01/09/2018
திராவிடம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...
தமிழ் மொழியை பழித்தது- ஈரோடு திராவிடம்.
தமிழின கொள்கையை திரித்தது- காஞ்சி திராவிடம்.
தமிழினத்தையே அழித்தது- திருக்குவளை திராவிடம்.
நான் ஒரு பாப்பார்த்தி என்று சட்டமன்றத்திலே முழங்கி தமிழின ஆரிய பகையை வளர்த்தது- போயஸ் கார்டன் திராவிடம்.
சேற்றில் முளைத்த செந்தாமரை என்றாலும் வழக்கொழித்து போன திராவிடத்திற்கு வக்காளத்து வாங்கும்- கலிங்கப்பட்டி திராவிடம்.
இதற்கிடையே நடுவில் வந்து பம்பரம் விடும்- கோயம்பேடு நாக்கு துருத்தி திராவிடம்.
எத்தனை திராவிட கூத்தடா எங்கள் தமிழ் திருநாட்டில்..
தமிழ்நாடு தமிழர்களின் தாய்நாடா? இல்லை வந்தேரி திராவிட மந்தைகளின் மேய்ச்சல் காடா?
திராவிடனே வெளியேறு
தமிழனை ஆளவிடு...
தன்னை உணர்வது எப்படி?
வினை கழித்து தன்னை உணர்வது எப்படி?
வெவ்வினைக் கீடான காயம் இது மாயம்...
நாம் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தபடி நமக்கு உடல் தந்து இறைவன் நம்மை படைத்து அனுப்பினார் உலகத்தில்.
இந்த உடல் வினைக்கு தக்கபடி செயல்படுவதால் அனைத்தும் மாயையே.
வினைப்பயனே இப்படியே போனால் அழிந்து விடும் உடல். அழித்து விடுவர் உடலை.
சுட்டோ.. இட்டோ.. அழியும் உடம்பை அழியாமை ஆக்கும் வகையே, கண்மணி ஒளியை கண்டு உணர்ந்து தவம் செய்வதாகும்.
ஒப்பற்ற மேலான இந்த தவம் சும்மா இருப்பதேயாகும்.
"வினை போகமே ஒரு தேகங்கண்டாய்" என ஞானி ஒருவர் கூற்றும் இப்பொருளே.
தேகம் அழியாமலிருக்க வேண்டுமானால் வினை இல்லாமலாக வேண்டும்.
அதற்க்கு தான் ஞான சாதனை- தவம் - சும்மா இருக்க வேண்டும்.
கண்மணி ஒளியை குருவிடம் தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்யச்செய்ய ஒளிபெருகி சூட்சுமம் நிலையிலிருக்கும் வினையாகிய திரை உருகி கரைந்து விடும். வினை தீரத்தீர ஒளி மிஞ்சும். மிஞ்சுகின்ற ஒளி உடல் முழுவதும் பரவும். ஊன உடலே ஒளி உடல் ஆகும். பிறவி கிடையாது. வினை இல்லையெனில் பிறவி இல்லை.
வினைகள் மூன்று. பிராரத்துவம், ஆகாமியம், சஞ்சிதம். குரு தீட்சை பெற்று தவம் செய்யும் சாதகன் பிராரத்துவகர்மம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாக தீரும்.
குரு தீட்சை பெற்ற சாதகன் உத்தமனாக வாழ்வதால் ஆகான்மிய கர்மம் தோன்றாது. தோன்றினால் குரு தடுத்து காத்தருள்வார். "ஆகான்மியம் அவன் ஆசானையே சேரும்" தொடர்ந்து தவம் செய்பவன் கண் ஒளி பெருகப் பெருக ஞானக்கனல் பெருகக் பெருக சஞ்சித கர்மமும் கொஞ்சங் கொஞ்சமாக வந்து தீரும்.
நைந்து பியந்து போனாலும் நாதன் கை விடமாட்டான். நான் மறைதீர்ப்ப கர்மம் தொலையவே காரியம் செய்யணும். சிவகாரியம் - மோனம் கூடி சும்மா இருக்கும் நிலையே சிவகாரியம். அந்த ஒளியை சரணடைந்தால் பேரின்பமே எந்நாளும். நாமும் வாழலாம். எல்லோரையும் வாழ வைக்கலாம். குருவாக உயர்ந்து குவலயம் காக்கலாம்.
மரணம் எப்படி இருக்கும்?
மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று நிலை உள்ளது.
மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர் நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது.
தூக்கம் - நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த அளவில் உணர்வு இருக்கும்.
மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல். மரணம் நம் கையில். தடுக்கலாம்?
மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெற வேண்டும். உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ? அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்.
அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை. தவம்.
பிறந்தது இறப்பதற்கல்ல. இறப்பை வெல்வதற்கு. அதுவே ஞானம். இதை உரைத்ததுவே சனாதானதர்மம்.
எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும். "தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.
இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு சாப்பாடு என அலைகிறான். சாப்பிடதான் வாழ்கிறான் அதற்கு தான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான். ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான். பிறப்பதே சாப்பாட்டுக்காகத் தான்.
சாப்பாடு அல்ல. சாவுக்கான பாடு சா- பாடு.. சாவதற்காக படாத பாடுபடுகிறான். எப்படியோ சாகிறான்...
சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்.. சாகாதவனே சன்மார்க்கி...
ஊடக உளவியல் அரசியல்...
என்றைக்காவது இந்த மூன்றையும் தாண்டி யோசித்து இருக்கிறீர்களா..?
ஒரு ஊடகம் தன் கட்சி சார்ந்து நடக்கும் எந்த கெட்டதையும் ஒளிப்பரப்பாது..
