29/04/2018

முடக்கத்தான் கீரை...


Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது...

சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை...

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌து தான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச் சென்று விடும். இதுபோல் எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்...

நீரின்றி அமையாது உலகு...


சித்தர் ஆவது எப்படி ? - 16...


வேறு ஒன்றும் தோன்றா நிலை...

தோன்றா நிலையில் அனுபவப் பட்ட நாம், அந்த தோன்றா நிலையில் நாம் நம் கடமைகளை செய்ய வில்லையென்றால் அந்த தோன்றா நிலை பெற்றதின் மூலம் எந்த பயனையும் அடைவதில்லை..

அந்த தோன்றா நிலையில் ஒரு காரியத்தை செய்தால், அந்த தோன்றா நிலை கெட்டுதானே போகும் என்ற ஒரு கேள்வி எழலாம்.. ஒரு காரியத்தை செய்ய மனம் தேவைப் படுகிறது..

தோன்றும் நிலையில் உள்ள மனம், நிச்சயமாக தோன்றா நிலையை பாதிக்கவே செய்யும்.. உண்மை தான்..

ஆனால் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது..

உணவு உண்டு கொண்டு இருக்கிறோம்.. அது மனம் தன்னை ஈடுபடுத்தி அந்த காரியத்தை செய்ய தொடங்குகிறது.. இப்பொழுது அந்த மனம் அந்த உணவு உண்ணும் காலத்தில் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தால் அந்த உணவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை...

அதனால் அந்த உணவில் உள்ள உணர்வு மிக மிக குறைந்து, அந்த உணர்வின் மூலம் பெற வேண்டிய கனலை பெற முடியாமல் போய் உண்கின்ற அந்த உணவு நாசம் ஆகிறது..

ஒரு தோராயமான கணக்கில் பார்த்தால் அந்த உணவில் நூறில் ஒரு பங்கே நாம் கனலை பெறுகிறோம் என்பது மிக மிக ஆச்சரியமான விசயம் மட்டும் அல்ல, மிக மிக உண்மையான விசயமும் கூட...

நாம் வாழ்வில் பாடுபட்டு சேர்த்ததை எப்படி யெல்லாம் விரையம் செய்கிறோம் என்பதை அந்த தோன்றா நிலை அனுபவத்தின் மூலம் நமக்கு நன்கு விளங்க வரும்...

அந்த தோன்றா நிலை அனுபவத்தை பெற்றபின், நாம் உணவு உட்கொள்ளும் போது, அந்த ஒரு செயலை தவிர வேறு ஒன்றும் தோன்றா நிலையில், அந்த உணவினை உட்கொள்ள வேண்டும்..

வேறு ஒன்றும் தோன்றா நிலையில் நாம் அந்த உணவினை உட் கொள்ளும் போது, அந்த உணவில் நூற்றுக்கு நூறு பங்கு கனலை பெற்று, நாம் வலிமை உடையவர்கள் ஆகிறோம்..

இதை விட மிக உயர்ந்த சிறப்பு எங்கு இருக்கிறது ?

நாம் கடினப் பட்டு ஈட்டிய பொருள்களில் உச்ச கட்ட பயனை பெறுகிறோம்..

மேலும் மேலும் பொருள் ஈட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுகிறது.. ஒரு எளிமையான வாழ்க்கையில் ஒரு பெரிய சக்கரவர்த்தியை விட மிக அதிகமான பயன் தூய்ப்பை பெற்று நமது தேடுதல்கள் அறவே நின்று போய் விடுகிறது...

அந்த தோன்றா நிலை அனுபவத்தை தோன்றும் நிலை ஒன்றில் இணைத்து அந்த தோன்றும் நிலை ஒன்றை தவிர வேறு ஒன்றும் தோன்றா நிலையில் செயல் படும் போது அந்த செயல் சித்தி பெறுகிறது..

சித்தி என்பது பூரணத்துவம் என்பதாகும்..

இப்படியாக செய்கின்ற காரியங்கள் எல்லாம் சித்தி பெறுவதால், ஒரு மனிதன் சித்தர் ஆகிறான்..

சித்தர்கள் செய்கின்ற காரியங்கள் எல்லாம் பூரணத்துவமாக இருக்கும்.. சகலமும் சித்தி பெறும் என்பது இப்படி வேறு ஒன்றும் தோன்றாநிலையில் செய்யும் போது மட்டுமே..

இப்படி தோன்றா நிலை அனுபவத்தை தோன்றும் நிலையோடு பொருத்தி வேறு ஒன்றும் தோன்றா நிலையோடு செயல் படுவதையே அன்பு என்கிறோம்..

தோன்றா நிலையாகிய அருள் சக்தியான அகரமும், தோன்றும் நிலையான புவியின் உலகியல் ஒரு செயலும் பு என்ற எழுத்தும் வேறு ஒன்றும் தோன்றா நிலையாகியாகிய ஒரே முடிவான ஒன்றான ன் என்ற கடைசி மெய் எழுத்தானது இணைந்து அன்பு ஆனது..

இதில் பதினெட்டாம் மெய் எழுத்தான "ன்" என்பது தான் மிகவும் முக்கியமானதாகும்..

