01/07/2018

வந்தேறி சிங்கங்கள் | Immigrant Lions...


சிங்க குணத்தை பிரதிபலிப்பவர்கள்.

ஒரு ஆணின் (XY) உடம்பில் அவனது பாலினத்தைத் தீர்மானிக்கும் மரபணுக்களில் X மற்றும் Y ஆகியவை உள்ளன. Y என்பது ஒருவனது தந்தையிடமிருந்து கடத்தப்படுவது. X என்பது ஒருவனது தாயிடம் இருந்து வருவதாகும். ஆனால் ஒரு பெண்ணுக்கு (XX) இரண்டுமே X மரபணுக்கள் தான்.

பாட்டனிடம் இருந்து தாத்தன், தந்தை, மகனென்று ஆண்களுக்கு மட்டும் கடத்தப்படுவதே Y மரபணுவின் சிறப்பு.

ஆண் சிங்கமானது எதிரி சிங்கத்தை மட்டும் கொல்லாது, அதன் அனைத்து ஆண் வாரிசுகளையும் கொன்றுவிடும். அக்கூட்டத்தின் பெண் சிங்கத்தோடு புணர்ந்து தனது Y மரபணுவை பரப்பிவிடும்.

இதனை ஏன் சொல்கிறோம் என்றால் சிங்கம் என்ற விலங்கின் குணத்தை ஆராய்ந்து அதைத் தங்கள் வாழ்வில் சோதனை செய்து பார்த்து பெருமளவு வெற்றியும் கண்டவர்கள் வணிகர்களே. சிங்கமே இல்லாத நாடுகளிலும் சிங்கச் சின்னங்கள் எவ்வாறு வந்தன என்பது இப்போது புரிந்திருக்கும்.

சரி கதைக்கு வருவோம். அரேபிய வணிகர்களின் இப்படிப்பட்ட வழித்தோன்றல்கள் தான் மலபார் மாப்பிள்ளைகளும், சோனகர்களும். இதே போல உலகெங்கிலும் கோலோச்சிய தமிழ் பேசிய வணிகர்களின் இப்படிப்பட்ட Y மரபணுக்கள் யாரென்பதை உங்களின் தேடலுக்கே நாங்கள் விட்டுவிடுகிறோம்.

வீண் பெருமைகளை மட்டுமே ஆராய்வதைத் தவிர்த்து இது போன்ற ஆக்கப்பூர்வமான தேடல்களில் ஈடுபடுங்கள் என்பது எங்கள் வேண்டுகோள்.

சிறிய துணுக்கு தருகிறோம். உலகின் எந்தந்த மூலைகளில் எல்லாம் தமிழ் உள்ளது என்று நீங்கள் பெருமை பேசினீர்களோ அங்கெல்லாம் கடல் சாத்தனது Y மரபணுக்கள் மட்டுமே உள்ளன..

They reflect the nature of lion.

Males (XY) have two different kinds of sex chromosomes (XY) which determine the sex of an individual. The Y chromosome is inherited from his father and the X chromosome from his mother. But females have two same kind of sex chromosomes (XX).

The specialty of the Y chromosome is that it maintain an unbroken line of inheritance through which the chromosome passes from male to male only.

When a lion kill its enemy, it will also kill all the male heirs of the enemy. It will then mate with the lioness from enemy's pride and spread its Y chromosome there.

The reason why we say this is merchants are the one who have observed this nature of lion and successfully tested it in their lives as well. Now, you might understand how the symbols of lion were present in the countries where there is no lions.

Let's come back to our story. Mappilas and Moors are also born in such way for the Arab traders. We will leave it for your research to find the people who carries the Y chromosome of the Tamil speaking merchants all around the world.

Rather than wasting your time on bragging about the prides, we request you all to engage in this kind of useful researches.

We give you a small clue about this. Wherever you say that Tamil language has been spread, there are only Y chromosomes of the sea traders...

பிள்ளையார் - Vinayaka...


கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மவர்மனின் படை தளபதி பரஞ்சோதி வாதாபியில் இருந்து ஒரு யானை தலை கொண்ட சிலையை கொண்டு வந்த பிறகேதமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு தொடங்கியது என்று சொல்வார்கள். ஆனால் நாமறிந்த வரலாற்றில் இடம்பெறாத பிள்ளையார் வழிபாடு நகரத்தார்கள் பின்பற்றி வந்தனர்.

அவர்களது வாய்மொழி கதையில் உள்ள வரலாற்றின்படி பிள்ளையார் நோன்பு பழங்காலம் தொட்டே அவர்களின் முக்கிய விழா. அதாவது பூம்புகாரில் வணிகம் செய்த காலத்தில் தொடங்கிய விழா என்பார்கள். மரகத விநாயகரை தான் அவர்கள் முக்கிய கடவுளாக வழிபடுகிறார்கள்.

பிள்ளையாருக்கும் செட்டிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. சிரிக்கும் புத்தர் & பிள்ளையார் சிலைகளில் உள்ள ஒற்றுமையை பாருங்கள். அதை செட்டியார் பொம்மை என்றும் அழைப்பர். அச்சிலையை நீங்கள் சேட்டு கடைகளில் பார்க்கலாம். சிதலப்பதியில் உள்ள ஆதி விநாயகரும் புத்தரே..

Many people would say that Vinayaka worship in Tamilakam started when Pallava king Narasimavarman's army general, Paranjothi brought an elephant-headed idol from Badami in the 7th century BC. But there were Vinayaka worship among the Nagarathars which is not usually included in the history that we known today.

They are celebrating a festival named "Pillaiyar nonbu" (fasting for the Vinayaka) which is their important festival since ancient time. The festival started during the period when they do trading at Poompuhar. It can be found in their traditional story that passed down through generations.

There is a close connection between the Chetty people and Vinayaka. You would have noticed the similarities between Laughing Buddha and Vinayaka. People call the Laughing Buddha also as chettiar doll. You can see the toys in Seth people's shop. Adhi Vinayaka idol in Sithalapathy is in fact a Buddha idol...

புதுஉயிர் படைத்தலில் உள்ள மர்மம்...


மனிதனுக்கான நினைவு பெட்டகம் (external hardisk for human beings)..

தொப்புல் கொடி கயிறு (இதுவே usb data cable wire ).

external memory...

இரு உயிருர்கள் சேர்ந்து ஒரு உயிரை படைக்கிறது தனக்கான சந்ததியினரை உருவாக்கி கொண்டே தான் இருக்கு ! இதற்கான காரணம் ஒன்றுதான் தாங்கள் வாழ்ந்த வாழ்விற்கு ஒரு சான்று தான் எல்லா உயிரிகளும் இறப்பதற்கு முன்  நினைவுகளை விதைத்து விட்டுத்தான் போகிறது அந்த நினைவுகள் பல எண்ணங்களுக்கு வித்திடவும் செய்யும் (குழந்தை).

மனிதனுக்கு மூளையில் நினைவுகளை நிறந்தரமாக பதிவு செய்து கொள்வான் ஆனால் தன்னோட குழந்தைக்கு அவன் தன்னிலிருந்த விதையை போட்டால் அந்த விதை மரமான பிறகு அதற்கு விதை தந்த மரத்தை பற்றி சொல்லும்
(அப்படி சொல்லும் விதை
அது external hard disk போன்று செயல்படும் அந்த குழந்தை கருவில் இருக்கும் போது நினைவுகளை சேமித்துக்கொண்டே இருக்கும் வெளிய வந்த பிறகு அது ஒரு கணிணி ஆன பிறகு அந்த hard disk la memory ya use panikum இது எல்லாம் தனி தனி பகுதி இல்ல in field battery mathiri).

(ஏழாம் அறிவு படத்தில் காண்பது போல தான்  தேவைனா நேரத்தில் முன்னோர்களை பற்றி எடுத்துக்கலாம் பல வழியில் இதுவும் ஒன்று ).

இந்த நினைவுகளை ஒரு உயிர் இல்லாத அல்லது நமக்கனாதாக இல்லாத பொருளில் பதியலாம் அது நல்லது ஏன்னா வேறு ஒரு உயிர்ல பதியும் போது உன் நினைவுகளை அந்த உயிரின் நினைவு புதைத்துவிடும் 😒 (sathguru கோவையில் ஒரு சிலையில் தன்னோட நினைவுகளை பதிவு செய்து கொண்டு இருகிறார் ).

usb - இது எப்படினா ஒரு computer la இருந்த இன்னொரு computer ku file transfer செய்வது போல தான்.

கருவில் உருவாக்கி கொண்டிருக்கும் குழந்தை (computer/mobile)  memeory la எந்த file um இல்லாத நானல செய்திகளை அதிகமாக வாங்குவதே வேலை அதே வேலையில் பாகங்களையும் உருவாக்கி கொள்ளும் (file receiving).

கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவையான சக்தியை தாய் உணவாக எடுத்துக்கொண்டு சக்தியை குழந்தைக்கு தருவாள்  இந்த இணைப்பிற்கு உதவும் ஒரு  கருவி தான் தொப்புல் கொடி (mobile ku charge podavum  computer la irunthu
At the same time file transfer pannavum use pannura data cable mathiri).

Cable illama ஒரு phone ku file transfer panna mudiyum charge um transfer pannuranga இதையும் மனிதனால் செய்ய முடியுனு தோனுது (file transfer  நடக்குது charge ?).

(கண்ணால கற்பழிக்காதனு சொல்லுவாங்க அதாவது பெண்ணை தொடாமல் விதை போட்ட பல கதை  மாதிரி.. சாமியார் தந்த குழந்தை வரம். சாமி கொடுத்த பிள்ளை எப்படினு தேடுங்க)..

இன்னும் உள்ள போய் பார்த்தால் இயற்கை நம்மை வியப்படைய செய்து கொண்டே இருக்கும் அதன் இயங்குதல் மூலமாக...

அந்த மர்ம வெடிப்பு.. ஜூன் 30 tunguska event நடந்த தினம்...


அது என்ன என்பதை அறியாதவர்களுக்காக .....

Tunguska event...

1908 ஆம் ஆண்டு ஜூன் 30 தேதி .. சைபிரியாவின் ஒரு தொலைவான காட்டு பகுதி அது. அங்கே tunguska நதியின் அருகே இருந்த காட்டு பகுதியில் ஒரு மர்ம நிகழ்வு ஒன்று நடந்தது. 100 ஆண்டுகள்  கழிந்தும் இன்றும் அது tunguska event என்ற விளக்க முடியாத மர்ம நிகழ்வாக திகழ்கிறது.

அன்றைய தினம் அந்த காட்டு பகுதிக்கு மேலே இருந்த வானம் திடீரென வெடித்தது. ஒரு பெரிய நெருப்பு கோளமாக அது ஒரு மகா வெடிப்பாக வெடித்து சிதறியது. அந்த நெருப்பு கோளத்தின் அளவு கிட்ட தட்ட 300 அடிகள் அகலம் . அதன் சக்தி ஆச்சர்ய பட தக்க வகையில் ஹிரோஷிமாவில் போட பட்ட சக்திவாய்ந்த அணுகுண்டை போல கிட்ட தட்ட 380 மடங்கு அதிக சக்தி
கொண்டதாக இருந்தது. அது வெடித்த போது அங்கே இருந்து 35 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இடத்தில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. அந்த காட்டில் 2000 சதுர கிலோ மீட்டருக்கு சுத்தமாக பஸ்பமாக்கி இருந்தது அந்த மர்ம நெருப்பு பந்து. மேலும், அத்துடன் அந்த காட்டின் எட்டு கோடி மரங்களை பிரமாண்டமாக அது அழித்து இருந்தது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வெடிப்பை நாம் வானத்தில் பார்த்தது மிக சொற்பமே… அந்தளவு ஒரு சக்தியோடு அன்று வெடித்தது என்ன என்பது தான் இன்று வரை புரியாத மர்மம். பலர் அது ஒரு வின் கல் ..பூமியில் மோதும் முன்பே வெடித்து விட்டது என்றார்கள். பலர் அது ஒரு ஏலியன் ஷிப் ஆக்சிடெண்ட் என்றார்கள். அந்த மோதல் அரிசோனா வில் உள்ள ஏரிகல் விழுந்த இடத்தில உண்டான பள்ளம் போல் ஏன் பள்ளத்தை உண்டாக்க வில்லை என்பது இன்னொரு புரியாத புதிர்.
20 ஆண்டுகள் கழித்து Leonid kuli என்பவர் தலைமையில் ஒரு ரஷ்ய குழு அங்கே ஆய்வு செய்த போது 20 ஆண்டுகள் கழித்து அங்கே மரங்கள் நொறுங்கி கிடந்ததை கண்டார்கள். அவைகள் விசித்திரமான ஒரு பெரிய பட்டாம் பூச்சி வடிவில் நொறுங்கி சிதைக்க பட்டிருபதை கண்டார்கள்.
இது பூமி சாராத ஏதோ ஒன்றால் தான் நடந்துள்ளது என்று கருத்தை சொன்னார்கள்.

சிலர் அதை மேட்டர் ஆண்டி மேட்டர் களின் இணைவு என்றார்கள் (இயற்கையில் மேட்டருக்கு எதிரான ஒரு அதே போல பொருள் தான் ஆண்டி மேட்டர். இரண்டும் ஒன்று சேர்ந்து விட்டால் அளப்பரிய சத்தியுடன் ஒன்றை ஒன்று அழிக்க கூடியவை. ஆரம்ப கால பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஆண்ட்டி மேட்டருடன் மேட்டர் மோதி அழிந்து மிஞ்சி இருபது தான் இன்றைய நாம் காணும் பிரபஞ்சம். மேல் சொன்ன அளவு வெடிப்பு சம்பவம் நடக்க ஒரு கோலி குண்டு அளவு மேட்டர் ஆண்ட்டி மேட்டர் மோதினால் போதுமானது)
அன்று என்ன பொருள் வெடித்தது என கருத்துக்கள் பல இருந்தாலும் tanguska சம்பவம் ஒரு விளக்க முடியாத மர்ம சம்பவமாகவே இருக்கிறது...

உலக அரசியலின் தலைமை இசுரேல்...






அதை யாரும் உணரக்கூடாது என்பதற்காக அமெரிக்கா எனும் கைக்கூலி...

தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம் . புதிய சாதனைகள் படைப்போம்...


காலத்தை கடந்து நிற்கும் அதிசயங்கள் . இன்றும் இது போன்ற அதிசயங்களை நாம் கட்ட இயலாது. இவற்றை கட்டியவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு கட்டவில்லை. அவர்கள் தாய் மொழியில் கணிதம், அறிவியல் பயின்று தான் இந்த அழியாத அற்புதங்களை கட்டினர். ஆங்கிலம் படித்தால் தான் சாதிக்க முடியும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டனர் சிலர். மாயையில் விழுந்த மக்களும் அதை நம்பினர். உண்மையான சாதனைகள் அவரவர் தாய் மொழியில் படித்தால் மட்டுமே சாதிக்க முடியும் . அதற்கான சான்றுகள் ஏராளம்.

 இன்று தாய் மொழிக் கல்வியை பயிலும் அமெரிக்கர்கள் , பிரித்தானியர்கள் , சீனர்கள் , ஜப்பானியர்கள் உலகத்தை ஆட்டுவிக்கும் அளவிற்கு அறிவியல் சாதனைகள் புரிகின்றனர். தமிழர்களோ அறிவுக்காக அடுத்தவரிடம் கையேந்தி நிற்கின்றோம். நாமும் நம் தாய் மொழியில் அனைத்தும் கற்போம் , கற்பிப்போம்.

தாய் மொழிக் கல்வியை ஊக்குவிப்போம் . புதிய சாதனைகள் படைப்போம். வாழ்க தமிழ்...

பாஜக - அதிமுக - காவல்துறை யின் அராஜகம்...


இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும்...


தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது...

இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர்

"இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார்.

அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.

அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாஜியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாஜி ஜெனரல் திலானை அழைத்து கூறினார் -- " இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள். இவர்கள் தாவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து" என்றாராம்.

பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். " தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்த்மாவும் தமிழர்கள்தான்"

இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் ஜெனரல் கியானி கூறுகிறார். " தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்டபோதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
நேதாஜியின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார் " மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூலையில் கட்டியாக உள்ளது" என்றார்.
அதற்க்கு பதில் அளித்த நேதாஜி "
இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் "
என்று கூறினார்.

1945 இல் மார்ச் மாதம் நேதாஜி படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள் தூக்கிலிடபட்டனர். இந்தியா விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. ஒரு தமிழனாக பிறந்ததால்தான் ராமுத்தேவர், இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை.

தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாஜி 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16 பேர்கள் தமிழர்கள். ஒரு ஈழத்தமிழர் உட்பட.
இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில் 2500 ௦பேர் அணிதிரண்டனர். உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14 வயது சிறார்களும் 16 வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர்.

ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாக இ.தே. ரா.க்கு நேதாஜியிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாஜி பெற்று கொண்டார்.

நேதாஜியை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாஜி சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர்.

ஜெர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில் உள்ள பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி.

நேதாஜியின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு ஜெர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார். குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம்.

மலேயாவிலும் நேதாஜிக்கு அதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துஸ்தான் போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன.

ராணி ஜான்சி படையின் தலைவியாக கேப்டன் இலட்சுமி இருந்தார். இந்த படையில் கேப்டன் ஜானகி தேவர் பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தியாவில் பிறக்காதவர், இந்தியாவை பார்க்காதவர். எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள்.

விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரிய மறுத்து தூப்பாக்கி ஏந்தி ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் ---- நேதாஜி...

வணிகப் போர் - 5...


தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..


சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப
இதன் பொருளைப் பாருங்கள்!

விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே...