02/06/2018

சீதாப்பழம்... சின்ன பழம்... பெரிய சத்துக்கள்...


சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும்.

இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும்.

பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.

சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.

பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.

எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக் கூடியது...

பாஜக - அதிமுக இனைந்து நடத்தும் தூத்துக்குடியில் தமிழினப் படுகொலை...


பிள்ளைகள் பிணமாக தொங்கும் பேய் தீவு – உண்மைச் சம்பவம்...


மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், ‘சோச்சி மில்கோ’ என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம்.

பல வருடங்களுக்கு முன் அந்த கால்வாய் வழியாகச் சென்ற ஜூலியன் சாண்டனா பரேரா, ஒரு இளம் பெண்ணின் பிணத்தையும் அவள் விட்டுச் சென்ற பொம்மையையும் கண்டறிந்தார்.

அவளது காலடிச் சத்தத்தையும், ‘அப்பா நீங்க ஏன், என்ன காப்பாத்தல?’ என்கிற அலறல் சத்தத்தையும் கேட்டு மிரண்டு போன அவர், அவள் விட்டுச் சென்ற பொம்மையை ஒரு மரத்தில் கட்டித் தொங்க விட்டார்.

தொடர்ந்து, பேயாய் அலையும் அந்த இளம் பெண்ணின் ஆன்மாவை சாந்தப்படுத்துவதற்காக கடந்த 50 வருடங்களாக அந்த தீவை பொம்மைகளால் அலங்கரிக்க ஆரம்பித்தார்.

இவ்வளவும் செய்த அவரே, சில வருடங்களுக்கு முன் அந்த தீவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தற்போது, இவரது குடும்பத்தினர் இவர் விட்டுச் சென்ற வேலையை செய்து வருகின்றனர்.

அங்கு வைக்கப்படும் பொம்மைகள் அனைத்திலும் அந்த பெண்ணின் ஆவி புகுந்து ஓலமிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயம் ஊடகங்கள் மூலமாக கசிந்து தற்போது ஏராளமான புகைப்படக் கலைஞர்களும் சாகச விரும்பிகளும் அந்த தீவிற்கு வந்து பொம்மைகளை மரத்தில் தொங்க விட்டுச் செல்கின்றனர்.

பரேரா இறந்து 14 வருடங்கள் ஆன போதும், இன்னும் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக சில பார்வையாளர்களும், அது அவளது அலறல் சத்தம் இல்லை பரேராவின் அலறல் சத்தம் என்று சிலரும் கூறி வருகின்றனர்.

ஒரு சிலரோ, அவர் எந்த பொணத்தையும் பாக்கல, ரொம்ப நாளா இந்த தீவுப்பக்கம் தனியாவே இருந்ததால ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவர இப்படி எல்லாம் செய்ய வச்சிருக்குதுன்னு கூலா சொல்றாங்க.

எது எப்படியோ, இப்ப வரைக்கும் இருட்டிய பிறகு அந்த தீவுக்குப் போக பலர் பயந்து நடுங்குவது தான் இந்த தீவோட ஹைலைட்...

உலக மக்களின் எதிரி அமெரிக்கா...


அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி....


ஒட்டியாணம் என்பது பெண்கள் இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது.

இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடையலங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் முற்காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும்.

ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாணங்கள் விலைக்கு கிடைக்கின்றன. தனி உலோகங்களால் மட்டுமன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங்களும் செய்யப்படுகின்றன.

ஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படுகின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடையணிகளை உடைக்குள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது.

இத்தகைய இடையணிகள் நுண்ணிய உடையினூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைகளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கியங்கள் தருகின்றன...

தூத்துக்குடியில் இரவில் வீடு புகுந்து கைது செய்வதாக புகார்...


பெண்கள் அதிகம் பேசுவது ஏன....?


ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்?

பெண்கள்தான் அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம்.

அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள் அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல் பூர்வமாகவே அதை உண்மை என்று சொல்லியுள்ளனர்.

ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்சு(ஸ்)பி 2 என்ற புரதம்தான் காரணமாம்.

பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். ஆண்களை விட இது அதிகமாகும். ஆண்களை விட பெண்கள் ஒரு நாளைக்கு 13,000 வார்த்தைகள் அதிகமாக பேசுகிறார்களாம்.