அதுவே வேறு ஒன்றும் தோன்றா நிலையில் ஒரு செயலை ஒரே முடிவாக வைத்துக் கொண்டு அந்த செயலை சித்தி அதாவது பூரணத்துவம் அடையும் வண்ணம் ஆற்றலை தரவல்லது..

சகலமும் சித்தி பெற ஒரு தகுந்த உபாயத்தை அறிந்த நாம் தோன்றா நிலை அனுபவத்தின் அவசியத்தை உணர்ந்து வாசிப் பயிற்சியிலே கற்றுக் கொண்டதை நடை முறைக்கு கொண்டு வந்து சகலத்தையும் சித்தி பெற செய்து சித்தராவோமாக...

இப்படி தான் மற்ற கைதிகளுக்கு விளக்கம் கொடுப்பிங்களா சிபிஐ...


தமிழனின் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, "சவுக்கை' கண்டு பிடிப்பு...


காலம் காட்டி - ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில், 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சவுக்கை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது...

திண்டுக்கல், பழநி ஆண்டிபட்டி மலைப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தலைமையில், ஆர்வலர்கள் கன்னிமுத்து, சவுரப், ராமலிங்கம் ஆகியோர் குழுவாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இந்த "சவுக்கை' கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரும் உருண்டை பாறாங்கற்களை அருகருகே அடுக்கி, அதன் மேல் ஒரு பலகை பாறாங்கல்லை வைத்து மூடியுள்ளனர்.

தூரத்திலிருந்து பார்க்கும் போது இவ்வமைப்பு ஆயுத எழுத்து வடிவில் இருக்கும். சூரிய ஒளியின் நகர்வுப்பாதையை கணிக்க இடைச்சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்கள் இவ்வமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனை சவுக்கை என்பர். 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

ஓர் ஆண்டில் 6 மாதம் காலத்திற்கு சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் பயணத்தை கீழிறங்கும் காலம் என்றும், மீதி உள்ள 6 மாத காலத்தில், தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் காலத்தை கதிரவன் மேலேறும் காலம் என்றும் கணித்துள்ளனர்.

இந்தாண்டு கீழிறங்கும் துவக்க நாளான அதாவது சூரியன் வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் ஆடி 1-ல் சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக சூரிய உதயத்தில் ஒளிக்கதிர்கள் தென்மேற்காக துல்லியமாக ஊடுருவுவதை காண முடியும். மூன்று நாட்கள் இதுபோல் ஒளியை காணலாம்.

இதைப்போல் கதிரவன் மேலேறும் உத்தராயணகால, அதாவது சூரியன் தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் துவக்க நாளான தை 1-ல் சூரியன் மறையும் போது, ஒளிக்கதிர்கள் வடகிழக்காக துல்லியமாக ஊடுருவதற்கு ஏற்பவும், இந்த சவுக்கை அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சவுக்கைகள் இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் உள்ளன...

இம்பூட்டு தான் நீதிமன்றம்...


சிகிச்சைக்கு சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் கைது...


சென்னையில் சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து  பாலியல் தொல்லை செய்ததோடு, அவற்றை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக நாட்டுசுப்பராயன் வீதியில் உள்ள ஆர்.எம்.கிளினிக்குக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் பரிசோதனை என்று கூறி மருத்துவர் சிவகுருநாதன் அத்துமீறியுள்ளார்.

மேலும் பெண்ணின் ஆடைகளை களையச் செய்து, தனது செல்போனில் மருத்துவர் சிவகுருநாதன் படம்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பெண் மிரட்சியுடன் வெளியே வந்த போது, சிகிச்சைக்காக காத்திருந்த உமாபதி என்பவர் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அப்போது மருத்துவர் சிவகுருநாதன், பரிசோதனை என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ளார்.

இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட மருத்துவர், செல்போனில் பதிவு வீடியோவை அழித்து விட்டு மெமரி கார்டையும் எடுத்து உடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், மயிலாப்பூர் போலீசார் மருத்துவர் சிவகுருநாதனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரிடம் மற்றொரு செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் சிகிச்சைக்கு வந்த பெண்களின் ஆடைகளை களைந்து பரிசோதிக்கும் காட்சிகள் இருந்தன.

இவற்றின்பேரில், மருத்துவர் சிவகுருநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பெண்களிடம் அத்துமீறியது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது...

போராடாத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை! போராடு தமிழினமே இல்லையேல் இவ்வுலகம் நம்மை புதைத்துவிடும்...


சுருளிமலை அதிசயம்...


உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.

மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.

பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும், தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில் தான் அமைந்துள்ளது.

இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலை தான் "சுருளி மலை" ஆகும்.

இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம்...

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்...

மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது. இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெடுக்கவும், சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து, அன்னதானம் செய்தனர்.

அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான். அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.

கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம், மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது. படுத்த நிலையில் தவழ்ந்து தான் போக வேண்டும். எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை  பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

உள்ளே மிகப்பெரிய அரங்கம். ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம். திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும், நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.

மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும், அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.

சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா, தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.

மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.

மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்...

இயற்கை அழிக்கும் அனைத்து செயல்களில் நமது தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது...