02/09/2018

சேலம் அருகே நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 7 பேர் பலியான சோகம்...


சேலம் மாவட்டம் மாங்கம் என்ற பகுதியில், சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை, சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி சென்ற தனியார் பேருந்தும், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்ற சொகுசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதாமல் இருக்க கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பேருந்தை கடைசி நேரத்தில் திருப்பியது விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தக் கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாயினர். படுகாயம் அடைந்த
20 -க்கும் மேற்பட்டோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்துக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  இந்த விபத்தில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது...

விலை போகும் மக்கள்...


உயிருக்கு போராடியவரின் முன் செல்பி, மருத்துவமனை ஊழியர்களின் அதிர்ச்சி செயல்...


முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும், முன்னணி நடிகருமான ஹரி கிருஷ்ணா நேற்று முந்தினம் கார் விபத்தில் படுகாயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் ஹரிகிருஷ்ணாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கொண்டிருந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சை அளிப்பதை செல்பி எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

இப்போது கூறு.? பணம் என்ற ஒன்றிற்காக யாரால், உன் தலைமுறை/வளங்கள் அழிக்கப்படுகிறது என்று...


தீபாவளி என்றால் என்ன?


புராணம் கூறுவது...

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிசுணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விசுணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விசுணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விசுணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விசுணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்..

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விசுணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசூரன் ஊர் மாகிசமகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் சோதிசா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை தமிழ் அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பிராமணன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுசாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பிராமணர்கள் வந்து பார்த்து, “கங்காசு நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்.. சிந்தியுங்கள்..

மாணவர்களே. உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள்.

எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பிராமணர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

தீபாவளிப் பண்டிகை என்று இன்பமும், துன்பமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன்.

தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும்.

அதாவது விசுணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விசுணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே.. இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விசுணுக் கடவுள் பூமியைப் புணர முடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு துன்பம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு?

எதையுமே நம்பாத சில பகுதறிவாதிகளுக்காக நாம் சில சான்றுகளை பார்ப்போம்..

தீபாவளி தமிழர்களின் பண்டிகை அல்ல...

தீபாவளி கதையை எடுத்து கொண்டால் நராகசூரன்னை [அசுரனை] கொன்றதாகத்தான் கூற படுகின்றது .

அசுரர்கள் ,அரக்கர்கள் ,தஸ்யுக்கள் ,ராட்சதர்கள் ,குரங்குகள் ,கரடிகள் ,என்று சொல்லபடுவர்கள் எல்லாம் யார் ?வரலாற்று பேராசிரியர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம்.

'தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியர் அல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயண கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது [ரோமேஷ் சந்திர தத் எழுதிய ''புராதன இந்தியா ''என்னும் நூல் பக்கம் 52]

ராமாயண கதை என்பது ஆரியர்கள் , தென் இந்திய தஸ்யுக்கள் or தமிழர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை சித்தரித்து காட்டுவதாகவும் ''
[சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும் ''என்ற நூல் பக்கம் 24]

''தென் இந்தியாவில் இருந்த மக்களே (தமிழர்கள்) தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் ,அரக்கர்கள் என்றும் அழைக்க பட்டிருகின்றனர் ''
[விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம் என்ற தலைப்பில் 587-589 ம் பக்கம் ]

''ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும் , தஸ்யுக்கள் , அசுரர்கள் , என்றும் கூறபட்டிருக்கின்றது.. ஆரியருக்கும் , ஆரியரல்லாதவரும் இருந்து கொண்டு இருந்த அடிபடையான பகமையை பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம் . இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்த பகைமைக்கு காரணம் ''
[டாக்டர் ராதா முகர்ஜி எழுதிய ''இந்து நாகரீகம்''என்னும் நூல் பக்கம் -69].

ராமாயணமும் , மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும் , உள் நாட்டு சண்டைகளையும் பற்றி சொல்வதாகும் ..
[ஜவஹர்லால் நேரு எழுதிய ''டிஸ்கவரி ஆப் இந்திய நூல் பக்கம்-76-77]

''இராமாயணம் என்பது தென்இந்தியாவில் ஆரியர் பரவியதை குறிக்கும் ''
[ஜவஹர்லால் நேரு -அதே நூல் பக்கம்-82]

இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக தெரிந்து கொண்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அசுரர்கள் எல்லாம் நம் தமிழர்கள் என்ற பேருண்மை சூரிய ஒளி போல தெரிந்து விடும் ..

