
வட நாட்டில் ஒரு நிலை, தென் நாட்டில் ஒரு நிலை ஏன்? எப்போதெல்லாம் அங்கு மோதல் வருகிறதோ அப்போதெல்லாம் 'ஆதிக்க சாதிக்கும், தலித்துக்கும் மோதல்' என்று தான் பேசியும், எழுதியும் வருகின்றனர்.
அதாவது இருவேறு வர்கத்தும் இடையே சண்டை என்று காட்டுவது தான் இந்த திராவிடர்களின் வேலை.
கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் மறவர் - பள்ளர் என்ற இரண்டு சாதிக்கு மட்டுமே அங்கு பிரச்சனை என்பது புலப்படும்..
திராவிடர்கள் ஏதோ ஒட்டுமொத்த 'தேவர்' சமூக மக்களுக்கும் துணையாய் நிற்கிறார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம்.. அங்கே தான் அவர்களின் உண்மையான கொடூர முகம் வெளிப்படுகிறது.
கள்ளர்களின் விழாவான 'பெருங்காம நல்லோர் போராளிங்கள் மூக்கையா தேவர்' நினைவேந்தலுக்கோ, அகமுடையாரின் 'மருது சகோதரர்கள் குருபூஜைக்கோ', மறவர் முத்துராலிங்க தேவரின் குருபூஜை அளவுக்கு எந்த திராவிட கட்சியும் கண்டு கொள்வது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது?
வட மாநிலத்தில் வன்னியருக்கு எதிராக பறையரை களம் இறக்குவதும், தென் மாவட்டங்களில் பள்ளருக்கு எதிராக மறவரை களம் இறக்குவதும் தான் இந்த திராவிட சக்திகளின் நோக்கம்.
இந்த அயோக்கியத் தனமான பின்னணியில் 'கலப்பு திருமண பிரச்சாரத்தை' நோக்கினால், திராவிட கட்சிகளின் உண்மை புலப்படும். என்ன அது?
தமிழ் சாதிகள் தங்களுக்குள் எப்போதும் அடித்து கொண்டே இருக்க வேண்டும்.
பொன், மண், பெண் -- இதில் 'பெண்' என்பவள் மிகவும் sensitive விஷயம் என்பதால், அதில் கை வைக்கின்றனர் இந்த திராவிட சக்திகள்.
இதன் மூலம் இங்கே எப்போதும் பதட்டம் இருந்து கொண்ட இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணமே ஒழிய 'சாதி ஒழிப்பு' என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக்.
'மறவரை வெட்டுங்கடா, மறவர் பெண்ணை கட்டுங்கடா' என்று பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஜான் பாண்டியன்' (தேவேந்திர சமூகம்) ஏதோ ஒரு சூழலில் பேசி இருந்தார். இதில் 'கலப்பு திருமண' யுக்தி இல்லை. திட்டமிட்ட செயல் இல்லை. ஏதோ ஒரு கோபத்தின் காரணமாக அது வெறும் பேச்சோடு மட்டுமே நின்றுவிட்டது.
இது தான் தானாகவே முன்வந்து செய்ய நினைத்தாலும், ஒரு இனக்குழு உருவாகதேவை இல்லாத காரணத்தால் அந்த கருத்து தவிடு பொடியாகும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம்.
ஆனால் உடும்பு பிடிக்க இந்த 'கலப்பு திருமண' விஷயம் திராவிட கட்சிகளால் எப்படி நடத்தப்படுகிறது?
கீழ் சாதி ஆண் என் கையில் இருக்கான். அவனுக்கு நான் முழு சப்போர்ட்டு. மேல் சாதியான உன்னை பயமுறுத்த, அடக்கி வைக்க இந்த கீழ் சாதி ஆணை வைத்து உன் பெண் பெண்டுகளை அபகரிப்பதன் மூலம் உன் உடமைகள் மொத்தத்தையும் ஒழித்து விடுவேன் என்பதை தவிர இந்த திராவிட சக்திகளுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
தர்க்க ரீதியில் திராவிடர்களின் கலப்பு திருமணத்தின் நோக்கத்தை அலசினோம். இனி அதன் பின்னணியை வரலாற்று கண்ணோட்டத்தில் அலசுவோம்.
உண்மை நோக்கம்...
நபர் - சாதி - இனம் :
பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் - பலிஜா நாயுடு - கன்னடர்
ராஜாஜி - தெலுங்கு பிராமணர்
மு.கருணாநிதி - சின்ன மேளம் - தெலுங்கர்
ஜெயலலிதா அம்மையார் - கன்னட அய்யங்கார்
வை கோபால்சாமி - நாயுடு - தெலுங்கர்
விஜயகாந்த் - நாயுடு - தெலுங்கர்
இவர்கள் யாரும் பிறப்பால், மொழியால் தமிழர்கள் இல்லை. இவர்கள் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் அரசியல் தூண்கள்.
மேலே சொன்ன அனைவரும் ஏதாவது ஒரு வகையில் திராவிடத்தை சார்ந்தே வாழ்ந்தும், தமிழகத்தில் அரசியல் செய்தும் வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இதில் எவரிடமும் 'தமிழர்' என்ற அடையாளமோ, கட்சியின் பெயரோ கிடையாது.
காரணம் இவர்களின் மேலே சொன்ன பின்னணி தான். இவர்களால் திராவிடம் பேசி தான் காலம் ஓட்ட முடியுமே தவிர, தமிழ் நாட்டில் தமிழர் என்று சொல்லி அரசியல் செய்ய முடியாது.
பொதுவாக வந்தேறி வடுகர்கள் இன்று திராவிடம் என்ற பெயரில் தமிழனை ஆண்டு கொண்டு இருந்தாலும், எங்கோ யாரவது 'நீ யார் தமிழனை ஆள?' என்று இவர்களை பார்த்து கேட்டு கொண்டும், 'தமிழ் தேசியம்' பேசிக்கொண்டும், செயலாற்றி கொண்டும் தான் இருக்கிறார்கள்.