ஊடகம் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் கள்ள வணிகனை பற்றி ஒருபோதும் மக்களிடம் கூறாது..
ஆனால் அனைத்து ஊடகங்களும் கூறுவது நடுநிலை ஊடகங்களில் முதல் ஊடகம் எங்கள் ஊடகம்..
நடுநிலை என்பதே அவர்கள் தவறாக புரிந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்..
அரசியல்வியாதி - ஊடகங்கள் - வணிகர்கள்..
இதுதான் அவர்களின் ️ நடுநிலை...
இறப்பது என்பது என்ன ?
நாம் இறக்கும் பொழுது உடல் இறக்கிறது..
அப்பொழுது மனமும் இறக்கிறதா ?
ஆத்மாவும் இறக்கிறதா ?
இறப்பு என்பதன் அர்த்தம் உங்கள் உயிர்த் தன்மைக்கு ஓய்வு கொடுப்பது தான்..
உங்கள் உயிர்த்தன்மைக்கு இறப்பு என்பதே கிடையாது.. அழிவே கிடையாது..
இந்த பிறவியில் நீங்கள் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்து விட்டீர்கள்..
ஆகவே உங்கள் உடலுக்கு ஓய்வு
தேவைப்படுகிறது..
இறப்பு உங்கள் உடலுக்கு ஓய்வு
கொடுக்கிறது..
இந்த உலகத்தில் உடல் தோற்றுவிக்கப்படுகிறது..
பிறகு நீங்கள் உங்கள் மனதை
தோற்றுவித்துக் கொள்கின்றீர்கள்..
ஆனால் உங்கள் உயிர்த்தன்மை என்பது
தோற்றுவிக்கப்படாதது..
அது எங்கும் எப்போதும் எதிலும் நிறைந்தது.. அதற்கு இறப்பும் இல்லை . பிறப்பும் இல்லை..
ஆகவே இறப்பு என்பது உடலுக்கும்
மனதுக்கும் தான்..
ஆனால் ஆன்மாவுக்கு அழிவு இல்லை....
ஆன்மா என்றால் என்ன ?
மனதோடு அதாவது ஆசைகளோடு கலந்த. உயிர்த்தன்மை தான் ஆன்மா என்பது..
ஆன்மா மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறந்து அதன் ஆசைகளை
நிறைவேற்றிக் கொள்கிறது..
அப்பொழுதுதான் கலப்பட உயிர்த்தன்மை சுத்த ஆன்மாவாகி பிறவியை அறுக்கும்..
இந்த சுத்த ஆன்மா மீண்டும் பிறக்க
வேண்டிய தேவை இல்லை..
அது பிரபஞ்ச உயிரத்தன்மையோடு
கலந்து விடுகிறது...
குகை ஒவியங்களின் ஆச்சரியம்...
இன்றைய விண்வெளி வீரரின் உருவ அமைப்பில் இருக்கும் இந்தச் சிற்பங்கள், ஒரு மனிதன் தலைக்கவசத்துடன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சிற்பம் இன்றைய நவீன விண்வெளி வீரரை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது போல் உள்ளது.
மேலும் ஒரு சிலையில் விண்வெளி ராக்கெட் வடிவங்கள் பல உள்ளது. இதற்கான காரணம் அன்றைய மனிதர்கள் விண்பயணம் செய்ததை தான் சிற்ப்பமாக செதுக்கியுள்ளனர் என்பதை தான் வெளிபடுத்துகிறது.
இந்த குகை ஓவியங்கள், சிற்பங்கள், விண்வெளி ராக்கெட் போன்ற ஊர்திகள் போன்றவற்றை எப்படி ஒரே மாதிரியாக வரையவும், செதுக்கவும் முடியும்? அவையெல்லாம் கற்பனை ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் என்று எடுத்துக் கொண்டாலும்கூட, எப்படி ஒரே மாதிரியான வடிவங்களைக் கற்பனையாக வரையவோ அல்லது செதுக்கவோ முடியும்?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் எதை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்? யாரைப் பார்த்து மனிதர்கள் இவற்றை உருவாக்கி இருப்பார்கள்.? என்பதே ஆராய்ச்சியாளர்களின் மிகப்பெரிய ஆச்சர்யம்...
மனிதன் கண்டு பிடிப்பும் ஆபத்தும்...
மனிதன் தான் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மற்றும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மனித இனத்தை மேம்படுத்துவதாக அனைவரும் எண்ணினாலும், அதீத வளர்ச்சி நம்மை ஒரு நாள் அழித்து விடும்..
என்ன தான் நாம் கண்டுபிடித்த தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்றாலும்,
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் அதிகப்படியான வளர்ச்சி நமக்கு பேராபத்தாகவே அமையும்.
சூப்பர் இன்டெலிஜன்ட் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் நமது பணிகளை எளிமையாக்கினாலும், அவை சீராக ஒருங்கிணைக்கப்படாத போது நமக்கு பிரச்சனை அதிகம் ஆகும்.
அவ்வாறு செயற்கை நுண்ணறிவு தன்னிச்சையாக முடிவெடுக்கும் போது அவை நம்மை விட அதிக திறன் கொண்டவையாக இருக்கும் என்பதால் நமக்கு ஆபத்து நிச்சயமே.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் நமக்கு ஆபத்து ஏற்பட்டால், நிச்சயம் மனித சக்திக்கு மீறிய அல்லது அப்பாற்பட்ட சக்தி (வேற்றுகிரகவாசிகள்) ஒன்று நமக்கு உதவலாம்...
ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்றவை நம்மைவிட அனைத்து வேலைகளையும் சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்று தான் புரியவில்லை.?
Subscribe to:
Posts (Atom)









