09/04/2018

தமிழனுக்கு சோதனை காலம் - இந்த அடிமை ராவுக் காலங்களால்...


அமானுஷ்யம் - மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா?


நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர்.

ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’...

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.

அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம்.

ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர்.

ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிகிறது. என்கிறார்.

சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை...

இந்த இரண்டு செய்திகளையும் ஒப்பிட்டு பாருங்ள் உங்களுக்கே அரசியல் புரியும்...


குடகு...


62 ஆண்டுகள் முன்பு வரை கர்நாடகாவின் பாகமாக இராத பகுதி குடகு.

1956 ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்துடன் இணைய விரும்பிய பகுதி குடகு.

காவிரி உற்பத்தி ஆகும் இடமான தலைக்காவிரி இருக்கும் பகுதி குடகு.

கன்னடரை விட தனித்துவமான தேசிய இனமாக  இருந்தாலும் கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்டது குடகு.

காவிரிப் பிரச்சனைக்காக பதவியைத் தூக்கியெறிந்த அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அதற்கு தீ்ர்வாகக் கேட்டது தனி குடகு.

மொழியும் கலாச்சாரமும் அழிந்து கன்னடவர் குடியேற்றத்தையும் ஆதிக்கத்தையும் சந்திக்கும் பகுதி குடகு.

நாளைய தமிழர்நாட்டின் ஒரு மாநிலம் குடகு.

செய்தி: காவிரி நீர் கிடைக்க குடகு போராட்டததுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்
வியனரசு பேட்டி
நாம் தமிழர் கட்சி...

கார்பரேட்களின் அடிமை இந்தியா...


தறிகெட்டு ஓடிய அரசு பஸ் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் 40 பேர் உயிர் தப்பினர்...


சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று காலை 6 மணியளவில் தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதில் 40 பயணிகள் இருந்தனர்.

மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் டிரான்ஸ்பார்மர் மீது பயங்கரமாக மோதி நின்றது.

இதில், டிரான்ஸ்பார்மாரில் இருந்து கம்பிகள் உருகுலைந்த மொத்தமாக பஸ்சின் மீது விழுந்தது.

நல்ல நேரமாக அப்போது அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததால் டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால், பெரும் விபத்தில் இருந்து 40 பேர் உயிர் தப்பினர்.

டிரான்ஸ்பார்மர் மீது பஸ் பயங்கரமாக மோதியதில் 2 பெண்கள், டிரைவர் உட்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...

தலைப்பு "விழுந்தாரு எழுந்தாரு" னு வைய்யிங்கடா...


அதிக நேரமில்லை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்...


மேலும் தகவலறிய நமது தோழரை தொடர்பு கொள்ளுங்கள்.. 99629-82016...

தேசிய இனம் என்பது என்ன ? தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன ?


ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, கால வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.

இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race ) அடுத்த கட்டம் தேசிய இனம் (Nationality).

ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம்.

ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது.

தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பிராமணர்களின் மனக்கோணல், இந்தப் பொது வரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.
       
தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது.

இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது.

திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல. அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல.

ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் திராவிட என்று அழைத்தனர்.

தமிழ் என்பதை ஒலிக்கத் தெரியாமல் த்ரமிள் என்று உச்சரித்து அதுவே பின்னர் த்ரமிள, த்ராவிட என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள் (பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.

இந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது.

சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.
         
அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த மொழிக் குடும்பத்தில்  தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி ( Proto Language ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார்.

அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான த்ராவிட என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு திராவிடம் என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை.

ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.

பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும்.

அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
தனித்தன்மை எதுவுமில்லை.

அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.

ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் திராவிட என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

இந்தியர் என்பது மரபினமும் அல்ல. தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர் (Geo political name).

ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை ஐரோப்பியர் என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை இந்தியர் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல.. இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள் (Hindoos) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர்.

இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே. எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்.

இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தியர்  என்று ஒரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறவில்லை.

ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை  (Citizenship) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன.

இந்தியாவின் குடிமகன் (Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.

 இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும்  இந்தியன் என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்ட விரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.

சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள்.

இந்தியர் என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள்.

இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர்.. கவரிங் தங்க நகை போல..

அரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு இந்தியர்  என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும்.

ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக இந்தியர் என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர்.

தமிழர், தெலுங்கர், வங்காளி என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. இந்தியக் குடியுரிமை என்று மட்டுமே அது கூறுகிறது.

தமிழர் போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.

லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் (Union of nations) என்றே அழைத்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் விதி  371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது...

கவண் மீம் தொடர் - 2...

தொலைக்காட்சிகளின் முன்னோட்டம்....