அதற்க்கு திராவிட சிகாமணிகள் கேட்கும் அடுத்த கேள்வியே 'தமிழன் யார்? அப்படி ஒரு இனமே கிடையாதே' என்பது தான்.
இப்படி கேட்கும் பல திராவிட சிகாமணிகள் 1947 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கோரிக்கை வைத்ததை மறந்துவிட்டார்கள் போலும்.
யார் தமிழர்? அவரின் அடையாளம் என்ன என்று தெரியாமலேயே நாடு அமைக்க இவர்கள் கிளம்பி விட்டார்கள் போலும். விந்தை தான்..
இப்படி பல பேர் பல நேரங்களில் 'தமிழர், தமிழ் தேசியம்' என்ற பெயரில் இயங்கி கொண்டு இருப்பது, திராவிடர்களுக்கு எப்பவுமே ஒரு கிலி தான்.
எனவே 'தமிழன்' என்பதற்கு அடையாளமாய் இருக்கும் இங்கே இருக்கும் பல்வேறு இனக்குழுக்களை எப்படி அழிப்பது? (சிங்களனின் அதே 'கலப்பு மண' டெக்னிக் தான்).
இனத்தை இன குழுக்களின் அடையாளத்தை அழிக்க கத்தி சண்டை எல்லாம் வேண்டாம், திட்டமிட்ட கலப்பே போதும்.
தமிழ் நாட்டில் இருக்கும் இருவேறு பெரும் இன குழுக்கள்...
1. தமிழை மட்டுமே தாய்மொழியாய் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வாழும் இனக் குழுக்கள் (பள்ளர், கவுண்டர், நாயகர், பறையர், கோனார், முக்குலத்தோர் etc ...).
2. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தேறிகளாக வந்த வடுக சாதிகளான நாயக்கர், நாயுடு, கன்னட பிராமின், சக்கிலியர், சின்ன மேளம் (இசை வேளாளர்) போன்ற 'தெலுங்கை, கன்னடத்தை' தாய் மொழியாக கொண்ட, இன்றும் அந்த மொழிகளையே பேசி வரும், தமிழர் அல்லாத இனக் குழுக்கள்.
மேலே சொன்ன இரண்டு வகையான இனக்குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால், 'தமிழன்' என்ற அடையாளம் நாளடைவில் நீர்த்து போய்விடும்.
பின்பு எவருமே 'நீ யார் என்ன ஆள' என்ற கேள்வியையே கேட்கமாட்டார்கள். அதற்க்கு அவசியமே இல்லாமேல் போய்விடும்.
திராவிடர்கள் தங்களது மேலாண்மையை தக்க வைத்து, தமிழனை நிரந்தரமாக அடிமையாக்கி விடுவார்கள்.
சாதி ஒழிப்பு: உண்மையில் செய்திருக்க வேண்டியது..
ஒவ்வொரு சாதிக்குமான வரலாறை அடையாளத்தை புரிந்து கொள்ளுதல்.
எந்த அடிப்படையில் ஒரு சாதி கீழ் என்றும், மேல் என்றும் பட்டியலிடுதல்.
அந்த அடிப்படையில் ஒவ்வொறாக களைதல்.
(உதாரணம்: பறையர் சில இடங்களில் விவசாய கூலிகளாக, பறை அறைவோராக உள்ளனர். ஆனால் அவர்கள் தமிழ் சமூகத்தில் அறிவார்ந்த மக்களாக மட்டும் இன்றி, வேளாளர்களாகவும் இருந்து இருக்கின்றனர். அவர்களின் ஏற்றத்தாழ்வை போக்க, அவர்களின் நிலம் மற்றும் உடமைகள் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டாலே போதும்).
செய்து கொண்டு இருப்பது:
பறையர் சாதி ஆணுக்கும், வன்னியர்/கவுண்டர் சாதி பெண்களுக்கு 'கலப்பு திருமணம்' என்ற திட்டமிட்ட பிரச்சாரம்.
இது மென்மேலும் இந்த இனக்குழுக்களிடையே பிரிவையும் வெறுப்பையும் தான் விதைக்குமே தவிர, ஒரு போதும் இணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்ப்படுத்தாது.
கலப்பு திருமண பிரச்சார குழுவுக்கு தமிழரின் வேண்டுகோள்கள்:
தமிழ் சமூகத்தில் காலத்திற்க்கேற்ப இனக்குழுக்கள் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன. அதன் ஆயுட்காலமும் அதன் நிலைப்புத் தமையும் (stability ) அதிகம். எனவே இங்கே புதிதாக, அதுவும் 'கீழ் சாதி ஆண், மேல் சாதி பெண்' என்று திட்டமிட்டு கலப்பு திருமணம் செய்து வைக்க நினைக்கும் உங்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் விளக்க வேண்டும்.
'இல்லை இல்லை. கலப்பு மணத்தால் மட்டுமே சாதி ஒழியும்' என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், இன்று கலப்பு மணத்தை முன் நின்று நடத்தும், வந்தேறி வடுக திராவிட இயக்கங்கள், வந்தேறி வடுக திராவிட சாதிகளுக்கு இடையே (உதாரணமாக: ஆதிக்க சாதி நாயக்கர் பெண் , கீழ் சாதி அருந்ததியர் ஆண் ) முதலில் 'கலப்பு திருமணத்தை' முடுக்கி விட்டு, செய்து முடியுங்கள். அதன் பலனாக 'சாதி ஒழிப்பு' எந்த வகையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு விட்டது என்பதற்கான போதிய புள்ளி விவரங்களையும், அதனால் சமூகத்தில் ஏற்ப்பட்ட மறுமலர்ச்சியையும் பட்டியல் இடுங்கள்.
தமிழர்களாகிய நாங்கள் (பள்ளர், பறையர், வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர், கோனார் etc ) தேவையின் பொருட்டு எங்களுக்குள் உருவாகிய இனக்குழு உருவாக்க கோட்பாட்டிற்கும், நீங்கள் கொடுக்கும் சமூக மறுமலர்ச்சி புள்ளி விவரங்களுக்கும் ஏதும் வேறுபாடோ, வித்தியாசமோ இருந்தால், அதை நாங்கள் திருத்தி கொள்கிறோம்.
பின்பு அந்த அடிப்படையில் எம்மில் இருந்து கால ஓட்டத்தில் வேறு வேறு இனக் குழுக்கள் உருவாகும் போது பயன்படுத்தி கொள்கிறோம்.
இதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், எம்முள் பிரச்னையை தூண்டுபடி, கலப்பு திருமண பிரச்சாரத்தை செய்து, செயலாற்ற வேண்டாம்.
பின் இணைப்பு..
காதல் திருமணம், கலப்பு திருமணம்: வேறுபாடு :
காதல் திருமணம் -- சாதி மதம் கடந்து இயல்பாய் மனிதருக்குள் தோன்றும் உணர்வு. இது பல ஆயிரம் காலமாக இங்கொன்றும் அன்கோருமாய் நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலும் நடக்கும், மக்களால் விரும்பப்படும் திருமணங்கள் (அது ஆதிக்க சாதியை இருந்தாலும், கட்டு வாழ் பழங்குடி மக்களாய் இருந்தாலும்) பெற்றோரால் நிச்சயிக்கப் படும் திருமணங்களே.
கலப்பு திருமணம்: கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்குமான திட்டமிட்ட திருமணங்கள்...
தமிழர் வரலாறு பகுதி - 4...
(தமிழ் வரலாற்றடிப்படை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்...
8. தமிழ் வரலாற்றடிப்படை...
மனோன்மணீய ஆசிரியர் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள் 1908 - லேயே,
வடஇந்தியாவில் சமற்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து, நாவல (இந்தியா) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அப் புதிரை (Problem) மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும்.
விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீவக்குறையே (Peninsula) இன்றும் சரியான இந்தியாவாக இருந்து வருகின்றது.
இங்குள்ள மக்களுட் பெரும் பாலார், ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடு களையும் மொழிகளையும் குமுகாய (சமுதாய) ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகின்றனர்.
இங்குக்கூட, வரலாற்றாசிரியனுக்கு உள்நாட்டுப் பாவினின்று அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாவாறு, ஆரியப்படுத்தம் பேரளவு நிகழ்ந்துள்ளது. ஆயின், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க இயலுமாயின், அது தெற்கில்தான்.
எவ்வளவு தெற்கே போகின்றோமோ அவ்வளவு பிரித்தெடுக்கும் ஏந்து (வசதி) மிகும்.
அங்ஙனமாயின், அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றா சிரியன், தன் ஆராய்ச்சியை, இதுவரை மிக நீடப் பெரு வழக்காகக் கையாளப்பட்டு வந்த முறைப்படி கங்கைச் சம வெளியினின்று தொடங்காமல், கிருட்டிணை காவேரி வைகையாற்றுப் பாய்ச்சல் நிலங்களினின்று தொடங்குதல் வேண்டும் என்று எழுதினார்.
இந்திய வரலாற்றுத் தந்தையாகிய வின்சென்று சிமிது, தம் இந்திய முந்திய வரலாறு (Early History of India) என்னும் பொத்தகத்தில் இதை மேற்கோளாகக் காட்டி, குமுகாய வேறுபாடுகளும் அரசியல் மாற்றங்களும் உட்பட்ட செவ்விய இந்திய முந்திய வரலாறு விரிவாக எழுதப்படும் போது, கல்வி மிக்க பேராசிரியர் கொடுத்துள்ள குறிப்புகள் கைக்கொள்ளப் பெறும்; வரலாற்றாசிரியரும் தெற்கினின்று தொடங்குவார்.
அத்தகைய புரட்சிமுறையில் வரலாறு வரைதற்கேற்ற காலம் இன்னும் வராமையால், இன்று நான் பழைய முறையையே பின்பற்று கின்றேன் என்று வரைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டாகின்றது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராயிருந்த (P.T.) சீநிவாச ஐயங்காரும் இராமச்சந்திர தீட்சிதரும், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களென்று நாட்டி, முறையே, தமிழர் வரலாறும் (1929), தென்னாட்டு வரலாறும் (1951) சிறந்த முறையில் எழுதியுள்ளனர்.
குமரிநாட்டுக் குறிப்பைக் கொண்ட சிலப்பதிகாரம் 1892-லேயே வெளிவந்ததாயினும், 1920-ற்குப் பின்னரே தமிழாராய்ச்சியாளரி டைக் குமரிநாட்டுக் கொள்கை வலுவுறலாயிற்று.
குமரிநாடே தமிழன் பிறந்தகம் என்பது, இன்று முடிந்த முடிபும் மறுக்கொணா ததுமான உண்மையாகிவிட்டது.
ஆயினும், ஏதேன் தோட்டக்கதை எழுத்துப்படி நம்பப்படுவதனாலும், பிராமணரின் சொல்வன்மை யினாலும், தமிழரின் சொலமாட்டாமையாலும், வையாபுரித் தமிழர் தொகை வளர்ச்சி யினாலும், மேலையர் இன்னும் இவ் வுண்மையை ஒப்புக்கொண்டிலர்.
அதனால், தமிழரின் முன்னோர் மேலையாசி யாவும் கிரீசும் போன்ற நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவர் என்னும் அடிப்படையிலேயே, மேனாட்டு மொழியா ராய்ச்சி நடைபெற்று வருகின்றது.
இவற்றை அறிவியல்களெல்லாம் மேலையர் கண்டு வளர்த்துவருபவை யாதலாலும், சிறந்த கருவிகள் அவரிடை யுண்மையாலும், ஆராய்ச்சி யில்லாரும், கற்ற பேதையரும், வேலைவாய்ப்புப் பெறும் இளைஞரும், கோடிக் குறிக்கோட் பொருளீட்டிகளும், தம் பெயர் விளம்பரத்தையே விரும்பும் தமிழ்ப்பற்றிலிகளும், மேலையர் சொல்வதையெல்லாம் தெய்வத் திருவாய்மொழியென நம்புகின்றனர் அல்லது கொள்கின்றனர்.
மொழிநூலை உலகில் தோற்றுவித்தவர் குமரிநாட்டுத் தமிழிலக்கண நூலாரேயென்றும், மொழியமைப்பில் தமிழுக் கொப்பானது வேறெம்மொழியும் இவ் வுலகில் இல்லையென்றும், மொழித்துறையில் மேலையரே தமிழரிடங் கற்கவேண்டியவ ரென்றும், ஆராய்ச்சியாளர் எத்துணைப் பேரறிஞராயிருப்பினும் அடிப்படை தவறாயின் முடிபுந் தவறாகு மென்றும், கருவிகள் எத்துணைச் சிறந்தனவேனும் அறிவற்றவை யாதலின் விலக்கும் வேறுபாடும் அறியாது என்றும் ஒரே நெறியிற் செல்லுமென்றும் மூழ்கிப்போன நிலவரலாற்றிற்கு அருங்கலந் தவிர வேறு எக் கருவியும் பயன்படா தென்றும் அறிதல் வேண்டும்.
சிறந்த கணிதரும் வானூலறிஞருமான சாமிக்கண்ணுப் பிள்ளை, தவறான அடிப்படைகொண்டாய்ந்ததனாலேயே, கோவலன் மதுரைக்குப் புறப்பட்ட நாள் 17-5-756 என்று முடிபுகொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டு நிகழ்ச்சியை 8ஆம் நூற்றாண்டினதாகக் காட்டி விட்டர்.
ஒரு கொடிவழியிற் பின்னோரை முன்னோராக வைத்தாராயின், பேரன் பாட்டனையும் மகன் தந்தையையும் பெற்றதாகத்தான் முடியும். தலைகீழான அடிப்படை தலைகீழான முடிபிற்கே கொண்டு செல்லும்.
இங்ஙனமே, குமரிநாட்டுத் தமிழ நாகரிகத்திற்கு, நெடுங் காலத்திற்குப்பின் அதன் வழிவந்த ஆரிய நாகரிகம் மூலமாகக் கூறப்படுகின்றது.
வாழை, தாழை என்னுஞ் சொற்கள் முற்றெதுகை வடிவின வேனும், 'வாழைப்பூ' என்பதுபோல் 'தாழைப்பூ' என்று வராது. Patrimony என்பதற் கொத்த பொருள் matrimony என்னுஞ் சொற்கில்லை.
இவ்வகை வேறுபாட்டைக் கருவி அறியாது.பேரா.சீன் பிலியோசா கூறும் மின்னியல் எதிர்ப்புமானியும் செங்கற்காலக் கணிப்பு முறையும், முறையே சவப்புதையலுள்ள இடத்திலும் நிலத்திலுந்தான் பயன்படுமேயொழிய, மாந்தனுடம்பு மண்ணுஞ் சாம்பலுமாய்ப் போனவிடத்திலும் குமரிக்கண்டம் மூழ்கியுள்ள நீர்ப்பரப்பிலும் பயன்படாவென அறிக.
ஆகவே, கருவிகொண்டாராய்வதே அறிவியல் என்றும், நூலுத்தி பட்டறிவுகொண்டு ஆய்வதெல்லாம் உன்னிப்புவேலை (Guess work) என்றும் கூறுவது அறியாமை, வெறுப்பு, அழுக்காறு, தன்னலம், அடிமைத்தன்மை ஆகியவற்றின் விளைவேயாகும்.
விரல் என்னும் பெயர் விரி என்னும் வினையினின்றும், தோகை என்னும் பெயர் தொங்கு (தொகு) என்னும் வினையினின்றும் திரிந்துள்ளதைக் கால்டுவெலார் கண்டுபிடித்தது கருவி கொண்டன்று; தமிழ்க் கல்வியும் சொல்லாராய்ச்சித் திறனுங் கொண்டே. ஒவ்வொரு துறையிலும், உண்மையான ஆராய்ச்சியாளர்க்குப் பிறப்பிலேயே அதற்குரிய ஆற்றல் அமைந்துவிடுகின்றது.
அது பின்னர்க் கல்வியாலும் பயிற்சியாலும் வளர்ச்சியடைகின்றது. தேர்ச்சி பெற்ற மணிநோட்டகன், தொண் மணிகளுள் (நவரத்தினங்களுள்) எதைக் காட்டினும் உடனே அதன் உண்மையான மதிப்பைச் சொல்லி விடுகின்றான். அது ஏனையோர்க்கு இயலாமையால், அதை உன்னிப்பு வேலையென்று தள்ளிவிட முடியாது.
இங்ஙனமே சொல்லாராய்ச்சி அல்லது மொழியாராய்ச்சித் திறன் இயற்கை யிலேயே அமையப்பெற்ற ஒருவர், இருவகை வழக்குத் தமிழையுங் கற்ற பின், ஒவ்வோரெழுத்துஞ் சொல்லும் திரியும் வகைகளையெல்லாங் கண்டு, வரலாறு, மாந்தனூல் (Anthropology), ஞாலநூல் (Geography), நிலநூல் (Geology), உளநூல் (Psychology) முதலிய அறிவியல்களொடு பொருந்த ஆய்வாராயின், பிறருக்குத் தோன்றாத சொல்லாக்க நெறிமுறைகளும் சொல்வேர்களும் சொல் வரலாறுகளும் அவருக்கு விளங்கித் தோன்றும். கீற்றும் (Skeat), வீக்கிலியும் (Weekley), சேம்பர்சு (Chambers) குழும்பாரும் தொகுத்த ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள், கருவித் துணைகொண்டு இயற்றப்பட்டன வல்ல.