பெண்கள் இவ்வாறு அதிக அளவில் பேச அவர்களது மூளையில் உற்பத்தியாகும் பாக்சு(ஸ்)பி 2 புரதம்தான் காரணமாம். இது பெண்களின் மூளையில் அதிகமாக சுரக்கிறதாம்.

மனிதர்களைப் பொறுத்தவரை பெண்களின் மூளையில் இந்த புரதம் அதிகம் சுரக்கிறது. எலிகளில், ஆண் எலிகளின் மூளையில் இது அதிகம் சுரப்பதால் ஆண் எலிகளிடம்தான் ஒலி (Sound) அதிகம் இருக்கிறதாம்.

இந்த பாக்சுபி 2 புரதத்திற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மொழிப் புரதம் என்று பெயரிட்டுள்ளனர். காரணம் இதுதான் பேச்சுக்களுக்கும் வார்த்தைப் பிரயோகத்திற்கும் முக்கியக் காரணம் என்பதால். எனவே ஆண்களே, இனியும் பெண்களை பொத்தாம் பொதுவாக வாயாடி என்று சொல்லாதீர்கள், வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல் கூராய்வு அறிக்கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து தான் இறந்தார்கள் என்று இருந்தால் மட்டுமே உடல்களை பெற்றுக் கொள்வோம் என உறவினர்கள் உறுதியாக உள்ளனர்...


இலுமினாட்டியும் குறியீடுகளும் : ஒற்றை கண்...


இவர்கள் தங்கள் அடையாளச் சின்னங்களை நமக்கு பரீட்சியமான கட்டிடங்கள், புத்தகங்கள்,  திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,  ஆல்பம் பாடல்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் வழியாக நமக்கு காட்டுகிறார்கள்..

இவை நம்மை பயமுறுத்துவதற்காகவும் தங்கள் தெனாவட்டை காட்டுவதற்காகவும் இன்னும் சில விடயங்களுக்காகவும்..

இந்த பதிவில் முக்கியமான ஓர் அடையாளத்தை பற்றி மட்டும் பார்ப்போம்..

பிரமீடின் மீது ஒற்றை கண்..

இதுவே இவர்களின் பிரதானமான அடையாளச் சின்னமாக அறியப்படுகிறது..

இதன் பொருள் என்ன?

இந்த பிரமீடை நோக்குங்கள்..

இதன் முழுமையான பொருளை நான் தற்பொழுது சொல்லப் போவது இல்லை. ஏனெனில் அது உங்களை எதிர்மறையாக பாதிக்கலாம்..

எனவே சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்..

அந்த பிரமூடில் 13 வரிசையில் கற்கள் உள்ளன..

இது 13 குடும்பங்களை குறிக்கும்.

மொத்தம் 72 கற்கள் நமக்கு தெரிகின்றன இது இவர்களின் இறைவனின் 72 பெயர்களை குறிக்கும் காபாலாவின் படி..

இது யூதர்களின் ஓர் வழிபாட்டு முறை..

மீண்டும் சொல்கிறேன் இலுமிணாட்டிகள் யூதர்கள் அல்ல..

யூதர்கள் இலுமினாட்டிகளின் சிறந்த பணியாளர்களாக இருக்கிறார்கள்.

அடுத்து மேலே உள்ள ஒற்றைக்கண் இது All seeing eye எல்லாவற்றையும் பார்க்கும் கண் என்று அழைக்கப்படுகிறது..

இது எகிப்திய கடவுள் 'ரா ' வின் கண் எனப் பொதுவாக பார்க்கப்படுகிறது..

ஆனால் நாம் வரலாற்றில் எகிப்துக்கு முன் சென்று இதன் பொருளை அறியலாம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்..

இந்த கண் முக்கோண வடிவ அதிகாரத்தின் உச்சியில் அமைந்துள்ளது..

தங்களுக்கு கீழ் தான் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் இதன் மூலம் காட்டுகிறார்கள்..

அவர்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது..

இந்த அடையாளம் முக்கியமாக எங்கே உள்ளது தெரியுமா?

அமேரிக்காவின் ஒரு டாலர் நோட்டில்..

அடுத்தப் பதிவில் அடுத்த அடையாளச் சின்னத்தோடு சந்திப்போம் தமிழ் சொந்தங்களே..

இதனை நமது இசுலாமிய வழியை பின்பற்றும்  உறவுகள் தச்சால் என்கிறார்கள்..

நீங்களை தமிழை அறிந்தால் தான் இவர்களை முழுமையாக அறிய முடியும்...

இயற்கை என்னும் தாயை தேடி...