01/07/2018

மறக்கப்படுமோ மானவீரம்?


மானம் என்பது உயிர்களின் உணர்வோடு கலந்த ஓர் உயிர்த்துடிப்பாகும்..

பூனை மிகவும் சாதுவான விலங்கு. ஆனால் அதனையே ஓர் அறையுள் பூட்டிவைத்து அடித்துப்பாருங்கள். தன் முன்னங்கால் நகங்களை விரித்து கொடும்புலியைவிட வேகமாகப் சீறிப்பாய்ந்து கடித்துக் குதறும். அதுவும் மானமே.

இப்படி உலக இயற்கையிடமிருந்து மனிதன் முதலில் கற்றபாடம் தற்காப்பு.

தற்காப்பால் எழுந்ததே தன்மானம். அதனை மனித வரலாற்றின் அடிச்சுவட்டை நுணுகி ஆராய்ந்து பார்ப்போர் அறிவர்.

மொழியும் இனமும் தோன்றமுன் மனிதன் தன்னந் தனியாக நின்ற போது ஏனைய கொடிய விலங்குகளிடமிருந்தும் இயற்கையின் சீற்றத்தில் இருந்தும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உதவியது அவனது தன்மானம் கொடுத்த நெஞ்சத்துணிவே. தன்மானம் கொடுத்த நெஞ்சத் துணிவுடன் சேர்ந்த வேகத்தையே வீரம் என்கின்றோம். அந்த வீரம் மட்டும் மனிதனுக்கு இல்லாது இருந்தால் இன்றும் மனிதன் விலங்காகவே வாழ்ந்திருப்பான். காட்டுவாழ் விலங்கினத்திடமிருந்து மனிதனை மனிதனாக இனங்காட்டிய மனித செயற்பாடுகளுள் முக்கிய பங்குவகிப்பது தன்மான வீரமே.

அதனால் பண்டைத்தமிழர் வீரத்தைப் போற்றினர். தமிழரின் வீரம் என்னும் அந்த நெஞ்சக்கனலை ஊட்டி வளர்த்தோர் தாய்மாரே. அதனாலேயே வீர சுதந்திரம் வேண்டி நின்ற பாரதியாராலும் ‘வீரம் சேர்ப்பது தாய்முலைப்பாலடா’ என்று பாடமுடிந்தது. எந்த உயிரும் தாய்மையின் செழுமையின் சிலிர்ப்போடு தான் பெற்றதை எதிரிகளிடம் இருந்து காக்க வீறு கொண்டு எதிர்த்து போராடும். அது இயற்கையின் நியதி. அந்தத் தனிப்பண்பில் சிறிதும் குறைந்தவர்களாக தமிழ்ப்பெண்கள் இருக்கவில்லை என்பதை பண்டைய இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், நடுகற்களும் இன்றும் சான்றுபகர்கின்றன. தமிழ்ப் பெண்களில் வீரைகள் இருந்ததை மணிமேகலை சொல்கிறது. பல மாவீரம் மிக்க மறக்குல வீரைகளை புறநாநூறு காட்டுகிறது.

குழந்தை இறந்தாலும், தசைப்பிண்டமாய்ப் பிறந்தாலும் அவற்றின் மார்பில் வாளால் கீறி வீரத்தழும்பு ஏற்படுத்திய பின்னரே அவற்றைச் நம்முன்னோர்கள் புதைத்தார்கள் என்பதற்கு
“குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்”
என்று சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை எழுதிய சங்க இலக்கியப் பாடலே சாட்சி.