ஒருவரது வரலாற்றை, அவர் உண்மையாகப் பிறந்த காலத் தினின்றும் இடத்தினின்றுமே தொடங்கல் வேண்டும். அஃதன்றி, வேறொரு காலத்திலும் வேறொரு நாட்டிலும் பிறந்தவராகக் கொள்ளின், அவர் வரலாறு உண்மையானதாயிருக்க முடியாது. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப்போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும்.
குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை ஒப்புக்கொள்ளாதார், தமிழரேனும் அயலாரேனும், எத்துணைத் தமிழ் கற்றவரேனும், எப்பெரும் பட்டம் பெற்றவரேனும், தமிழியல்பை அறிந்தவராகார்; அதனால் தமிழர் வரலாற்றையும் அறிந்தவராகார். ஆகவே, குமரிநாட்டுக் கொள்கை தமிழ்ப் புலவரின் தகுதிகாட்டும் தனிச் சான்றாகும்.
தமிழரை என்றுந் தமக்கும், தமிழை என்றும் சமற்கிருதத்திற்கும், அடிப்படுத்த விரும்பும் பிராமணர், குமரிநாட்டுண்மையை ஒப்புக்கொள்ளின், தமிழின் முன்மையையும் அது சமஸ்கிருதத்திற்கு மூலமென்னும் உண்மையையும் ஒப்புக்கொண்டதாகுமாதலின், தமிழரும் தம்மைப்போல் வெளிநாட்டினின்று வந்தவரின் வழியினரென்றும், தமிழ் சமற்கிருதத்தினின்று கிளைத்தது அல்லது அதனால் வளம்படுத்தப்பட்ட தென்றும், சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
வங்கநாட்டுப் பிராமணரும் வடமொழி வெறியருமான பர். (S.K.) சட்டர்சியாரும், தென்னாட்டுப் பிராமணரும் சென்னைப் பல்கலைக் கழக வடமொழித் துறைத் தலைவருமான பர். (V) இராகவனாரும், 1952-ல் வெளிவந்த 'நந்தமோரியர் காலம்' (Age of Nandas and Mauryas) என்னும் கட்டுரைத் தொகுதியில், மொழியும் இலக்கியமும் (Language and Literature) என்னும் கட்டுரையில், தமிழரின் அல்லது திரவிடரின் முன்னோர் நண்ணிலக் கடற்கரை வாணரென்றும், கிரேத்தாத் (Crete) தீவில் 'தெர்மிலை' (Termilai) என்றும், சின்ன ஆசியாவின் (Asia Minor) தென்பகுதியிலுள்ள இலிசியாவில் (Lycia) 'த்ர்ம்மிலி' (Trmmili) என்றும் இருந்த இருகிளை வகுப்பினரைச் சேர்ந்தவரென்றும், அவர் பெயர் ஆரியத்தில் 'த்ரமிட' அல்லது 'த்ரமிள' என்றும், பின்னர்த் 'த்ரவிட' என்றும் திரிந்ததென்றும், அவர் தென்னிந்தியாவிற்கு வந்தபின் அப் பெயர் அவர் வாயில் 'தமிழ்' என மாறிற்றென்றும், அவர் மொழியி லிருந்த g j d d b என்னும் பிறங்கு நிறுத்தொலிகள் (Voiced stops) k ct t p என்னும் பிறங்கா நிறுத்தொலிகளாக (Voiceless stops) வலித்துப் போயின வென்றும், உளறிக் கொட்டியிருக்கின்றனர்.
ஒரு தனிப்பட்டவர் வாழ்க்கையை யேனும் ஒரு மாந்தரின வரலாற்றை யேனும் ஆய்ந்து நோக்கின், பிறங்கா வொலி பிறங்கொலியாக வளர்வதேயன்றிப் பிறங்கொலி பிறங்கா வொலியாகத் தளர்வது இயற்கை யன்மையைக் காணலாம்.
இனி, தம் தவற்றுக் கொள்கைக்கு அரண்செய்வதுபோலக் கருதிக் கொண்டு கன்னல், சுருங்கை, மத்திகை என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபான kanna, surigx, (surigg), mastix (mastigos) என்னும் கிரேக்கச் சொற்களைத் தமிழ்ச்சொற்களின் மூலமென்று, தலை கீழாகக் காட்டுவர் ஆரியரும் ஆரிய அடிமையரும்.
இதன் விளக்கத்தை என் 'வண்ணனை மொழிநூலின் வழுவியல்' என்னும் நூலிற் காண்க.
தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்னும் உண்மையை, (P.T.) சீநிவாசையங்கார் எழுதிய Stone Age in India, History of the Tamils என்னும் நூல்களையும், இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய Origin and Spread of the Tamils. Pre-Historic South India என்னும் நூல்களையும் படித்துணர்க...
இலிமினாட்டி யும் உலக அரசியல்...
முதலில் இலுமினாட்டி என்ற சொல்லுக்கான தமிழ் வார்த்தையை காண்போம்.
இலுமினன்ட் - ஒளிக்கும் பொருள்.
இதலிருந்து உருவானது தான் இலுமினாட்டி.
தங்களை தாங்களே ஒளி பொருந்தியவர்கள் என்று கூறுவோரே இலுமினாட்டிகள்.