நம்மை அழித்தற்காக நாமே விழா கொண்டாடலாமா என்பது தான் கேள்வி..

இந்நிலை இப்படியே சென்றால் நாளைய தலைமுறை மே 18 யைக் கூட விழாவாக  கொண்டாடுவர்...

12 வழிச் சாலை...


பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் - வானியல் நுட்பம் (ASTRONOMY)...


பலரும் சொல்ல தயங்கும் கேள்வி புலவர் எவ்வாறு இதை அறிந்தனர் என்ற கேள்வியோடு உள்ளே நுழைவோம்?

நட்சத்திரம் என்பது அப்போது விண்மீன் என அழைக்கப்பட்டது. அதாவது வானில் சுயமாக ஒளிவிடக்கூடிய நட்சத்திரத்தை நாண் மீன் என்றும். சூரியனிடமிருந்து ஒளிபெற்று ஒளிர்வன கோள்மீன்கள் என்றனர்.

சூரியனின் ஒளியைக்கொண்டு ஒளிர்வன திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பனவாகும். இராகு, கேது இராக் கோள்கள் அல்லது நிழற்கோள்கள் எனப்படும்.

மாக விசும்பின் வெண்டிங்கள் மூவைந்தாள் முறை முற்ற
-  (புறநானூறு – 100)

எட்டாம் நாள் பிறை நிலவு எண்ணுட்டிங்கள்
- (புறநானூறு-118)

உவவுத்தலை வந்த டிபருநாள் அமையத்து
இருசுடர் தம்முன் நோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு
- (புறநானூறு-65)

அதாவது திங்களாகிய கோள்மீன், ஒவ்வொரு நாளும் நிற்கும் நிலையே அன்றைய நாண்மீன் ஆதிக்கம். அது ஞாயிற்றோடு சேர்வதும், பிரிந்து எதிர்ப்பக்கம் சேர்வதும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும்.

சந்திரன் வளரும்போது பதினைந்து நாட்கள் அடைவது போலவே தேய்கையிலும் பதினைந்து நாட்கள் அடைகிறது.

முழுமதி நாளில் சூரியனும் திங்களும் எதிரெதிராக நிற்கும். திங்கள் தோன்றும் போது கதிர் மறையும். அதாவது பூமியில் முழுநிலவு தோன்றும்.

அதிதிநாள் கழை யாவணமேரி புனர்தங் கரும்பிவை புனர்
பூசமாகும் என்பது பிங்கலந்தைச் சூத்திரமாகும்
- (புறநானூறு- 229)

விண்மீன்கள், கோள்களின் நிறம், வடிவம் பற்றித் சங்ககாலத் தமிழர்கள் நன்கு தெரிந்திருந்தனர். வெண்மை நிறமுடையதை வெள்ளியென்றும், செந்நிறமுடையதைச் செவ்வாய் என்றும் பெயர் வைத்து அழைத்துள்ளனர். அனுடத்தை முடப்பனை என்றும் புனர்பூசத்தைக் கயம்(குளம்) என்றும், கூடலூர்கிழார் குறித்துள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல.
- (பட்டினபாலை-66,67)

சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் என்று இலக்கியத்தோடு விஞ்ஞானத்தையும் கூறியுள்ளார்.

இலங்கு கதிர்வெள்ளி தென்புலம் படரினும்.
- (புறநானூறு-35)

தென்திசை மருங்கில் வெள்ளியோடினும்.
- (புறநானூறு-117)

வெள்ளி தென்புலத்துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை.
- (புறநானூறு-388)

வெள்ளிக்கோள் அதாவது வெண்பொன் என்றும் இது தென்திசை சென்றால் தீய நிமித்தம் மழை பெய்யாது வற்கடம் உண்டாகும் என்று அக்கால வானியற் கணிப்பு கூறுகின்றது.