தன்னலம் பொதுனலனாக மாறும் போது தன்மானம் இனமானமாக மாறுகிறது. தம் இனமானம் காப்பதற்காக இறந்தோரை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருன்ந்தே தமிழர் வணங்கினர் என்று சொல்வதைவிட அவர்களை விடச்சிறந்த கடவுளும் இல்லை என்று நம்பினர் என்பதை புறநானூறு சொல்கிறது. இனமானத்துடன் பகைவரின் படைகளின் முன்னின்று எதிர்த்துவராது விலக்கிப் பாதுகாத்து, தாமும் இறந்து நடுகல்லானோரின் நடுகல்லைத் தொழுவதன்றி, நெல் சொரிந்து வழிபடும் கடவுள் வேறு கிடையாது என்பதை
“கல்லே பரவினல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”
என்று மாங்குடிமருதனார் என்னும் புலவர் சொல்வதால் அறியலாம்.

புறநாநூற்று மறக்குல வீரர்களை விடச்சிறந்த மாவீரர்களை மாவீரைகளை கடந்த முப்பது வருடத்தில் நமது ஈழம் கண்டது. மா என்றால் மரணம் என்ற கருத்தையும் தரும். மரணத்தை மகிழ்வோடு எதிர்கொள்ளும் வீரமே மாவீரமாகும். எமது மாவீரர்கள் யாருக்காக, எதற்காக, வன்னிமண்ணில் சாவே வா! உன்னை சாப்பிடுகின்றேன் என நின்றார்கள்? எதை நினைந்து தம் ஆசைகளை, பாசங்களைத் துறந்து களம் புகுந்தார்கள்? தம் இன்னுயிரை கொத்துக் குண்டுகளுக்கும் இரசாயனக் குண்டுகளுக்கும் ஏன் கொட்டிக் கொடுத்தார்கள்?

தன் இனம் வாழ, தன் தாய்மொழி நின்று நிலைக்க, வருங்கால ஈழத்தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ தம்மையே ஈந்த அந்தச் செம்மல்களை நாம் மாறப்போமா? ஒன்றா! இரண்டா! எத்தனை ஆயிரம் மாவீரர் தம் ஆருயிரைக் ஈழத்து விடியலுக்கு வித்திட்டுச் சென்றிருக்கிறார்கள். சுந்திரம் வேண்டும் மனிதராய், தமிழராய் அவற்றை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமா?

ஆசை, பாசங்களைத் துறத்தல் தவம் என்றால், தன்நலம் கருதாது பிறர் நலனுக்காக தம் இன்னுயிரத் துறந்து மாவீரர் ஆனோர் மா-தவத்தோர் அல்லவா? தவம் செய்பவர்களில் யாரை உலகம் வணங்கும் என்பதை

“தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும்”

என திருவள்ளுவர் தவம் என்னும் அதிகாரத்தில் காட்டுகிறார். ஆதலால் மாதவத்தோர் ஆன மாவீரரின் மாவீரம் மறக்கப்படுமோ? இழிநிலை வந்தபோது வாழாத மானமுடையோரின் புகழின் சிறப்பை இவ்வுலகே கைதொழுது வாழ்த்தும் என்று திருவள்ளுவரே கூறுகிறார்.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு - 970

தமிழராகிய நாமும் உலகுடன் சேர்ந்து மானவீரரை விளகேற்றித் தொழுது ஏத்துவோம்...

வணிகப் போர்-1...


பேய்களை உணர முடிவது எப்படி..?


அறிவியல் விளக்கம்..

பேய்கள் சார்ந்த ஆராய்ச்சியில் அனுதினமும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

ஆவிகள் பற்றி 1840 மற்றும் 1850-களில் கண்டுப்பிடிக்கப்படாத உண்மைகள் இப்போது கண்டுபிடிக்கப்பட காரணம் தொழில்நுட்ப உதவியால் தான் என்பதை யாரும் எளிதில் மறுத்துவிட இயலாது..

அப்படியாக 45% மக்கள், பேய் மற்றும் ஆவிகளை நம்புகின்றனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு..

ஆனால், பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் என்பது தான் நிஜமாம்..