ஆனால் இவர்களுக்கு சரியான தமிழ் பெயர் பெரு முதலாளிகள். அதென்ன பெரு முதலாளிகள்.
நம்ம சன், விஜய், ஜெயா, ஸ்டார், ஜி போன்ற தொலைக்காட்சி குழுமங்களுக்கும் டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற இந்திய முதலாளிகளுக்கும் சம்பளம் கொடுக்கும் முதலாளிகள் தான் இந்த பெரு முதலாளிகள்.
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் இது போன்ற முதலாளிகளுக்கு சம்பளம் தருகின்றனர்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தவர்களே இவர்கள் தான்...
இதென்ன புதுகதையா இருக்கு என்று பலரும் நினைக்கலாம்.... பின்வருவதை படித்தால் புரியும்...
வணிகம் என்ற பெயரில் ஐரோப்பியர் இங்கு வந்த பின் இங்கிருந்த ஒற்றுமையின்மையை கவனித்து நம்மை ஆளவும் செய்தனர் ஆங்கிலேயர்..
அவ்வாறு அடிமைப்பட்ட இந்தியாவை மட்டுமல்ல உலகின் பல பகுதிகளையும் ஆளுமை செய்ய இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் மற்றும் ஜெர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டது..
அந்த சண்டையின் போது பண உதவிகள் செய்ததும் இந்த பெரு முதலாளிகளே.
ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமைக்கு வந்து சண்டையிடுவதை நிறுத்திக்கொண்டனர். (உண்மையில் அதை விட்டால் வேறு வழியில்லை).
அந்த இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவின் கிழக்கிழிருந்து போரிட்டு வந்த சுபாஸ் சந்திர போஸ் தலைமையிலான போர்குழுவும் இங்கிலாந்து படை வீரர்களை தோல்வியன் விழிம்பிற்கே தள்ளியது.
மேலும் இந்திய மக்கள் பலரும் அகிம்சை வழியில் போராடி வந்தனர்.
இதனால் அந்நிய பொருட்களை இந்தியாவில் விற்பதற்கு பல சிக்கல்கள் உருவானது.
இதனால் இங்கிலாந்து (ஐரோப்பிய நாடுகள் அனைத்தும்) அரசு இனி உலக மக்களை மிரட்டி ஆண்டு வருவது இயலாத காரியம் அவர்களை அவர் போக்கிலேயே வாழ வி ட்டு பின் நாம் பலன் காண வேண்டும் என்ற நோக்கத்தில் சுதந்திரம் தருவதாக நல்லவன் வேசம் போட்டனர்.
இந்த வேசத்தை உண்மையென நம்பி நம் முன்னோர்களும் சந்தோசம் கொண்டனர்.
ஆனால் ஆங்கிலேயன் இந்தியா வருவதற்கு முன் இருந்த ஒற்றுமையின்மை சுதந்திர போராட்டத்தின் காரணமாக காணமல் சென்று அனைவரும் நாட்டு நன்மைக்காக ஒன்றினைந்து இருந்தனர்.
இந்த ஒற்றுமை ஒருநாள் ஆங்கிலேயனுக்கே ஆபத்தாக திரும்பி விடும் என்று பயந்த ஆங்கிலேயன் பிரிவினையை வளர்க்க நேரு மற்றும் ஜின்னா மூலமாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு தூண்டிவிட்டனர்.
இதனால் எண்ணற்ற உயிர் சேதமும் பொருள் இழப்பும் ஏற்பட்டது மட்டுமல்ல, இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு நிரந்தரமான இடையூறும் உருவானது.
என்னங்க இலுமினாட்டின்னு தலைப்ப போட்டுட்டு சுதந்திர போராட்ட வரலாறா இருக்கேனும் தோணுதா? விசயத்துக்கு வருவோம்....
இரண்டாம் உலகப்போருக்கு முன்னாடி ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவன முதலாளிகள் அடுத்து என்ன செய்வது என்று யோசிச்சு ஒரு முடிவை எடுத்தாங்க, அந்த முடிவெடுத்தவங்க தான் பெரு முதலாளிகள். அந்த திட்டம் தான் இன்று நம்மை இந்நிலையில் வைத்துள்ளது.
வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் விற்க கூடாது என்று சுதந்திரத்திற்கு முன் போராடிய காங்கிரஸ் இயக்கம் ஆட்சி பொருப்பில் வந்தது.
காந்தியுடன் பல போராட்டங்களில் பங்கெடுத்த பல சுதந்திர போராளிகள் அரச பொருப்பில் அமர்ந்தனர்.
கிபி 1960ம் ஆண்டு பசுமை புரட்சி என்றொரு திட்டத்தை கொண்டு வந்தனர். அந்த திட்டத்திற்கு வறட்சியை காரணம் காட்டியுள்னர் அப்போதய அமைச்சர்கள்.
அப்போதைய மக்கள் தொகை 40 கோடி மற்றும் மழையின் அளவு இன்றுள்ளதை விட அதிகம், அன்றிருந்த விளைச்சல் நிலம் இன்று இருப்பதை விட பல மடங்கு அதிகம். மேலும் இன்றுள்ள விவசாயிகளை விட அன்றய விவசாயிகளும் அதிகம்.
அப்படி இருக்க இன்று 120 கோடி மக்களுக்கு உணவளித்தது போக வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்கின்றோம்.
ஆனால் அன்று 40 கோடி மக்களுக்கும் அப்போதைய அரசாங்கம் உணவாக வழங்கியது மைதாமாவையும் உளுத்து போன அரிசியையும் தான்.
இது எவ்வாறு நடந்தது என்று அன்று ஆண்டவர்களுக்கே வெளிச்சம் (ஆண்டவனல்ல, ஆண்டவர்).
சரி இந்த பசுமை புரட்சியின் விளைவாக என்ன செய்தனர் என்று பார்ப்போம்.