மழைக்கோளாகிய வெள்ளி, தென்திசை செல்லின் வான் பொய்க்கும் அதுபோலவே ஏரி, குளமீன், தாள்மீன் போன்றன தோன்றலும் புகைதலும் உலக வறுமைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளப்பட்டன. இது தென்திசை சென்றால் மழையில்லை என்றறிந்தது போல வடதிசை சென்றால் மழைவரும் என்றும் அறிந்திருந்தனர்.

எல்லாம் சரி ஆனால் இவர்கள் எப்படி இதெல்லாம் கணித்தார்கள் என்ற கேள்வி வருகிறது அல்லவா?

சித்தர்கள் விண்ணை ஆராய தன் சூட்சம தேகத்தையும், இரசமணியையும்  மற்றும் ரசகுளிகையையும் பயன்படுத்தினர் என்பது நாம் அறிந்த ஒன்றே அவர்கள் பல கோள்களை இவ்வாறு கண்டனர்.

ஆனால் புலவர்கள் எப்படி கண்டிருப்பர் என்று கேட்டால் அவர்களுக்கு மூலிகை அறிவை கொண்டு இதை கண்டனர் என பதில் வருகிறது.

நந்தியாவட்டை பூவை ஒரு நாள் நீரில் ஊறவைத்து அந்த நீரை எடுத்து கண்களை நன்றாக கழுவி வில்வ இலையை அந்த நீரோடு சேர்த்து அரைத்து கண்கள் மேல் தடவி இரவு முழுவதும் குளிர விட்டு காலையில் எழுந்து கழுவி பின் கல்லில் வளரக்கூடிய கல்தாமரை என்ற செடியை கவனித்து அதன் மேல் உள்ளங்காலை வைத்து வானத்தை பார்க்க நட்சத்திரம் தெரியும்.

மேலும் இதோடு பொன்னாங்கண்ணி இலையை வாயில் இட்டு குதப்பி கடவாயில் வைத்து அந்தந்த கிரக ஓரையில் திசையறிந்து காண பொன் ஒளி வீசும் சூரியனும் நவகோள்களும் கண்ணுக்கு புலபடும்.

இவ்வாறு தான் புலவர் பெருமக்கள் வானியலை கண்டனர் என சில மூலிகை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சிலர் இதில் சில மூலிகைகள் தேவையில்லை கல்தாமரை மட்டுமே போதும் என்கிறார்கள்.

ஆனால் இதன் உண்மை தன்மை பழந்தமிழர் அறிவர்.

மேலுள்ளவை அனைத்தும் தகவல் பகிர்வு இதன் உண்மை தன்மை ஆய்வு செய்து அறிய வேண்டியவை...

இயற்கை...


கற்பனை...


பிரபஞ்சம் நமக்கு பலவிதமான  பொக்கிசங்களைக் கொடுத்துள்ளது அதில் ஒரு மாபெரும் பொக்கிசம் தான் கற்பனை.

மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் அனைத்திற்கும் காரணம் கற்பனைகள் தான்.

நாம் எதை கற்பனை செய்கிறோமோ அதை நம்மால் நிச்சயமாக அடைந்துவிட முடியும்.

நாம் எப்படி கற்பனை செய்கிறோமோ அப்படியே அது நம்மை வந்தடையும்.

கற்பனை எந்த அளவிற்கு அழகாய் உள்ளதோ அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் அழகாய் மாறும்.

கற்பனையின் வேலையே புதிதாக ஒன்றை படைப்பது தான்.

கற்பனை தான் உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் வசீகரங்களின் முன்னோட்டம் என்றார்
-ஐன்ஸ்டின்.

உங்கள் வாழ்க்கை எப்படி வேண்டும் என்பதை கற்பனை செய்யுங்கள் அதன் படியே ஒவ்வொரு செயலையும் செய்து பாருங்கள்.

கற்பனையின் சக்தி அப்போது தான் புரியும்.

உடல் மற்றும் மனதளவில் யாரையும் காயப்படுத்தாத வண்ணம் உங்கள் கற்பனை இருந்தால் உங்கள் கற்பனை மட்டுமல்ல வாழ்க்கையும் நிச்சயமாக அழகாய், அர்ப்புதமாய் மாறும்...

நீட் வேண்டாம்...