அறிவியல் விளக்கங்கள் :

பேய்களையும், ஆவிகளையும் நாம் பார்ப்பது, உணர்வது, எதிர் கொள்ளுவது ஆகியவைகளுக்கு நிஜமான காரணங்களாக சில அறிவியல் விளக்கங்களை தருகிறது ஒரு ஆய்வு..

மேலும் அந்த ஆய்வு, பேய்கள் சார்ந்த விந்தைகளுக்கான தெளிவான 10 அறிவியல் காரணங்களையும் வழங்கியுள்ளது..

காரணம் 01 : திடீரென்று நம் கண்களுக்கு தோன்றி மறையும் நிழல் உருவங்கள் போன்ற நிகழ்வுகள் நடக்க காரணம், நம் மூளையின் ஒரு வகையான மின்சார தூண்டல் தானாம் (Electric Stimulation Of The Brain)..

காரணம் 02 : ஆவிகளுடன் நடத்தப்படும் உரையாடல்களின் போது நமக்கு கிடைக்கும் பதில்களுக்கு காரணம் பேய்களோ ஆவிகளோ இல்லை - இடியோமோட்டார் எஃபெக்ட் (Ideomotor Effect) தான் காரணம்..

விளைவு : தன்னை அறியாத நிலையில் ஏற்படும் உடல் அசைவுகள் சார்ந்த விளைவுகளை தான் இடியோமோட்டார் எஃபெக்ட் என்பர்..

காரணம் : ஆவிகளுடன் தொடர்பு கொள்ள பெரிதளவில் பயன்படுத்தப்படும் ஓவ்ஜா போர்ட்டில் (Ouija board) நம் கைகள் தானாக நகர்வதற்கும் அசைவதற்கும் காரணம் இந்த விளைவு தானாம்..

காரணம் 03 : தானாக ஒரு பொருள் அசைகிறது என்றால் அதற்கு காரணம் ஏதோ ஒரு ஆவியின் சக்தி என்று நினைத்து விடாதீர்கள், அதற்கு காரணம் - இன்ஃப்ரா சவுண்ட் (Infrasound)..

சப்தம் : அதாவது மனித காதுகளால் 20-20,000 ஹெர்ட்ஸ் (Hertz) வரையிலான சப்தங்களை மட்டும் தான் கேட்க முடியும். அதற்கு கீழ் இருக்கும் ஒலிகளை நம்மால் கேட்க முடியாது..

அதிர்வு : அதாவது 20 ஹெர்ட்ஸ் கீழ்  ஒலியை நம்மால் கேட்க முடியாது, ஆனால் அதை அதிர்வுகளாய் உணர முடியும், அப்படியான அதிர்வுகளால் தான், சில பொருட்கள் தானாக அசைய காரணமாகும்..

அதிகம் ஏற்படும் : பொதுவாக புயல் பலமான காற்று, வானிலை மாற்றம் போன்றவைகளால் இன்ஃப்ரா சவுண்ட் அதிர்வுகள் அதிகம் ஏற்படுமாம்..

காரணம் 04 : உங்களுக்கு வரும் ஆவிகள், பேய்கள் சார்ந்த ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் கனவுகளுக்கு காரணம் - ஆட்டோமட்டிஸம் (Automatism)..

மறந்த நிலை : அதாவது அதீதமான தன்னை மறந்த நிலையில் கற்பனைகளும், எண்ணங்களும் வேறொரு வழியாக நம்மில் நுழையும் விளைவு தான் ஆட்டோமட்டிஸம் எனப்படும்..

காரணம் 5 : குறிப்பிட்ட அறையின் இடம் மட்டும் குளிர்ச்சியாக இருக்க காரணம், அங்கு ஏதோ ஆத்மா இருக்கிறது, பேய் வல்லுநர்கள் சொல்லும் 'கோல்ட் ஸ்பாட்' (Cold spot) என்று நினைக்க வேண்டாம் அது - டிராஃப்ட் (Draft) ஆகும்..

அறை : அதாவது, அடைத்தே கிடக்கும் அறைக்குள் இருக்கும் ஒவ்வொரு பொருள்களுக்கும் தனிப்பட்ட உஷ்ணநிலை இருக்கும். ஏதாவது சிறு வழியாக சில்லென்ற காற்று நுழையும் போது சக உஷ்ண நிலையோடு இணையாத குறிப்பிட்ட அந்த இடம் மட்டும் குளிர்ச்சியாய் தோன்றுமாம்..

மீதி 5 காரணங்களை அடுத்த பகுதியில் காண்போம்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்...


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

தமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா, (ஜா)வா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.

தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது. உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது

பாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) சு(ஸ்)வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.

பாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராச(ஜ) சூய யாகமொன்றை இந்திரப்பிரச(ஸ்)தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் யாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட சுவர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார். சு(ஸ்)வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் ,பாரத் என்றால் நாடாகும்

தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம்.

பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா, கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.

3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள். மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார்.

பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.

தமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள். வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள், நாளாடைவில் இங்கு குடியிருபுக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்...

தூக்கம் ஏன் ஏற்படுகிறது......?



தூக்கம் ஏன் ஏற்படுகிறது? என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தங்கள் கண்டரிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

நம் உடலில் உள்ள உறிப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.

நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதியில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.

இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர்.

இதையை நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம். நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இனைப்புகள் தடைபடுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளையின் அடிப்பகுதி (Hypothalamus) பகுதியே தூக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று சிலர் கூறுகின்றனர்.

தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிருபிக்க விசு(ஸ்)கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும்.

விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும். மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்கவேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதிப்பிக்கப்படுவதற்கும் அதிகநேரம் தூங்கவேண்டும் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்கவேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

அமெரிக்க விஞ்ஞானி தாமசு(ஸ்) ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்...

பாலியல் உரிமைகள் தினம் ஜூன் - 29...


தமிழக பாஜகவின் நிலை படுமோசமாகி வருகிறது...


கட்சியில் எப்படியாவது ஆள் சேர்க்க ரோட்டில் போகிறவர்களை பிடித்து வலுக்கட்டாயமாக சால்வை போட்டு போட்டோ எடுத்து கட்சியில் சேர்ந்து விட்டதாக திருப்தி அடைந்து கொள்கின்றனர்...

AI GUARDMAN - செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்...


மலையில் தெரியும் மனிதரின் முகம்: கனடாவில் 2 வருடமாக தேடிக் கண்டுபிடிக்கப்பட்டது...


கனடா நாட்டில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் , மனிதனுடைய முகம்போல காட்சியளிக்கும் ஒரு கல்பாறை உள்ளது.

இதனை Hank Gus என்னும் நபர் கவனித்துள்ளார். அவர் விமானத்தில் பயணித்தவேளை கீழ் உள்ள அழகான மலைத்தொடர்களை புகைப்படம் எடுத்துள்ளார்.

அதேவேளை அதில் மனிதனுடைய முகம் இருப்பது போன்று ஒரு பெரும் பாறை இருப்பதையும் அவர் கவனித்துள்ளார்.. இதனையடுத்து அவர் தமது புகைப்படங்களை பின்னர் பார்த்து வியந்துபோனார்.

இருப்பினும் அந்த மலை எங்கே இருக்கிறது என்று அவருக்கு தெரியாது.கடந்த 2 வருடங்களாக அந்த மலை இருக்கும் இடத்தை தேடி அலைந்த Hank Gus , இறுதியாக அமைந்துள்ள இடத்தை கண்டுபிடித்து. பின்னர் வாடகைக்கு ஒரு சிறிய விமானத்தை அமர்த்தி அதன் அருகே சென்று புகைப்படம் எடுத்துள்ளார்.

இதுவரை எவரும் இந்த மலையின் இப்பகுதியை புகைப்படம் எடுத்ததே இல்லையென்கிறார்கள்...