வெளிநாட்டு உரங்களையும் விதைகளையும் இந்தியாவில் விற்பதற்கு அனுமதித்தனர்.
உரங்கள் என்றால் வெடி குண்டு தயாரிக்க பயன்பட்ட அம்மோனியாவையும் சேர்த்து. மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகள்.
இந்த விதைகள் திரும்பவும் வேண்டுமானால் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தே வாங்க வேண்டும்.
இதனால் சுதந்திரத்திற்கு முன் வெளிநாட்டு பொருட்களை எதிர்த்த காங்கிரஸே வழிய வந்து வெளிநாட்டு பொருட்களுக்கு ஆதரவளிப்பது பலவிதமான விமர்சனங்களை உருவாக்கியது. இருப்பினும் பசுமை புரட்சி அமலாக்கம் செய்யப்பட்டது.
அடுத்து செய்த புரட்சி வெண்மை புரட்சி..
அரசாங்கம் வெளிநாட்டு உரங்களை விற்பதற்கு கூவிக் கொண்டே இருந்தாலும் நம் மக்கள் நாட்டு மாடுகளை வைத்துக்கொண்டு அதில் கிடைக்கும் கழிவுகளையே விலை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தி வந்த காரணத்தினால் ராசாயன உரத்தை வாங்க வில்லை.
இதனால் நாட்டு மாடுகளின் பயன்பாட்டை குறைக்க உருவானது தான் இந்த வெண்மை புரட்சி ( தற்போது பீட்டா).
அதாவது நம்ம ஊர் மாடுகள் 1-2 லிட்டர் பால் தான் தரும் வெளிநாட்டு மாடுகள் 10-15 பால் தரும் என்று வெளிநாட்டு மாடுகளின் விந்தை இறக்குமதி செய்து நாட்டு மாடுகளையும் கலந்து விட்டனர்.
இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் இயந்திர வருகையின் காரணமாக இந்திய காளையினங்களும் காணமல் போனது. வேறு வழியின்றி விச உரங்களை வாங்கி மண்ணில் போட்டனர் நம்ம ஊர் விவசாயிகள்.
இவ்வாறு நாம் உண்ணும் உணவுக்கான விதைகளையும் உரத்தையும் வெளிநாடுகளில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இதனால் தான் இன்று உணவு பற்றாக்குறை இல்லாமல் இருப்தாக கருத்து தெரிவிக்கும் சிலர் அந்நிறுவனங்களின் கை கூலிகள் என்பதை மறந்து விடக்கூடாது.
இந்த உரங்களையும் விதைகளையும் விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்களையே நாம் பெரு முதலாளிகள் என்று கூறுகிறோம்.
அதெல்லாம் சரிங்க தொலைக் காட்சிகளுக்கும் இந்திய பணக்காரர்களுக்கும் இவர்கள் சம்பளம் கொடுப்பதாக சொன்னது எதற்கு என நீங்க நினைப்பது புரியுது...
கிபி 1990 வரை விதைகள், உரங்கள் மற்றும் இயந்திர வாகனங்களை விற்று பெற்ற லாபம் பற்றாததால் அத்தியாவசிய பொருட்களின் மேல் கவனத்தை திருப்பினர் இந்த பண முதலைகள்.
அத்தியாவசிய பொருட்கள் என்றால் சோப்பு, பேஸ்ட், பவுடர் போன்ற பொருட்கள்.
இதற்கு முன்பே சந்தையில் இருந்த (சைசூர் சேன்டல், கோபால் பல்பொடி போன்றவை) இந்திய பொருட்களை ஓரம் கட்டிவிட்டு அவர்களுடைய பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக நல்ல விளம்பர தூதுவர்களை நியமிக்க தொடர்ந்து இந்திய பெண்களுக்கு உலக அழகி பட்டத்தையும் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் மாறி மாறி வழங்கினர் 1994 முதல் 2000 வரை.
ஆனால் 2000 திற்கு பிறகு இந்தியாவில் அழகிகளே இல்லையாம்.. (அவர்கள் கொடுக்கும் கிரீமை போட்டால் எங்கிருந்து அழகு வரும்).
அந்த உலக அழகிகளும் தான் அழகாக காரணம் இந்த சோப்பு அந்த கிரீம் என்று நடித்துக்காட்ட, நாமும் அவர்கள் காட்டியதை பார்த்து மயங்கி அந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினோம் பயன்படுத்துறோம்.
இப்படி தான் அனைத்து அழகு சாதன பொருட்களும் இந்தியா வந்தது.
இதற்கும் மத்திய அரசு உலக மயமாக்கல் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது தான் காரணம்.
இப்படித்தான் கிருக்கு விளையாட்டு வீரர்களால் சத்து பவுடர்கள் என்று குப்பைகளையும், கூல்டிரிங்குஸ் என்று அக்காமாலா கப்சிகளையும் விற்பனை செய்தனர் இதே பெரு முதலாளிகள்.
இதே காலகட்டத்தில் இந்தியாவில் உருவான தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் போட்டுக் கொன்டனர். இதை விளம்பரப் படுத்தினால் இவ்வளவு பணம் தருவோம் என்று.
சற்று சிந்தித்து பாருங்கள் இந்தியா (உலகம்) முழுவதும் உள்ள தனியார் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு தேவையான பண உதவி எங்கிருந்து கிடைக்கிறது. விளம்பரதாரர்கள் மூலமாக தானே கிடைக்கிறது.
விளம்பரங்களில் வரும் தகவல் உண்மையா பொய்யா என்று கூட ஆராயாமல் அப்படியே திரையிடுவதை சட்டமும் தடுக்க வில்லை, தொலைகாட்சி நிறுவனங்களும் கவனிப்பதில்லை. பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் திரையிடுவர் .
ஆக இந்த பண முதலைகள் என்ன சொல்கின்றனரோ அது மட்டுமே தனியார் ஊடகங்களில் வெளிவரும். (பொது ஊடகம் என்பது நம்மை ஏமாற்ற கூறும் கதை).
இப்போது சொல்லுங்கள் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு முதலாளி யார்?
நிச்சயமாக விளம்பரதாரர்களே...
சரி அடுத்து உள்ளூர் முதலாளிகளுக்கு எப்படி இவர்கள் முதலாளி ஆனார்கள் என்று பார்ப்போம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாட்டு மக்கள் புத்திசாலிகள் அதனால் மாசு ஏற்படுத்தக்கூடிய தோல், துணி, சிமென்ட் மற்றும் இதுபோன்ற சில தொழிற்சாலைகளை எதிர்த்து போராடினர்.
ஆனால் அந்த சொகுசு வாழ்கையை கைவிட முடியவில்லை. அதே நேரம் அந்த பெரும் பண முதலைகளும் வியாபாரம் தடைபடக்கூடாது என்பற்காக ஏமாளி நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள எலும்பு பொருக்கி நாய்கள் சிலவற்றிடம் அந்த தொழிலை இங்கு தொடங்க அறிவுறுத்தினர். அதற்கு பொருளுதவியும் செய்தனர்.
அதாவது இங்குள்ள எலும்பு பொருக்கி நாய்கள் இங்குள்ள ஏமாளிகளை வைத்து தயாரித்து கொடுத்து விடுவர், அதை வாங்கி சென்று பல மடங்கு லாபம் வைத்து அவர்கள் நாட்டில் விற்று விடுவர் இந்த பண முதலைகள்.
அதில் உறுவாகும் கழிவுகளை நம்ம ஊர் அரசியல் வியாதிகள் ஆற்றிலும் கடலிலும் கலந்து விட ஏற்றவாறு உதவியும் செய்வர்.
இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் முதலாளி யார்?
வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து பொருள் வாங்கும் பண முதலைகளே...
இதில் நம்ம ஊர் முதலாளிகள் இலாபம் பார்ப்பது பிடிக்காமல் அவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளை நிர்வகிக்க ஏதுவாக உதவுவதே இப்போது கொண்டு வரப்படும் நில உரிமை சட்டம் மற்றும் அந்நிய முதலீடு போன்றவை.
இப்போது சொல்லுங்கள் நாம் சுதந்திர நாட்டில் சுதந்திரமாக உள்ளோமா?
பின் வரும் பொருட்கள் சந்தைக்கு வருமுன் மனித வாழ்க்கை எப்படி இருந்தது இப்போது எப்படி உள்ளது?
Soap - Lux, Hamam, Rexona, Lifebouy etc.
Tooth Paste and Brush- Colgate, Pepsodent, closeup etc.
Shampoo - Clinic plus, Allclear, H&S, Meera sikkai, Karthika Sikkai, Pantene Dove etc.
Powder - Ponds, Spice, Z, Dermi cool etc.
Washing Soap and Powder - Rin, Surf Exel, Tide, Ujala Etc.
Cool Drings - Pepsi, cock tropicona etc.
Energy Drings - Horlics, Boost, Bournvita etc.
கோதுமை மாவு
பாசுமதி அரிசி
ஓட்ஸ்
நூடுல்ஸ்
சேமியா
மசாலா பொருட்கள்
அனைத்து சமயல் எண்ணெய்கள்
கழிவரை கழுவும் மருந்து
பேனா
பென்சில்
கார்
பைக்
செல்போன்
தொலை தொடர்பை வழங்கும் சிம் கார்டு நிறுவனங்கள்
ஆயத்த ஆடைகள்
பெட்ரோல்
டீசல்
சிமென்ட்
இப்படி இன்னும் பல பொருட்கள் ஒரு ரூபாய் மிட்டாயிலிருந்து கோடி ரூபாய் இயந்திரங்கள் வரை இவர்களுடைய நிறுவனங்களால் தான் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
இவர்களது பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் உருவாகும் நோய்களுக்காக நாம் உண்ணும் மருந்துகளும் மாத்திரைகளும் தயாரிக்கும் நிறுவனமும் இவர்களுடையது தான்.
என்ன தலை சுற்றுகிறதா?
முதன் முதலில் தெரிந்த போது எனக்கும் அப்படித்தான் இருந்தது.
தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பாக இணைக்ப்பட்டுள்ள படத்திலுள்ள நிறுவனங்களாகத் தான் இருக்கும்....
சதாசிவ பிரமேந்திரர்...
சதாசிவ பிரமேந்திரர் கோயில் கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது.
நெரூர்.. கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது . இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. நெரூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரி நாதரே வந்து பதிகம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. அக்னீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் சமாதி அமைந்துள்ளது.
சதாசிவ பிரமேந்திரர் வரலாறு..
சதாசிவபிரமேந்திரர் மதுரை மாநகரில் 17-18 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை சோமநாத அவதானியார், தாயார் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார்.
உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார். தீவிர யோக சாதனைகளில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாய் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்திதப் பிரக்ஞன் ஆனார். அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரம்மேந்திரரின் வழக்கமானது. ஊன் இல்லை. உறக்கம் இல்லை. உணவு இல்லை. உடை இல்லை ஆசை, அபிலாஷைகளைத் துறந்த அவதூதராக நடமாடத் துவங்கினார்.
ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார்.
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.
பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)
நூல்கள்..
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.
ஜீவ சமாதி..
பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.
தல சிறப்பு..
நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு (தான்தோன்றி) லிங்கமும் அமைந்திருக்கிறது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு.
இத்தலத்தில் பெளர்ணமி பூசை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூசை , சித்திரை மாத குரு வார பூசை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது...
Subscribe to:
Posts (Atom)









